நாம் தமிழர் கட்சியினர் தனித்து நின்றாலும் தனித்துவத்தோடு நிற்கிறார்கள்! – லவ்குரு ராஜவேல் நாகராஜன் பார்வையில் டிவி விவாதங்கள்!

Naam Tamilar stand alone but stands apart! - TV debates on Loveguru Rajavel Nagarajan's view!

லவ்குரு ராஜவேல் நாகராஜன் என்ற பேமஸ் ரேடியோ ஜாக்கி ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சீமான் பேசியதை பலரும் விமர்சித்து வருகின்றனர். நியூஸ் சேனல்கள் இது குறித்து நிறைய விவாதங்களை நடத்தி வருகின்றன. இந்த விவாத நிகழ்ச்சிகள் யாருக்கு சாதகமாக இருக்கிறது யாருக்கு எதிராக இருக்கிறது என்பதை தனிப்பட்ட கருத்தாக விளக்கி உள்ளார். அவை என்னவென்று பார்ப்போம். 

நேற்றைய (அக்டோபர் 15, 2019)  நியூஸ் 18 காலத்தின் குரல் விவாதத்தில் கலந்து கொண்டதன் மூலம் நிறைய தம்பிகள் கிடைத்திருக்கிறார்கள். இதை நான் சற்று வெளிப்படையாகவே பேசலாம் என தோன்றுகிறது. மதிப்பிற்குரிய குணசேகரன் நெறியாளராக இருந்த நடத்திய நேற்று முன் தின காலத்தின் குரலாகட்டும், மதிப்பிற்குரிய சகோதரர் பாலவேல் நெறியாளராக இருந்து நேற்று நடத்திய காலத்தின் குரலாகட்டும், இரண்டிலுமே சில பொதுவான விஷயங்களை நான் கண்டேன். 

நாம் தமிழரின் பிரதிநிதியை பேசவே விடாமல் கேள்விகள் மட்டுமே கேட்பது. அவர்கள் பதில் சொல்ல வந்தால் மட்டும் எடக்கு மடக்காக குறுக்கிடுவது என்பது தான் அது. 

இது வரை முப்பத்தி ஐந்து விவாதங்களில் குறைந்தபட்சம் தந்தி தொலைக்காட்சி தவிர்த்து எல்லா தொலைக்காட்சிகளிலும் பங்கெடுத்திருக்கிறேன். சரியாக நேரம் பகிர்ந்து கொடுக்கப்படவில்லை என்பதை தாண்டி எனக்கு எந்த மனவருத்தமும் இதுவரை இருந்ததில்லை. ஆனால் முதல் முறையாக தெரிந்து செய்கிறார்களா, இல்லை தெரியாமல் செய்கிறார்களா என தெரியவில்லை.. நாம் தமிழரையும், அண்ணன் சீமானையும், தமிழ்த்தேசியத்தையும் கேள்விக்குள்ளாக்கி அதன் மூலம் யாரையோ திருப்திபடுத்த முயல்கிறார்களோ எனக்கு தோன்றுகிறது. 

இரண்டு நாள் விவாதங்களில் இடம்பெற்ற சில உதாரணங்கள் மட்டும் சொல்கிறேன். 

1.வழக்குரைஞர் ராஜசேகர், அண்ணன் ராஜீவ்காந்தியை ஒருமையில் பேசத்தொடங்கியதும் நெறியாளர் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் சிறிது நேரம் கழித்தே உள்ளே வருகிறார் சமாதானம் செய்கிறார். முறைப்படி பார்த்தால் ராஜசேகரை ஒரு நெறியாளராக இன்னும் கடுமையாக கண்டித்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை.

2.கராத்தே தியாகராஜன் பேசும் போதும் மிக கொச்சையாக சீமான் அவர்களை குறிப்பிடுகிறார். இது நேரலை. ஒரு முறை சொன்ன வார்த்தைகளை திரும்பிபெற முடியாது எனும் போது இன்னும் அதிகமான கண்டிப்பை கராத்தே பேச்சுக்கு பதிவு செய்திருக்க வேண்டும்.

