சூர்யாவின் 10 கேள்விகளுக்கு பதில் அளித்த அர்ஜூன் சம்பத்!

Surya 10 questions and Arjun sampath Answer-min

சூர்யாவின் பத்து கேள்விகள் என்று வலைதளத்தில் ஒரு செய்தி சுற்றுகிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்னுடைய பதில்கள் இதோ :

கேள்வி 1: முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்வி கொள்கையில் அவசரம் ஏன்?

பதில்: சூர்யா அவர்களே இந்த கல்வி கொள்கை 2015ம் ஆண்டு முதலே விவாதத்தில் இருக்கிறது. சிறந்த கல்வியாளர்கள் நிறைந்த கமிட்டி அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு, அவர்கள் அறிக்கை சமர்பித்து, பின்னர் ஆய்ந்து எடுக்கப்பட்ட சரியான முடிவு. அப்துல் கலாம் அவர்களின் உதவியாளர் பொன்ராஜ் அவர்களின் அத்தனை கோரிக்கையும் அப்படியே ஏற்கப்பட்டுள்ளது. இதுவே தாமதம் தான். இதை தாமதப்படுத்துவது தான் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதாகும்.

கேள்வி 2: மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக்க முடியுமா?

பதில்: பணக்கார வீட்டு குழந்தைகள் மூன்று வயதில் தனியார் பள்ளியில் மூன்று மொழி படிக்கும் போது, மற்ற குழந்தைகள் படிக்காதா சூர்யா அவர்களே? உங்கள் குழந்தையை ஏன் இந்தி கட்டாயமாக இருக்கும் தனியார் சி.பி.எஸ்.இ பாடத்திட்ட பள்ளியில் சேர்த்து கஷ்டப்படுத்தினீர்கள்? ஏன் ஒரு கஷ்டப்படாத அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கவில்லை?

கேள்வி 3: நாட்டில் 1848 பள்ளிகள் மூடப்பட இருக்கிறதே அதற்கு பதில் என்ன?

பதில்: அதுதான் எங்கள் கேள்வியும். எந்த புதுமையையும்; மக்கள் எதிர்பார்க்கும் எந்த தரத்தையும் அரசு பள்ளிகளில் புகுத்த விடமாட்டீர்கள். எனவே அந்த பள்ளிகளில் யாரும் தங்கள் பிள்ளைகளை சேர்க்க மாட்டார்கள். ஆனால் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் அதற்கும் ஒரு கூட்டம் போராடும். அப்புறம் பள்ளிகளை எப்படி நடத்த முடியும்? இவ்வளவு நாள் மூடாமல் வைத்திருப்பதே சாதனை தான்.

கேள்வி 4: கல்வியில் சிறந்த நாடுகளில் 8ம் வகுப்பு வரை தேர்வுகளே இல்லை. ஆனால் இங்கு 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நியாயமா?

பதில்: பள்ளிக்கல்வியில் சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சீனாவுமே முன்னிலை வகிக்கிறது. உயர்கல்விகளில் தான் மற்ற நாடுகள் முன்னிலை. பள்ளி கல்வி தரத்தை நாம் இந்தியாவிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பராக் ஒபாமா கூறியது நினைவிருக்கிறதா?

கேள்வி 5: மாணவர்கள் நுழைவுத்தேர்வு தகுதித்தேர்வு என்றே எழுதிக்கொண்டிருந்தால் அவர்கள் எப்போது தான் வாழ்க்கையை கற்றுக்கொள்வது?

பதில்: வாழ்க்கையை பள்ளியிலிருந்து தான் கற்க ஆரம்பிக்கிறார்கள். மேலும், எல்லா தேர்வுகளும் ஆண்டாண்டு காலமாக இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஏதோ திடீரென முளைத்தது அல்ல. இந்த போராளிகளெல்லாம் ஏன் இந்த ஐ.ஐடி நுழைவுத்தேர்வு அல்லது ஐ.ஐ.எம் நுழைவுத்தேர்வுகளுக்கு எதிராக போராடுவதில்லை? தங்கள் தொழில் எதிலெல்லாம் இருக்கிறதோ; எங்கெல்லாம் தமது தொழில்களுக்கு பாதிப்பு வருகிறதோ அங்கு மட்டுமே எந்த மாற்றமும் வரக்கூடாது என்று இந்த போராளிகள் போராடுவது ஏன் சூர்யா? பள்ளி, வாழ்க்கையை கற்றுக்கொடுக்கவில்லை என்றால், வாழ்க்கையை முழுவதுமாக இந்த வயதில் தான் அவர்கள் கற்றுக்கொள்ள முடியுமென்றால், நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து வாழ்க்கையை கற்றுக்கொடுக்க வேண்டியது தானே சூர்யா?

கேள்வி 6: 180000 அரசு மாணவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களில் ஒரு மாணவர்தான் தேர்ச்சி .

பதில்: இது சற்றும் உண்மையற்ற பச்சை பொய். எப்படி இப்படி ஒரு ஆதாரமற்ற கேள்வியை வைக்க முடிகிறது உங்களால்?

கேள்வி 7: 50000 கல்லூரிகள் 12000 ஆயிரமாக குறைக்கப்படுவதும் கோச்சிங் சென்டர் அதிகமாவதும் தான் புதிய கொள்கையா ?

