பிக்பாஸ் கவினின் அம்மா சிறைக்குச் செல்கிறாரா? ௧வினின் குடும்பம் பற்றி அவருடைய நண்பர் என்ன சொல்கிறார்?

Is biggboss Gavin's mother going to jail

பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு இன்று வரை அந்த வீட்டை விட்டு வெளியேறாமல் உள்ள நபர்களில் கவினும் ஒருவர். இந்த நிலையில் அவருடைய அம்மா சீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி செய்தார் அதனால் அவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை என்று செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது உண்மையா என்று பலர் கேள்வி எழுப்ப இந்த விவகாரம் குறித்து கவினின் நண்பர் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அது என்னவென்று பார்ப்போம். 

ரொம்ப அழகான இந்த ரெண்டு படங்களும் ரெண்டு நாளா ரொம்ப தப்பான விஷயத்துக்காக பயன்படுத்தப்பட்டுட்டு இருக்கு. நான் பார்த்து, பழகி, வாழ்ந்து, வளர்ந்த ஒரு குடும்பத்த பத்தி ரொம்ப தரக்குறைவான விமர்சனங்கள், வீடியோக்கள், மீம்ஸ் etc etc.. காலேஜ்ல இருந்து கவிய தெரியும். அவன தெரிஞ்சதுல இருந்து அவன் குடும்பத்த தெரியும். 

ஆனா இப்ப அசிங்கமா பேசுற யாருக்கும் இந்த குடும்பத்த பத்தி எள்ளளவும் தெரியாது. அவங்க பேரு, குணம், பழக்கம் எதுவும் தெரியாது. ஏன் இந்த கேஸ் பத்திக் கூட ஒரு மயிரும் தெரியாது. Infact உண்மை என்னன்னு தெரிஞ்சா கூட, அத ஒதுக்கிட்டு, தான் உண்மையா இருக்கனும்னு நினைக்கற விஷயங்கள உண்மைன்னு நம்புற காலகட்டத்துக்கு வந்து சேர்ந்துட்டோம்.  

கேஸ் கோர்ட்ல இருக்கறதால இத பத்தி விரிவா பேசலாமான்னு தெரியல. சுருக்கமா சொல்லனும்னா, நிறைய பேர ஏமாத்துனதா தண்டனை வழங்கப்பட்டிருக்குற இவங்க, ஒருத்தங்கட்ட ஏமாந்துட்டாங்க. அதான் நிஜம். கவியோட அம்மாவயும் அத்தையையும் இந்த வழக்குல சேர்த்தத நினைச்சு சிரிக்கறதா, இல்லனா தண்டனை வாங்கிக் கொடுத்துருக்கற வன்மத்த நினைச்சு கோபப்படுறதான்னு தெரியல. நான் பண்ணதா சொல்லப்படுற ஒரு தப்புக்கு, பக்கத்து வீட்ல தனிக்குடித்தனம் இருக்குற என் பையன கைது பண்றது எப்படியிருக்கு? அதுவும் அவன் குடியிருக்குற சொந்த வீட்ட இந்த கேஸ்ல சேர்த்து அத அபகரிக்க..!

ரொம்ப உறுதியா சொல்றேன். மேல் கோர்ட்டுகளுக்கு இந்த வழக்கு போகும் போது இந்த தீர்ப்பு நகைப்புக்குள்ளாகி, கேஸ் உடைஞ்சுரும். ஆனா இப்ப இவங்க படுற அவமானத்துக்கும் கஷ்டங்களுக்கும் என்ன பதில்? நாளைக்கு வாடகை வீடு தேடுறதுல இருந்து, அக்கவுண்ட் வச்சுருக்குற மளிகைக் கடைக்காரர் வரைக்கும் பாக்குற, கேக்குற, மறுக்குற பல விஷயங்களுக்கு பின்னால இந்த தீர்ப்பு இருக்குமே.. அதுக்கு? 

