சுய இன்பம் அனுபவித்தால் கைகள் நடுங்குமா? – இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 20 கேள்வி பதில்கள்!

Must know 20 Questions and answers for the Youths

1.கதையும் காரணமும்பருவம் வந்த ஆணின் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

ஆணுறுப்பு என்பது ரப்பர் குழாயைப் போல உருளை வடிவமானது. அதனுள் மூன்று உருளை வடிவக் குழாய்கள் உண்டு. ஒவ்வொன்றும் விரிவடையும் தன்மையுள்ள திசுக்களால் ஆனவை. இந்த மூன்று உருளைகளும் இணைந்துதான் ஒரு உருளையாக வெளிப்புறத்தில் நமக்குத் தெரிகிறது. இதன் கூம்பு போன்ற முனைப் பகுதியை ஆண்குறியின் தலை என்கிறோம். இந்த முனைப் பகுதியில் ஆணுறுப்பின் தோல் ஒட்டாமல் இருக்கிறது. முனைப் பகுதித் தோலின் உட்புற சுரப்பிகளில் டீன் ஏஜ் பருவத்தில் சில கசிவுகள் ஏற்படத் தொடங்கும். அவை முனைப் பகுதியின் தோலுக்கு உட்புறத்தில் சீஸ் போன்ற பிசுபிசுப்புடன் திரண்டு நிற்கும். அதை ஸ்மெக்மா என்பர். அதை அவ்வப்போது சுத்தம் செய்யவில்லை என்றால் கிருமி பாதிப்பு ஏற்படும்.

2.போர்னோ படம் பார்த்த அந்த இளைஞர்களின் உடலில் இயற்கையாக ஏற்படும் மாற்றம் என்ன?

அத்தகைய படங்களைப் பார்க்கும்போது ஆணுறுப்பின் உள்ளே உள்ள உருளைகளில் ரத்தம் நிரம்புகிறது. அதனால் ஆணுறுப்பில் விரைப்பு ஏற்படுகிறது. விரைப்பின் போது ஆணுறுப்பு சுமார் மூன்று முதல் ஐந்து அங்குலம் நீளமாகிறது. உடலில் ஓடும் ரத்த ஓட்ட அமைப்பு அந்த நேரத்தில் ரத்தத்தை ஆணுறுப்பை நோக்கித் திருப்புவதால், அந்த மாற்றம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் பாலுறவுக்கான லூப்ரிகன்ட் திரவங்கள் சுரக்கின்றன. அந்தப் பையன்களின் ஆணுறுப்பின் வழியாக வெளியேறியது விந்து அல்ல. லூப்ரிகன்ட் மட்டுமே. அது நிறமற்றதாகவும் எண்ணெய் போன்று கொழகொழப்பாகவும் இருக்கும். அதற்காக அஞ்ச வேண்டியது இல்லை. மீண்டும் நாம் வேறு வேலைகளில் மூழ்கும்போது, அது தானாகவே நின்றுவிடும்.

3.விடலைப் பருவத்தில் இச்சையைத் தூண்டும் புத்தகங்களை, படங்களை, சினிமாக்களை இளைஞர்கள் ஆர்வமாகப் பார்ப்பது ஏன்?

ஓர் இனம் தழைத்து வளர்வதற்கு ஜீன்களில் எழுதப்பட்ட ஆதாரமான விதிதான் காரணம். அந்த வயதில் அப்படியான ஆர்வம் ஏற்படவில்லை என்றால்தான் தவறு. மனிதன் சமூக விலங்காக இருப்பதால், தன் இணையை அடைவதற்கு சில கட்டுப்பாடுகளை, கோட்பாடுகளை, நெறிமுறைகளை வைத்திருக்கிறான். பருவம் எய்திய ஆணோ, பெண்ணோ செக்ஸ் உணர்வுகளால் இயற்கையாகவே தூண்டப்படுகிறார்கள். அவர்களுக்குத் திரைப்படமோ, புத்தகமோ உளவியல்ரீதியான இன்பத்தை அளிக்கின்றன. அதனால்தான் அவர்கள் அதை ஆர்வமாகப் பார்க்கிறார்கள்.

4.மார்பகங்கள் இரண்டும் ஒரே அளவாக இருக்குமா?

பொதுவாக இரண்டு மார்பகங்களும் ஒரே அளவாக இருப்பது இல்லை. சிறிய வித்தியாசம் இருக்கும். நம் உடலில்,  இரண்டு இரண்டாக உள்ள கைகள், கால்கள், காதுகள், கண்கள், புருவங்கள் என எதுவும் மிகத் துல்லியமாக, ஒரே அளவாக இருப்பது இல்லை. அப்படித்தான் இதுவும். இதற்காகப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

5.பிரா சைஸை எப்படிக் கண்டுபிடிப்பது?

