Parasite என்ற அந்நிய மொழி படத்திற்கு எப்படி Best Film ஆஸ்கார் விருது கொடுத்தார்கள்? – விளக்கம் தருகிறார் Tom Leazak!

How Oscar was given for Parasite - Tom Leazak explains!

Oscars, Best Foreign Language Film, Best Film, Parasite – சில கேள்விகளும் சந்தேகங்களும் சில விளக்கங்களும் 

Parasite என்ற  அந்நிய மொழி படத்திற்கு  எப்படி Best Film ஆஸ்கார் விருது கொடுத்தார்கள்?

 ஆஸ்கார் விருது விழா முடிந்ததிலிருந்து மேற்சொன்ன கேள்வியை நிறைய  நண்பர்களிடத்தில் காணமுடிகிறது. அதற்கு காரணம் Oscar விழாவே ஏதோ American National Award விழா போன்றும், Best Picture விருது சிறந்த அமெரிக்க/ லோக்கல்/உள்ளூர்/ஆங்கில படங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் விருது போலவும், ஏதோ போனால் போகட்டும் என்று foreign படங்களுக்கு என்று ஒரேயொரு பிரிவு கொடுத்தது போலவும்  ஒரு மாயத்தோற்றம் பலரிடம் உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல.

 ஆஸ்கார் விழாவோ, Best Film பிரிவோ, வெறும் அமெரிக்க/ உள்நாட்டு/ ஆங்கில படங்களுக்கானது மட்டுமானது கிடையாது. ஆங்கில/Hollywood படங்களுக்கென்று தனியாக எந்த விருது பிரிவும் ஆஸ்காரில் இல்லை. விருதின் பெயரை பார்த்தாலே புரியும். Best Picture என்றுதான் இருக்கும். “Best Hollywood Film” என்றோ, “Best English Language Film” என்றோ, “Best Local Production” என்றோ இருக்காது.. பிரிட்டன் விருதான BAFTA விருது விழாவில்தான் Best Film, Best Film not in English, Best British production என்று எல்லாத்துக்கும் பிரச்சினையே இல்லாமல்  தனித்தனியாக பிரிவுகள் உண்டு. BAFTA Best Film பிரிவில் Roma, Jean de Florette, Day for Night போன்ற non-English படங்கள் ஏற்கனவே விருது ஜெயித்துள்ளன.

அப்படியென்றால் ஆஸ்காரின் Best Film பிரிவிற்கும், Best International Feature Film பிரிவிற்கும் என்ன வித்தியாசம்?

இரண்டு முக்கிய வித்தியாசம். 

முதலாவது, அமெரிக்கா தயாரித்த படங்களோ (அவை ஆங்கிலம் அல்லாத வேற்று மொழி படமாகவே இருந்தாலும்), ஆங்கில படங்களோ (அவை அமெரிக்கா அல்லாத வேற்று நாட்டு தயாரிப்பாகவே இருந்தாலும்) (“Best International Feature Film” என்று தற்போது பெயர் மாற்றப்பட்ட) “Best Foreign Language Film” பிரிவில் போட்டியிட அனுமதி இல்லை. (வேற்று நாடு ஆங்கில படங்களுக்கு அனுமதி இல்லாதது குறித்து பெரிய சர்ச்சை உண்டு. ஆனால் அது தனிக்கதை).

இரண்டாவது, படங்கள் இப்பிரிவுகளுக்கு தகுதி பெரும் முறை.

ஒரு படம், குறிப்பிட்ட தேதியில் (பொதுவாக Jan 1 to Dec 31) Los Angeles வணிக திரையரங்குகளில் வெளியாகி, முறையாக விளம்பரம் செய்யப்பட்டு,  குறிப்பிட்ட காட்சிகளில் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து ஓடி, அப்படத்தின் தயாரிப்பாளர் முறையாக ஆஸ்கார் அமைப்பிற்கு விண்ணப்பித்திருந்தால், ஆஸ்காரின் “Best Foreign Language Film” பிரிவு தவிர, அந்த படத்திற்கு  தொடர்புடைய மற்ற அனைத்து பிரிவுகளுக்கும் (Best Film பிரிவு உட்பட) போட்டியிடும் தகுதியை அப்படம் பெற்றுவிடும்.. அது அமெரிக்கன் படமாக இருந்தாலும் சரி, ஆப்ரிக்க படமாக இருந்தாலும் சரி, ஒத்த செருப்பாக இருந்தாலும் சரி, பிகிலாக இருந்தாலும் சரி, காஞ்சனாவாக இருந்தாலும் சரி. 

