அசுரன் படம் சுமாரா தான் இருக்கு! – அசுரன் நெகட்டிவ் விமர்சனங்கள் ஒரு பார்வை!

A view on negative reviews of asuran movie!

அசுரன் படத்தை ப்ளூசட்டை மாறன் உள்பட பெரும்பாலானோரும் கொண்டாடிக் கொண்டிருக்கையில் சிலர் இந்தப் படத்தினை சுமார் படம் எனக் கூறி  அதோடு படத்தின் குறைகளையும் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளனர். அவர்களுடைய விமர்சனத்தைப் பார்ப்போம். 

1.அசுரன் – ஆவரேஜ்.

பஞ்சமி நில மீட்புப் போராட்டம், கீழ்வெண்மணி கொடூரத்தை ஒத்த சம்பவம் போன்றவற்றைக் காட்டியிருக்கிறார்கள். பல்வேறு பாத்திரங்கள் வழி நெல்லைத் தமிழ் அத்தனை அழகாய்ப் பதிவாகி இருக்கிறது. பன்றி வேட்டையிலிருந்து கதையைச் சொல்லத் தொடங்கிய திரைக்கதை உத்தி நன்று.

தனுஷ் நடிப்பில் தனித்துவமாய், புதிதாய் ஏதுமில்லை. இத்தனைக்கும் இது அவர் இதுவரை ஏற்றிராத ஐம்பது வயதுப் பாத்திரம். ஆனால் அதே சமயம் குறையொன்றுமில்லை. அவரை விட மஞ்சு வாரியர் சிறப்பாய் நடித்திருக்கிறார்.

ஒரு வேட்டைக்காரன் மனிதனைக் கொலை புரியும் போதும் மிருகத்தைப் பிடிக்கும் உத்தியையே பயன்படுத்துகிறான். சாதியம் என்பது அவ்வளவு தெளிவான கருப்பு வெள்ளைச் சமாச்சாரம் இல்லை என்பதை இருவருக்கும் பரஸ்பரத் தேவை இருப்பதை ஆங்காங்கே சொல்லியிருக்கிறார்கள். போலவே பரஸ்பர உரசல்கள் உண்டு என்பதையும் தன் கையாலயே தன் கண்ணைக் குத்திக் கொள்வது போல் தலித்கள் விசுவாசத்திற்காக தலித்களுக்கு எதிராகவே செயல்படும் சூழல்களையும் படம் காட்டுகிறது. எனக்குப் பொருட்படுத்தத் தக்கவையாகத் தெரிந்தவை இந்த இடங்கள் தாம்.

மற்றபடி, ‘படிப்பு ஒண்ணு மட்டும் தான் கூடவே வரும்’ வசனம் ‘போய்ப் புள்ளகுட்டிங்களப் படிக்க வைங்கடா’ என்ற ரேஞ்சில் புகழடைய வேண்டும் என்ற ரீதியிலான அமெச்சூர் முயற்சி மட்டுமே.

விசாரணை, வடசென்னை வரிசையில் அசுரன். – எழுத்தாளர் சரவணகார்த்திகேயன்

2.படம் நல்லா இருக்கு, நல்லா இல்லை’ங்குறத மீறி. ‘கடைசில என்ன தான் சொல்ல வராங்க?!?’ன்னு யோசிக்கவைக்குது…

#அசுரன் (2019) …

‘தீண்டாமை ஒரு பாவச்செயல்’, ‘தீண்டாமை ஒரு பெருங்கொடுமை’, ‘மனுதர்மம் மனிதநேயத்திற்கு எதிரானது’, இதெல்லாம் தினமும் நமக்கு ஞாபகப்படுத்த தானே மத்திய அரசு வரைக்கும் அவ்வுளவு கஷ்டப்படுறாங்க, அதையெல்லாம் சொல்லவா ஒரு நாவல்’லை படமா எடுக்குறீங்க?. சரி, அதையும் மீறி படத்துல் இருப்பது, அலிபாபா காலத்து பழிவாங்கல் படலம், அதை முடிஞ்ச அளவுக்கு ரத்த Sauce ஊத்தி Decorate பண்ணி கொடுத்து இருக்காரு இயக்குனர் #வெற்றிமாறன்.

