ரயிலில் அடிபட்டு இறந்த யானை! யானைகளின் சாபம் மனிதர்களை சும்மா விடுமா?

Elephant killed in train accident!

யானைகளின் உயிர் அவ்வளவு இளக்காரமா? – விபத்திற்குள்ளாகும் யானைகளை காப்பாற்ற அரசு எடுத்த நடவடிக்கை என்ன? நடந்தது என்ன? : 

வெஸ்ட் பெங்கால் ஜல்பாய்குரி டிஸ்ட்ரிக்கில் உள்ள பனார்ஹட் நக்ராகடா ரூட்டில்ல் நேற்று முன் தினம் காலை சிலிகுரி- துப்ரி இடையே இன்டர்சிட்டி ரயில் போய் கொண்டிருந்தது. அப்போ யானை ஒன்று தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்யும் போது.  யானை மீது ரயில் வேகமாக மோதிடுச்சு. இதனால் அந்த யானை 30 மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டது. இதுலே யானையின் உடல் முழுவதும் படுகாயமடைந்தது. இதனால் ரயிலின் எஞ்சின் பகுதியும் சேதமடைந்தது. உடம்பில் ஏராளமான சிராய்ப்புகளுடன் ரத்தம் சொட்ட சொட்ட அந்த யானை தவழ்ந்து சென்றது. அப்பாலே ஒரு மரத்தின் அருகே எழுந்து நின்றது. இந்த காட்சியை ரயில் பயணிகள் வீடியோவாக எடுத்தனர். மிகவும் அழகாக கம்பீரமாக நடந்து வரும் யானை இப்படி தவழ்ந்ததை கண்டு பயணிகள் கண்கலங்கினர். விபத்து நடந்த பகுதியானது யானைகள் நடமாடும் பகுதியாகும். காயமடைந்த பெண் யானையை வனத்துறை அதிகாரிகள் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். அன்றைய தினம் முழுவதும் அவ்வழியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுச்சு. இந்த யானைக்கு உள்காயம் அதிகமாக இருந்தது. இதனால் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து அந்த யானை. இதனால் வனத்துறையினர் மட்டுமல்லாது இதை கேள்விப்பட்ட ரயில் பயணிகளும், வீடியோ கண்ட நெட்டிசன்களும் வேதனை அடைந்திருக்கிறார்கள். 

இது போன்ற கொடுமைகள் யானைகளுக்கு இன்று மட்டும் நடந்தது அல்ல… காலங்காலமாக நடந்து வருகிறது. குறிப்பாக ஒசூர் அருகே உள்ள வனப் பகுதிகளில் இருந்து சாலையை கடக்க முயலும் யானைகள் பஸ்ஸிலோ லாரியிலோ அடிபட்டு தினமும் உயிரிழந்து கொண்டிருக்கின்றன. யானைகள் மட்டுமல்லாது குரங்குகளும் இந்த துன்பத்திற்கு உள்ளாகின்றன. இதை தடுக்க என்ன தான் வழி? என்று கேள்வி கேட்க வைக்கிறது நம் மனசாட்சி. அவ்வாறு சமீபத்தில் ரயிலில் அடிபட்டு இறந்த கர்ப்பிணி யானை குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவை என்ன என்று பார்ப்போம். 

நெட்டிசன்களின் கருத்துக்கள் : 

ரயிலில் அடிபட்டு யானை சாகிறது, யானை வழித்தடம் போகிறது என்று கதறும் ஆட்கள் பலர் மறந்தும்கூட யானையை வைத்து பிச்சை எடுக்கும் கோயில் வழக்கத்தைக் கண்டிக்க மாட்டார்கள். யானை magnificent wild beast. அதை போரடிக்க பயன்படுத்தினார்கள் தமிழர்கள் என்று பெருமை பீத்தல் உண்டு. ஆனால் சங்கத் தமிழனை விஞ்சும் வகையில் காட்டு ராஜாவை 50 காசு, 1 ரூபாய்க்கும் பிச்சை எடுக்க வைத்து , அதற்கு sugar , BP எல்லாம் வரவைத்த பெருமை நம்மையே சாரும். மதம் பிடித்து ஆட்டுவது இங்கே யானைக்கு மட்டுமல்ல

யானை ஊர்ந்து போறதெல்லாம் பாக்க முடியலை .