 “Best Foreign Language Film” பிரிவிற்கு இந்த Criteria கிடையாது. அமெரிக்க திரையரங்குகளில் பல்வேறு காரணங்களால் வெளியிட இயலாத எத்தனையோ வெளிநாட்டு படங்களுக்கான பிரிவு இது. இந்த பிரிவில் போட்டியிட வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட படங்களின் நாட்டை சேர்ந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட திரைப்பட அமைப்பு/குழு, தங்கள் நாட்டின் சார்பாக அவ்வருடம் ரிலீஸ் ஆன ஒரேயொரு படத்தை மட்டும் ஆஸ்கார் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதுவும் மேலே பார்த்தது போல்ஆங்கிலப்படமாக இருக்க கூடாது. அதாவது பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்று ஆங்கிலத்தை Official மொழியாக கொண்ட நாடுகளாக இருந்தாலும்  அவை ஆங்கிலமல்லாத வேற்று மொழி படங்களையே இந்த பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும். 

 இப்படி, ஒரு நாட்டின் திரைப்பட குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட படம் Los Angelesஸில் கண்டிப்பாக வெளியாகியிருக்க கூடாது என்றெல்லாம் கட்டாயம் இல்லை. தாராளமாக அவைகளும் சமர்பிக்கப்படலாம். Parasite விஷயத்தில் இதுதான் நடந்தது. தென் கொரியாவின் Korean Film Council, தென் கொரியா சார்பாக “Best Foreign Language Film” பிரிவில் போட்டியிட Parasite படத்தை ஆஸ்காருக்கு சமர்ப்பித்தது. Parasite தயாரிப்பாளர்கள், இந்த படம் மற்ற விருதுகளுக்கும் தேர்வாக வேண்டுமென்று படத்தை Los angelesஸில் வெளியிட்டு, முறையாக விண்ணப்பித்தும் இருக்கிறார்கள். இப்படித்தான் Parasite இந்த பிரிவுகளுக்கு தேர்வானது.

 இந்தியாவை பொறுத்தவரையில், Film Federation of India (FFI) இந்தியாவின் சார்பாக Gully Boy படத்தை “Best Foreign Language Film” பிரிவுக்காக ஆஸ்காருக்கு சமர்ப்பித்தது. பார்த்திபனும், பிரேமா செழியனும் தத்தமது படங்களை Best Film உட்பட மற்ற பிரிவுகளுக்கு தகுதி பெற வைக்க வேண்டுமென்று, மேற்சொன்ன ரிலீஸ், விளம்பரம், விண்ணப்பம்  எல்லாம் சரியாக செய்து ஒத்த செருப்பையும், To Let படத்தையும் “Best Foreign Language Film” பிரிவு தவிர்த்து ஏனைய பிரிவுகளுக்கு தேர்வாகும்படி செய்தனர். இவ்வாறு மொத்தம் பல்வேறு நாடுகளை சேர்ந்த 344 படங்கள் இம்முறை தேர்வாகி இருந்தன. முழு eligible படங்களின் விவரங்கள் இங்கு காணலாம்: https://www.oscars.org/sites/oscars/files/92nd_oscars_reminder_list.pdf

  இப்படிப்பட்ட வெளிநாட்டு படங்கள் இதற்கு முன் “Best Foreign Language Film” அல்லாத வேறு பிரிவுகளில் போட்டியிட்டு இருக்கிறதா/வென்றிருக்கிறதா? 

ஆஸ்காரை பொறுத்தவரையில், ஆங்கில படங்களுக்கு மட்டும்தான், “Best Foreign Language Film” பிரிவில் போட்டியிட அனுமதி கிடையாது. மற்றபடி, எல்லா மொழி/நாட்டு படமும் ஆஸ்கார் விருதின் எந்த பிரிவுக்கும் போட்டியிடலாம். இதுவரை  ஏகப்பட்ட non-English வெளிநாட்டு படங்கள் ஏகப்பட்ட ஆஸ்கார் பிரிவுகளில் ஏற்கனவே விருதுகளை வென்றிருக்கின்றன. சில உதாரணங்கள்: 

Life is Beautiful (Italy) – Best Actor (Roberto Benigni)

La ciociara (Italy) – Best Actress (Sophia Loren)

