இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தாரா உதயநிதி ஸ்டாலின்! – நெட்டிசன்கள் ஆவேசம்!

Did Udhayanidhi Stalin give chance to Ilaiyaraaja - Netizens are Obsession!Kathmandu

திமுகவை சேர்ந்த எம் எம் அப்துல்லா என்பவர் இளையராஜாவுக்கு உதயநிதி வாய்ப்பு கொடுத்தார் என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட ஆவேசமடைந்துள்ளனர் இளையராஜா ரசிகர்கள். 

எம். எம். அப்துல்லா பதிவு : 

ராஜா இசைஞானிதான். மறுப்பவர் எவரும் இல்லை! ராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் வளரும் நடிகர்களான பாண்டியன், ராமராஜன், ராஜ்கிரன், கார்த்திக், பிரபு என பலரும் ராஜாவைத் தேடிச் சென்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் வரவிற்கு பிறகு ராஜாவிற்கு பெரிய அளவிலான  ஹிட் படங்கள் கடந்த 20 வருடங்களில் இல்லவே இல்லை!! இப்போது ரஹ்மான் காலம் போயி அனிருத்கள் காலம்!! 

இந்நிலையில் வளரும் நடிகராய் இப்போது டிரண்டில் உள்ள இசையமைப்பாளர்களைத் தேடி அவர்களது நிழலில் தான் வளர நினைக்காமல் தன் மீது நம்பிக்கை வைத்து ரிட்டையர்ட் இசையமைப்பாளரைத் தேர்ந்தெடுத்த உதயநிதியின் தில்லை தன்னம்பிக்கையை மனதாரப் பாராட்டுகிறேன்!!

நெட்டிசன்களின் ஆவேசமான பதிவுகள்: 

 1. யாரும் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இளையராஜா  இல்லை. இளையராஜாவின் விக்கிபீடியா பக்கத்தை சென்று பாருங்கள். முகம் தெரியாதவர்களின். சிறு பட்ஜெட் படங்களுக்காவது அவர் தொடர்ந்து இசையமைத்துக்கொண்டுதான் இருக்கிறார். கிடா பூசாரி மகுடி போன்ற படங்கள். அந்தப் படங்களை உருவாக்குபவர்கள் புதுமுக இசையமையப்பாளர்களை நாடினால் இன்னும் குறைவான விலைக்கு கிடைப்பார்களே? தேவா, எஸ் ஏ ராஜ்குமார் சிற்பி பரணி போன்றோரை நாடலாமே. இத்தனை வாய்ப்புகளை விட்டுவிட்டு அவர்கள் இளையராஜாவை நாடுகிறார் என்றால் அவர்கள் இளையராஜா better option என்று விரும்பி வருவதுதானே? இது எப்படி வாய்ப்பு கொடுப்பதாகும்?
 2. இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு உதயநிதி
  • அவ்வளவு பெரிய திரை கலைஞர் கிடையாது
  • முதலில் அவரை ஒரு திரை கலைஞராக ஏற்கவே முடியாது
  • உதயநிதி எந்த ‘கலைஞரும்” கிடையாது
  • கிடையவே கிடையாது
 3. ஏண்டா இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தேன்னு நான் எப்படா என் வாயால  சொன்னேன்… எவனோ ஒருத்தன் சொன்னான்னு என்ன ஏதுனுகூட விசாரிக்காம செவனே இருக்கிற என்னைய உள்ள இழுத்துப்போட்டு இந்த அடி அடிச்சுட்டு இருக்கீங்க #உதய்ணா
 4. நடிப்பே வராத  இந்த மூஞ்சிய வச்சுட்டு இவர் இளையராஜாவுக்கு  இசையமைக்க வாய்ப்பு கொடுத்தாராம் ,,!!
 5. உதயநிதி எந்த விஷயத்துக்காக பேசு பொருளாகியிருக்க வேண்டும்…? சென்னை ஐஐடி க்குள் ஆய்வு செய்ய நுழைந்திருக்க வேண்டும்… நிச்சயம் போலிசால் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பார் அப்போது வசந்தா கந்தசாமியின் கருத்தை பேசியிருக்க வேண்டும்.. அது பேசு பொருளாகியிருக்கும்… சிதம்பரம் கோவிலில் தாக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும்.. அது பேசு பொருளாகியிருக்கும்… அதிசயம்,அற்புதம் என்ற ரஜினியை நக்கலடித்திருக்க வேண்டும்.. அது பேசு பொருளாகியிருக்கும்… உதயநிதி அமைதியாக இருக்கிறார்.. அவருக்காக துதிபாடுகிறேன் என்ற பெயரில் இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் என்று கூறி உதயநிதியை இழுத்து நடுவில் விட்டுவிட்டு இப்போது புலம்பி என்ன பயன்..?
 6. இளையராஜாவுக்கு வாய்ப்பு குடுத்தார் உதயநிதி – ஊபிஸ்

   டேய் உதயநிதிக்கே வாய்ப்பு குடுத்தது #சந்தானம் டா 

  இந்தப் பிரச்சினை சமூக வலைதளங்களில் வலம் வர இதுகுறித்து                                                              இளையராஜாவும் உதயநிதி ஸ்டாலினும் எந்தப் பதிலும் கூறாமல் மௌனமாக இருந்து                  வருகின்றனர்.

Related Articles

சினிமா பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் ... 1.அசுரன் திரைப்படம் பார்த்தேன். கரிசல் மண்ணோடு கலந்து கிடக்கிற பகையையும், வன்மத்தையும், அதிகாரத்தின் கைகளில் நசுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கோபத...
கடைசி தேர்வு முடிந்ததும் பாட புத்தகங்களை... கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பண்ணிரண்டாம் வகுப்பு தேர்வுகளும், பத்தாம் வகுப்பு தேர்வுகளும் கேள்வித்தாள்கள் கடினமாக இருந்தது என்ற குறைகளுடன...
தமிழ்வழிக்கல்வியில் படித்தவர்கள் படும்பா... தாய்மொழிப்பற்றின் காரணமாகவும் போதிய வசதி இல்லாததாலும் நமக்கு வாய்ச்சது இதுதான் என்று தமிழ்மீடியத்தில் படித்த இளைஞர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆவதற்குள்...
உலக புத்தக தினம் – ஏப்ரல் 23... ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக தினம் என்று கொண்டாடப் படுகிறது. ஆனால் ஏப்ரல் 23ல் கொண்டாடுவதற்கான காரணம் என்ன என்று நம்மில் பாதி பேருக்கு...

Be the first to comment on "இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தாரா உதயநிதி ஸ்டாலின்! – நெட்டிசன்கள் ஆவேசம்!"

Leave a comment

Your email address will not be published.


*