நிஜ ராட்சசி ஆசிரியை மகாலட்சுமியிடம் அடிக்கடி கேள்விகளும் அவருடைய பதில்களும்!

Frequently Asked Questions and the Answers by the real Raatchasi Teacher Mahalakshmi

சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் ராட்சசி. இந்தப் படத்திற்கான இன்ஸ்பிரேசன் மகாலட்சுமி என்ற ஆசிரியை என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவருடைய பதில்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

#ஆங்காங்கே_என்மீது_எழுப்பப்பட்ட_கேள்விகளும்_அதற்கான_பதில்களும்:

கேள்வி:நீங்க எல்லாத்தையும் விளம்பரத்துக்காகத்தான் பண்றீங்கனு சில ஆசிரியர்கள் சொல்றாங்களே?

பதில்:ஆமாங்க…நான் இப்படி விளம்பரத்துக்காக எல்லாத்தையும் செய்துதான் இப்போ அடுத்த குழந்தைகள் சார்ந்த ஒரு விளம்பரத்துல கமிட் ஆகியிருக்கேன்.

கேள்வி:அப்போ…நீங்க பண்றது விளம்பரம் இல்லனு சொல்றீங்களா?

பதில்:ஒருவர் தன்னுடைய செயல்பாடுகளைப் பகிர்ந்துகொள்ளுதல் என்பது விளம்பரம் என்றால் உலகில்  நடந்த/நடந்துகொண்டிருக்கும் எல்லாமே விளம்பரம் தானே!அதை விடுங்க,அவர்கள் என்னை இப்படி சொல்லி எழுதுவதும் பேசுவதுமே கூட அவர்களுக்கு விளம்பரம்தானே!

ஒரு டூத்பேஸ்ட்டுக்கு விளம்பரம் தேவைப்படும்போது குழந்தைகளைக் குழந்தைகளாக நடத்துங்கள் என்று சொல்வதும்,அவர்களுக்குரிய 

மாண்போடு அவர்களை வளரவிடுங்கள்   என்று சொல்வதும் விளம்பரத்தில் சேருமென்றால் சேர்ந்துவிட்டுப் போகட்டுமே!

கேள்வி:நீங்களும் ஆசிரியர்களை ஆசிரியரில் ஒருவரே ஒருங்கிணைக்கும் 200 பேர்கொண்ட குழுவில் இருந்தீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

இப்போது ஏன் அதில் இல்லை?

பதில்:உண்மைதான்.சேர்த்துக்கொண்டார்கள்.பின் சில கேள்விகளை எழுப்பியதால் வேறொரு அட்மின் அக்குழுவில் நியமிக்கப்பட்டு லெஃப்ட் செய்யப்பட்டேன்.

கேள்வி:உங்களை நீக்கும் அளவிற்கு அப்படி என்ன கேள்விக் கேட்டீர்கள்?

பதில்:அவர்களால் ஆசிரியர்களிடத்தில்  ஏதோ சிறு நகர்வை ஏற்படுத்திட முடிகிறது.அந்நகர்வு பள்ளியிலுள்ள குழந்தைகளுக்கு நன்மை தரக்கூடியதாய் இருக்கும்போது அங்கு நடந்த விசயங்கள் இங்கு வேண்டாமே!

கேள்வி:உங்கள் மீது விமர்சனம் வைப்பவர்கள் மீது நீங்கள் எதாவது விமர்சனம்?

பதில்:அதற்கு நேரமில்லை.மேற்சொன்ன பதிலே இதற்கும் பொருந்தும்.

கேள்வி:நிறைய ஊடகங்கள் உங்களைப் பற்றி எழுதுகின்றன.அதில் சில உங்களுக்கு அங்கீகாரங்களையும் வழங்கியுள்ளனனர்.இதனால் உங்கள் மீது சிலருக்குக் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கக்கூடுமோ?

பதில்:அதை அவர்களிடம்தான் கேட்கவேண்டும்.அப்படியிருந்தாலும் கூட அந்தக் காழ்ப்புணர்ச்சி…’அவளால் மட்டும்தான் செய்யமுடியுமா?நானும் செய்வேன் எங்கள் குழந்தைகளுக்கு’ என்று நகர்ந்தால் நல்லதுதானே!

கேள்வி:எப்போதோ எடுத்த முடிவெட்டும் ஃபோட்டோவைப் போட்டுக்கொண்டு இன்னமும் சீன் போட்றதா சொல்றாங்க.அதை எப்டி எடுத்துக்கிறீங்க?