‘காடும், காடு சார்ந்த இடமும்’ன்னு கொஞ்சம் Dry’யா துவங்குற கதைல, கதாபாத்திரங்கள் ரொம்பவே பளிச்சிடுது. அப்பா கதாபாத்திரத்தில் #தனுஷ் ரொம்பவே அட்டகாசமா பொறுத்துறாரு, அவரோட பசங்களா #Teejay, #கேன்கருனஸ் ரெண்டுபேரும் தனுஷ் அளவுக்கான buildup’களோட கச்சிதமான நடிப்ப தூவி வர, முக்கியமான வேடத்தில் #பசுபதி ரொம்பவே fresh’ஆ தெரிஞ்சாரு. Interval சண்டைகாட்சியும் கதைக்குபொருத்தமா அமைஞ்சி இருந்தது, ஆனா இங்க பெரிய பிரட்சனை படத்தோட Dubbing.

திரைல தெரியிற ஒருத்தருக்கு கூட Lipsync இல்லாம போக, மொத்தமா ஏதோ தெலுங்கு டப்பிங் படத்துக்குள்ள போன மாதிரி பிரம்மை பிடிச்ச மாதிரி இருந்த வெகுஜன ரசிகர்களுக்கு, கதைக்களம் ஒட்டாமயே இருந்தது. இன்டெர்வல் முடிஞ்சி வர்ற #பிளஷ்பக் கொஞ்சம் நல்லா போனாலும், அதுக்கு பின்னால வர்ற follow-up காட்சிகளும், கிளைமாக்ஸும் commercial சாயம் பூசப்பட்டபடி ஒட்டாமல் தெரிய, கருத்து வசனங்களோடு அந்தரத்தில் தொங்கவிட்டபடி முடிந்தது படம்.

நிலஉரிமை, கம்யூனிசம், பெரியரிஸம்’ன்னு சமூக வளைதள போராளிகளை குறிவைத்து எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு ஏகோபித்த ஆதரவுகள் வந்தாலும், மெதுவாக நகரும் திரைக்கதை, ஒன்றத டப்பிங், அவசியமற்ற கிளைமாக்ஸ் வன்முறை காட்சிகள்ன்னு வெகுஜன ரசிகர்கள் இப்படத்தை வெகுவாக ரசிக்கவில்லை என்பதே நிதர்சனம்.

#மஞ்சுவாரியர், #பிரகாஷ்ராஜ், #அம்மு #பாலாஜிசக்திவேல் #சுப்ரமணியம்சிவா ஆகியோர் பெரிதாக உறுத்தவில்லை.

தொழில்நுட்ப இலாகாவில் வெற்றிமாறன் படங்களிலேயே மிகவும் பலவீனமான படம் இதுவே. டப்பிங் சரியில்லாத இடங்களில் #Suggession ஷாட்களை சொருகுவது, இரண்டாம் பாதியின் இரண்டு இடங்களில் டிஜிட்டல் கேமரா’வில் தெரியும் Watermark கூட தூக்காமல் வைத்திருப்பது என #எடிட்டிங் கந்தகோலம். #வேல்ராஜின் கேமரா கோணங்களை ஒட்டுமொத்தமாக மண்ணை போட்டது #CGI இலாக்கா. பெரும்பாலான period காட்சிகளுக்கு Greenmat உபயோகிக்கப்பட்ட இடங்களில் கேமரா Brightness கம்மியாகி போக, முதல்பாதியில் முக்கால்வாசி காட்சிகள் 480P தரத்திலேயே காணப்பட்டது. நிகழ்கால சம்பவங்களுக்கு ஒரு Palette, பிளஷ்பேக்கு ஒரு Palette என DI செய்யப்பட்டாலும் ஒரு சில இடங்கள் பிசுறு தட்டியது. மற்றபடி நல்ல உழைப்பு, வாழ்த்துக்கள்.

