சும்மா கிழி பாடலை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்!

Netizens criticising the song Chumma Kizhi

நவம்பர் 27 மாலை 5 மணிக்கு அனிருத் இசையில் விவேக்கின் பாடல் வரிகளில் வெளியானது தர்பார் பட சும்மா கிழி பாடல். இந்தப் பாடல் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவை என்னவென்று பார்ப்போம். 

 1. தண்ணி குடமெடுத்து தங்கம் நீ நடந்து வந்தா.. பாட்டை ‘சும்மா கிழி’ச்சிட்டாரு அனிருத்.
 2. தேவா இசையில், எஸ்பிபி குரலில் ரஜினிக்கு மற்றுமொரு cliché அறிமுகப் பாடல் வந்திருக்கிறதுபோல!
 3. “வந்தேன்டா பால்காரன்” #ப்ரீலூட் பீட்டோட “ரா ரா ராமையா” ப்ரீ லூட் பீட்ட மிக்ஸில அரைச்சு அப்படியே தலைவர் வாய்ஸ்ல “சும்மா கிழி” ன்னு துவங்குனதும் எதோ புதுசா ட்ரை பண்றான்னு பாத்தா “தண்ணிக்குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா” ட்யூனையும் ஸ்ரீஹரி பாடுன “கட்டோட கட்டுங்கட்டி”ன்னு ஐயப்பன் பாட்டையும் கிரைன்டர் போட்டு செதச்சி தாக்கி இருககான்..

தேவா கிட்டயே திருடி பாட்டு போட்டிருக்கன்னா நீ எவ்வளவு பெரிய தில்லாலங்கடியா இருப்ப… அடேய் #அனிருத் து #தர்பார் #1st_single 

 1. Music adhigam aagi , singing kammi ayduchu… Harris jayaraj kitta kudutha rendayum pirichi kuduthuduvaru…
 2. பீட்டு  நல்லாருக்குய்யா.. . சனியன் இந்த பாட்டுவரிதான் நல்லால்ல… கடைசி வார்த்தை மட்டும் தக்காளி ரைமிங்கா போட்டுட்டு இஷ்டமயித்துக்கு எதையாவது… அதுலயும் ரஜினின்னு பேர் வர்றதுக்காக ஒன்னு எழுதியிருக்கான் பாரு இந்த விவேக்கூ…
 3. “தர்பார் லிரிக்ஸ் யாரு?”

“விவேக்”

“கலா மாஸ்டர்னு நினைச்சேன்.”

 1. சும்மா கிழி – சில குறிப்புகள்

1) வந்தேன்டா பால்காரன் + அதான்டா இதான்டா.

2) வரிகளில் விவேக் தொட்டிருப்பது புதிய நீச்சம்.

3) எஸ்பிபி மட்டும் ஆறுதல். (அதுவும் ஆறுதல் தான்.)

4) மாசு மரணமே பெட்டர் என எண்ணம் தந்தது.

 1. இசை இரைச்சலுக்கு இடையில எஸ்.பி.பி குரலை கண்டுபிடிக்குறதே பெரும்பாடா இருக்கு! இதுல உப்புக்கல்லுக்கு பெறாத விவேக்கோட வரிகள் வேற!.. ச்சும்மா கிழிச்சுட்டாலும்!.. 
 2. கடைசில பாத்தா, சுட்டது சபரிமலை ஐயப்பன் பாட்டாம் … அடேய் அனிபாய்…
 3. “நாயர்…. என்ன இது, பாட்டோட ஆரம்பத்துல ‘வந்தேன்டா பால்காரன்’ பீட் வருதே”

” ‘நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன்’ பாட்டு பீட்டும் வருது, மேடம்”

“அதுக்கடுத்து வர்ற பீட் ‘நீ எந்த ஊரு’ பாட்டுல வர்ற ‘வாரே வாரே வாராரு’ பீட் மாதிரியே இருக்கு, மேடம்” 

” பாட்டோட ட்யூனே ‘கட்டோட கட்டுமுடி’ ஐயப்ப சாமி பாட்டை உல்டா பண்ணி போட்ட மாதிரியும் இருக்கு, மேடம்”

“அந்த ‘கட்டுமுடி’ பாட்டே, பழைய இளையராஜா பாட்டு ‘தண்ணி குடம்’ பாட்டை உல்டா பண்ணி போட்டதுதான், மேடம்”

“அது எப்படி, கில்பர்ட்…. ஒரே ட்யூனுக்குள்ள இத்தனை பாட்டை கொண்டுவர முடியும்? how is it possible..”

 1. ரஜினிக்கு மாஸ் சாங் போட்டது தேவாவா இல்ல ரஹ்மானா இல்ல சந்திரபோஸா என்று போட்டி வரும்போதெல்லாம் ராஜா சாரின் ராமன் ஆண்டாலும் பாடல் நினைவுக்கு வரும் அந்த பாடலின் இறுதியில் வரும் வரிகளான “நான்தான்டா என் மனசுக்கு ராஜா வாங்குங்கடா வெள்ளியில் கூஜா நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் நீ கேக்குற வரத்தை கேட்டுக்கடா” இந்த வரிகளை  இந்த சிங்கிள் ட்ராக் மட்டுமல்ல எந்த சிங்கிள் ட்ராக்கும் கிழிக்க முடியாது. இளையராஜா கங்கையமரனை கேட்காத கூட்டம் வேண்டுமானால் அனிருத் விவேக்கை சிலாகிக்கலாம்.

Related Articles

மூன்று மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தக... கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா(Cambridge Analytica) என்ற நிறுவனம் 87 மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களைத் திருடி தங்களது வாடிக்கையாளர்களோடு பகிர்ந்துக...
உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா!... நம்ப முடியாத செய்தியாகத் தோன்றலாம். ஆனால் உண்மை. இந்தியா ஏழை நாடு, வளர்ந்து வரும் நாடு என்ற செய்திகள் மட்டுமே கேட்ட நமக்கு இது கொஞ்சம் புதுசு தான். ...
ஐபிஎல் போட்டியை புறக்கணித்தது போல் சினிம... கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்றும் இதற்கு மேல் இந்த வழக்கை தூக்கிக் கொண்டு இன்னும் பதினைந்து வருடங்களுக்க...
டெங்குவைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! ... மழைக்காலம் தொடங்கிவிட்டது. டெங்கு நோய் வழக்கம் போல மெல்ல மெல்ல பரவத் தொடங்கிவிட்டது. பெரிய இழப்புகளை சந்திக்கும் முன்னே விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய...

Be the first to comment on "சும்மா கிழி பாடலை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*