ஆதித்ய வர்மா படத்துக்கு ஆனந்த விகடன் போட்ட மதிப்பெண்ண பாருங்க!

Ananda Vikatan's Score for Adithya Varma

வியாழக் கிழமை காலை என்றாலே சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள் ஆனந்த விகடன் விமர்சனத்தைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் ஆதித்ய வர்மா படத்தின் விகடன் விமர்சனம் குறித்து நிறையவே எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்புக்குரிய விமர்சனத்தை இங்கே இணைத்துள்ளோம். 

விகடன் விமர்சனம் : 

காலங்காலமாக ஆணாதிக்க வெறி பிடித்து அலையும் தேவதாஸ்களின் கதையே ‘ஆதித்ய வர்மா!’

மருத்துவக்கல்லூரியின் சீனியர் ஆதித்யா வர்மாவுக்கு ஜூனியர் மீரா ஷெட்டியைக் கண்டதும் காதல். சில நாள்கள் சென்றதும் மீராவுக்கும் துளிர்க்கிறது அதே காதல். காதலெனும் ஆதி ஊற்றில் ஆதியும் மீராவும் களித்துத் திளைக்க, திருமணம் என வருகையில் சாதியின் ஆணவமும் ஆதியின் கோபமும் குறுக்கே வந்து காதலைப் பிரிக்கின்றன. காதல் தோல்வியில் தாடி வளர்த்து, தண்ணி அடித்து, நாயுடன் தனியாக வாழத்தொடங்குகிறான் ஆதி. அவனின் மீதி வாழ்க்கை என்னவானது என்பதே படம்!

ஆதித்யா வர்மாவாக அறிமுகம் த்ருவ். விக்ரமின் மகன், விஜய் தேவரகொண்டாவின் டிரேடுமார்க் கதாபாத்திரம் என அறிமுகப் படத்திலேயே இவருக்குப் பெருஞ்சவால்கள் காத்திருந்தன. ஆனால், அதையெல்லாம் பெரிதாய்ப் போட்டு அலட்டிக்கொள்ளாமல் அநாயசமாய் ஊதித்தள்ளியிருக்கிறார்… புகையை மட்டுமல்ல நடிப்பையும்! முதல் ஆட்டத்திலேயே அரை சதம் அடித்து இன்னும் பல நூறு இன்னிங்ஸ்கள் ஆட, வலுவான அடித்தளம் போட்டிருக்கிறார். வாழ்த்துகள் ப்ரோ!

ஆதியின் மீராவாக பனிதா சந்து. ஆதித்யா வர்மாவின் மைனஸ்! நடிக்கப் பெரிதாய் வாய்ப்பும் வாய்க்கவில்லை; வாய்த்த இடத்தில் பெரிதாய் நடிக்கவுமில்லை. த்ருவின் அப்பாவாக ராஜா, பாட்டியாக லீலா சாம்சன், நடிகையாகவே வரும் ப்ரியா ஆனந்த் மற்றும் இன்னபிற குடும்பத்தார்கள் நமக்கு அந்நியமாய் நிற்கிறார்கள். த்ருவின் நண்பனாக வரும் அன்புதாசன் மட்டுமே நமக்கு நெருக்கமாய் வந்து நிற்கிறார். அன்பு ஒன்றுதான் ஆறுதல்! 

அசலின் இன்ச் பிசகாத நகலாகப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கிரிசாயா. படத்தின் பலமும், பலவீனமும் அதுவே. தமிழ்ச் சூழலுக்கேற்ப சில மாற்றங்களைப் புகுத்தியிருந்தால் ‘போட்கிளப்’ பையனாகவே மாறியிருப்பான் ஆதித்யா. அது நிகழாததால் சூலூர்பேட்டை பார்டரிலேயே நின்றுகொண்டிருக்கிறான். சிகரெட்டை ஊதி ஊதி சென்னையை டெல்லியாய் மாற்ற முயன்றதற்குக் கடும் கண்டனங்கள். ஆணாதிக்கச் சிந்தனையை விஸ்கி ஊற்றி வளர்த்த அர்ஜுன் ரெட்டிக்கு எதிராய் என்னென்ன எதிர்வினைகள் கிளம்பியதோ, அதையே ஆதித்ய வர்மாவுக்கு முன்பும் வைத்துவிடலாம். படம் முழுக்க ஆணாதிக்கச் சிந்தனையைத் திருப்திப்படுத்த ஆந்திர மீல்ஸ் படையலைப் போட்டிருக்கிறார்கள். சில வசனங்கள் எல்லை மீறியிருக்கின்றன.

ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு படத்தின் ரிச்னஸைக் கூட்டியிருக்கிறது. விவேக் ஹர்ஷனின் எடிட்டிங் இன்னும் ஷார்ப்பாக இருந்திருக்கலாம். ரதனின் பின்னணி இசையில் உறுத்தலும் இல்லை; பாடல்களில் புதுமையும் இல்லை.

`ஆதித்ய வர்மா’வில் த்ருவை மனதாரக் கொண்டாடலாம்… ஆனால், ஆதித்யாவைக் கொண்டாட மனம் மறுக்கிறது! மதிப்பெண் 41!

Related Articles

மார்ச் மாதமே மண்டைய பிளக்கும் வெயிலா? &#... சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நூறு டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருக்கிறது. மார்ச் மாதமே இந்த நிலைமை என்றால் மே மாதங்களில் என்னென்ன பாடுபட போகிறோமோ? ...
கண்டிப்பாக பார்க்க வேண்டிய மூன்று திரைப்... கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: இயக்குனர் ராஜீவ் மேனனின் இயக்கத்தில் மம்முட்டி, அஜீத், தபு, ஐஸ்வர்யா ராய் நடித்த படம் இது. இந்தப் படம் பார்த்து முடித்த ...
இயக்குனர் ராமின் காதல் கதை! – பெண்... கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இயக்கியது வெறும் நான்கு படங்களே என்றாலும் நான்கு படங்களும் தமிழ் சி...
மருத்துவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட... " வா கங்காரு... " " கங்காரு இல்லடா... கங்கா தரன்... " * தரன் தரன் னு பேருல மட்டும் கங்கா தரன் காவிரி தரன்னு வச்சிக்கிட்டு கொடுத்த பணத...

Be the first to comment on "ஆதித்ய வர்மா படத்துக்கு ஆனந்த விகடன் போட்ட மதிப்பெண்ண பாருங்க!"

Leave a comment

Your email address will not be published.


*