காசா பணமா? வாய்க்கு வந்தத அடிச்சுவிடு! – திருவள்ளுவர் பற்றிய கட்டுக்கதைகள்!

Myths About Thiruvalluvar!

திருவள்ளுவர் பற்றிய கட்டுக்கதைகளை பார்க்கும் முன் வள்ளுவர் என்பதன் அர்த்தம் என்ன? திருக்குறள் கிடைக்கப் பெற்ற இடம் எது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். 

1.வள்ளுவர் என்பதன் அர்த்தம் என்ன?

‘நாள், கிழமை,நட்சத்திரம், கோள், கணிதம்’ ஆகிய ஐந்துறுப்புகளைக் கொண்டதே பஞ்சாங்கம்(பஞ்ச+அங்கம்). இவற்றைக் கணித்து வழிக்காட்டிய பௌத்த அறிஞர்களையே அன்றைய காலத்தில் பிராமணர் என்று வடமொழியும், வள்ளுவர் என்று தென்மொழியும் கூறின.

வள்ளுவர் என்பதற்கு என்ன அர்த்தமாக இருக்க முடியும் என்று நாம் தேடிப்பார்க்கும் முன், வள்ளுவர்களின் ஞானத்தொடர்ச்சியை நாம் அறிதல் வேண்டும். முந்தையக் காலத்தில் எழுத்துமுறையில்லை. குறியீடுகளும், சித்திரங்களுமே சிந்தனையை பதியவைக்க உதவின. கதைகளும் கலைகளும் மனங்களில் சிந்தனையை பதியவைத்தன. கதைகளாகவும் பாடல்களாகவும் அடுத்தடுத்த சந்ததியினருக்கு கொண்டுசெல்லப்பட்டதில் முக்கிய பங்கு, மானுட செவியுணர்வுக்கே உண்டு. புத்தரின் போதனைகள் அவர்காலத்தில் எழுதப்பட்டவையல்ல. அவை, அடுத்தடுத்த சங்க தலைவர்களால்,  உறுப்பினர்களால், அடுத்தடுத்த சந்ததியர்க்கு செவி மூலம் கேட்கப்பட்டு, வாய்மூலம் போதிக்கப்பட்டு வந்தன.( இச்சிரமங்களைப் போக்கவே, பௌத்தம் எளிய எழுத்துவடிவங்களைக் கண்டறிந்தது. தமிழ் எழுத்துகள் அவற்றில் ஒருவகை.) அசோகர்கால எழுத்துகள் வரை புத்தரது போதனைகள் இப்படி செவியின் மூலமே பயணம் கொண்டன. ஞானத்தை அடுத்தக் காலக்கட்டத்திற்கு கொண்டுசென்றதில் செவிக்கு முக்கிய பங்குண்டு என்று அறியமுடிகிறது. இந்த புரிதலோடு வள்ளுவர் என்கிற பெயர்க்காரணத்திற்குள் நுழைவோம்.

‘வள்’ என்பதற்கு மண்டல புருடோத்தமன் நிகண்டு தரும் பொருள், ‘காது.’ அதாவது செவி. கூர்மை என்கிற அர்த்தத்தையும் இதேநிகண்டு கொடுப்பதால்,  ‘செவிக்கூர்மை’ என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். 

செவிக்கூர்மை என்பது கேள்வியைக் குறிக்கிறது. கேள்வி என்பது அறிதலைக் குறிக்கிறது. கேள்வி என்றால் வினா என்பதாக மட்டும் அர்த்தமில்லை. அறிதல் என்பதும் அர்த்தம். ஒன்றை அறிந்ததைப் பற்றிக் கூறும் போது, ‘கேள்விப்பட்டேன்’ என்று கூறுவது இதனடிப்படையில் தான். கேள்விக் குறிக்(?) கூட காதின் வடிவையேக் குறிக்கிறது என்று கூறவர். இப்படி செவிவழியே ஞானத்தைக் கடத்திவருவதையும், பஞ்சாங்க அறிதலையும் கடமையெனக் கொண்டமையால் அவர்கள் வள்ளுவர்கள் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். 

திரிக்குறளில்கூட வள்ளுவர் செவியை செல்வம் என்று மட்டுமல்லாமல் ‘செல்வத்துளெல்லாம் தலை’யாய செல்வம் என்றும் கூறுகிறார். செவியுணவு என்கிற சொல்லின் மூலம், செவிவழியாகப் பெறும் ஞானத்தை இன்றியமையா உணவென்கிறார்.  

