அதிகார திமிர் பிடித்தவரா கரூர் கலெக்டர்? – ஆழ்துளை கிணறு குறித்து இளைஞரிடம் பேசியது யார்?

did karur collector misdeed his powers

சுஜித்தை நாம் அவ்வளவு எளிதில் மறக்கப் போவதில்லை. அந்த அளவுக்கு நம்மை கலங்க வைத்தான் சுஜித். காரணம் மூடப்படாத ஆழ்துளைக் கிணறு. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இந்தப் பிரச்சினை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் கரூர் குளித்தலை தாலுகாவை சேர்ந்த தரங்கம்பாடியில் உள்ள மூடப்படாத ஆழ்துளை கிணறு குறித்து சமூக அக்கறை உள்ள இளைஞர் ஒருவர் கலெக்டரிடம் போனில் பேசியுள்ளார். முறையான பதில் பேச வேண்டிய கலெக்டர் அன்பழகனோ அந்த இளைஞரை மட்டம் தட்டி பேசி உள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. கலெக்டர் அன்பழகனோ அந்த ஆடியோவில் இருப்பது என் குரல் இல்ல என கருத்து தெரிவித்து உள்ளார். இந்நிலையில் அன்பழகனின் போன் பேச்சு குறித்து பத்திரிக்கையாளர் சபர்ணா என்பவர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அந்த வரிகளை இங்கு இணைத்துள்ளோம். 

” மூடப்படாத ஆழ்துளைக் கிணறை மூடச்சொல்லி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு தகவல் கொடுத்த இளைஞரை ’சரவண பவன் சர்வர்னு நினைச்சிட்டிருக்கீங்களா கலெக்டருக்கெல்லாம் போன் போட்டு சொல்றதுக்கு? ராஸ்கல்” என்று திட்டியிருக்கிறார் கலெக்டர் அன்பழகன்.  

அந்த ஆடியோடில் தெளிவாக ”சுஜித் விழுந்தபோதே தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான், உங்களிடம் தகவல் கூறுகிறேன்” என்கிறார், அந்த இளைஞர். அதற்கு ஆட்சியரோ,  ‘அவ்வளவு அக்கறையாக இருந்தால் பி.டி.ஓவிடம் புகாரை நேரில் கொடுங்கள்’ என்கிறார். எவ்வளவு திமிர்த்தனமான ஆணவப் பேச்சு இது? 

ஆழ்துளை பிரச்சனைக்குறித்து பி.டி.ஓவிடம் புகார் அளிக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அந்தப் புகாரை யாரிடம் கொடுக்கவேண்டும்? யாருக்கு தகவல் சொல்லவேண்டும் என்ற விழிப்புணர்வே இல்லாமல்தான் மக்கள் இருக்கிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு.  அதுவும், பி.டி.ஓவிற்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்தான் கலெக்டருக்கு தகவல் கொடுத்திருக்கிறார் அந்த சமூக அக்கறையுள்ள இளைஞர். ஆனால், கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் தங்கள் மீதே தவறை வைத்துக்கொண்டு இளைஞரை அவமானப்படுத்தியிருக்கிறார் அன்பழகன்.

 இதற்கே, கடந்த 2013 ஆம் ஆண்டு, இதே கரூரில்தான் சிறுமி முத்துலட்சுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தாள். நேரில் சந்தித்து தகவல் கொடுக்க ஆகும் நேரத்தில் ஒரு குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டால் கலெக்டர் பொறுப்பேற்பாரா? ஒருவர் சமூக அக்கறையோடு தகவல் கொடுக்க முன்வருவதே பாராட்டப்படவேண்டிய பெரிய விஷயம்.  தகவல் கொடுப்பவர்களையும் திட்டி மிரட்டினால் எப்படி கொடுப்பார்கள்? ‘வம்ப’ழகன் போன்ற மிரட்டல்வாதிகளால் ‘நமக்கெதற்கு வம்பு’ என்றுதான் பொதுமக்கள் இருந்துவிடுவார்கள்.

சரவணபவன் ஓட்டல் சர்வர் என்ன அவ்வளவு இளக்காரமா?  சரவணபவன் சர்வரை விட கலெக்டரை அழைக்கும் உரிமை மக்களுக்கு எப்போதும் உண்டு. மக்களுக்காக சேவைசெய்யத்தான் மாவட்ட ஆட்சியர் பணி. அதற்காகத்தான் மக்கள் வரிப்பணத்திலிருந்து சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதை ஆட்சியர் என்ற பெயரில் ரவுடித்தனம் பண்ணிக்கொண்டிருக்கும் அன்பழகன் புரிந்துகொள்ளவேண்டும். மாவட்ட ஆட்சியர் என்ற பணிக்கே தகுதி இல்லாத அன்பழகன் மீது அரசும் நீதிமன்றமும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆழ்துளைக் கிணறுகளைவிட ஆபத்தானவர்கள் இதுபோன்ற ஆட்சியர்கள்.!!! ” – சபர்ணா

அதிகார திமிருடன் பேசியது கலெக்டர் தான் என்றால் கண்டிப்பாக அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் சாமான்ய மக்கள்.

Related Articles

பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : ம... மத்திய பிரதேசத்தில் சிவாஜிராங் சிங் சௌஹானின் அமைச்சரவை 12 வயது மற்றும் அதற்கு குறைவான குழந்தைகளை இலக்கு வைக்கும் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வ...
யோகி பாபு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!... அப்பா விஸ்வநாத். இராணுவ வீரர். 24 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றி உள்ளார். அம்மா விசாலாட்சி. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஸ்போர்ட்ஸ் கோட்டாவி...
SC பசங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வராத! &#... "இப்பலாம் யாரு சார் சாதி பாக்குறாங்க..." என்று கேட்பவர்கள் இருக்கும் இதே காலத்தில் தான் " நீங்க என்ன ஆளுங்க... " என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். ந...
கலைஞர் கருணாநிதி எழுதிய பராசக்தி திரைப்ப... சமீபத்தில் நடந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பராசக்தி படம் திரையிடப்பட்டது. பல ஆண்டுகள் ஆனாலும் பேசக்கூடிய வியக்ககூடிய படமாக இருக்கும் இந்தப் படத்த...

Be the first to comment on "அதிகார திமிர் பிடித்தவரா கரூர் கலெக்டர்? – ஆழ்துளை கிணறு குறித்து இளைஞரிடம் பேசியது யார்?"

Leave a comment

Your email address will not be published.


*