திருவள்ளுவர் மத அடையாளம் கொண்டவரா? – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் கண்டனம்!

Do Thiruvalluvar has a religious identity - Writer Pattukkottai Prabhakar condemns

திருவள்ளுவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது தற்போதைய சர்ச்சைக்குரிய விஷியம். இந்த சர்ச்சையை குறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது என்ன என்று பார்ப்போம். 

திருவள்ளுவர் மத அடையாளம் கொண்டவரா.. இல்லையா என்று ஒரு புதிய சர்ச்சை!

இது தொடர்பாக திருவள்ளுவர் இப்போது நேரில் தோன்றியோ இல்லை எவர் கனவிலாவது வந்தோ ஏதாவது கருத்து சொன்னாரா என்ன?

எதற்காக அவரின் சிலையை இப்படி அவமானப்படுத்தியிருக்கிறார்கள்? யார் அவர்கள்? அவர்கள் மனதில் இருக்கும் லாஜிக்தான் என்ன? 

திருவள்ளுவரையோ அவரின் கருத்துக்களையோ ஏற்காதவர்கள் எந்த மதத்திலும் இல்லையே..

நம் பிரதமர் உள்பட மாற்றுச் சிந்தனைகள் கொண்ட எத்தனையோ தலைவர்களும் பலமுறை மேற்கோள் காட்டியிருக்கிறார்களே..

பகுத்தறிவுவாதிகள் அவரின் கடவுள் வாழ்த்தை மட்டும் ஏற்பதில்லை. கலைஞர் உரை எழுதியபோது கடவுள் வாழ்த்து அதிகாரத்தை இயற்கையை வாழ்த்தும் அதிகாரமாக மாற்றி அமைத்து எழுதினார். 

வள்ளுவர் காலத்தில் இருந்த நடைமுறைக்கேற்ப அவர் சில குறள்களில் ஆணாதிக்கக் கருத்துக்களை சொல்லியிருக்கிறார். 

மற்றபடி உலகப் பொதுமறை என்று ஏற்கப்பட்ட ஒப்பற்ற நூலை உலகிற்குத் தந்த அற்புதமான சிந்தனையாளர் திருவள்ளுவர். 

ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் போரும் அமைதியும் என்கிற நூலை எழுதியபோது அதில் அஹிம்சை தத்துவங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதினார். 

அந்த நூல்தான் மகாத்மா காந்தியின் அஹிம்சை தத்துவத்திற்கு தூண்டுதலாக அமைந்தது என்று மகாத்மாவே சொல்லியிருக்கிறார். 

டால்ஸ்டாயிடம் உங்களுக்கு இந்த அஹிம்சை சிந்தனை எங்கிருந்து வந்தது என்று கேட்கப்பட்டபோது உங்கள் நாட்டில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் மொழி பெயர்ப்பைப் படித்தபோது அதில் அவர் எழுதியிருக்கும் ” இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்கிற குறள்தான் என் சிந்தனையின் வித்து என்றிருக்கிறார். 

ஆக நம் நட்டிற்கு விடுதலை வாங்கித் தந்த அஹிம்சை என்னும் உலகம் போற்றும் தத்துவத்திற்கு மூல விதை திருவள்ளுவரின் சிந்தனை. 

தமிழர்கள் கம்பர் தினம் கொண்டாடவில்லை. வியாசர் தினம் கொண்டாடவில்லை. திருவள்ளுவர் தினம் கொண்டாடுகிறோம். எல்ல ஊர்களில் திருவள்ளுவருக்கு சிலையோ அல்லது அவர் பெயரில் ஒரு தெருவோ கண்டிப்பாக இருக்கிறது. 

அத்தனைப் பெருமைக்குரிய திருவள்ளுவரை கொஞ்சமும் கூசாமல் இப்படி அசிங்கப் படுத்தியவர்களின் மனதில் இருக்கும் வக்கிரத்திற்கான காரணத்தை  என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. அந்தக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார் பட்டுக்கோட்டை பிரபாகர்!

Related Articles

சமஸ்கிருத மொழியை பற்றிய சில சுவாரஸ்யமான ... *சமஸ்கிருதம் ஒரு உருவாக்கப்பட்ட மொழி* சமஸ்கிருதத்தை உருவாக்கியவர் பனினி* சமஸ்கிருத மொழிக்கு மிக நெருக்கமான சகோதரி மொழி லிதுவேனியன் மொழியாகும்....
எதிர்பார்ப்பை கிளப்பிய வசந்த் ரவியின் ரா... இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் வசந்த் ரவி. அவருடைய இரண்டாவது படத்தில் (ராக்கி) இயக்குனர் இமயம் பாரதிராஜாவோடு இணைந்த...
பிக்பாஸ் கவினின் அம்மா சிறைக்குச் செல்கி... பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு இன்று வரை அந்த வீட்டை விட்டு வெளியேறாமல் உள்ள நபர்களில் கவினும் ஒருவர். இந்த நிலையில் அவருடைய அம்மா சீட்டுக் கம்பெ...
அப்டேட் ஆகுங்க அப்பாக்களே – குடிகா... தந்தையின் குடிப்பழக்கத்தை கண்டித்து கடிதம் எழுதி வைத்த பண்ணிரெண்டாம்  வகுப்பு தேர்வு எழுதிய  மாணவர் தினேஷ்  நெல்லை புறவழிச்சாலை ரயில்வே பாலத்தில் தூக்...

Be the first to comment on "திருவள்ளுவர் மத அடையாளம் கொண்டவரா? – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் கண்டனம்!"

Leave a comment

Your email address will not be published.


*