#ஜிவிபிரகாஷ்’ஷின் இசை 50/50. சில இடங்கள் எடுப்பட்டாலும், கிளைமாக்ஸ் BGM’மில் #ஆயிரத்தில்ஒருவன் சாயல். காடுகளில் ஊடுருவும் சப்தங்கள், சண்டைக்காட்சிகளில் புழுதி மணல் என்று #Sounddesign நன்று, இருப்பினும் ஒருசில இடங்களில் வசனத்தை மீறி ஒலிக்கிறது. #இயக்குநர்வெற்றிமாறன் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் #குறியீடுகள், #Detail’கள் என்று அந்த area’வும் படத்தில் மிஸ்ஸிங். அவரின் #comfortzone’னான வன்முறையை மட்டுமே நம்புவதை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளலாம். #Flashback காட்சிகளில் பளிச்சிடும் சமூக அக்கறை பாராட்டத்தக்கது. இருப்பினும் சில ஹீரோ பில்டப் காட்சிகளை பார்க்கையில் ‘நாம் பார்ப்பது வெற்றிமாறன் படமா இல்லை தெலுங்கு மசாலா படமா?’ என யோசிக்கவைக்கிறது. 

#மதிப்பீடு : 2.5 / 5 …

வெற்றிமாறன் என்ற சிற்பி உருவாக்கிய அவசரடி மலாலா படத்தை பார்க்க ஆசைப்படுபவர்கள் நிச்சயம் இப்படத்தை தவறவிடாதீர்கள். – திரைவிமர்சகர் சந்தோஷ் ஏவி கமல்ராஜ்

3.அசுரன் 2/5

வெற்றிமாறன் – தனுஷ் இணையின் மற்றுமோர் பழிவாங்கல் படம். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னையென களங்கள் மாறினாலும்.. மையம் ஒன்றுதான். அதன் பெயர் சிகப்பு. அனுராக் கஷ்யப் – நவாஸுதீன் சித்திக்கி காம்போ ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பை உண்டாக்குவது போல… இவர்களும். 

பூமணியின் வெக்கை நாவல் திரைக்கு வந்துள்ளது. ஆனால் செருப்பை வைத்து செய்யப்படும் சாதிய ஒடுக்குமுறை அத்யாயம் வெக்கையில் இல்லை எனக்கேள்விப்பட்டேன். தேங்க்ஸ் கார்டில் மாரி செல்வராஜ் பெயர் இருந்தது இந்த காட்சிகளுக்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

வெற்றிமாறனின் முக்கிய பலம் காஸ்டிங் மற்றும் வசன உச்சரிப்பு. ஆனால் முதன்முறையாக அசுரனின் சொதப்பல்கள் கணிசம். தமிழ்ப்பட இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், வெங்கடேஷ், சுப்ரமணியன் சிவா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்   உள்ளிட்டோர் கெஸ்ட் ரோல் செய்கிறார்கள் என்றுதான் மனதில் நிற்கிறதே தவிர, கதாபாத்திரங்களாக பதியவில்லை. இதுபோக ஆடுகளம் நரேன், பவன், சென்ட்ராயன் என ஆஸ்தான நடிகர்கள் வேறு!!

இளைய மகன் சிதம்பரத்திற்கு தந்தை தனுஷ் பொருந்திப்போனாலும்… மூத்தவனுக்கு அண்ணன் போலத்தான் இருக்கிறார். மஞ்சு வாரியரின் கணவர் என்பது 100% நம்ப இயலாத கொடுமை. 