Roma (Mexico) – Best Direction

Talk to Her (Spain) – Best Screenplay

Cries and Whispers (Sweden) – Cinematography

Pan’s Labyrinth (Mexico) – Art Direction

Ran (Japan) – Costume

Z (Algeria) – Best Editing

La vie en rose (France) – Makeup

Crouching Tiger Hidden Dragon (Taiwan) – Best Score

மற்றும் Fanny and Alexander (Sweden), Quest for Fire (France), Jigokumon (Japan), La dolce vita (Italy), A Man and a Woman (France) போன்ற பல படங்கள் மேற்சொன்ன பிரிவுகளில் வென்றிருக்கின்றன. இன்னும் Best Documentary/Shorts பிரிவிலும் ஏகப்பட்ட வெளிநாட்டு வெற்றிகள் உண்டு. இதில் Fanny and Alexander மற்றும் Crouching Tiger ஆகியவை Parasite போலவே நான்கு ஆஸ்கார்களை வென்றிருக்கின்றன. இவை தவிர ஏராளமான படங்கள் nominateடும் ஆகியிருக்கின்றன. Roma and Crouching Tiger 10 விருதுகளுக்கு nominate ஆகியிருக்கின்றன.

 Best Film பிரிவிலேயே, France நாட்டின் தயாரிப்பான The Artist விருது வென்றிருக்கிறது. ஆனால்  அது ஒரு Silent film with English intertitle என்பதாலும் படத்தில் வரும் இரண்டு வரி வசனம் ஆங்கிலத்தில் இருப்பதாலும் அது ஆங்கில படக்கணக்கில் வந்துவிட்டது. மேலும், சுத்தமாக ஹாலிவுட் கலப்பில்லாத ஏழெட்டு பிரிட்டிஷ் படங்களும் (Hamlet, Gandhi, The Last Emperor, Chariots of Fire, Slumdog Millionaire, Tom Jones etc.) Best Film வென்றிருக்கின்றன. Technically, இவையும் அந்நிய நாட்டின் வெற்றியே. இவை ஆங்கில படங்கள் என்ற ஒரு காரணத்தினால் எந்த கேள்வியும் சந்தேகமும் இதுவரை  நம்மில் எழுந்ததில்லை. (Parasite வெளிநாட்டு படமென்பதால், நியாயமாக Best Film வென்றிருக்கவேண்டிய உள்ளூர் படமாக பலரால் கருதப்பட்ட 1917 படமே வெளிநாட்டு படம்தான் (பிரிட்டிஷ்))

 Parasite மட்டுமே முதன்முதலில் முழுக்க  அந்நிய மொழி பேசி அந்நிய நாட்டில் தயாரிக்கப்பட்டு Best Film ஜெயித்துள்ளதால்தான் இப்போது கேள்விகள் எழுந்துள்ளது. இதுவு மே பத்தாவது முயற்சிதான். இதற்கு முன் Grand Illusion, Z, The Emigrants, Il Postino, Crouching Tiger Hidden Dragon, Roma என்று கிட்டதட்ட பத்து அந்நிய மொழி பேசிய வெளிநாட்டு படங்கள் Best Film பிரிவில் ஏற்கனவே nominate ஆகியுள்ளன.

 இவ்வளவு இருந்தும் ஆஸ்கார் விருது என்பது அமெரிக்க/ஆங்கில படங்களுக்கான விருது என்ற எண்ணம் நம்மிடையே இயல்பாகவே ஏன் ஏற்பட்டிருக்கிறது?

ஏனென்றால் இத்தனை  வருடங்களில் மொத்த பிரிவுகளில் வென்ற/நாமினேட் ஆன ஆங்கில படங்களை ஒப்பிடும்போது இந்த non-English படங்கள் வென்றது/நாமினேட் ஆனது மிக மிக சொற்ப அளவுதான். 

இதனால்தான் ஆஸ்கார் விருது என்றாலே, அது “அமெரிக்க/ஆங்கில படங்களுக்கான விருது வழங்கும் விழா. அதில் அந்நிய மொழி/வெளிநாட்டு படங்கள் ஒரு ஒப்புக்கு கூப்பிடப்பட்ட விருந்தாளி போல. அவர்களுக்காக ஓரமாக போடப்பட்டிருக்கும் “Best Foreign Language Film”என்ற நாற்காலியில் மட்டும் உக்கார்ந்துவிட்டு போய்விட வேண்டும். Best Film பக்கமெல்லாம் எட்டிப்பார்க்கக்கூடாது” போன்ற எண்ணமெல்லாம் தோன்றுகிறது.

