காந்தியை மகாத்மா என்று அழைப்பது சரியா? உண்மையான தேசத் தந்தை யார்?

Is it right to call Gandhi a Mahatma

வருடம் தோறும் அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. காந்தி ஜெயந்தி வந்தாலே சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தது காந்தியா ? சுபாஷ் சந்திர போஸ்ஸா ? என்ற விவாதம் வருவதுண்டு. காந்தியை காரணமே இல்லாமல் மகாத்மா தேசப் பிதா என்றெல்லாம் அழைத்து வருகிறோம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆக காந்தி மீதான நெட்டிசன்களின் பார்வை மாறி வருகிறது. அவை என்னவென்று பார்ப்போம். 

1.காந்தியைப்பற்றி எழுதினால் பலருக்கு வயிற்றெரிச்சல், ரத்த வாந்தி, வயிற்றுப்போக்கு வருகிறது. வைத்தியரைப் பார்ப்பது நல்லது. பார்ப்பனர் உட்பட உயர்சாதி இந்துக்கள் / இந்துத்துவாதிகள் / இஸ்லாமியர்கள் / கிறிஸ்துவர்கள் / பிரிட்டிஷ் / பட்டியலின மக்கள் / திராவிட கழகத்தினர்கள் என அனைவருக்கும் இன்றும் அவர் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். ஒவ்வொரு தலைவர் மேலும் விமர்சனங்கள் உண்டு… முழுமையாக ஏற்கமுடியாது என்ற போதிலும் தனிப்பட்ட முறையில் நான் எந்த தலைவரையும் அவர்களின் பிறந்த நாளில் அவதூறு செய்யும் சில்லறைத்தனம்  என்னிடம் கிடையாது… விருப்பமில்லையெனில் ஒதுங்கி விடுவேன்… ஆனால் தொடர்ந்து காந்தி அல்லது பாரதியின் அல்லது திராவிட திருமுகங்களுக்கு வேண்டாத ஆளுமைகளின் விசேட தினம் வரும்போதெல்லம் பலருக்கு ரத்தப்போக்கு வருவது ஆரோக்கிய கேடு.. அவர்களின் உடல் நிலைப்பற்றி கவலையாக இருக்கிறது… தனிப்பட்ட முறையில் பல ஆளுமைகளிடம் கற்றவன்….ஒவ்வொருவருக்கும் பலம்/பலவீனம் உண்டு…ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் நான் வியக்கும் ஆளுமைகள் காந்தியும், காரல் மார்கஸும்…

ஒருவர் இப்படி எழுதுகிறார்…” நாளை காந்தி 150 வது பிறந்த தினம்…காந்தியின் மேல் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்….” போன்ற பதிவுகளை பார்க்கமுடியும் என நக்கலடித்து ஷாந்தி ஷாந்தி ஹே ராம் என முடிக்கிறார்…….இவர்களைபோல் பலர் எழுதியுள்ளனர்… என்னாலும் எழுத முடியும்…”ஈ.வே.ராமசாமி / கருணாநிதி/ அண்ணாதுரை / இப்படி நீட்டி முழக்கி அடுக்கி அவர்கள் மேலும்  ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்…” பெரியார் மண், அன்றே சொன்னார் பெரியார்” என பல ஜல்லியடிகளையும் அவிழ்த்து விட முடியும்…

இதையெல்லாம் குறிப்பிடுவதற்குக்காரணம் அவர்களை சிறுமைப்படுத்தும் நோக்கம் இல்லை….ஒவ்வொருவரும் அவர்களின் வழிகளில் தங்களின் பங்களிப்பையும் ஈடுபாட்டையும் செலுத்தியுள்ளார்கள்..அவர்களின் நோக்கம் உன்னதமானது…செயல்முறை திட்டங்களில் விமர்சனங்கள் இருக்கலாம்…ஆனால் ஒட்டுமொத்தமாக நக்கல் அடிப்பது படு முதிர்ச்சியற்ற தன்மை… கேவலம்…

இன்றைய தினத்தில் கூகுளிலில் தட்டிப்பாருங்கள்…காந்தி பிரபஞ்ச ஞானியாக காட்சியளிக்கிறார்…ஏன் அவரை உலகம் கொண்டாடுகிறது? என்பதற்கு உழைப்பும் வாசிப்பும் தேவை… அவர் மேலும் விமர்சனம் உண்டு என்பதோடு இந்தப்பதிவை முடிக்கிறேன்…

2.குஜராத்தின் சில பகுதிகளில் பெயருக்குப்பின் காந்தி என சேர்த்துக்கொள்வர்

அவ்வகையில் பெரோசின் தந்தை ஜஹாங்கீர்கான் தன் பின்னால் காண்டி என சேர்த்திருந்தார்.மகன் பெரோஸ் ஜஹாங்கிர் காண்டி என இருந்தது. நேரு குடும்பத்தில் நெருக்கமான கட்டத்தில் பெரோஸ் காந்தி என பெயர் மாற்றினார்.