பதில்: ஆம். இதுதான் சரியான கொள்கை. தமிழகத்தில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களால் நடத்தப்படுபவை. 75% கல்லூரிகள் சரியான வசதிகள் மற்றும் ஆராய்ச்சி கூடங்கள் தகுதியான ஆசிரியர்கள் இன்றி, தரம் என்ற பேச்சுக்கே இடமில்வாமல் முழுக்க முழுக்க வியாபார நோக்கோடு மட்டுமே நடத்தப்படுவை. எங்கள் நிறுவனங்களுக்கு பட்டதாரிகளை தேர்ந்தெடுக்கும் போது இந்த கல்லூரிகளின் தரம் வேதனை தருகிறது. மாணவர்களுக்கு நல்ல கோச்சிங் கொடுத்து திறமையை வளர்த்து நல்ல கல்லூரிகளில் அவர்களை சேர்க்க வேண்டும். கல்லூரிகள் நல்ல கட்டமைப்பு கொண்டதாக இருக்க வேண்டடும்.

கேள்வி 8: 80 லட்சம் ஆசிரியர்கள் கொண்ட இந்தியாவில் ஒரு ஆசிரியர் அமைப்பும், ஒரு மாணவர் அமைப்பும் கல்வி கொள்கையை தீர்மானிப்பது எப்படி?

பதில்: 4000 நடிகர்கள் இருக்கும் ஒரு சங்கத்தில் எல்லா முடிவுகளையும் உங்கள் தம்பியும் விஷாலும் தானே எடுக்கிறார்கள் எப்படி சூர்யா? 130 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் எல்லா முடிவுகளையும் 534 எம்.பிக்களும் ஒரு பிரதமரும்தான் எடுப்பார்கள் என்றால் எப்படி சூர்யா? 80 லட்சம் ஆசிரியர்களையும் கூப்பிட்டு கருத்து கேட்க வேண்டுமா? அண்ணா, பெரியார், கருணாநிதியின் வரலாறுகளை பற்றி மட்டுமே படிக்க தமிழகத்தில் சமச்சீர் கல்வி புகுத்தப்பட்ட போது, அந்த கமிட்டியில் எத்தனை ஆசிரியர்கள் இடம் பெற்றார்கள் தெரியுமா சூர்யா?

கேள்வி 9: விதவிதமான கல்வி முறைகளை வைத்துக்கொண்டு, தேர்வு மட்டும் ஒன்று என்றால் எப்படி?

பதில்: புதிய கல்வி கொள்கை என்பது வெறும் தேர்வுகளை பற்றியது மட்டுமல்ல. மொத்த கல்வி முறையை சீர்திருத்துவது. எல்லா கல்வி நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான, நீங்கள் தரமானது என்று உங்கள் குழந்தைகளை சேர்த்திருக்கும் சி.பி.எஸ்.இ முறையை கொண்டு வர முயல்கிறோம் . நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்? எல்லா பள்ளிகளிலும் ஒரே மாதிரி பாடத்திட்டம் கொண்டுவர வேண்டுமென்ற கருத்துக்கு உங்கள் பதில் என்ன ?

கேள்வி 10: எதிர்கால தலைமுறையின் தலையெழுத்து எழுதப்படும் நேரத்தில் நாம் இன்னும் விழிப்படையாமல் இருப்பது ஏன்?

பதில்: ஆம். உலகத்தோடு போட்டி போட்டு மிக சிறப்பாக இளைஞர்கள் தங்கள் தலையெழுத்தை எழுதிக்கொண்டிருக்கும் போது, இன்னும், நம் பிள்ளைகள் மட்டும் நல்ல தரமான கல்வி கற்று, இந்தி போன்ற அத்தனை மொழிகளையும் கற்க வேண்டும். ஆனால் ஏழைக் குழந்தைகள் மட்டும், சற்றும் தரமில்லாத சமச்சீர் கல்வியில் படிக்க வேண்டும் என்று நினைப்பது அறிவார்ந்த நடைமுறையா?

Related Articles

டாக்டர்களின் போராட்டம் அவர்களின் சம்பள உ... டாக்டர்களின் போராட்டம் அவர்களின் சம்பள உயர்வுக்கானது மட்டுமல்ல (டாக்டர்களின் ஊதியம் மிக சொற்பமாக இருந்தாலும் கூட அது மட்டுமே அவர்களின் பிரதானமான கோரிக...
ஒழுக்கமில்லாதவர்களால் தமிழகம் ரத்தக்காடா... வாழ்க்கை மிக எளிதான ஒன்று ஒழுக்கத்தை கடைபிடிப்பவனுக்கு. அது இல்லாமல் இருப்பவர்களால் வாழ்க்கையில் நேரும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் மன உளைச்சலால...
கேள்வியும் நானே பதிலும் நானே! – வெ... வெ. இறையன்பு அவர்கள் எழுதிய புத்தகங்களில் மிக முக்கியமான புத்தகம் அவரே கேள்வியை உருவாக்கி அவரே பதில் எழுதிய கேள்வியும் நானே பதிலும் நானே! ராணி வாராந்த...
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு – இது ... காஞ்சித்தலைவன், தென்னாட்டு காந்தி, தென்னாட்டு பெர்னாட்ஷா, பேறிஞர், நூற்றாண்டு தலைவர் என்று பலவாறு  போற்றப்படும் தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் அண்ணா என்கி...

Be the first to comment on "சூர்யாவின் 10 கேள்விகளுக்கு பதில் அளித்த அர்ஜூன் சம்பத்!"

Leave a comment

Your email address will not be published.


*