கமல்ஹாசனின் என்னுள் மையம் கொண்ட புயல்! – ஒரு பார்வை

A view on Ennul Maiyam Konda Puyal written by KamalHassan

கேள்வி: “நீ யார்?’’

நான்: “தமிழன்.’’

கேள்வி: “ஆனால் பார்ப்பான் ஆயிற்றே?’’

நான்: “அது என் பிறப்பு. நான் தேர்ந்த நிலையில்லை அது.’’

கேள்வி: “பகுத்தறிவு பேசுகிறாயே?’’

நான்: “அது நான் தேர்ந்த அறிவுநிலை.’’

கேள்வி: “ஆக, தனித்தமிழ்நாடு வேண்டுமா?’’

நான்: “தமிழராய் எமக்கு மரியாதை வேண்டும். கேள்வியின்றி வங்க மொழியில் தேசியகீதம் பாடும் என்னிடம் மன்றாடிக்கேட்டாலும் பயமுறுத்திக் கேட்டாலும் அன்றாடம் பேசுவது தமிழாகத்தான் இருக்கும். இந்தியாவை இணைக்கும் மொழி ஆங்கிலம்தான். ஹிந்தி அல்ல. மத்திய அரசிடம் நான் உரையாட, வழக்காட அம்மொழி போதுமானது. மற்ற மொழிகளை சாய்ஸில் விட்டுவிடுங்கள்; வற்புறுத்தாதீர்கள் என்பது 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலிக்கும் குரல். என் குரலும் அது தான்.’’

கேள்வி: “உன் வண்ணம் காவியா என்றால் மறுக்கிறாய், காவியுடன் கலக்காதா என்று கேட்டால் என் கறுப்புச்சட்டையில் காவியும் இருக்கிறது என்கிறாய் – இது உன் தன்நிலை விளக்கமா – விஞ்ஞான விளக்கமா?’’

நான்: “இரண்டும்தான். ஒளியியல்படி, பகுத்தறிவாளன் போல் கறுப்பும் எல்லா வர்ணமாயைகளையும் உள்வாங்கிப் பகுத்தறியும், ஒரு வண்ணம் மட்டுமே வெளித் தெரியும். தன்னிலை விளக்கம் என்று எடுத்துக் கொண்டாலும் காவியை உணராமலே வெறுப்பவனல்ல. 12 வயது வரையில் அதன் மாயைக்கு மயங்கியவன். பின் விடுபட்டவன்.’’

கேள்வி: “அப்படியென்றால் உள்ளே எங்கோ கொஞ்சம் காவி ஒட்டியிருக்கிறது என நம்பலாமா?’’

நான்: “நம்பிக்கைதானே உங்கள் போதைப் பொருள். நம்பாதீர்கள். என்னுள் எஞ்சிய காவி மனதில் இல்லை. எப்போதாவது  வெற்றிலையைக் குதப்பினால் வாயில் இருக்கக் கூடும். அது சாதியம் மெச்சும் புராதனக் கூட்டத்தின் கொள்கை விளக்கப் பிரகடனங்கள் மீது துப்ப ஏதுவாக இருக்கும்.’’

கேள்வி: “உனக்கு முதலமைச்சனாக வேண்டுமா?’’

நான்: “அது என் ஆங்கிலப் பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு. அதுவும் பளபளக்கும் தலைப்புத் தேடும் சில ஊடகங்களின் தேவைக்கேற்ப மொழிபெயர்க் கப்பட்டது. என் மையக்கருத்தைச் சிதைத்துக் கிட்டிய தலைப்பு. ஆட்சி பலத்தை அசைக்கக்கூடிய அகற்றக்கூடிய செயல் எதுவோ அதுவே என் ஆசை. புதிய தமிழ் மாநிலம் அடுத்த தலைமுறையாவது காணவேண்டும் என்ற பல தலைமுறை ஆசையை என் தலைமுறையாவது நிறைவேற்றத் துடிக்கும் தமிழனின் ஆசை. யாம் முதல்வர் என்பது என்னை மட்டும் குறிப்பிடாது. என் மக்களைக் குறிக்கும். யாமே முதல்வராக முதன்மையானவராக இருத்தல் வேண்டும். அமைச்சர்களெல்லாம் இம்முதல்வர்களின் கருவியாகச் செயல்படவேண்டும். ஜனங்களோ நாயகம் செய்தல் வேண்டும். நான் தொண்டன், அடிப்பொடியா, உச்சிக்குடுமியா என்பது முக்கியமல்ல. ஒருநாள் வெல்வோம் என்று காத்திருக்க மாட்டேன். தோற்றால் என்ன கதி எனக் கலங்கவும் மாட்டேன்.’’

ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த பகுதியின் சில வரிகளை இங்கு படித்தீர்கள். கமல்ஹாசன் தன்னுடைய அரசியல் பயணத்தின் நோக்கம் என்ன? தன்னுடைய சினிமா வாழ்க்கையில் சந்தித்த இன்னல்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் சந்தித்த மனிதர்கள் என்று பல விஷியங்களை நம்முடன் பகிர்கிறார். அவருடைய உரையைப் போலவே எழுத்து நடையும் ஒன்றிரண்டு இடங்களில் புரியாதது போல் உள்ளது. இருந்தாலும் படிக்க படிக்க புத்தகத்தின் சுவை குறையவில்லை. கமலின் அரசியல் கொள்கையைப் புரிந்துகொள்ள முற்படுபவர்கள் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்.

Related Articles

சினிமா பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் ... 1.அசுரன் திரைப்படம் பார்த்தேன். கரிசல் மண்ணோடு கலந்து கிடக்கிற பகையையும், வன்மத்தையும், அதிகாரத்தின் கைகளில் நசுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கோபத...
திருடர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய்... வெண்ணிலா கபடி குழு என்ற  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த மிக முக்கியமான படைப்பாளி, இயக்குனர் சுசூந்திரன். வெண்ணிலா கபடி குழுவைத் தொடர்ந்து எழ...
ஆர். பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் பற... சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் ரா.பார்த்திபன் சாரின் அழைப்பின் பேரில் ஒத்த செருப்பு திரைப்படத்தை  கண்டேன்.ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டு  ...
மக்களுக்கு விசம் கொடுத்து சம்பாதிக்கிறது... (TASMAC - Tamilnadu Anaiththu Samooga Makkalum Arundhum Cool Drinks) சமூக வலை தளங்களில் உலவிக் கொண்டிருக்கும் வரிகள் இது. உண்மை தான். தெருவுக்கு தெரு ...

Be the first to comment on "கமல்ஹாசனின் என்னுள் மையம் கொண்ட புயல்! – ஒரு பார்வை"

Leave a comment

Your email address will not be published.


*