காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்ற கேள்விக்கு நெட்டிசன்களின் சுவாரஸ்யமான பதில்கள்!

Interesting answers by netizens on the question how Gandhi committed suicide

தேசப்பிதா காந்தி பிறந்த மாநிலமான  குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த தேர்வில் காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்ற கேள்வி தேர்வு வினாத்தாளில் இடம் பெற்றுள்ளது. இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. கோபத்தை தூண்டும் கேள்வியாக இருந்தாலும் இந்தக் கேள்விக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது நக்கல் கலந்த பதிலை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இங்கு பகிரப்பட்டுள்ளது. 

கேள்வி : காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்..?

பதில் 1 : கோட்சே மடையான் சுடுவதற்க்கு போன வழியில் காந்தியின் காலை பஜனை நடைபெற ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது, மடையான் பறவைகள் வர சற்று நேரம் ஆகும் என்பதால் காந்தியின் பஜனையை கேட்க பக்தியோடு கோட்ஸே சென்றார், பஜனையின் முந்தைய நாள் இரவின் போது சரக்கு கிடைக்காத விரக்தியில் இருந்த காந்தி அவரது காலில் விழப் போன கோட்ஸேயின் துப்பாக்கியை பிடிங்கி வாயில் சுட்டுக்குள்ள போனார். அதை தடுக்க கோட்ஸே முற்பட்டார், ஆனாலும் காந்தி விடாப்பிடியாக தனது மார்பில் சுட்டுக்கொண்டார்.

கேள்வி : காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்..?

பதில் 2 : காந்தி உள் மூல நோயால் பாதிக்கப்பட்டு கடும் விரக்தி நிலையில் 1947ஆம் ஆண்டுகளின் பின் நாட்களில் இருந்தார், அவர் சில வேளைகளில் தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்ல படுகிறது.

காந்தியின் மெய்காப்பாளர் பதவிக்கு அப்ளிகேஷன் கொடுக்க கோட்ஸே காந்தியின் பாதுகாப்பிற்காகவே தான் ஆசையாக வளர்த்து வந்த இரண்டு ஆட்டு கிடாக்களை தான் கூட துன்னாமல் விற்று வாங்கிய புது பிஸ்டல்களை காந்தியிடம் காண்பிக்கவும், அப்போதே அப்ளிகேஷன் பார்ம்களை பூர்த்தி செய்து கொடுக்கவும் காந்தியின் காலை பஜனை நடக்க இடத்திற்க்கு வந்தார்.

உள் மூல நோயால் பாதிக்கப்பட்டு விரக்தியின் உச்சத்தில் இருந்த காந்தி கோட்ஸே தனது பிஸ்டலை காந்தியின் கைகளில் கொடுத்து அவரின் பாதத்தை தொட்டு ஆசீர்வாதம் வாங்க காலில் விழப்போன சமயம் பார்த்து அந்த புது பிஸ்டலால் தன்னை மாய்த்து கொண்டார். கோட்ஸேவின் அப்ளிகேஷன் பார்மில் காந்தியின் இரத்தம் படிந்து பேப்பர் பழாய் போனது.

3.காந்தி கூடு விட்டு கூடு பாயும் வித்தை அறிந்தவர். மகான் விநாயக்ராம் நத்துராம் கோட்சேவின் உடலில் பாய்ந்து தன்னை தானே சுட்டுக்கொன்றார். அந்த நேரத்தில் காந்தியின் உடலில் இருந்தது மகான் நத்துராம் கோட்சேவுடைய உயிர். உண்மையில் காந்தி தான் கோட்சேவை கொன்றார். தான் ஒரு கொலையை செய்து, அதில் சரண்டைந்து, தூக்கிலிடப்பட்டு சூசைடு செய்துக்கொள்ள காந்தி போட்ட பிளான் மகான் கோட்சேவுக்கு தெரிந்ததால் தான், இறக்கும் தருவாயலும் காந்தியின் உடலில் இருந்த அவர், தன் உடலில் இருக்கும் காந்தியை ஒன்றும் செய்ய வேண்டாம் என வேண்டினார். பின் காந்தி உருவத்தில் இருந்த கோட்சேவை சுட்டதால், கோட்சே உருவத்தில் இருந்த காந்தி சரண்டைந்து தூக்கிலிடப்பட்டார். இவ்வாறாக காந்தி சூசைடு செய்துக்கொண்டார்.

