டாக்டர்களுக்கு எல்லாம் உண்மையிலேயே சம்பளம் குறைவா ?? – ஒரு மருத்துவரின் பதிவு!

Doctors getting poor salary packages

கடந்த ஒரு வாரமாக அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள், அவர்களை மிரட்டிக் கொண்டு இருக்கிறது தமிழக அரசு. இந்நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த மருத்துவர் சபி என்பவர் டாக்டர்கள் போராட்டம் எதற்கானது என்பது குறித்து அவர்களுடைய சம்பளம் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அவருடைய பதிவை இங்கு பார்ப்போம். 

ஒரு சராசரி கணக்கை பார்ப்போம் . ஒரு  #MBBS எனும் நான்கெழுத்து மருத்துவ கல்வியை பயின்று முடிக்க 5 1/2 வருடங்கள் ஆகறது ! உலகிலேயே மிக கடினமான தேர்வுகள் என சொல்லப்படும் , பன்னிரெண்டாம் வகுப்பின் முதல் பிரிவுகளின் ஆண்டுதேர்வு ,

பின்னர் ஒரு நுழைவு தேர்வு , சுமார் 28 எழுத்து தேர்வு, 14 செய்முறை தேர்வு , 14 நேர்முக தேர்வு . இவை அனைத்திலும் மதிப்பெண் எனும் எண்கள் மட்டுமல்லாது, பேராசிரியர்களிடம் நற்சான்று எனும்  நடத்தை பயிற்சியும் பெற்று , ஒரு வருட கடுமையான பயிற்சி மருத்துவ காலம் முடித்து , அவர் தம் வாழ்வில் முதல் மாதம் வாங்கும் அரசு சம்பளம் 56000/ ரூபாய் ஒரு நாளில் சராசரியாக 1860 ரூபாய் , இதை வாங்கிக்கொண்டு அவருக்கு அளிக்கும் வேலை ஒன்றும் சாதாரண ஆபீசில் மின்விசிறிக்கு அடியில் இருந்து பணிபுரியும் ஆயாசவேலை அல்ல..! 

தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகளை கவனிக்கும் , குணப்படுத்திடும் , காப்பாற்றிடும் அரும்பொறுப்பு ..! சரி அடுத்ததாக ,இதே மருத்துவர் 15 ஆண்டுகள் இதே வேலையை தொடர்ந்தால் அவரது சம்பளம் 15 வருடங்களுக்கு பிறகு 1, 40, 000 ரூபாய்கள் , இன்றிலிருந்து 15 வருடங்களில் உள்ள பொருளாதார நிலையையும் , தனிமனித வாழ்வியல் தேவையையும் எண்ணி பார்த்தோமானால் அந்த 1,40 ஆயிரம் எனும் எண் தற்போதைய 50,000 ஆகதான் இருக்கும் , மொத்தத்தில் அவருக்கான பொருளாதார  ரீதியில் எந்த முன்னேற்றமும் இருக்கபோவதில்லை , சரி , இதையே மருத்துவ தகுதிக்கு இணையான மற்ற துறையை சேர்ந்தவர்களின் ஊதியத்தினை பார்ப்போம் க்ரூப் 1 ஆபீசர்கள் என்றழைக்கப்படும் சப் கலெக்டர்கள் , கமிஷணர்கள் , மாவட்ட உயர் அதிகாரிகள் , மாவட்ட நீதிபதிகள் , இவர்களுக்கான சம்பளம் ஆரம்பமே 85 ஆயிரத்திற்கும் மேல் , அவர்களுக்கு அளிக்கும் சலுகைகள் ஏராளமான தாராளம் மிகவும் சொகுசான வாழ்க்கை , குறைவான பணி நேரம் , விரும்பியது போல விடுப்புகள் , அரசு விடுமுறை அனைத்தும் விடுப்பு , இது போக , இலவச அரசு வாகனம் , இலவச தங்கும் விடுதி , இலவச மின் இணைப்பு , இலவசமாக  குழந்தைகளுகான கல்வி, வீட்டு வரி , தொழில் வரி , என எதுவும் கிடையாது !! 

எந்த உயிரையும் காக்க வேண்டிய பொறுப்பும் இல்லாமை , உயர் அலுவலர்கள் மற்றும் ஆட்சியர்கள் வழியில் தமக்கு பிரச்சனை இல்லாமல்  பணிசெய்திடும் அரிய வாய்ப்பு , தேவைக்கும் அதிகமான ஊதிய உயர்வுகள், இவ்வளவு ஏன் ..! 

நெடுஞ்சாலை டோல் கட்டணங்கள் கூட கிடையாது !! அனைத்திற்கும் மேல் ஓய்வு பெறும்போது வரும் ரொக்கம் மற்றும் பென்ஷன் எனும் ஓய்வூதியமும் கூட அவர்களுக்கு உண்டு ..!