இந்த குடும்பத்துல இருக்குற அத்தன பேரும் ஜெய்ன்ற என் பேர விட ‘தங்கம்’னு என்னை கூப்ட்டதுதான் அதிகம். முக்கியமா அம்மா. அவங்கள கம்பிகளுக்கு பின்னால கண்ணீரோட பாத்த பிம்பம் என்னைக்கும் மறக்காது. ஒரு வடு அது. ஏதோ ஒரு வகைல அவங்களுக்கு இத மறக்குற அளவுக்கான ஒரு பெரிய சந்தோஷம் வரனும்னு விரும்புறேன். அது கவியோட பிக் பாஸ் வெற்றியா இருக்கலாம். அடுத்த பட கமிட்மென்ட்டா இருக்கலாம். என்னவோ.. ஆனா எதாவது சீக்கிரம் நடக்கனும். நடக்கும். எங்களால அதுக்கு என்ன பண்ண முடியுமோ அத பண்ண நிறைய பேர் காத்துட்டு இருக்கோம்.  

எல்லாரயும் தங்கம் தங்கம்னு கூப்புட்ற இந்த குடும்பம்தான் தங்கமான குடும்பம். ஒவ்வொருத்தர பத்தியும் சொல்றதுக்கு ஆயிரம் கதை இருக்கு. என் அளவுக்கு இந்த குடும்பத்தோட யாரும் நெருங்கிப் பழகிருப்பாங்களான்னு எனக்குத் தெரியல. அந்தளவுக்கு ஒவ்வொரு அடுக்குலயும் நான் பழகிருக்கேன். இத இப்ப சொல்றது பெருமைக்காகத்தான். கவியோட எனக்கு பல முரண்பாடுகள் இருக்கு. என் மேலயும் அவனுக்கு இருக்கலாம். ஆனா அதுக்காக எந்த ஒரு இடத்துலயும் யாரயும் என்னால ஒரு இன்ச் கூட விட்டுக் கொடுக்க முடியாது. இந்த கேஸ், தீர்ப்பு, தண்டனை, அப்பீல் என்ன நடந்தாலும் சரி.. இது என் குடும்பம் தான்.  ரெண்டு நாளா தப்பான காரணத்துக்காக மட்டும் வட்டம் போட்டு, அம்புக்குறி போட்டு பகிரப்பட்டுட்டு வர்ற இந்த படங்கள, சந்தோஷத்தோட பெருமையோட பகிர்றேன்.

#IStandWithKavin னு போட வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. நான் பக்கத்துல போய் எல்லார் கைப்பிடிச்சும் கூட நின்னுப்பேன்!

இவ்வாறு அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

Related Articles

” என்ன வேலை செய்றீங்க? ” என்... வித்தியாசம், அதிசயம் என்ற வார்த்தைகளுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. ஏனென்றால் அவை தான் மனிதனை வியப்பிற்கு உள்ளாக்குகின்றன. அப்படி சில கோயில்களின் அ...
ப்ராங்க் ஷோ செய்பவர்களுக்கு ஆடை படம் ஒரு... சுதந்திரக் கொடி என்ற பெயரை காமினி என்று மாற்றி வைத்துக்கொண்ட அமலாபால் ஒரு டிவி சேனலில் தொப்பி தொப்பி என்ற ப்ராங்க் ஷோவை நடத்தி வருகிறார். ப்ராங்க் ஷோ ...
இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம் செய்... இலங்கையில் மதக்கலவரம் நடந்து வருவதையடுத்து அதை தடுக்கும் வகையில் பேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.இலங்கையில் ...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதி... தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது கட்சியான அதிமுக மூன்று அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்...

Be the first to comment on "பிக்பாஸ் கவினின் அம்மா சிறைக்குச் செல்கிறாரா? ௧வினின் குடும்பம் பற்றி அவருடைய நண்பர் என்ன சொல்கிறார்?"

Leave a comment

Your email address will not be published.


*