இதற்கு முக்கிய காரணம்:  நாமினேஷன் மற்றும் வெற்றியாளர்களை தேர்வு செய்யும், Academy of Motion Picture Arts and Sciences (AMPAS) அமைப்பின் உறுப்பினர்களான, வாக்காளர் பெருமக்கள்தான்.

 யார் இந்த உறுப்பினர்கள்? எப்படி இவர்கள் வெற்றியாளர்களை தேர்வு செய்கிறார்கள்?

சமீபத்திய மதீப்பிடின்படி AMPAS அமைப்பில் கிட்டத்தட்ட 8000 உறுப்பினர்கள் உள்ளனர். ஆஸ்காரில்  நாமினேட் ஆனாலே automaticகாக AMPAS உறுப்பினர் ஆகிவிடலாம். மேலும் AMPAS அமைப்பு உறுப்பினராக சேர்வதற்கு பல கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும். அதன் மூலமாகவும் உறுப்பினர் ஆகலாம். 

இவர்கள்தான் eligibleலான படங்களிலிருந்து தங்களுக்கு பிடித்த ஐந்து படங்களை ஒவ்வொரு பிரிவிலும் தேர்வுசெய்வார்கள். (இந்த அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான ரசூல் பூக்குட்டியின் தனிப்பட்ட தேர்வைதான், பார்த்திபன் ஆஸ்காரின் இறுதி தேர்வாக நினைத்து ஒத்த செருப்பிற்காக ட்வீட் செய்தது நினைவிருக்கலாம்). பின்னர் அனைத்து வோட்டுகளும் எண்ணப்பட்டு முதல் 5 இடங்களை பிடித்த படங்கள் இறுதி நாமினேஷனாக அறிவிக்கப்படும். பின்னர் மீண்டும் அவர்கள் அந்த இறுதி நாமினேஷன் லிஸ்டிலிருந்து தங்களுக்கு பிடித்த படத்தை தேர்வு செய்வார்கள். 

Best Film விருதுக்கு பத்து நாமினேஷன்கள் வரை அனுமதி உண்டு . இப்பிரிவின் வெற்றியாளர் மட்டும் Preferential Ballot எனப்படும் ranking முறைப்படி தேர்வுசெய்யப்படுவார். பாதிப்பேரால் ரொம்ப ரசிக்கப்பட்டும்  மீதி பேரால் வெறுக்கப்படும் divisive படங்களை காட்டிலும் அனைவராலும் சாதாரண ஆனால் சீரான அளவில் விரும்பப்படும் safe படங்களுக்கு முன்னுரிமை தரப்படும் method இது. இதுகூட 1917 படத்தை Parasite முந்துவதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

குறிப்பிட்ட நாளில் அனைத்து வோட்டுகளும் ஒரு Independent Firm மூலம் எண்ணப்பட்டு ஆஸ்கார் விருது விழாவில் Liveவாக வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். (இந்த Voting Process இன்னும் கொஞ்சம் Complexஸாக percentage/lobbying/campaigning/private screening/active membership/two-level voting/categorized voting போன்றவைகள் நிறைந்து இருக்கும். நான் புரிதலுக்காக மேலோட்டமாக சொல்லியிருக்கிறேன்).

 எப்படி இந்த உறுப்பினர்கள் ஆஸ்காரை ஒரு அமெரிக்க/ஆங்கில விருதாக மட்டும் பார்க்கும் கண்ணோட்டத்தை உருவாக்க காரணமாக இருந்தார்கள்?

2012 கணக்கீட்டின்படி அப்போது இருந்த 5500 சொச்சம் உறுப்பினர்களில் 94% White people, 76% ஆண்கள். கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் வெறும் 2%. லத்தின் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் 2%க்கும் கீழ். உறுப்பினர்களின் சராசரி வயது 62. 50 வயதுக்கு கீழே இருந்தவர்கள் வெறும் 14%. 2014ளிலும் இந்த விகிதாச்சாரம் பெரிதாக மாறவில்லை.