3.எம்எல்ஏவும் கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, சீமான் பேசுவதில் உடன் படுகிறேன், உடன் நிற்கறேன் என சொல்லவருகிறார். அவரை ஆதிரிக்கிறீர்களா, தெளிவுபடுத்துங்கள், அப்படி இப்படி என படுத்தி ஆம் ஆதரவளிக்கிறேன் என சொல்ல வந்தவரை ஏதோ அப்படி சொன்னால் மக்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற உணர்வில் கொண்டு நிறுத்தி, தனியரசு உடன் நிற்கிறேன் எனும் அளவில் முடித்துக்கொள்கிறார்.

4.பாஜகவை சேர்ந்த பிரமுகர் பேசும்போது, ஏன் திமுகைவையோ அதிமுகவையோ சேர்ந்த பிரதிநிதிகள் இந்த விவாதத்தில் இல்லை. வந்திருக்க வேண்டிய முக்கியமானவர்கள் அவர்கள் என முதல்முறையாக ஒரு பாஜக நிர்வாகி சென்சிபிளாக பேசுவதை பார்த்தேன். அவர் கேட்ட கேள்விக்கு இரண்டு் நாள் விவாதத்திலும் பதிலில்லை. நேற்றைய விவாதமும் திமுக, அதிமுக, ஏன் மதிமுக பிரதிநிதி கூட இல்லாமல் நடக்கிறது. ஏன் இவர்கள் இருக்க வேண்டும். காரணம் இருக்கிறது. ராஜீவ் கொலைப்பழியை சுமந்த கட்சி திமுக. எழுவர் விடுதலையை நிகழ்த்தாமல் இருப்பது அதிமுக-பாஜக ஆளும்கட்சிகள். மதிமுகவுக்கு புலிகள் வரலாறு அத்துப்படி. இவர்களையெல்லாம் விட்டுவிட்டு என்ன விவாதிக்கப்போகிறீர்கள்?

5.சீமான் எப்படி நாங்கள் தமிழர்கள் தான் கொன்றோம் என சொல்லலாம். சீமான் என்ன எட்டு கோடித்தமிழர்களின் பிரதிநிதியா என்ற கேள்வியை இருநாள் விவாதத்திலும் நெறியாளர்கள் கேட்டார்கள். தமிழகம் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறது என வெவ்வேறு தருணங்களில் எம்ஜிஆரும், கலைஞரும் பிரகடனம் செய்திருக்கிறார்கள். அப்போது ஒட்டு மொத்த தமிழகமும் உடன்நின்றதா என்ன. மாற்றுக்கருத்துடையோரும் இருந்திருப்பார்கள் இல்லையா. என் தமிழினம்தான் கீழடியில் இருந்து ரோமாபுரி வரை வணிகம் மேற்கொண்டது என்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள், அதில் வணிகம் மேற்கொள்ளாத தமிழ்க்குடியும் அடக்கும். YES WE  CAN என ஒபாமா முழங்கினாரே. அது அவருக்கு ஓட்டுப் போடாத அமெரிக்கனுக்கும் சேர்த்துத்தான். இதை இப்படித்தான் பார்க்க வேண்டும். உணர்வெழுச்சியில் என் இனம் எப்படி சொல்லலாம் என்றால் பஞ்சாப் சென்று அவர்களின் இன உணர்வை காணுங்கள். பியாந்த்சிங்கும் சதவந்த்சிங்கும் இந்திராவை கொன்றதாக அவர்கள் ஒதுங்கிக்கொள்ளவில்லை, சீக்கியர்கள் நாங்கள்தான் கொன்றோம் என இன்றுவரை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதுசரி தமிழ்நாட்டை திராவிட நாடு என யாராரோ சொந்தம் கொண்டாடும்போது, இப்படி எப்படி கூறலாம் என கேள்வி எழுப்பாத நெறியாளர்கள் இதை மட்டும் எப்படி கேட்பார்கள்.