கடைக்காரரிடம் போய், நம்முடைய சைஸ் என்ன என்று கேட்பது தர்மசங்கடமான விஷயம். கடையில் எண்ணற்ற டிசைன்களில் அளவுகளில் பிராக்கள்  கிடைக்கின்றன. புதிதாக அணியும் இளம்பெண்களுக்கு அது குழப்பத்தை ஏற்படுத்தும். பொதுவாக 28, 30, 32 என்ற அங்குல அளவுகளில் பிரா கிடைக்கும். அதுபோலவே ஏ,பி,சி,டி என்ற நான்கு கப் சைஸ்களில் பிரா கிடைக்கும். உதாரணத்துக்கு 34 அங்குல அளவு என்பது உடம்பின் ‘பெல்ட் சைஸ்’ எனப்படும்.

பெல்ட் சைஸ்:

குழம்ப வேண்டாம். மார்பகத்தின் கீழே டேப்பினால் உடம்பின் சுற்றளவை அளக்க வேண்டும் (படம்).  உங்கள் உடம்பு சுற்றளவின் அங்குல அளவு ஒற்றைப்படை எண்ணாக இருந்தால், அதனுடன் ஐந்து அங்குலத்தைக் கூட்டிக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு உடல் சுற்றளவு 29 அங்குலம் என்றால்… 29 5=34.

ஒருவேளை உங்கள் உடம்பு சுற்றளவின் அங்குலம் இரட்டைப் படையில் வந்தால், ஆறு அங்குலத்தைக் கூட்டிக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு உடல் சுற்றளவு 28 அங்குலம் என்றால்…   28 6=34.

அடுத்து கப் சைஸ்…

உங்கள் உடல் சுற்றளவை உங்கள் மார்பகத்தின் மேல் வைத்து அளக்கவும். (படம்). இந்த அளவு 30 அங்குலம் என்று கொள்வோம்.

பெல்ட் சைஸைவிட இரண்டு அங்குலம் வரை வித்தியாசம் இருந்தால் கப் சைஸ் A. 2 – 4 என்றால் கப் சைஸ் B. 5 – 6 அங்குல வித்தியாசம் என்றால் கப் சைஸ் C. 6 அங்குலத்துக்கு மேல் வித்தியாசம் என்றால் கப் சைஸ் D.

டேப்பை எடுங்கள்… பெல்ட் சைஸை பாருங்கள். கப் சைஸை கணக்கிடுங்கள். சரியான அளவுகளில் வாங்கி அணியுங்கள். கச்சிதமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

6.பிரா அணிவது அவசியமா?

பிரா அணிவது குலுங்கல்களைக் கட்டுப்படுத்துகிறது. ஜாக்கெட், புடவை அணிபவர்களுக்குப் பெரும்பாலும் இது அவசியம் இல்லை. மற்றபடி, எடுப்பாகக் காட்டுவதற்காகவும் பெரிதாகக் காட்டுவதற்காகவும் பலர் விரும்புகிறார்கள். பெரிதாக இருக்கும் மார்பகம் கீழே சரிந்து தோற்றமளிக்கும். அதைத் தாங்கி நிறுத்தவும் பலர் பிரா அணிகிறார்கள்.

7.மார்பகம் என்ன அளவு இருக்க வேண்டும்?

ஒவ்வொரு பெண்ணுக்கும் மார்பகத்தின் அளவு வேறு|படுகிறது. சிறியதாக இருக்கிறது என்பதோ, பெரியதாக இருக்கிறது என்பதோ பிரச்னையே இல்லை. அது அவரவர் உடல்வாகு பொறுத்தது.

8.பொதுவாக ஆண்குறி எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்?

நீளமும் தடிமனும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இரண்டு இன்ச் நீளம் இருந்தால் போதும் அது தன் கடமையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும். விரைப்புக்கு முன், என்ன அளவில் இருந்தாலும், விரைப்புக்குப் பின், சராசரியாக நாலரை அங்குலத்தில் இருந்து, ஐந்தரை அங்குல அளவுக்கு நீள்கிறது என்பதுதான் மருத்துவ உண்மை.

9.நிஜமாகவே இரண்டு அங்குல அளவு நீளம் இருந்தால் போதுமா?

பெண்குறியின் ஆழம், சராசரியாக ஆறு அங்குல அளவு இருக்கும். ஆனால், பெண் உறுப்பின் முதல் இரண்டு அங்குல ஆழத்தில்தான், உணர்வுகளைத் தூண்டும் நரம்புகள் முடிகின்றன. அதற்கு அடுத்த நான்கு அங்குலத்தில் உணர்வுகளைத் தூண்டும் பகுதி இல்லை. ஆக, ஆண்குறி இரண்டு அங்குலம் இருந்தாலே பெண்களுக்குத் திருப்தி தருவதற்குப் போதுமானது.