[https://www.latimes.com/entertainment/la-et-unmasking-oscar-academy-project-20120219-story.html]

[https://www.theatlantic.com/entertainment/archive/2014/03/oscar-voters-94-white-76-men-and-an-average-of-63-years-old/284163/]

இவர்கள் பெரும்பாலும் ஆங்கிலம்/Hollywood அல்லாத படங்களயோ, தங்கள் identity சாராத படங்களையோ பார்க்க ஆர்வம் இல்லாதவர்கள். அதனால் பல தகுதியுடைய non-English படங்களை இவர்கள் பார்க்காமலேயே மற்ற ஆங்கில படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவைகளுக்கு மட்டுமே ஓட்டு போட்டு வந்திருக்கிறார்கள்.  இதனால்தான் திரும்பிய பக்கமெல்லாம் (பெரும்பாலும் வெள்ளயினத்தவரை மையமாக கொண்ட) ஆங்கில பட நாமினேஷன்கள், வெற்றிகள். அதிலும் “Best Animated Film” பிரிவில்தான் இவர்கள் atrocity அதிகம். பெரும்பாலும் இவர்கள் எல்லா படத்தயும் பார்க்காமல் எது famousஸோ அல்லது எது தனது குழந்தைகளுக்கு/பேரகுழந்தைகளுக்கு பிடித்த படமோ அதற்கு ஓட்டளித்து வந்து விடுவர். இதனால்தான் அந்த பிரிவில் எப்போதும் Disney/Pixar/Dreamworks போன்ற அமெரிக்க படங்களே ஜெயிக்கின்றன . ஆரம்பத்தில் தப்பி தவறி ஜெயித்த ஜப்பானின் Spirited Awayவும் ஆங்கில டப்பிங்கில் வெளியானதால் தப்பித்தது. இப்படித்தான் “OSCAR is an American thing” என்ற மனநிலை எளிதாக அனைவரிடத்திலும் பரவுகிறது.

இதை மாற்ற ஏதாவது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா?

OscarSoWhite சர்ச்சைக்கு பிறகு, கடந்த ஐந்தாறு வருடமாக, இந்த நிலையை மாற்ற எப்போதும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு வருடமும் ஆண் பெண் விகிதம் ஓரளவிற்கு சரி விகிதத்தில் இருக்குமாறு 500க்கும் மேற்பட்ட  பல நாடு,இன,மொழி சினிமா கலைஞர்களுக்கு உறுப்பினர்களாக சேர்வதற்கு AMPAS சார்பில் அழைப்பு விடப்படுகிறது. 2015ல் 322 புதிய நபர்களுக்கு புதிதாக விடுக்கப்பட்ட அழைப்பு 2018ல் 928 ஆகவும் 2019ல் 842 ஆகவும் இருக்கிறது. 

[https://www.hollywoodreporter.com/news/new-academy-members-2019-revealed-full-list-1221972]

தற்போது  கொஞ்சம் கொஞ்சமாக The Shape of Water, Get Out, Mad Max Fury Road, Logan, Black Panther, போன்ற genre படங்களும், Roma, Parasite போன்ற non-English படங்களும் சமீபமாக விருதுகள் வெல்வதை பார்க்கிறோம். இருந்தாலும் overall விகிதங்கள் இன்னும் optimal அளவை எட்டவில்லை. [2018 கணக்கின்படி 8000+ உறுப்பினர்களில் ஆண்கள் 69%, White people 87%]

 Parasite படத்திற்குதான் “Best Foreign Language Film” பிரிவில் இந்த உறுப்பினர்கள் ஒரு விருது  கொடுத்து விட்டார்களே , எதற்கு மீண்டும் “Best Film” பிரிவில் மீண்டும் விருது வழங்கினார்கள்? 

திரைப்பட விழாக்கள் போல், விருதுகளை தேர்வு செய்ய ஒரு பத்து பேர் கொண்ட ஜூரி குழு  கொண்டு “எந்த படத்திற்கு எந்த விருது வழங்கலாம்” என்று அவர்களுக்குள் கலந்தாலோசித்து முடிவெடுத்து வெற்றியாளர்களை அறிவிக்கும் முறை இதில் இல்லை. இருக்கிற 8000 பேரில் எத்தனை பேர் ஒழுங்காக ஓட்டு போடுவார்கள் என்றே தெரியாது. இங்கு வோட்டு போட்ட உறுப்பினர்களுக்கே வெற்றியாளர் யார் என்பது விருது வழங்கும் நாளன்றுதான் தெரியவரும். அதனால்  எந்த படமும் எந்த பிரிவிலும் வெல்வதை delibrateடாக தடுக்க முடியாது

இரண்டு பிரிவுகளில் வெல்வதைதான் தடுக்க முடியாது. அடலீஸ்ட் நாமினேட்  செய்யப்படுவதை தவிர்க்கலாமல்லவா?

