உலகிலயே அதிகமான ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பட்டியலில் ” பழைய சோறு ” முதலிடம்!

How good is Pazhaya soru (Fermented Rice) for breakfast

அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் உலகிலேயே அதிகமான ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பட்டியலில் ” பழைய சோறு ” முதலிடம்! பழைய சாதம், பழைய சோறு, பழஞ்சோறு, ஐஸ் பிரியாணி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த உணவு அமெரிக்கர்களுக்கும் பிற நாட்டினர்களுக்கும் வேண்டுமானால் அதிசயமாக இருக்கலாம். நம் முன்னோர்களுக்கு அன்றாடம் பார்த்துப் பழகிப் போன இதம் தரும் காலை உணவு ஆகும்.

இரவு வடித்து மீந்து போன சாதத்தில் நீர் ஊற்றிவிடுவார்கள். அடுத்த நாள் அது பழைய சாதமாகிவிடும். இதுதான் பழைய சாதத்தின் எளிய செய்முறை ஆகும்.

பழைய சாதத்தில் உருவாகும் லாக்டிக் ஆசிட் பாக்டீரியா தான் புளிப்புச் சுவையை தருகிறது. அது பழைய சாதத்தில் உள்ள ஊட்டச்சத்து எதிர்ப்புக் காரணிகளை உடைப்பதனால் மேலான மைக்ரோ ஊட்டச்சத்துக்களும் கனிமங்களான இரும்பு, பொட்டாசியம் மற்றும் கால்சியத்தை உருவாக்குகிறது. எடுத்தூக் காட்டாக 100 கிராம் வடித்த சாதத்தில் 3. 4 மி. கி இரும்புச் சத்து இருக்கிறது. அதுவே பழைய சாதம் என்கிற பொழுது சுமார் 12 மணி நேரம் கழித்து இரும்புச் சத்தின் அளவு 73. 91 மி. கிராமாக உயர்ந்து இருக்கும்.

பழைய சோற்றின் நன்மைகள் :

  1. பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி 12 ஆகிய சத்துக்கள் அதிகளவில் உள்ளது.
  2. பழைய சோறு சாப்பிட்டால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.
  3. பழைய சோறு சாப்பிடுவதன் மூலம் முதுமையை தடுக்கலாம்.
  4. முதியோர்களின் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு பழைய சோறு ஒரு நல்ல தீர்வாகும். உடல் சூட்டிலிருந்து விடுபடவும் இது உதவுகிறது.
  5. இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குவதுடன் இரத்த அழுத்தத்தையும் சீர் செய்கிறது.
  6. தினமும் காலையில் பழைய சோறு சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப் புண் பிரச்சினையிலிருந்து விடுபடுவதோடு சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

Related Articles

நாம் தமிழர் கட்சியினர் தனித்து நின்றாலும... லவ்குரு ராஜவேல் நாகராஜன் என்ற பேமஸ் ரேடியோ ஜாக்கி ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சீமான் பேசியதை பலரும் விமர்சித்து வருகின்றனர். நியூஸ் சேனல்கள் இது...
இன்றைய தண்ணீர் விலை? – லிட்டருக்கு... மனிதர்களாகிய நாம், தனது சுயநலத்துக்காக இயற்கையை கொன்று வருவதோடு மட்டும் அல்லாமல் இன்றைய தண்ணீர் விலை? லிட்டருக்கு எவ்வளவு பைசா உயர்வு? என்று கேட்கும் ...
ஒன்றாம் வகுப்பில் மாணவனை சேர்க்க ரூ.1லட்... சென்னை அசோக்நகர் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் மாணவனை சேர்க்க ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வர் ஆனந்தனை...
கடந்த பத்தாண்டுகளில் வெளியான டாப் 10 சிற... 2010 ல் வெளியான படங்கள்:  2010 ம் ஆண்டில் மொத்தம் 143 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அவற்றில் ஆயிரத்தில் ஒருவன், நாணயம், கோவா, தமிழ் படம், விண்ணைத் தாண்டி...

Be the first to comment on "உலகிலயே அதிகமான ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பட்டியலில் ” பழைய சோறு ” முதலிடம்!"

Leave a comment

Your email address will not be published.


*