எத்தனையோ நடிகைகள் இருக்க மஞ்சு மேடமை எதற்கு இழுத்து வந்தார்கள் என்று தெரியவில்லை. ஒட்டாமல் தனித்து நிற்கிறார். இவர்போக மேலும் சிலர் பேசும் டப்பிங்கிற்கு உதடுகள் அவ்வப்போது ஒட்ட மறுக்கின்றன. இறுதிக்காட்சிகளில் ஊரெல்லாம் அலைந்து சோர்ந்த மஞ்சு மேடம் பளிச்சென டை அடித்து, அதில் எண்ணையும் வைத்தபடி வந்து நிற்கிறார். இடைவேளைக்கு முன்பும், கிளைமாக்சிலும் தனுஷிற்கென அக்மார்க் மசாலா பின்னணி இசை வாசிக்கப்படுகிறது.  இப்படி ஆங்காங்கே சறுக்கல்கள்…. நிச்சயம் வெற்றிமாறனிடம் இவற்றை எதிர்பார்க்கவில்லை.

குறிப்பா ஃப்ளாஷ்பேக் தனுஷுக்கு மீசையை டிசைன் செஞ்ச ஆளு மட்டும் கைல சிக்குனா கைமாதான். 

இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை அவரே கூறிவிட்டார்… அதற்கான லிங்க் முதல் கமெண்ட்டில்.

வடக்கூரானை தியேட்டர் கழிவறையில் தனுஷின் மகன் செருப்பால் அடிப்பது, முதலாளியின் வீட்டினுள் புகுந்து தனுஷ் ஆடும் ருத்ரதாண்டவம், தமிழில் பார்த்துப்பழகிய கிராமத்தை காட்டாமல் இருக்க கூடுமானவரை மெனக்கெட்டது, இரவுக்காட்சிகளுக்கு நீலக்கலர் படுதா போடாமல் அசலாக ஒளிப்பதிவு செய்தது என பாசிட்டிவ் அம்சங்கள் இல்லாமல் இல்லை. 

வெக்கையையும், அசுரனையும் ஒப்பிட்டு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க ஒருதரப்பும், ‘அசுரன் பேசும் சாதி அரசியல் என்ன?’ எனும் விவாதமும் இனி அனல் பறக்கும். கண்டும், கேட்டும் மகிழவும்.

2019 ஆம் ஆண்டில் அசுரன் என்கிற ஒற்றைப்படம் மட்டுமே இந்திய தியேட்டர்களில் வெளிவந்து அதில் தனுஷ் மட்டுமே நடித்திருந்தால்… நிச்சயம் தேசிய விருது தரலாம். – திரை விமர்சகர் ஏஜி சிவக்குமார்

Related Articles

இந்து மதத்தினர் இவ்வளவு வெறிப்பிடித்தவர்... இந்து மதத்தை சார்ந்த ஒருவர் தன் மதத்தை பற்றி தவறாகப் பேசியவர்களை குற்றம் சாட்டி ஒரு பதிவு எழுதியுள்ளார். இவ்வளவு வன்மத்துடன் இந்து மதத்தினர் இருக்கிறா...
கொரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி? ஹோம்... அரசு சொல்வது என்ன? 1. பொது இடங்களில் கூடாதீர்கள் - தமிழாக்கம்பஸ், இரயில், விமானப் பயணம், கல்யாணம், காதுகுத்து, எழவு, கருமாதி, சடங்கு, வளைகாப்பு,ச...
பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு பிற... இந்தியா முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக பொதுநுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்படும் என்று ம...
சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச்சும் ஹார்ட் ... நடந்து வரும் ஐபிஎல் தொடரில் இன்று இரவு எட்டு மணிக்கு பெங்களூர் அணியுடன் மோத இருக்கிறது, சென்னை சூப்பர் கிங்ஸ். ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற...

Be the first to comment on "அசுரன் படம் சுமாரா தான் இருக்கு! – அசுரன் நெகட்டிவ் விமர்சனங்கள் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*