10.ஆண்குறியின் தடிமன் எவ்வளவு இருக்க வேண்டும்?

தடிமனும் முக்கியமானது இல்லை. பெண்குறி சுருங்கவும் விரியவும் கூடியது. ஒரு விரல் நுழையும் அளவில் இருந்து குழந்தையின் தலை வெளியே வரும் அளவுக்கு, அது சுருங்கவும் விரிவடையவும் செய்யும். ஆகவே, எந்த அளவு தடிமன் இருந்தாலும் பிரச்னை இல்லை.

11.மாதவிடாய் நேரத்தில் பெண்களை வீட்டுக்கு ஒதுக்குப்புறமாக இருக்கச் சொல்லுவது ஏன்?

மாதவிடாய் பற்றி சமூகத்தில் பலவிதமான கட்டுக்கதைகள், நம்பிக்கைகள் காணப்படுகின்றன. அவற்றுள் பலவும் நம்ப முடியாதவை. விஞ்ஞானப்பூர்வமற்றவை. ரத்தப் போக்கு இருப்பதால், அந்தப் பெண் சுத்தமாக இல்லை என நினைக்கிறார்கள். மாதவிடாய் நேரத்தில், நாப்கின்கள் அணிந்து சுத்தமாக இருந்தால், அவள் மற்றவர்களைப் போல சுத்தமானவள்தான்.

12.ரத்தப் போக்கின் காரணமாகப் பெண் பலவீனமடைகிறாளா?

உடல்சோர்வு ஏற்படுவது உண்டு. ஆனால் ரத்தப்போக்கு முடிந்ததும், ரத்தம் சுரந்து, பழைய நிலைக்கு வந்துவிடுவார்கள். ரத்தம் வீணாகிவிட்டதே என்று பயப்பட வேண்டியது இல்லை.

13.மாதவிடாய் நேரங்களில் ஒரு நாளைக்கு எத்தனை நாப்கின்கள் மாற்ற வேண்டும்?

ரத்தப் போக்குக்கு ஏற்ப எண்ணிக்கை மாறுபடும். அதிகமாக ரத்தப் போக்கு இருந்தால் 4, 5 மாற்றலாம். மற்றபடி ஒரு நாளைக்கு 2 நாப்கின்கள் மாற்றினால் போதும்.

14.“சுய இன்பம் அனுபவிப்பது தவறா?”

 “தவறு இல்லை. பசியைப் போல பாலுணர்வுத் தூண்டலும் இயற்கையானதுதான். அதைத் தீர்த்துக்கொள்ள அறிமுகம் இல்லாத பெண்களை நாடிச் செல்லும்போது, பால்வினை நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டு, வாழ்க்கையைத் தொலைப்பதற்குப் பதிலாக, சுய இன்பத்தின் மூலம், அந்த வேட்கையைத் தணித்துக்கொள்வதில் தவறு இல்லை. நாமாக சுய இன்பத்தில் ஈடுபடவில்லை என்றாலும், உறங்கும்போது தானாகவே விந்து வெளியேற்றம் நடந்திடவும் வாய்ப்பு உள்ளது.”

15.“ஒரு சொட்டு விந்து உருவாக நூறு சொட்டு ரத்தம் தேவை என்பது உண்மையா?”

“100 சொட்டு ரத்தம் சேர்ந்து, ஒரு சொட்டு விந்துவாக உருவாகும் என, சில லேகிய விற்பனையாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். அதில் உண்மை இல்லை. நாம் சாப்பிடும் உணவுகள் சிறு மூலக்கூறுகளாக மாறி செரிமானம் ஆகின்றன. இந்த மூலக்கூறுகள் ரத்த நாளங்கள் வழியாக உடலின் பல பாகங்களுக்கும் சென்று, சக்தியை அளிக்கின்றன. சரியாக சக்தி கிடைத்த உறுப்புகள், ஒழுங்காகச் செயல்படும். அப்படி விதைப்பைகளுக்குக் கிடைக்கும் சக்தியானது, அங்குள்ள சுரப்பிகளைச் செயல்படவைக்கிறது. விந்து சுரப்பதும் இப்படித்தான். இதற்கும் ரத்தத்தின் அளவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்காகத் தனியாக உணவு உண்ண வேண்டியதும் இல்லை.”

16.“சில நாட்களில் உறங்கும்போது தானாகவே விந்து வெளியேறுகிறது. விந்து வெளியேற்றத்தால் சோர்ந்துபோய்விடுகிறேன். என்னை அதிலிருந்து மீட்க ஒரு வழி சொல்லுங்கள்?”