கடந்த 2005 ஆண்டு மே மாதம் 5,6,7 ஆகிய மூன்று தினங்கள் யானைகள் கணக்கெடுப்பு பணிக்காக நான், என் நண்பர்கள் சந்திரன், பூபாலன்,ஆனந்தீசுவரன்,ஜனா, பாலாஜி, மற்றும் சிலர் சிறுமுகையின் தட்டப்பள்ளம்,குணுக்குமடுவு பகுதிக்கு சென்றிருந்தோம்..

முதல் நாள் வண்டியில் இருந்து பாலாஜி கீழே விழுந்து விபத்து, இரண்டாவது நாள் நான் சந்திரன் மற்றும் பூபாலன் ஆகியோர் யானையின் குட்டியை பிடிக்க வந்ததாக கருதி யானைக்கூட்டம் எங்களை துரத்தி வர உயிர் பிழைக்க காட்டுக்குள் ஓடிய நான் காயங்களுடன் உயிர் பிழைத்தது.

மூன்றாவது நாளும் நாங்கள் யானைகளிடம் மாட்டிக்கொண்டு வண்டியில் தப்பித்து ஓடி வந்தது என… இன்று 13 ஆண்டுகள் கழித்து அதே இடத்திற்கு சென்றபோது அந்த மறக்க முடியாத திகிலான பசுமையான நினைவுகள் என் முன்னே நிழலாடுகிறது… இப்போதும் யானை விரட்டுவது போன்று அடிக்கடி கனவுகள் வருவதுண்டு.. – கலையரசன் கதிர்

ரயில் மோதி இறந்து போன அந்த யானை என்ற பாவப்பட்ட ஜீவனுக்காக சில நிமிடங்கள் வருந்துவதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்யமுடியும்? மற்ற மிருகங்களை விட யானைகளின் சாவுதான் கொடூரமாக உள்ளது. இப்படி ரயில் மோதியோ,கரண்ட் ஷாக்காலோ அல்லது வேட்டையாடப்பட்டோ பல யானைகள் கொல்லப்படுவது அதிர்ச்சிதான். அந்த கம்பீரமான யானை மனிதனின் அறியாமையால் உயிர் துறப்பது என்பது மிக மிக கொடுமையான விஷயம்.இந்த அநியாயமான உயிர் இழப்புகளை எப்படி தடுக்க வேண்டும் என்று அரசுகளும் விலங்கின ஆர்வலர்களும் ஆய்வு செய்யவேண்டும்,இல்லையென்றால் இனிமேல் வரும் சந்ததிகளுக்கு இதுதான் யானை என்று படம் தான் வரைந்து காண்பிக்க வேண்டியது வரும். எதையும் வரும்முன் காப்போம்.

பூமியில் மனித மிருகம் மட்டுமே வாழ தகுதி வாய்ந்தது என நிரூபித்த தருணம். இந்த பூமியில் வாழ தகுதி இல்லாத உயிரினம் மனிதன் மட்டுமே. 

அவ்வளவு அடிப்பட்டு இருக்கு அந்த யானைக்கு யாரும் கவனிக்கவே இல்லயே.. போட்டோ மட்டும் எப்படி எடுக்க மனசு வருது.

ஒரு பொண்ணு தண்டவாளத்தில் தலைய வச்சு தற்கொலை பண்றதுக்காக போச்சு அதைய தடுக்கமால் அந்த பொண்ணு சாகும்வரை வீடியோ எடுத்தானுங்க… இதையெல்லாம் அவிங்க பெருசா நினைக்க மாட்டாய்ங்க…

ஹெ ஹெ இங்க மனுஷனுக்கே அந்த நிலைமை தான் இது ஒரு மிருகம் இதுக்கு போய்…. மனிதம் மரணித்து மிருகமாகிவிட்ட நாம் மிருகத்துக்கா கவலை பட போகிறோம். 

வருத்தமாக இருக்கிறது , இந்த வன பகுதியில் மெதுவாக சென்று horn செய்தால் வனவிலங்குகள் பாதிக்கப்படாது. 