ஆஸ்காரை பொறுத்தவரையில், எந்த பிரிவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது அல்ல (Mutually Exclusive). அதாவது “இதுதான் இந்த பிரிவிற்கு தகுதி பெற்று விட்டதே, அதனால அந்த பிரிவில் இருந்து இதை நீக்கி விடலாம் ” என்ற கொள்கை கிடையாது. ஒரு படமோ, நபரோ ஒரு விருதிற்கு முறைப்படி தேர்வாகிவிட்டால்  போதும், வேறு எந்த காரணிகளையும் கணக்கில் எடுத்து கொள்ள மாட்டார்கள். இந்த ஆஸ்கார் விழாவிலேயே இதற்கு இரண்டு உதாரணங்களை பார்க்கலாம். Scarlett Johansson, Marriage Story படத்திற்காக Best Actress விருதிற்கும், Jojo Rabbit படத்திற்காக Best Supporting Actress விருதிற்கும் nominate ஆனார். அதேபோல் Honeyland படமும் “Best Foreign Language film” மற்றும் “Best Documentary” பிரிவுகளுக்கு nominate ஆனது. ஒருவேளை Scarlett Johansson அவரது இரண்டு பிரிவுகளிளுமே வென்றிருந்தால் இதே கேள்வி பலருக்கு வந்திருக்ககூடும். அதற்கு விடையும் “ஆஸ்கார் உறுப்பினர்களை பொறுத்தவரை Scarlette Johanssonதான் இந்த வருடத்தின் சிறந்த நடிகையும் சிறந்த துணை நடிகையும்” என்று சிம்பிளாக இருந்திருக்கும்.

 அதேபோல்தான், ஆஸ்கார் உறுப்பினர்களை பொறுத்தவரை இந்த வருடத்தின் சிறந்த ஆங்கிலம் அல்லாத படமும் Parasiteதான், சிறந்த overall படமும் Parasiteதான். 

எதற்கு இந்த இரண்டு தனி பிரிவு? எல்லா படத்திற்கும் ஒரே criteria கொண்டுவந்து எல்லாம் மொத்தமாக ஒரே Best Film பிரிவில் சேர்க்கலாமே?

இந்த கேள்வி ஒரு ongoing விவாதமாக already ஆஸ்கார் வட்டங்களில் சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே காலத்திற்கேற்ப வேண்டியோ வேண்டாமலோ பலப்பல மாற்றங்களை தொடர்ந்து  மேற்கொண்டிருக்கும் ஆஸ்கார் விழா இதுகுறித்து என்ன முடிவெடுக்கிறதென்று வரும் வருடங்களில் பார்ப்போம்.

 அதுவரையில் “எனக்கு உன்னை பிடிக்கும். உன்னை மதிக்கிறேன். ஆனால் அது எல்லாம் நீ உன் கோட்டிற்குள் இருக்கும்வரை மட்டும்தான். Don’t cross the line” என்பதுபோல் “Best Film” படங்களுக்கும், “Best Foreign Language Film” படங்களுக்கும் இடையே ஒரு கற்பனை கோடு (imaginary boundary) இருப்பதுபோல் நிலவிவந்த நிலையை முதன்முறையாக, அப்படிப்பட்ட கோடுகளை கேள்விக்குள்ளாகும்  Parasite படமே தகர்த்திருக்கும் நகை முரணை ரசிப்போம். 

Related Articles

நெமிலிச்சேரி ரயில்நிலையத்தில் கத்தியுடன்... கடந்த இரண்டு நாட்களாக நியூஸ் சேனல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த பேரிகார்டு பீட்டரின் பெயர் அடிக்கடி கண்ணில் படுகிறது. யார் அந்த பிரபலம்? புத்தா...
பார்க்க வேண்டிய உலக சினிமாக்கள்!... 1.children of heaven2.Life is beautiful3.The way home4.the road home5.cinema paradiso6.run lala run7.mariya full of grace ...
ஒருத்தரை மட்டம் தட்ட எப்படியெல்லாம் யோசி... கடந்த டிசம்பர் 6 ம் தேதி அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இந்தியா முழுக்க அனுசரிக்கப்பட்டது. முன்பிருந்ததை விட இப்போது அம்பேத்கரின் கருத்தியலில் அதிக ...
ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் படங்கள்!... ஏப்ரல் 4ம் தேதி :குப்பத்து ராஜாஜிவி பிரகாஷ் குமார், பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் "குப்பத்து ராஜா" திரைப்படம். நடன இயக்குனர் ...

Be the first to comment on "Parasite என்ற அந்நிய மொழி படத்திற்கு எப்படி Best Film ஆஸ்கார் விருது கொடுத்தார்கள்? – விளக்கம் தருகிறார் Tom Leazak!"

Leave a comment

Your email address will not be published.


*