6.அருட்தந்தை ஜெகத்காஸ்பர் பேசும் போது தனக்கும் சீமானுக்குமான தனிப்பட்ட பகைமை, ஒவ்வாமையெல்லாம் அடுக்குகிறார். விவாதம் அதுவல்ல, தனிப்பட்ட விஷயங்களை அலைபேசிக்கொள்ளுங்கள், எங்கள் விவாதத்தில் தலைப்பில் பேசுங்கள் என நெறிப்படுத்தவில்லை. நெறியாளரின் அந்த வேலையையும் கடைசியில் கல்யாணசுந்தரமே செய்தார்.

7.இன்னும் நிறைய சொல்லலாம். இறுதியாக ஒன்று. விவாதம் ஆரம்பிக்கும்போது நெறியாளர் பாலவேல் சொன்னார், எல்லா கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள், நாம் தமிழர் தனித்துவிடப்பட்டிருக்கிறது என. அண்ணன் கல்யாணசுந்தரம் யார் யார் கன்டனம் தெரிவித்திருக்கிறார்கள், எந்த கட்சி அறிக்கை விட்டிருக்கிறது என கேட்டதற்கு பதில் கடைசிவரை வரவில்லை. ஏனென்றால் காங்கிரஸ் மற்றும் பாஜகவே அதிகாரபூர்வ அறிக்கைகளோ பேட்டிகளையோ கொடுத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. இப்போது அண்ணன் திருமா சீமானுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்திருக்கிறார். அவ்வளவே. ஆனால் ஏன் எல்லா கட்சிகளும் எதிர்த்து கருத்து சொல்லியிருப்பதாக விவாதத்தில் நெறியாளர் குறிப்பிட முயன்றார் என்பது விளங்கவில்லை.

தமிழக அரசியல் சூழலில் நாம் தமிழர் தனித்து விடப்பட்டிருக்கிறதா என திரும்ப திரும்ப இரண்டு நாட்களாக பல நெறியாளர்கள் கேட்கிறார்கள். உங்களுக்கெல்லாம் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் அல்லாத நான் சொல்ல விரும்புவது… 

அவர்கள் கட்சி தொடங்கியது முதலே தனித்தும், தனித்துவத்தோடும்தான் நிற்கிறார்கள். தனியாக நிற்பதுதான் அவர்களின் தனித்துவமே.

Related Articles

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் பெற்ற... கல்வியில் பின் தங்கிய நாடுகள் எப்பாடுபட்டாவது தங்கள் நாட்டுக் குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டு வந்து சேர்க்க பல திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளன. தமிழகத்...
மதுக்கடைகளின் எண்ணிக்கை, வணிக நேரத்தை கு... ஆந்திரத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அம்மாநிலத்தில் 880 மதுக்கடைகள், அதாவது 20% மதுக்கட...
பெர்னாட்ஷா பொன்மொழிகள் ஒரு பார்வை!... தேவையான சந்தர்ப்பங்களை தேடிப் பெறுபவர்கள் தான் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். சந்தர்ப்பம் தானாக வரக்கூடியது அல்ல. மனிதன் தான் அதனை தானாக உண்டுபண...
பிக்பாஸ்ஸில் அரசியல் பிரபலங்கள் பங்கேற்ற... " பிக்பாஸ்ஸில் அரசியல் பிரபலங்கள் " பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் இல்லாமல் சில அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டால் எப்படி இருக்கும்?ஒரு சின்...

Be the first to comment on "நாம் தமிழர் கட்சியினர் தனித்து நின்றாலும் தனித்துவத்தோடு நிற்கிறார்கள்! – லவ்குரு ராஜவேல் நாகராஜன் பார்வையில் டிவி விவாதங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*