மனித இனம் விரைவில் அழிய வேண்டும் என்று கூறுவது இதனால் தான் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் மனிதனால் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்து வருகிறது இவர்களுக்காக கண்ணீர் சிந்த யார் இருக்கிறார்கள் காடுகள் தான் இயற்கையின் தாய் என்றால் காடுகளின் தாய் யானை போன்ற உயிர்களே யானைகள் தான் காடுகளையே உருவாக்குகிறது பல் உயிர் பெருக்கத்திற்கு யானைகளின் பங்கு அளப்பரியது.

அடிபட்டு இறந்த யானையின் சாபம் நம்மை சும்மா விடாது. 

கை கால் முறிந்த குரங்குகளின் சாபமும் நம்மை சும்மா விடாது. பச்சை பசேலென புற்கள் முளைக்க இயலா இடத்தில் காகிதத்தையும் குப்பை உணவுகளையும் போஸ்டர்களையும் தின்று சிவப்பு நிறத்தில் சாணி போடும்  பசுக்களின் சாபமும் சிவப்பு நிறத்தில் புளுக்கை போடும் ஆடுகளின் சாபமும் நம்மை சும்மா விடாது. பிளாஸ்டிக் குப்பைகளால் பாதிக்கப்படும் கடல்வாழ் உயிரினங்களின் சாபமும் நம்மை சும்மா விடாது. 

யானைகளின் அழிவை தடுக்க மனிதர்களுக்கு சில விதிமுறைகளை வகுக்க வேண்டும் அரசு. யானைகள் சாலையை கடக்கும் இடம் என்ற அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். அதுபோன்ற இடங்களில் வேகத் தடைகள் வைக்க வேண்டும். எச்சரிக்கை ஒலி எழுப்ப முற்பட வேண்டும். வன பகுதிகளை கடக்கும் போது வன விலங்குகளுக்கு ஏதேனும் விபத்து நடந்தால் அந்த வழியில் சென்ற வாகனத்திற்கு அபராதம் விதிக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும். நம்முடைய பாதைகளை அந்த விலங்குகள் கடக்கவில்லை நாம் தான் அதனுடைய பாதைகளை வழிமறித்து சாலைகள் அமைத்து தண்டவாளங்கள் அமைத்து அந்த விலங்குகளுக்கு இடைஞ்சல் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மக்கள்புரிந்து கொள்ள வேண்டும், இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் அல்ல மற்ற ஜீவ ராசிகளுக்கும் உரித்தானது எல்லாருக்கும் பொதுவானது என்பதை இந்த மனித இனம் புரிந்துகொள்ள வேண்டும். ரயிலில் அடிபட்டு இறந்த அந்த கர்ப்பிணி யானைக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! அதன் வயிற்றில் இருந்த குட்டி யானைக்கு என்ன சமரசம் சொன்னாலும் அதன் வலியை ஈடுகட்ட முடியாது. யானைகளின் சாபம் பலிக்கட்டும்! 

Related Articles

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக்... திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் இன்று நடக்கும் ஒரு நாள் பந்த் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது....
கவிஞராக மாறிய மோடி! – கடல் குறித்த... சீன அதிபரின் வருகையால் பிரதமர் மோடி மாமல்லபுரம் செல்ல வேண்டி இருந்தது. கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டி இருந்தது. அந்த நிகழ்வின் புகைப் படங்கள்...
சர்வதேச அளவில் செயல்பட்டு வந்த ஆபாச இணைய... இந்த தலைப்பை பார்த்ததும் எத்தனை பேர் பிரேசர்ஸ், பார்ன்ஹப், எக்ஸ்என்எஸ்எஸ், எக்ஸ்வீடியோஸ் பக்கங்களுக்கு விரைந்தீர்கள் என்பது தெரியவில்லை. ஆனால் சர்வதே...
டிஜி யாத்ரா – ஆதார் எண் இணைப்பு மூ... வரும் 2018ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து ஆதார் என் இணைத்த விமானப் பயணங்கள் என்னும் திட்டம் கொண்டு வர பட உள்ளது. விமான டிக்கெட்டுகளில் ஆதார் எண் இணைப...

Be the first to comment on "ரயிலில் அடிபட்டு இறந்த யானை! யானைகளின் சாபம் மனிதர்களை சும்மா விடுமா?"

Leave a comment

Your email address will not be published.


*