பதில்:அதுக்காக எப்போதெல்லாம் முடிவெட்றேனோ அப்போதெல்லாம் குழந்தைங்க ஃபோட்டோ எடுத்துக்கிட்டே இருப்பாங்களா என்ன?பொதுவா 4.45PM-இருட்டுகிற வரைக்கும் வெட்டுவேன்.தினமும் என்றெல்லாம் சொல்லமுடியாது.கத்தரி அழுத்தி வெட்டும்போது விரல்கள் துண்டாவது போன்ற வலியிருக்கும்.ஒரே நாளில் 10-15 பேருக்குக் கூட வெட்டிடுவேன்.அப்புறம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாயிட்டா  எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வெட்டிடுவேன்.பள்ளிநேரம் முடிந்தபிறகு குழந்தைகள் தான் என்னுடைய மொபைலை வச்சிக்கிட்டிருப்பாங்க.

அவிங்களுக்குத் தோனினா ஃபோட்டோ எடுப்பாங்க.இல்லேனா இல்லதான்.அவங்களுக்கும் துணித்துவைக்கிறது,குளிக்கிறது,எழுதறது,படிக்கிறதுனு நிறைய வேல இருக்குமில்ல.ஆகவே……….புதுசு புதுசா ஃபோட்டோ வேணும்னு நினைக்கிறவங்க,பள்ளிக்கூடத்துல வந்து நேரா பார்த்துட்டு போகட்டும்.

கேள்வி:உங்க பர்சனல் பத்தியும் பேசிக்கிறாங்களே…….?

பதில்:பர்சனலா அவுங்க அவ்ளோ வீக் போல.

கேள்வி:ஆசிரியர்களை ஒருங்கிணைத்து நடத்திய விருது விழா ஒன்றில் Chair ல ரெண்டு காலையும் தூக்கி வச்சிக்கிட்டு,விசிலடிச்சிக்கிட்டு,லைவ் கமென்ட்ரி கொடுத்துட்டு இருந்தீங்களாமே!ஓர் ஆசிரியர் அப்படி நடந்துகொள்ளலாமா?

பதில்:நான் நடக்கலிங்க;

உட்கார்ந்துக்கிட்டுதான் இருந்தேன்.அப்புறம் இன்னொரு விசயம்,என்னோட கால்வலி எனக்குத்தான் தெரியும்.விசிலடிக்கிறது தப்பா என்ன?ஓ…..ஒரு பொம்பள புள்ள விசிலடிக்கிறது தப்புனுதானே பொதுப்புத்திக் கத்துக்கொடுத்திருக்கு.அப்போ அத நான்தானே உடைக்கணும்.அதான் உடைக்கிற வேலயில இருக்கேன்.

கேள்வி:நீங்க குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டும் சப்போர்ட் பண்ணி பேசறீங்களாமே?

பதில்:ஆமாம்…..குழந்தைகளை குழந்தைகளாக மதிக்கும் ஜாதிக்கும்,மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் ஜாதிக்கும் நான் எப்பவும் சப்போர்ட்.ஆமாம்…..நான் யார்கூட பேசறேனோ அவிங்களோட ஜாதிய தேடிக்கண்டுபுடிக்கிற அதுங்கள என்னனு சொல்றது?

கேள்வி:ஒரு பொது இடத்துல எப்டி நடந்துக்கணும்னு தெரியலியாமே உங்களுக்கு?

பதில்:முதலில் எது பொது இடம் என்ற வரையறைக்கு வரணும்.அப்புறம் என்னைச் சார்ந்தவங்க இருந்தா மட்டும்தான் நான் சிரிக்கவே செய்வேன்.ஒருவேளை அங்கு நிறைய குழந்தைங்க இருந்துட்டா அவங்களோடு,அவங்களுக்காகத்தான் இருப்பேன் ரொம்ப ஜாலியா.எந்த இடத்தில் என்னுடைய செயல்பாடு எப்படி இருக்கும்னு நான்தான் முடிவு பண்ணுவேன்.மற்றவர்களோட பெருமூளை நினைப்பதுபோல நடந்துகொள்ள நானொன்றும் அவர்களின் சிறுமூளை இல்லையே!

கேள்வி:நீங்க ரொம்ப திமிர் புடிச்சவங்களாமே?