மேலும், வள்ளுவர்களின் முக்கியக் குறியீடு சங்கு ஆகும். சங்கு ஒலியின் குறியீடு. ஒலியோ செவியின் உணர்வோடு தொடர்புடையது. இதன் மூலம் ‘வள்ளுவ’ என்பது செவி எனும் ஞான வழியைக் குறிப்பதாகவே வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

2.திருக்குறள் கிடைக்கப் பெற்ற இடம் எது?

திருக்குறள் ஓலைச்சுவடிகள் கிடைக்க பெற்றது சென்னையில் கந்தப்பன் என்ற ஒரு பறையர் வீட்டில். இது திருவள்ளுவர் கைப்பட எழுதியதில்லை. இது ஓலைச்சுவடிகளில் பிரதி எடுக்கப்பட்டு சந்தையில் விற்கப்பட்டு வந்தவை. பின்னாட்களில் இந்த வழக்கு ஒழிந்து, குறள் என்பது வாய்மொழியாகவே உயிர்ப்பில் இருந்தது. இது கல்வியறிவே இல்லாதவர்கள் என மற்றவர்களால் நம்பப்பட்ட தலீத் ஒருவரின் வீட்டிற்கு எப்படி போனது?

 தலீத் என நம்மால் தாழ்த்தப்பட்ட குடியில் அது வாசிக்கப்பட்டிருக்கிறது. என்னவோ நாம் தான் அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கி கல்வி அறிவு புகட்டினோம் என்பதெல்லாம் வெறும் வாய் வித்தை. தமிழ் இனத்தவர் அனைவருமே கல்வி பயின்று வந்தவர்கள் தான். வேதம் தான் கல்வி என பார்பனியம் பரப்பப்பட்ட காலத்திற்கு முன்னேயே எண்ணும் எழுத்தும் பயின்றவர்கள் தான் ஆதிக்குடியினர். வர்ணாசிரமமத்தை திணித்து, தீண்டாமையின் மூலம் நூல்களை தொடுவதை கூட தடுத்து கல்வியை முற்பட்ட சாதியினரின் வட்டத்துக்குள்  அடைத்து, பிறர்க்கு கல்வியை மறுத்த மொள்ளமாரித்தனத்தை விட சிறந்த மொள்ளமாரித்தனம் வேறெதுவும் இல்லை. 

திருக்குறளை ஆவணப்படுத்தியவர் தஞ்சை மா ஞானபிரகாசம், இவர் சைவ மதத்து முற்பட்ட வகுப்பினர். முதன் முதலில் தமிழில் அச்சேறிய நூல் குறள் தான். இந்த முதல் பிரதியில் திருவள்ளுவர் படமெல்லாம் இல்லை. ஆனால் இவரை தொடர்ந்து இதை அச்சிட்டவர்கள் பெரும்பாலும் சைவ மதத்தை சார்ந்தவர்கள் (எ.கா. வ.ஊ.சி)

ஆகையால் அவர்கள் அவருக்கு சமய சாயத்தை குழைத்தே உருவம் செய்தார்கள். அதன் பின் அவருக்கு சமண சாயமும் பூசப்பட்டது.

வானதி சீனிவாசன் சொல்வது போல் திருவள்ளுவரை இப்படி தானே தமிழினம் அறிந்திருந்தது என்பது புரட்டுவாதம், பச்சை புளுகு. முற்பட்ட சாதியினரிடம் இருந்த அதிகாரமே அவருக்கு சமய சாயங்களை பூசிவித்தது. யாரும் திருவள்ளுவரை கண்டவரில்லை. மேலும் இந்த உருவம் ஒன்றரை நூற்றாண்டாக தான் உருவாக்கப்பட்டது. பின்னாளில் அவரின் அத்தனை மதச்சாயங்களையும் கரைத்து உலகின் பொதுவானவராக திராவிட கட்சிகள் உருவகப்படுத்தியது.

திருவள்ளுவரின் மதமோ சாதியோ யாரும் அறியார். 

திமுக எப்படி சொந்தம் கொண்டாடலாம் என கேட்கும் வானதிக்கு புரிய வேண்டும், “வள்ளுவரை இந்துவ சக்திகளும் சொந்தம் கொண்டாட இயலாது” என.

இங்கே ஒரு புரிதல் வேண்டும், இந்துக்களும் இந்துத்துவ வெறியர்களும் ஒன்றல்ல.

