தேசிய விருது குழுவால் தமிழ்சினிமா புறக்கணிக்கப்பட்டதா? இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

Is Tamil cinema been ignored by the National Award Committee

இயக்குனர் வசந்தபாலன்:

தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும்,தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.இந்த வருடம் தேசிய விருதுக்கு பேரன்பு,பரியேறும் பெருமாள்,வடசென்னை,ராட்சசன்,96 உள்ளிட்ட நிறைய நல்ல,திறமையான,தகுதியான திரைப்படங்கள் சென்றிருந்தும் ஏன் புறக்கணிக்கப்பட்டது தமிழ் சினிமா ? பேரன்பு திரைப்படத்தில் மம்முட்டி , சாதனா தன் உயிரை கொடுத்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருந்தார்.யுவனின் இசை,தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு என்ன குறை கண்டீர்கள் ? கேள்விப்பட்ட போது தான் தெரிந்தது,தமிழில் இருந்து நல்ல நடுவர்களும் தேர்வு குழுவுக்கு அழைக்கப்படவில்லை.கண்துடைப்பாக நடுவர்கள் அழைக்கப்படுகின்றனரா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய விருது கமிட்டி நடுவராக ஒரு தினத்திற்கு முன்பு என்னை அழைத்தார்கள்.முப்பது நாள் டெல்லி பணிக்கு ஒரு நாள் முன்பு தகவல் தெரிவிப்பது சரியா? இது கண்துடைப்பின்றி வேறென்ன ? இந்த நிலை மாறவேண்டும்.தமிழ் உச்ச நட்சத்திரங்களும்,திரை ஆளுமைகளும், தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். 

தமிழ் ஸ்டூடியோ அருண் : 

தமிழ் சினிமாவை ஒட்டுமொத்தமாக புறக்கனித்திருக்கிறது இந்திய தேசிய விருதுகள் குழு. ஒரு விருது கூட தமிழ் சினிமாவிற்கு வழங்கப்படவில்லை. மற்ற எல்லா மொழிகளையும் விட தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு நிறைய நல்ல முயற்சிகள் நடக்கவே செய்தன. தமிழ்நாட்டை புறக்கணித்து தமிழ்நாட்டின் வளங்களை மட்டும் கொள்ளையடிக்க முடிவு செய்திருக்கிறது பாசிச பிஜேபி அரசு. தமிழ் சினிமா துறையினர் ஒற்றுமையாக இந்த பாகுபாட்டிற்கு எதிராக பேச வேண்டும். செயல்பட வேண்டும். பத்து கோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்தை, நல்ல சினிமாவுக்கான முயற்சி நடைபெறும் காலக்கட்டத்தில் புறக்கணிப்பது வேதனை மட்டுமல்ல,’விருது குழுவின் போதாமையும் கூட. 

தேசிய விருது எதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்கிற உண்மையை நாம் எல்லாரும் ஒரு பக்கம் மறந்துவிட்டோம். பலருக்கு அது குறித்து யாதொரு புரிதலும் இருக்க வாய்ப்பில்லை. இன்று வெறுமனே வணிக பண்டமாக பாவிக்கப்படும் பல்வேறு விருதுகளில் இன்னொரு விருது வணிக பண்டமாகவே இந்திய தேசிய விருதும் மாறியிருக்கிறது. இதனை தோற்றுவிக்கும்போது முன்னாள் பிரதமரும் இந்திய கலைகளுக்காக பெரிதும் அக்கறை எடுத்துக்கொண்டவருமான நேரு மேற்கோள் காட்டிய வாசகங்கள் முக்கியமானது. தேசிய விருது என்பது மாற்று முயற்சிகளுக்கும், மக்கள் பரவலாக அறியாத, மக்களிடம் சரியாக சென்று சேர முடியாத படங்களுக்கான ஒரு களமாக அந்த படங்களின் மீது ஒரு வெளிச்சம் பாய்ச்சவே தேசிய விருது தோற்றுவிக்கப்பட்டது. உலகின் வேறெந்த நாடுகளில் வழங்கப்படும் விருதுகளை காட்டிலும் இந்திய தேசிய விருது மிக முக்கியமானது. காரணம் இந்தியாவின் முதல் குடிமகனாக இந்திய ஜனாதிபதியே இந்த விருதுகளை வழங்க வேண்டும். சென்ற ஆண்டு அதிலும் மாற்றத்தை செய்து, தேசிய விருதின் நோக்கத்தையே சிதைத்து அதையும் அரசியலாக்கியது ஆளும் பாசிச பிஜேபி அரசு. 