பதில்:Yes,of course.ஒரு சின்ன திருத்தம்…அது திமிரில்ல,தைரியம்.ரொம்ப தைரியமானவ நான்.

கேள்வி:அப்பப்போ அரசை விமர்சிக்கறீங்களே?

பதில்:அரசை நான் எந்தவகையிலும் விமர்சிக்கவில்லை.இது எங்களை(சாமானியர்களை)

எங்கள் குழந்தைகளைப் பாதிக்கிறது என்ற நிலையிலே சொல்லுவேன்.

கேள்வி:இந்துமதத்தைத் தொடர்ந்து சாடுவது ஏன்?

பதில்:ஜாதியத்தால் மனிதர்களைப் பாகுபடுத்தி வைத்திருக்கும் இந்த மதத்தை நான் சாடித்தானே ஆகவேண்டும்.

கேள்வி:மகாலட்சுமி என்று பெயர் வைத்துக்கொண்டு இப்படி பேசலாமா?

பதில்:அது என்னை அழைப்பதற்காக வைக்கப்பட்ட ஒரு வார்த்தை….

அவ்வளவே!

#நான்_கேட்கும்_எதிர்கேள்விகளும்_எதிரிலுருந்து_வரும்/வந்த பதில்களும்:

கேள்வி:நீங்க முடிவெட்டுவீங்களா?

உங்க புள்ளைகளுக்கு சூடுகட்டி எந்த இடத்தில் வந்திருந்தாலும் அதை அழுத்தி,சீழ்,இரத்தம் எனத்தனித்தனியே,முளைப்பு வர வரைக்கும் எடுக்க முடியுமா?

நைட்ல பாத்ரூம் போகப் பயந்துட்டு,அங்கங்க டாய்லெட் பண்ணி வச்சிருவாங்க சின்னக்குழந்தைங்க.

அதையெல்லாம் முகம் சுழிக்காம வாரிக்கொட்டுவீங்களா?

தேம்பி தேம்பி அழற புள்ளைய மூக்கு சிந்துவிட்டு,மடியில படுக்கவச்சி,தூங்கவச்சி,

அது கெட்ட வார்த்தையே பேசினாலும் கோச்சிக்காம,திடீர்னு ஓடிப்போனா மூச்சிறைக்க ஓடிப்போய் புடிச்சிட்டு வர முடியுமா?

பதில்:அதெப்டி நீங்க செஞ்சா நாங்களும் செய்யணுமா என்ன?இங்கலாம் அப்டி எந்தப் புள்ளையும் இல்ல.உங்களோடது வேற ஃபீல்டு.எங்களோடது வேற.

கேள்வி : அப்போ எதுக்கு பேசிக்கிட்டு?…

பண்ணுங்க.

இவ்வாறு அவர் தனது முகநூல் பக்கத்தில் தனது கருத்துக்களை தெரிவித்து உள்ளார். 

Related Articles

மனிதம் போற்றும் 3 Roses விளம்பரம்! vs மன... சமீபத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்று வரும் இரண்டு விளம்பரங்களைப் பற்றி இங்கு பேச உள்ளோம். ஒன்று 3 Roses டீத்தூள் விளம்பரம் மற்றொன்று 5 Star சாக...
இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் வன்புணர... நம்மில் பெரும்பாலோனோர் கேட்டதும் பதறும் குற்றமென்றால் அது பாலியல் வன்புணர்வு தான். காரணம் அது ஒருவரை உடல்ரீதியாக, மனரீதியாக வாழ்நாள் முழுவதும் பாதிப்ப...
இதற்கெல்லாமா நம்ம அரசாங்கம் செலவு செய்யு... ஒரு அரசாங்கம் செயல்படுவதற்கு அடிப்படை மக்களின் வரிப்பணம். அனைத்து வகைகளிலும் மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணம் முறையாகத் தான் செலவு செய்யப்படுகிறதா...
தூத்துக்குடி போராட்டத்தின் போது உயிரிழந்... ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொண்ணூற்று ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. சரியாக நூறாவது நாள் வரும் போது எந்த முன் அறிவிப்பும் இன்றி, சரியான...

Be the first to comment on "நிஜ ராட்சசி ஆசிரியை மகாலட்சுமியிடம் அடிக்கடி கேள்விகளும் அவருடைய பதில்களும்!"

Leave a comment

Your email address will not be published.


*