“இது ஒரு சாதாரண உடற்கூறு நிகழ்வுதான். ஓர் இளைஞர் உடலுறவின் மூலமாகவோ, சுய இன்பத்தின் மூலமாகவோ விந்துவை வெளியேற்றவில்லை என்றால், உறக்கத்தில் தானாகவே அது வெளியேறத்தான் செய்யும். உதாரணத்துக்கு, ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரம்பிய பிறகும் குழாயை மூடவில்லை எனில், என்ன நடக்கும். தண்ணீர் நிரம்பிக் கீழே வழியும். அதுபோலவே இதுவும். இதில் இருந்து உங்களை மீட்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை.”

17.உடலுறவின்போது கன்னிச்சவ்வு கிழிபடும்போது எவ்வளவு ரத்தம் வெளியேறும்?

வெளியேறும் ரத்தத்தின் அளவு, பெண்ணுக்குப் பெண் வேறுபடும். சவ்வின் தடிமன், சவ்வில் இருக்கும் ரத்த நாளங்களின் எண்ணிக்கை,  சேர்க்கையின்போது ஆணுறுப்பின் மூலம் செயல்படும் மூர்க்கம்… இவற்றைப் பொறுத்தும் ரத்த இழப்பின் அளவு மாறுபடும்.

பொதுவாக, ரத்த இழப்பு சில துளிகள் இருக்கும்.

18.“என் நண்பனின் கைகள் நடுங்குகின்றன. சுய இன்பம் அனுபவிப்பதுதான் இதற்குக் காரணமா?”

“உங்கள் நண்பருக்கு கை நடுக்கம் ஏற்படுவதற்கு கால்சியம் பற்றாக்குறை, மனநோய், நரம்பியல் நோய்கள் போன்றவை காரணமாக இருக்கலாம். நிச்சயமாக சுய இன்பம் அனுபவிப்பது காரணம் அல்ல.”

19.“அதிகப்படியான சுய இன்பம் தீங்கு விளைவிக்குமா?”

“அதிகப்படியான என்பதற்கு என்ன அளவு எனத் தெரியவில்லை. சுய இன்பம் அனுபவிப்பதில் அதிகப்படி என்ன இருக்கிறது? வாரத்தில் ஒரு தடவையா, ஒரு நாளுக்கு ஒருதடவையா? இதை அதிகப்படி என அளப்பதற்கு கருவி ஒன்றும் இல்லை. இதில், விரும்பி இன்பம் அனுபவிப்பது அல்லது பழக்கம் காரணமாக ஈடுபடுவது என இரண்டு வகை உண்டு. எதுவாக இருப்பினும் தீங்கு விளைவது இல்லை.”

20.“பெண்கள் சுய இன்பம் அனுபவிப்பார்களா?”

 “பெண்கள் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள். கிளிடோரியஸைத் தேய்த்துக்கொடுப்பது, சில பெண்கள் தொடைகளுக்கு இடையே துணிகளையோ, தலையணையையோ வைத்து தேய்த்துக்கொள்வர். வெகு சிலர் வைபரேட்டர், டில்டோ போன்ற பிரத்யேக உபகரணங்களைப் பயன்படுத்துகின்றனர்.”

Related Articles

அஜித்திற்குப் ” பில்லா ” வைப... இருவரின் துரத்தலில் இருந்து தப்பித்து வருகிறார் கேகே. அவர் மீது பைக் ஒன்று மோத கேகே அடிபடுகிறார். மலேசிய போலீஸ் அவரை ஆஸ்பத்திரியில்  சேர்க்கிறார்கள். ...
தமிழ் ராக்கர்ஸ்க்கு சவால்விட்ட சன் பிக்ச... தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது. அதை தொடர்ந்து இந்தப் படத்தை இணைய...
#4Yearsofbbvip – ரகுவரன வில்லனா தா... கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாகத் தியேட்டருக்கு சென்று கொண்டாடி தீர்த்த படம் விஐபி. தனுஷை பிடிக்காத ரசிகர்கள...
நாடக கலைஞர்களை இளைஞர்கள் ஆதரிக்க வேண்டும... சமீபத்தில் வெளியான படம் சீதக்காதி. அந்தப் படத்தில் நாடக கலைஞர்களின் வாழ்க்கை முறைகளை மிக அற்புதமாக காட்டி இருந்தது படக்குழு. அந்தப் படத்தில் காட்டப்பட...

Be the first to comment on "சுய இன்பம் அனுபவித்தால் கைகள் நடுங்குமா? – இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 20 கேள்வி பதில்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*