ஃபீனிக்ஸ் வீரன் யுவராஜ்சிங்க்குக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday to Yuvraj Singh

கலைஞர் தொலைக்காட்சியில் நெறியாளராக இருந்து வருபவர் திரு. ஸ்ரீராம் சத்யமூர்த்தி. அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் யுவராஜ் சிங் பிறந்தநாள் பற்றி பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவை இங்கு பகிர்ந்துள்ளோம். 

 ஃபீனிக்ஸ் வீரன் யுவராஜ்சிங்! #HBDYuvi

ஒரு மனிதனுக்கு கம்பேக் என்பது ஒருமுறை இருக்கலாம் அல்லது இருமுறை இருக்கலாம். மூன்றாவது முறை தோற்றால் அவன் சோர்ந்துவிடுவான். ஆனால் ஒவ்வொரு முறையும் அதே உற்சாகம்…அதே வேகம்…அதனால் தான் என்னவோ அவரது சுயசரிதை புத்தகத்தின் பெயர் ”YOU WE CAN”

விடாமுயற்சியும், போராட்டக் குணமும் நிறைந்த ஒரு வீரனால் புற்றுநோய் தாக்கிய சூழ்நிலையிலும் தன்னை நிரூபிக்க முடியும் என்பதற்கு யுவராஜ் சிங் ஒரு உதாரணம். ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் என உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த யுவிதான், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் தொடர்நாயகன். 2002ம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பையை பரிசளித்து கங்குலியின் லார்ட்ஸ் கர்ஜனைக்கு காரணமானவர். 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் தொடர்நாயகன். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையின் தொடர் நாயகன் இப்படி இந்திய சரித்திர நிகழ்வுகளில் கட்டாயம் இடம் பெரும் பெயராக இருந்துள்ளார் யுவி.

நுரையீரல் புற்று நோய் தாக்கியவுடன் யுவி இனி அவ்வளவுதான் என கூறியவர்கள், இப்போது அவரை பார்த்து வாயடைத்து நிற்கிறார்கள். இனி யுவராஜ், கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பார்வையாளர்தான் என்ற கருத்தும் இப்போது மறைந்து விட்டது.

சிறுவயதில் யுவிக்கு ஸ்கேட்டிங் என்றால் கொள்ளைப் பிரியம். தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்றவர். தென்ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் போல யுவியும் பல விளையாட்டுகளில் பன்முகத் திறமை கொண்டவர். அவரது தந்தை, ‘நீ கிரிக்கெட்தான் ஆடவேண்டும்!’ என வலுக்கட்டாயமாக கிரிக்கெட்டுக்குள் நுழைத்தார்.அதிலும் கில்லி என நிரூபித்தார் யுவி.

2011-ம் ஆண்டு உலக கோப்பைக்கு முன்பே யுவராஜை புற்றுநோய் தாக்கியிருக்கிறது. அது தெரியமலேயே களமிறங்கினார் யுவி. லீக் ஆட்டங்களின் போதே அவருக்கு தனக்குள் ஏதோ பிரச்னை என்பது புரிந்தது. எனினும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. புற்று நோய் உள்ளேயிருந்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக பலவீனப்படுத்திக் கொண்டிருந்தது. எனினும் அவர் ஆட்டத்தில் சோடை போகவில்லை. யுவிதான் அந்த உலகக் கோப்பையை நமக்கு பெற்றும் தந்தார். அந்த தொடரின் தொடர் நாயகனும் கூட. போட்டி முடிந்ததும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவருக்கு நுரையீரல் புற்றுநோய் என்றனர் மருத்துவர்கள். அனைவருக்கும் அதிர்ச்சி. இந்த இளம் வீரருக்கா இந்த பிரச்னை என கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேதனை. கிரிக்கெட் உலகம் யுவிக்காக பிரார்த்னையில் ஈடுபடத் தொடங்கியது. யுவியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது என்றுதான் பலரும் கருதினர். ஆனால் கிரிக்கெட் மீதான காதல்தான் மீண்டும் அவரை மைதானத்திற்கு அழைத்து வந்துள்ளது.