அத்தனை பிராமணர்களும் பார்பனிய சித்தாந்திகள் இல்லை (எ.கா. நந்தன் ஸ்ரீதரன்) அத்துனை இஸ்லாமியரும் தீவிரவாதிகள் இல்லை. அத்துனை கிறிஸ்துவர்களும் பாவாடைகள் இல்லை. எல்லா மதத்திலும் வெறிப்பிடித்த முட்டாள்கள் இருப்பார்கள் என்பதை தான் இவை குறிக்கிறது. என்ன செய்ய? எப்போதும் இந்துத்துவ, பிராமணிய வெறியர்கள் எதை யாசிக்க வேண்டுமானாலும், எதை களவாட வேண்டுமானாலும் தமிழர்களிடம் தான் வர வேண்டி இருக்கிறது. வளமையுள்ள இடத்தில் தானே யாசிக்கவும் களவாடவும் இயலும்.

3.திருவள்ளுவரின் பெயரில் கட்டுக்கதைகள் :

திருவள்ளுவர்… மொழி வரலாறு சொல்வதென்ன..?

ஒரே விடை தான்: வள்ளுவர் வரலாறு கிட்டவில்லை! குறளின் மேல் எந்தப் புராணக் கதையும் சொல்ல முடியாது. ஆனால் முருகன்/மாம்பழம் என்று பொய்க்கதை கேட்டுக்கேட்டே பழகிவிட்டதால், எல்லாத்துக்குமே ஒரு ‘கதை’ எதிர்பார்க்கிறது நம் மனது. 

ஆனால் வள்ளுவர் மேலும் கதை எதிர்பார்க்கலாமா? மதம் பரப்பப் பொய்க் கதைகள் சொன்னார்கள்; புரிகிறது! அது மதத்துக்குச் சரிவரும்; ஆனால் தமிழுக்கு? வரலாற்றுக்குச் சரி வருமா? 

வள்ளுவர் மேலும் வாசுகி என்ற கற்பனை நாயகி இணைத்து, வைதீகப் பொய்யேற்றி, அவர் சாப்பிடும் போது ஊசியும் நீர்க் கிண்ணமும் வைப்பாராம் வாசுகி. கீழே சிந்திய சோற்றுப் பருக்கை கூட வீணாக்காமல், ஊசியால் குத்திக் கழுவித் தின்பாராம் ஐயன்.

“அடியே வாசுகீ” என்று அவரின் குரல்கேட்டு அந்தம்மாள்  ஓடிவர, கிணற்றடியில் நீர் இறைத்த வாளி, புவியீர்ப்பு விசை மறுத்து அப்படியே நிற்கும். புவியீற்பை வென்ற கற்பு என்றெல்லாம் கதை புனைந்து விட்டார்கள், மதம் பிடித்த பின்னாள் புலவர்கள். 

வள்ளுவத்தை அரங்கேற்ற உதவியதே சிவபெருமான் தான் எனவும்,  மதுரை பொற்றாமரைக் குளத்தில் திருக்குறளை வீசி எறிய, சிவன் அருளால் குறள் மூழ்காமல் கரையேறியது என்பதெல்லாம் சைவப் புலவர்களின் தமிழ்ச் சிதைப்புகள்.  

Related Articles

அரசியல்வாதியின் மகன்களும் தமிழ்சினிமாவும... ஒரு சில மனிதர்களை தமிழ் சினிமா தொடர்ந்து மோசமானவர்களாகவே சித்தரித்து வருகிறது. அந்த சித்தரிப்பில் கொஞ்சம் உண்மையும் உள்ளது என்பது மறுக்க முடியாது. முத...
கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் ... பஞ்ச தந்திரம்இயக்கம்: கே. எஸ். ரவிக்குமார்கதை: கமல்வசனம்: கிரேசி மோகன்இசை: தேவாகதை: பிளேபாயாக சுற்றித்திரிந்த கமல் திருமணமான...
இந்தியாவில் பதுங்குகுழிகள் அமைக்க பாகிஸ்... குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைகளில் நிரந்தர பதுங்குகுழிகள் அமைக்க பாகிஸ்தானுக்கு சீனா உதவி செய்துவருகிறது. இந்தியாவை எரிச்சலூட்டச் செய்யும் இந்நிகழ்வ...
தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினி சொ... கடந்த இரண்டு நாட்களாகவே ஊடகங்களில் ரஜினி பற்றிய செய்திதான் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு அவர் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். தூ...

Be the first to comment on "காசா பணமா? வாய்க்கு வந்தத அடிச்சுவிடு! – திருவள்ளுவர் பற்றிய கட்டுக்கதைகள்!"

Leave a comment

Your email address will not be published.


*