இந்த ஆண்டு விருது வழங்கிய படங்களின் பட்டியலும், விருது பெற்றவர்களின் பட்டியலையும் ஒப்பிட்டு பாருங்கள். ஜனரஞ்சகமான, எல்லாரும் திரையரங்கில் பார்த்து ரசித்த வெகுஜன படங்கள் மட்டுமே அதிகம் விருது பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டு முற்றிலும் புறக்கணித்து, கட்டாயம் கொடுத்தாக வேண்டிய பிரிவில் உள்ள விருதுக்கு இன்னமும் திரையரங்கில் வெளியாகாத படத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவின் எத்தனையோ மொழிகளில், எத்தனையோ மாநிலங்களில் இன்னமும் அதிகம் வெளிச்சத்துக்கு வராத பல இளம் இயக்குனர்கள், பல்வேறு பொருளாதார சிரத்தைகளுக்கு மத்தியில் எவ்வித பெரும் பின்னணியும் இல்லாமல் நிறைய அழகான, நேர்த்தியான படங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மராத்தி, அசாம் போன்ற மொழிகளில் வெளியாகும் படங்களை தொடர்நது கவனித்தால் இதனை உணரலாம். இப்படி ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் இந்த படங்கள் பெரும்பாலான இந்திய சமூகத்தை சென்று சேர்வதில்லை. அவர்களுக்கான ஒரே போக்கிடமாக, நம்பிக்கையாக தேசிய விருது விழாவே இருந்து வருகிறது. முதன் முதலில் ஜனரஞ்சக படங்களுக்கான விருது என்றொரு பிரிவை கொண்டு வந்து, இப்போது தேசிய விருதே ஜனரஞ்சக படங்களுக்கான விருது என்று மாற்றியிருக்கிறார்கள். இதற்காக அல்ல தேசிய விருது தோற்றுவிக்கப்பட்டது. 

ஒரு நல்ல அரசுதான் நல்ல கலைகளுக்கான வெளியை உருவாக்க முடியும் என்பது உண்மையல்ல, கொடுங்கோலாண்மை புரிகின்ற அரசே பல நேரங்களில் மாபெரும் வீச்சுடன் கூடிய கலைப்படைப்புகள் வெளியாக காரணமாக இருந்து வருகிறது. இந்த ஐந்தாண்டுகளில் இந்திய சினிமா மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய கலைகளே உலகின் ஆகச்சிறந்த படைப்புகளாக வெளிவரும். பாசிசம் உச்சம் பெறும்போது கலைகள் தனி எழுச்சி பெரும். அதற்கு விருது பெரும் தடையல்ல, விருது என்பது கலைகளுக்கான தகுதி நிலை அல்ல.

நடிகர் கவிதாபாரதி : 

தேசிய விருதுக்குழுவால் தமிழ்த்திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. காஷ்மீர்ல வந்து படம் எடுன்னு கூப்பிடறாங்க..

ஆனா நீங்க விருதுக்கெல்லாம்

தகுதியில்லேங்கறாங்க.

தமிழ் சினிமா ரசிகர் ஒருவர் : 

பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்சி மலைக்கு தராம ‘பாரம்’ னு தமிழ் படத்துக்கு தேசிய விருது தந்திருக்காங்களே? பரியேறும் பெருமாள் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், மேற்கு தொடர்ச்சி மலை தயாரிப்பாளர் விஜய் சேதுபதி. ரெண்டு பேரும் பாஜக வுக்கு எதிராக பேசினவங்க. அப்புறம் எப்படி கொடுப்பான்? இருந்தாலும் வடசென்னை படத்துக்காக தனுஷுக்கு தந்திருக்கலாமே? தனுஷ் யாரு? காலா படத்தோட தயாரிப்பாளர். காலா படத்தோட வில்லன் எந்த அரசியல்வாதியை பிரதிபலித்தார்? இந்தியா முழுக்க பார்த்த படத்தை மோடி பார்த்து இருக்கமாட்டாரா? எல்லாம் அப்படித்தான்.

இவ்வாறு தங்கள் கருத்தை தெரிவிக்கின்றனர் தமிழ்சினிமா ஆர்வலர்கள். 

Related Articles

#TN_welcomes_XiJinping #GoBackModi என்று... சீன நாட்டை சேர்ந்த ஜின்பிங்கை வரவேற்கும் தமிழர்கள் #Gobackmodi என்று டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 1.சீன ...
பெரியார் பற்றிய 20 தகவல்கள்!... ஈரோட்டில் 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்தார். பெற்றோர் வெங்கட்ட நாயக்கர் - சின்னத் தாயம்மாள். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராமசாமி. இவர...
விமான நிலையத்தில் உயர்தர வசதிகளை அறிமுகப... கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்தின் சேவையை அடிக்கடி பயன்படுத்தும் பயணிகள், மிதமிஞ்சிய போக்குவரத்து நெரிசல் காரணமாக அங்கு வந்து செல்லும் பயண அனுபவத்தை ...
பாக்யராஜின் நேர்மையை பாராட்டும் ரசிகர்கள... சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் என்ற அறிவிப்பு வந்த நாளில் இருந்தே இந்தப் படம் பற்றி பலவாறு பேச்சு அடிபட்டது. ...

Be the first to comment on "தேசிய விருது குழுவால் தமிழ்சினிமா புறக்கணிக்கப்பட்டதா? இவர்கள் என்ன சொல்கிறார்கள்?"

Leave a comment

Your email address will not be published.


*