சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி எழுத்தாளர் பாலகுமாரன் சொன்னதை பாருங்கள்!

Look at what writer Balakumaran said about superstar Rajinikanth!

சினிமா ஒரு காட்டாறு. கரையிலிருந்தபடி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பேசுகிறார்……….

கேள்வி : ஐயா,  உங்களின் சினிமா அனுபவம் பற்றியும் சொல்லுங்களேன்.

பாலகுமாரன் பதில் : சினிமாவைப் பற்றி எனக்கும் பேச விருப்பம் உண்டு। சினிமாவில் அற்புதமான மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். அவர்களின் அன்பில் , அரவணைப்பில் , நட்பில் திளைத்திருக்கிறேன்.

குறிப்பாக நண்பர், நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களோடு எனக்கு நல்ல பழக்கம் உண்டு. அவர் கம்பீரத்தை பல்வேறு சமயங்களில் நான் கவனித்து அதிசயப்பட்டிருக்கிறேன். 

பாட்ஷா படத்தின் கதை விவாதம் நடந்து கொண்டிருந்தது. திரு. ரஜினிகாந்த் அவர்களின் அலுவலக மாடியில் ஒரு பெரிய ஹாலில் அமர்ந்திருந்தோம். அந்த ஹாலில் இரண்டு ஒற்றை சோபாக்களும், மூன்று பேர் அமரக் கூடிய ஒரு நீண்ட சோபாவும் இருந்தன..

ஒற்றை சோபாக்களில் இயக்குனர் திரு.சுரேஷ் கிருஷ்ணாவும் , திரு. ரஜினிகாந்த் அவர்களும் அமர்ந்திருக்க, மூன்று பேர் அமரக் கூடிய சோபாவின் நுனியில் நான் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பேன். அந்த மூன்றாவது சோபாவில் வேறு யாரேனும் வருவார்கள் , உட்காருவார்கள், நகர்ந்து போவார்கள்। மூன்று பேருமே விவாதத்தில் ஈடுபட்டிருந்தால் இது தான் உட்காரும் விதமாக இருந்தது।

விவாதத்தினுடைய சூடு ஏற ஏற, நான் உட்கார்ந்து பேச முடியாமல் என் வழக்கப்படி எழுந்து நின்று வேட்டியை மடித்து கட்டி, கைகளை ஆட்டியபடி அந்த காட்சியை விவரித்து வசனத்தோடு என்னுடைய வெளிப்பாடை சொல்லிக் கொண்டிருக்க, ரஜினிகாந்த் அவர்கள் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தார்.

நான் நடப்பது பார்த்து எழுந்து நின்று தள்ளிப் போய் மூன்று பேர் அமரக் கூடிய அந்த நீண்ட சோபாவின் பின் பக்கம் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் ஒரு பேச்சு சுவாரசியத்தில் மெய்மறந்து அவருடைய நாற்காலியில் அமர்ந்து அவரிடம் பேசும் போது, மூன்று பேர் அமரக் கூடிய அந்த நீண்ட சோபாவில் அவர் அமர்ந்து கொண்டார்.

என்னிடத்தில் சுரேஷ் கிருஷ்ணா ஏதோ சொல்ல முற்படுவது தெரிந்த போது குறுக்கிட வேண்டாம் என்று கையமர்த்தி விட்டு தொடர்ந்து நான் வேகமாக அந்த காட்சியை திரு. ரஜினிகாந்த் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். திரு.சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் எழுந்து அருகே வந்து காதோரம் “அவருடைய நாற்காலியில் அமர்ந்து பேசுகிறீர்கள்.தயவு செய்து எழுந்திருங்கள்” என்று மெல்ல சொன்னார்.

நான் திடுக்கிட்டு என் தவறை உணர்ந்தேன். நான் எழுந்திருக்க முற்படும் போது, சுரேஷ் கிருஷ்ணா பேசியதையும் நான் எதிரொலிப்பதையும் அறிந்து திரு. ரஜினிகாந்த் அவர்கள் என் தோளை அழுந்தப் பற்றி உட்கார வைத்து “உட்காருங்கள்.இது ஒன்றும் சிம்மாசனம் அல்ல.வெறும் சோபா. ஆசனம். யார் வேண்டுமானாலும் உட்காரலாம்” என்று உரத்த குரலில் சொல்லி தொடர்ந்து என்னை பேசுமாறு கட்டளையிட்டார்। ஆனால் நான் உட்கார்ந்திருப்பது அவருடைய நாற்காலி என்று தெரிந்த பிறகு தொடர்ந்து என்னால் பேச முடியவில்லை।நான் எழுந்து நின்று என்னுடைய இடத்திற்கு வந்து விட்டேன்। அன்றைய விவாதம் முடியும் வரையில் 

திரு.ரஜினிகாந்த் அந்த ஒற்றை சோபாவில் உட்காரவில்லை.

வீடு திரும்பும் போது திரு. ரஜினிகாந்த் அவர்கள் அது ஒன்றும் சிம்மாசனம் அல்ல என்று சொன்னதும், தோளை அழுத்தி அமர்த்தியதும், தொடர்ந்து பேச கட்டளையிட்ட கம்பீரமும், பண்பும்,எளிமையும், பெருந்தன்மையும் ஞாபகத்திற்கு வந்தன. நாற்காலி என்பது ஒரு கெளரவமான விஷயம் தான். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அது நாற்காலி தான் என்று சாதாரணமாக சொன்ன அந்த மனிதரை இன்றளவும் என் மனம் நேசிக்கிறது.

Related Articles

தமிழ்நாட்டில் புத்தகத் திருவிழாக்கள் வெக... புத்தகத் திருவிழா என்றாலே தீவிர புத்தகப் பிரியர்களுக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும். காரணம் தங்கtளுக்கு பிடித்த புத்தகங்களை சிறப்பு தள்ளுபடி விலையில...
மாஸ் படம் எடுப்பது எப்படி? தமிழ்சினிமா உ... * முதலில் யாராவது சிக்கலில் இருக்க வேண்டும். சிக்கலில் இருப்பவரை நாயகன் சண்டை போட்டு காப்பாற்ற வேண்டும். நாயகனின் முகத்தை நேரடியாக காட்டாமல் காலை, நடை...
பொழுதுபோக்கு பூங்காவில் இயங்கும் பந்தைய ... ஹரியானா மாநிலம் பஞ்சகுளா பகுதியில் இயங்கி வரும் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. யதவிந்த்ரா கார்ட...
பாரதிய ஜனதா கட்சியை கலாய்க்கும் திருக்கு... நாட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது, ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு திருவள்ளுவர் எந்த மதத்தை சார்ந்தவர் எந்த சாதியை சார்ந்தவர் என்...

Be the first to comment on "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி எழுத்தாளர் பாலகுமாரன் சொன்னதை பாருங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*