புற்று நோயில் இருந்து மீண்டு அவர் அணியில் இடம் பெற்ற போது, அவர் மீதுள்ள கரிசனத்தால் எடுத்துள்ளனர் என சொல்ல ஆரம்பித்தனர். அப்படி சொன்னவர்களுக்கெல்லாம் யுவராஜின் பேட் பதில் தக்க பதில் அளித்தது.

புற்றுநோயில் இருந்து குணமான பிறகு யுவி, முதல் ஆட்டத்தில் இறங்கியது சென்னையில்தான். களத்திற்கு யுவி வரும் போது சென்னை சேப்பாக்கமே எழுந்து நின்று வரவேற்றது. யுவி… யுவி என ஆர்ப்பரித்தது. அந்த போட்டியில் யுவியின் ‘ரீஎன்ட்ரி’, சிக்சருடன்தான் தொடங்கியது. இப்போதும் யுவி ‘ சேப்பாக்கம் தந்த உற்சாகம்தான் தன்னை கிரிக்கெட் உலகில் மீண்டும் உலாவ வைத்துள்ளது’ என நன்றியுடன் குறிப்பிடுவது வழக்கம்.

ஆனாலும் எல்லா கிரிக்கெட்டர்களுக்கு வரும் ஃபார்ம் அவுட், யுவிக்கும் வந்தது. விளைவு அணியில் இருந்து கொஞ்ச நாள் ஓரம் கட்டப்பட்டார். கிட்டத்தட்ட கடந்த 2015-ம் ஆண்டு முழுவதுமே அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. மீண்டும் அணியில் இடம்…2016ம் ஆண்டு மீண்டும் காணாமல் போகிறார். 2017 சாம்பியன் கோப்பையில் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை துவம்சம் செய்கிறார்.

இந்திய கேப்டன் தோனியின் பயோபிக்கில் ஒரு இளைஞன் ஒட்டுமொத்தமாக எங்களை தோற்கடித்துவிட்டான் என தோனி சொல்லும் போது யுவியின் கிரிக்கெட் காதல் சிலிர்க்க வைக்கும். யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த அதிரடி வீரர். உலகமே வியக்கும் உன்னதமான ஆல்ரவுண்டர்… ஆம் அவர் இன்னும் நிறைய தோற்பார்…திரும்ப வருவார்…சாதிப்பார்… யெஸ் யூவி கேன்!!!!

Related Articles

பேட்ட – மரண மாஸ் பாடல் வரிகளும் இச... கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. ரஜினி படத்தில் விஜய் சேதுபதி வில்லன் என்பதாலும் அனிருத் இசை என்பதாலும் படத...
பிளாஸ்டிக் தடையை மதிக்காத தமிழக மக்கள்!... இந்த ஆண்டு முதல் தமிழகம் முழுக்க பிளாஸ்டிக் தடை உத்தரவை பிறப்பித்தது தமிழக அரசு. அதன் படி வியாபாரிகள் அனைவரும் பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலுமாக நிறுத்...
தீபாவளிப் பண்டிகை அன்று எண்ணெய் ஸ்நானம் ... பல பண்டிகைகள் நாம் கொண்டாடினாலும் தீபாவளிப் பண்டிகைக்கு தனி சிறப்பு உண்டு.  தீபாவளித் திருநாள் அன்று ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி எல்லோரும் எண்ணெய...
மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரச... மெண்டலுங்கப்பா... எல்லாருமே மெண்டலுங்கப்பா... என்ற மொட்டை ராஜேந்திரனின் வசனத்தைப் போல தமிழகத்தில் நாளுக்கு நாள் மெண்டல்கள் அதிகரித்து வருகிறார்கள். பண...

Be the first to comment on "ஃபீனிக்ஸ் வீரன் யுவராஜ்சிங்க்குக்கு இன்று பிறந்தநாள்!"

Leave a comment

Your email address will not be published.


*