4.வீட்டுல பொண்டாட்டியோட சண்டை போட்டு தற்கொலை பண்ணனும் முடிவு பன்னவரு

திருவிழால கோட்ஸே பலூன்ன சுட்டுட்டு இருக்கும்போது ஊடால புகுந்து சூசைட் பண்ணிட்டாப்ல..

பாவம் இதனால கோட்ஸேவ தூக்குல போட்டாங்க

5.காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட சுதந்திர போராட்ட தியாகி காந்தி அவர்களை நினைவு கூறுவோம்

6.கடுமையான வயிற்று வலியின் காரணமாக காந்தி விசம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்…

7.கோட்சே குருவி சுடுரதுக்கு வைச்சிருந்த துப்பாக்கிய   புடுங்கி தன் வாயிலைய்யே சுட்டுக்கிட்டார்.

8.அதுவா…?  தனக்குத்தானே சுட்டுக்கொண்டு சாகுறதுக்கு பயந்துகிட்டு, கோட்சேவிடம் துப்பாக்கியை கொடுத்து தன்னை சுடச்சொல்லி தற்கொலை பண்ணிக்கிட்டாரு.

9.தேசப்பிதா கோட்சேவை கொலை செய்ய வந்த போது போலீசாரிடம் சிக்காமல் இருக்க தீவிரவாதி காந்தி தற்கொலை செய்து கொண்டார்.

10.கோட்சே துப்பாக்கியை தான் எடுத்து வந்தார்..

காந்தி வாங்கி உண்மையா? போலியா என அழுத்தி பார்த்தபோது வெடித்தது…. அம்புட்டு…….

11.அப்பாவி கோட்சே சாவுக்கு நாமளே ஒரு காரணியாகிட்டோமேனு மனசு நொந்து குற்றவுணர்வு தாங்கிக்காம கோட்சே சாவுறதுக்கு முன்னாடியே என்னை ஒருமுறை சுட்டுடுனு கேட்டு தற்கொலை பண்ணிகிட்டாரு காந்தி…

12.’ராஜிவ் காந்தி, இந்திரா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்களோ அப்படித்தான் காந்தியும் தற்கொலை செய்து கொண்டார்’னு எழுதணும் போல.

13.காந்தி தற்கொலை செய்து கொண்டார் என பிள்ளைகள் மனதில் நஞ்சை விதைக்கும் குஜராத் பள்ளி.. தியாக வரலாறு இல்லாத ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தால் இதுதான் நடக்கும். மக்களிடம் ஓட்டு வாங்காமல் முறைகேடு செய்து ஆட்சியைப் பிடித்த கட்சிக்கு வேறு எந்த வகையிலும் நன்மை புரிய வாய்ப்பில்லை.

இப்படி பலவிதமாக கலாய்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள். தேர்வு வினாத்தாள் தயார் செய்தவர்கள் என்ன தான் அலட்சியமாக இருந்திருந்தாலும் காந்தியின் மரணம் பற்றி கூடவா தெரியாமல் ஒரு ஆசிரியர் இருந்திருப்பார். குஜராத்தில் நடந்த இந்த சம்பவம் குஜராத் மாநிலத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

ஜூலை18 – 5 years of வேலையில்லா பட்... * முதல் நாள் காலேஜ் வாசல்ல நின்னு அய்யா நாம இன்ஜினியர் ஆகப்போறங்கறது நினைச்சது என்னால மறக்கவே முடியாது... தம் அடிச்சேன் தண்ணி அடிச்சேன் கட் அடிச்சேன் ...
இன்ஜினியரிங் படிச்சதால தான் குடிச்சிட்டு... தயாரிப்பு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், விவேகானந்தா பிக்சர்ஸ்ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்எடிட்டிங்: பிலாமின் ராஜ்இசை: சாம் சிஎஸ்எழுத்து இயக...
SC பசங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வராத! &#... "இப்பலாம் யாரு சார் சாதி பாக்குறாங்க..." என்று கேட்பவர்கள் இருக்கும் இதே காலத்தில் தான் " நீங்க என்ன ஆளுங்க... " என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். ந...
நிபா வைரஸ் தாக்குதலுக்கு கேரளாவில் 10 பே... கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா என்ற வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகக் கேரளா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பத்து பேருக்கும்...

Be the first to comment on "காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்ற கேள்விக்கு நெட்டிசன்களின் சுவாரஸ்யமான பதில்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*