வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன?

Benefits of eating food on banana leaf!
  1. வாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். அதாவது நல்ல கிருமி நாசினி என்றும் சொல்லலாம்.
  2. சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழை இலையில் வைத்து சாப்பிடுவது மிகுந்த நன்மை பயக்கும்.
  3. தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாழை இலை படுக்கையும் வாழை தண்டுச் சாறும் நல்லதொரு நச்சுமுறிப்பான்கள். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்துவிட்டால் முதலில் வாழைச்சாறு பருக கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.
  4. காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன் தான் தமிழன். எந்தவித நச்சும் முறிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.
  5. ஆகவே தான் திருமணப் பந்தலிலும் இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம்! மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன்.
  6. அதாவது நச்சு முறிப்புக்கு என்று தான் அவ்வாறு செய்தான். இருட்டில் சமைக்க நேர்ந்து சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால் தான் வாழை இலையில் சாப்பாடு.
  7. வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக் குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
  8. வாழை இலையின் மேல் உள்ள பச்சை தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழை இலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
  9. அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும்.
  10. குழந்தைகள் மாணவ மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதற்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன. வாழை மரத்தில் இருந்து பல பயன்களை பெறுகிறோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் மிக முக்கியம். வாழை இலையில் சாப்பிடுங்கள் ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.

Related Articles

மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 – இந... வந்து விட்டது  மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 (Mahindra XUV500 W9) கார்!!அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 (M...
உத்தரகாண்டில் மூன்று புதிய அணைகளைக் கட்ட... இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இண்டஸ் நீர் ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளுக்கும் மூன்று ஆறுகள் வீதம் பிரித்துக்...
பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்... நியூ வேர்ல்டு வெல்த் (New World Wealth) என்ற அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில், உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கி...
சிரியாவில் என்ன நடக்கிறது?... சமூக ஊடகங்களைக் கடந்த ஒரு வாரமாக ஆக்கிரமித்து இருப்பது சிரியா உள்நாட்டுப் போர் குறித்த செய்திகள் தான். கொத்து கொத்தாக குழந்தைகளும், பெரியவர்களும் கொன்...

Be the first to comment on "வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன?"

Leave a comment

Your email address will not be published.


*