3.நேற்றிரவில் இருந்தே காந்தியைப்பற்றி சிந்தித்து கொண்டிருந்தேன்.காந்தி பற்றி அரிய தகவல்களைப் படித்தேன். காந்தி ஒரு கடைக்குட்டி சிங்கம்.காந்தியின் தந்தை காபா காந்தியின் நான்காம் மனைவியான புத்லிபாய் அவர்களுக்கு ஆறாவது குழந்தையாக அதாவது கடைசியாகப் பிறந்த குழந்தை காந்தி. காந்தியுடைய இயல்பான உயர் ரத்த அழுத்தத்தின் அளவு 220/110. தன் கோபத்தைத் தனக்குள் வைத்துக்கொண்டு வெளியே பொக்கைவாய் சிரிப்பை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்திருக்கிறார். காந்தியைப் பற்றி எண்ணும் போது கருப்பு காந்தியான காமராஜரை நினைவு கூற ஒரு வரலாற்று நாளை நமக்கு விட்டு சென்றிருக்கிறது.காந்தியின் பிறந்தநாளும் காமராஜரின் மறைவு நாளும் அக்டோபர் 2 – இயக்குனர் வசந்த பாலன்

4.அக்டோபர் 2 – காந்தி மீது பெரியார் கடுமையான விமர்சனங்களை வைத்தார். அம்பேத்கர் அதைவிடக் கடுமையான விமர்சனங்களை வைத்தார். ஆனால் வகுப்புவாதம் தாண்டவம் ஆடும் இன்றைய சூழ்நிலையில் காந்தியேதேவைப்படுகிறார். கோட்சேக்களின் காலத்தில் ஒலிக்க வேண்டிய காந்தியின் குரல்கள் இவை:

       1.இந்தியாவில் இந்துக்கள் தவிர வேறு யாரும் வாழக்கூடாது என்று இந்துக்கள் யாராவது                           நினைத்தால் அவர்கள் தங்கள் மதத்தையே அழிக்கிறார்கள்.

  1. தீண்டாமை என்ற விஷம் இந்த மதத்துக்குள் புகுத்தப்பட்டபோதே அதன் சரிவும் தொடங்கிவிட்டது.

      3.ஒவ்வொருவனும் தனது சமயத்தின் உண்மையை அறிந்து, போலிக் குருக்களின் போதனைக்             கேளாமலிருந்தால் சச்சரவுக்கு இடம் இருக்காது.

  1. இந்து – முஸ்லிம் ஒற்றுமை, சத்தியாகிரகம் ஆகிய இரண்டுக்குமே என் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன்.
  2. தனிநபர் செய்த குற்றத்தை ஒரு சமூகத்தின் மீது சுமத்தாமல் இருப்போமாக.
  3. சூத்திரர்கள் வேதம் படிக்கக்கூடாது என்ற தடையை நான் ஆதரிக்க முடியாது. நாம் அந்நியர்க்கு அடிமையாக இருந்து வரும் வரையில் அனைவருமே சூத்திரர்களே.
  4. இன்றைய சாதி முறை, வர்ணாசிரமத்துக்கு விரோதமானது.
  5. நான் கொல்லப்பட்டாலும் கூட ராமா, ரகீம் என்ற பெயர்களை அடிக்கடி உச்சரிப்பதை விடமாட்டேன். அவ்விரண்டும் ஒரே கடவுளின் பெயர்கள்.

     9.இந்துஸ்தான் இந்துக்களுக்கு பாகிஸ்தான் முஸ்லீம்களுக்கு என்று ஆனால் இரண்டுமே                        விஷம்  வழிந்தோடும் நாடாகிவிடும்.

      10.அரசியலில் மதத்தைக் கலந்த பாவத்தைச் செய்தது நான் தான். அதற்கான                                               தண்டனையை நான் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

5.காந்தியிடம் இருந்து காலப் போக்கில் நிறைய விஷயங்களை எடுத்துக் கொண்டு இருந்திருக்கிறேன். கல்லூரியில் படிக்கையில் பேராசிரியர் ஒருத்தர் போகிற போக்கில் சொன்ன வாசகமொன்று நெஞ்சில் பச்சக்கென ஒட்டிக் கொண்டு விட்டது. அது ஒரு விளையாட்டுக்காரனாய் எனக்கு ஏதுவானதும்கூட. பிற்பாடு அதுகுறித்து நிறைய யோசித்துப் பார்த்திருக்கிறேன். சூரியன் உச்சியில் நிற்கிற ஒரு மே மாத, எட்டாம் தேதி என்னுடைய கல்லூரி இறுதித் தேர்வை எழுதினேன். மே ஒன்பதாம் தேதி என்னுடைய முதல் வேலையில் சேர்ந்தேன். அதற்கடுத்து ஒருநாள்கூட வேலையில்லாமல் இருந்ததில்லை. ஒரு வேலையை விட்டு விலகினால், அடுத்த நாளே இன்னொரு வேலையில் இருப்பேன். அப்படி எனக்கு அமைந்தும் விட்டது.

இடையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த சில நாட்களைத் தவிர எப்போதுமே வேலையில்தான் இருந்திருக்கிறேன். மருத்துவமனையில் இருந்து நேராக வந்தமர்ந்த இடம், கடை. இதுவரை ஞாயிறு ஓய்வு நாள் என்ற ஒன்று அமைந்ததே இல்லை. ஏனெனில் எங்கே வேலையில் இருந்தாலும், கடை வியாபாரத்தைப் பொறுத்தவரை ஞாயிறென்பது வேலை நாள். எங்கள் கடைக்கேகூட விடுமுறை விட்டதில்லை. தேர்தல் நேரங்களில், எதிரே வாக்குச் சாவடி என்பதால் அன்றொருநாள் கட்டாயத்தின் பேரில் விடுமுறை விடுவோம். அதுவும் ஆறரை மணிக்கு மேல் திறந்து விடுவோம். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடை என்கிற சக்கரம் விடாமல் சுழல வேண்டுமென அங்கே சொல்லி வைத்திருக்கிறேன். அதுவே என் விருப்பமும் நோக்கமும்.

ஏதோவொன்று விடாமல் பிடித்திழுத்துச் சுற்றுகிறது. சும்மாயிருப்பது சுகம் என்று எழுதுவதெல்லாம் ஊருக்கான உபதேசங்களே. என்னளவில் சும்மாயிருப்பது என்பது கொன்று போடுவதற்குச் சமம். எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறேன் என்றாலும், காந்தி சொன்னதாய் பேராசிரியர் சொன்ன வாசகமும் பல நேரங்களில் உந்தித் தள்ளியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இதைச் சொல்லியபடியேயும் இருக்கிறேன். அவர் சொன்னது இதுதான். “உழைக்காமல் உண்ணும் உணவு, திருட்டு உணவிற்குச் சமம்”.

6.காந்தி :- அடுத்தப் பிறவியில் நான் மலம் அல்லுபவரின் வீட்டில் பிறக்க விரும்புகிறேன்.

பாபாசாகேப் அம்பேத்கர்:-  மிஸ்டர் காந்தி அடுத்த பிறவிவரை ஏன் நீங்கள்  காத்திருக்க வேண்டும். இப்பொழுதே மலம் அள்ளலாமே..!  

இந்த நாட்டிலே மகாத்மாக்கள் தோன்றுகிறார், மகாத்துமாக்கள் மறைகிறார்கள் , ஆனால் தீண்டப்படாத மக்கள் என்றுமே தீண்டத்தகாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்…! காந்தி நீங்கள் எமக்கு நம்பிக்கையான நண்பராகவும் இல்லை, நாணயமான எதிரியாகவும் கூட இருந்ததில்லை. துரோகத்தின்  ஆத்துமா பிறந்தநாளாம்..!

இப்படி காந்தியை பற்றிய கலவையான விமர்சனங்கள் வருடா வருடம் அதிகரித்து வருகின்றன. அன்பே சிவம் என்பவர்களுக்கு காந்தி மகாத்மா. ரௌத்திரம் பழகு என்பவர்களுக்கு சுபாஸ் சந்திர போஸ் மகாத்மா. 

Related Articles

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்தி... சிறந்த கவிஞரும், சமுக சீர்திருத்தவாதியும், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் அன்னை சாவித்திரிபா பூலே. அவரை பற்றி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சிற...
காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்... தேசப்பிதா காந்தி பிறந்த மாநிலமான  குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த தேர்வில் காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்ற கேள்வி தேர்வு வினாத்...
மிகச் சிறந்த படைப்பாளர்களுக்கு காலம் தாழ... இந்த வருடம் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு ரஜினி உட்பட பல தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். இருப்பினும் பலருக்கு மனக்கசப்பு இருந்தது உண்ம...
இன்று தேசிய இளைஞர் தினம்! – வீரத்த... இந்தியா இளைஞர்களின் கையில்! இன்றைய இளைஞர்களிடம், உங்களுக்குப் பிடித்த பொன்மொழி ஒன்றை கூறுங்கள் என்றால் பெரும்பாலானோர் விவேகானந்தரின் பொன்மொழியையோ அல்...

Be the first to comment on "காந்தியை மகாத்மா என்று அழைப்பது சரியா? உண்மையான தேசத் தந்தை யார்?"

Leave a comment

Your email address will not be published.


*