கார்த்தியின் கைதி படத்தை பாராட்டி தள்ளிய பிரபல எழுத்தாளர்கள்!

Famous Writers Who Appreciate the kaithi movie

1.எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் : 

 தாமதமாகத்தான் பார்த்தேன். ஆனால் ஏன் தாமதமாகப் பார்த்தேன் என்று வருத்தம் கொள்ள வைத்து விட்டது படம். கதாநாயகி இல்லை. பாடல்கள் இல்லை. 

முழுக்க முழுக்க இரவு நேரக் காட்சிகள் மட்டுமே. இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு தன் கதை, திரைக்கதையின் மீது எத்தனை நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்!(தயாரிப்பாளருக்கும்தான்!)

அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஓரிரவில் நிகழும் சில சுவாரசியமான சம்பவங்களையும், அசாதாரணமான சூழ்நிலைகளையும் சாமர்த்தியமாக ஒருங்கிணைத்திருக்கிறார். 

கார்த்திக்கு தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த அமைந்த சரியான படம். மிகையே இல்லாமல் பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார். 

ஒரு சூழ்நிலை என்று வந்தால் ஒரு கல்லூரி மாணவன், மாணவி, ஏன்..வயதான கான்ஸ்டபிள்கூட ஹீரோ ஆக முடியும் என்று அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கைத்தட்டல் வாங்கும் பல காட்சிகளில் கார்த்தி கிடையாது. ஆனால் அவர்தான் கதையின் அச்சாணி. 

ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்.. வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்கிற பழமொழி மாதிரி.. ஒரு சூழ்நிலை அமைந்தால் திறமையான பல போலீஸ் அதிகாரிகளை ஒரு சாதாரண கைதி காப்பாற்றுவான் என்கிற அடிப்படை ஒரு வரிக் கதையிலேயே துவங்கும் சுவாரசியம் படம் முழுக்கவும் இருக்கிறது.

படம் துவங்கியதிலிருந்து முடியும்வரை நம்மை காட்சிகள் கட்டிப்போடுகின்றன. படத்தின் பல லாஜிக் விஷயங்கள் இந்த திரைக்கதையால் மறக்கடிக்கப் படுகின்றன. 

இயக்குனருக்கும், அவருக்கு பக்க பலமாக செயல்பட்டிருக்கிற நடிகர்கள் மற்றும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும்… என் ராயல் சல்யூட்.

2.எழுத்தாளர் ஷான் கருப்பசாமி :

கைதி – இன்னொரு சூப்பர் ஹீரோ படம். ஆனால் பாட்டு இல்லாமல் ஹீரோயின் இல்லாமல் திரைக்கதையை மட்டுமே நம்பி தில்லாக இறங்கியிருப்பதற்காகவே பாராட்டலாம். ஆக்சன் பிரியர்கள் பாப்கார்ன் வாங்கிக்கொண்டு அமரலாம்.

3.எழுத்தாளர் சி சரவண கார்த்திகேயன் :

கைதி – நன்று. மாநகரம் போலவே ஓரிரவில் நடக்கும் கதை. இரண்டாம் பகுதியில் வரும் சில நீண்ட சண்டைக் காட்சிகள் தவிர சுவாரஸ்யமான படம். சில க்ளீஷே காட்சிகள் தவிர பெரும்பாலும் திறமையான திரைக்கதை. நாயகியற்ற படம். நாயகனை மட்டுமே சுற்றாத படம். வழமையான த்ரில்லர் படங்கள் போலல்லாது ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஓர் உயிர் இருக்கிறது.  எனக்குப் பிடித்தது பிரமாதமான எடிட்டிங் (அல்லது திரைக்கதைக் காட்சிகள் திட்டமிடல்). ஆனால் இத்தனை திறமை வைத்துக் கொண்டு அடுத்து விஜய்யை வைத்து இந்த லோகேஷ் கனகராஜ் என்ன செய்யப் போகிறார் என்பது தான் பெருங்கவலையாய் இருக்கிறது.

4.எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் :

ரொம்ப சுத்தி வளைக்காம சிம்பிளா சொல்லலாம். ஒரு நல்ல கமர்ஷியல் படம் பாக்கற ரசிகன முட்டாளாக்காம ஏமாத்தாம இருக்கனும். கதைக்கு சம்பந்தமில்லாம கருத்து சொல்றது, படத்துக்கு ஒரு சீன்னு சுட்டு எடுக்கறதுன்னு இல்லாம ஒரு இயக்குநரோட மனசுல இருந்து என்ன வருதோ அத காட்சிப்படுத்தனும். ஒரு உதாரணம் – கைதி.

Related Articles

தானா சேர்ந்த கூட்டம் – சினிமா விமர... தயாரிப்பு: ஸ்டூடியோ கிரீன் இயக்கம்: விக்னேஷ் சிவன் மூலக்கதை: ஸ்பெசல்26 ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன் இசை: அனிருத் நடிகர்கள்: சூர்யா, கார்த்திக், க...
“நாயா அலஞ்சு நாய கண்டுபிடிச்ச தரன்... இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2018ம் ஆண்டின் இறுதியில் வெளியான படம் அடங்க மறு. ஒரே நாளில் ஐந்து படங்கள் ரிலீஸ் ஆனதால் ...
ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் படங்கள்!... ஏப்ரல் 4ம் தேதி :குப்பத்து ராஜாஜிவி பிரகாஷ் குமார், பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் "குப்பத்து ராஜா" திரைப்படம். நடன இயக்குனர் ...
அவளுக்காக எத்தனை கொலை வேணாலும் பண்ணுவேன்... இந்தியா பாகிஸ்தான், காளி, எமன், சைத்தான், திமிரு புடிச்சவன் இப்படி தொடர் தோல்வியில் இருந்த விஜய் ஆண்டனிக்கு நல்லதொரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது கொலைகா...

Be the first to comment on "கார்த்தியின் கைதி படத்தை பாராட்டி தள்ளிய பிரபல எழுத்தாளர்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*