மருத்துவனுக்கு நான் மேற்கூறிய எதுவுமே கிடையாது !! ஆனால் சுகாதாரத்துறையின் , நல்வாழ்வுத்துறையின் முக்கிய  தூண்கள் அனைத்தும் மருத்துவர்கள் தான் , அவனுக்கும் வாழ்க்கை உண்டு, குடும்பம் ,குழந்தைகள் உண்டு , வீடு , வாகனம் தேவை உண்டு , வரி , கறி என அனைத்து விடயமும் உண்டு !!

என்ன சார் . ஒரு எலக்ட்ரீஷியன் , ப்ளம்பர் , கார்பெண்டர் என வரும் ப்ரொபஷனல் வேலையாட்கள்   ஒரு நாளில் 1000 ரூபாய் குறையாது வாங்குவர் !!

இவர்களில் ஒருவரை இரவு 1 மணிக்கு உங்கள் வீட்டின் அவசர  வேலைக்கு அழைத்து பாருங்கள் , 2000 கொடுத்தாலும் வரமாட்டார் !! ஆனால் மருத்துவன்  மட்டும் இவர்கள் தரும் சொற்ப ஊதியத்தோடும் சின்ன கன்சல்டிங் கட்டணமுடன் ( 5 ரூபா டாக்டர் எனும் கொடுமை வேற ) உளம் மகிழ உழைத்து உலவ வேண்டும் !!

இல்லாவிட்டால் கடும் நடவடிக்கைகள் … அப்பப்பா !!! எங்க முயற்சி செய்து தான் பாருங்களேன்  முதல்வர் சார் !! சவால் ..மருத்துவனுக்கு பதிலாய் நீங்கள் அதே தகுதி உள்ள மருத்துவனை தானே பணி அமர்த்திட முடியும் ,..!! 

இது பஸ் ஓட்டற, காவல் காக்கற , பள்ளிக்கூடத்துல பாடம் எடுக்கற  கதை இல்லை சார் .. உங்களால் முடிந்தால் , ஒவ்வொரு அரசு மருத்துவனுக்கு பதில் தனியார் மருத்துவனை வாங்க பாருங்கள்.

ஒரு தனியார் மருத்துவனாய் , நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன் , அது நடக்காது …!!

நாங்க என்ன முறைசாரா தொழிலாளர்கள் போல இருப்போம் என்றெண்ணிவிட வேண்டாம் !! இது தேனீ கூட்டம் !! தொட்டால் பாதிப்பு கூட்டத்திற்கு அல்ல , தேனீக்கள் எங்கே சென்றாலும் தேன் மட்டும் தான் சேர்க்கும் , நாங்கள் எங்கே சென்றாலும் மருத்துவர்கள் ,

ஆனால் தொட்ட கை !!! தயவுசெய்து நல்ல முடிவெடுங்கள் , அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை முறைப்படுத்திட வேண்டிய ஆவண செய்திடுங்கள் ..!

உயிர்காக்கும் கரங்களில் , போராட்ட உரங்களை தூவிடாதீர் !! அது நாட்டு மக்களுக்கு நோய்தீர்க்க மட்டும் உபயோகிக்கபடட்டும். இவ்வாறு ஒரு மருத்துவர் தங்களது போராட்டம் குறித்து பதிவு செய்துள்ளார்.

Related Articles

ஊரடங்கு நாட்களில் சினிமா பார்த்து பொழுது... கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 15, 2020 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இதன் காரணமாக நாம் எல்லோரும் வீட்டிலயே முடங்கி கிடக்க வேண்...
சாகித்திய அகாடமி விருது வெற்றியாளர் கேவி... 1. கேள்வி: கேரளாவுல பாலக்காட்டில் பிறந்திருந்தால் கூட இங்க வந்து ஒரு தமிழாசிரியரா இருக்கீங்க...  தமிழ் மீது அவ்வளவு ஈடுபாடு இருக்கு... தமிழ் சார்ந்த ம...
ப்ளஸ் கோட்ஸ் – கூகுள் வரைபடத்தின் ... நெடுந்தூர பயணங்களுக்கு நாம் யாரை நம்புகிறோமோ இல்லையோ, கண்ணை மூடிக்கொண்டு கூகுள் வரைபடத்தை நம்பத் துவங்குகிறோம். சென்னை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நக...
இராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட... 1. " நீ தப்பிக்க விட்டவன் இப்ப என் வீட்டுல தா கெஸ்ட்டா இருக்கான்.., சாரி... நான் யாருன்னு சொல்லல... என் பேரு ஜெகதீஷ்... இந்தியன் ஆர்மி... ஆனா நா அதுமட...

Be the first to comment on "டாக்டர்களுக்கு எல்லாம் உண்மையிலேயே சம்பளம் குறைவா ?? – ஒரு மருத்துவரின் பதிவு!"

Leave a comment

Your email address will not be published.


*