பிக்பாஸ் தர்ஷனுக்காக வருத்தப்பட்ட நெட்டிசன்கள்!

netizens-felt-sorry-for-bigg-boss-tharshan

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் சில தினங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள் தர்சன் வெளியேற்றத்தை குறித்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். அவை என்னவென்று பார்ப்போம். 

1.இலங்கையிலிருந்து இருவர் இறுதிச் சுற்றுக்கு வரக்கூடாது எனில், லாஸ்லியாதான் வெளியே வந்திருக்க வேண்டும்.

2.தர்ஷன் அவ்வளவு மோசமில்லை.

3.ஏதோ நடந்திருக்கிறது இந்தத் தேர்தலிலும்.

4.தர்ஷனுக்குப் போட்ட ஓட்டுகள் ஷெரினுக்கோ, லியாவிற்கோ போயிருக்க வேண்டும்.

5.It is a pre determined show as like as super singer.

6.கமல் எப்பவுமே தர்சன் ஆதரவாக இருக்கிறார் என்று குற்றம் சொன்னானுங்க இன்னைக்கு தர்சன் எவிக்ட்  ஆனதுக்கும் கமல் சாரை குற்றம் சொல்றானுங்க. இதுவரை கமல்ஹாசன் மீது வைத்த சிறு சிறு குற்றச் சாட்டுகள் எல்லாமே சிறுபிள்ளைத்தனமானது என்பது புரிய அதை வரிசை படுத்தி பாருங்கள்.

7.மக்கள் மனதில் வெற்றியாளர் யார்னு உங்களுக்கு தெரியும். விஜய் டிவி யாரையும் தேர்ந்தெடுத்துட்டு போகுது தர்சன் ரியல் வின்னர்.

8.ஜனநாயகத்தை விட பணநாயகமே வெல்லும் என்பதை நீங்களும் உணரவைத்து விட்டீர்கள். அரசியலில் கடைசிவரை நீங்கள் தர்சன் தான் ஆண்டவரே!

9.ஒவியாவை அடுத்து இந்த அளவிற்கு ரசிகர்கள், அவர்களின் கண்ணீர் , கைதட்டல், அன்பும், ஆதரவும் கிடைத்தது தர்சன் மற்றும் சேரன் சாருக்கு மட்டுமே.

10.எனக்கு தர்ஷனை ரொம்ம்ம்ம்ப புடிக்கும்.. ஃபைனல்ஸ்ல டைட்டில் வின்னர் அவன்தான்னு உறுதியா நம்பிட்டு இருந்தேன். அதனால ஒவ்வொரு முறை ஓட்டுப்போடும் போதும் தர்ஷன்தான் கன்ஃபார்ம் வின்னராச்சேன்னு ஒரு தடவை கூட தர்ஷனுக்கு ஓட்டுப்போட்டது இல்லை. எப்படியும் தர்ஷன் எலிமினேட் ஆக மாட்டான் அப்படிங்கிற அபரிமிதமான நம்பிக்கையில என் ஓட்டை ஷெரினுக்கு, முகினுக்கு ஏன் சில சமயம் கவினுக்கு கூட போட்டிருக்கிறேன். ஒவ்வொருமுறை ஓட்டுப்போடும் போதும் தர்ஷனை கணக்கில் எடுத்ததே இல்லை. விஜய்டிவி தவறு செய்ததா இல்லையா, ஏமாற்றியதா என்ற கேள்வியை விட, நான் தவறு செய்திருக்கிறேன் என்பது உண்மை. ஒரு நல்ல கண்டஸ்டண்டை தோற்கடிக்க நானும் ஒரு மறைமுக காரணமாக இருந்திருக்கிறேன்…

11.ஆயிரம்தான் சொல்லுங்க. தர்ஷன் போறப்ப கலங்காம இருக்க முடியுமா என்ன? Big boss tittle not deserved for him என்ன ஒரு ஆளுமை. கவினுக்கு, முகினுக்கு இருந்த ஒரே அறை உணர்வுகள் தர்ஷனுக்கும் இருந்தது. மீரா வந்து வெளிப்படையாக பேசின பொழுது மறுத்ததாகட்டும்..ஷெரினிடம் நடந்துக்கொண்டதாகட்டும்..அனைவரிடம் நட்பு கொண்டாடுவதாகட்டும் மிக் சரியான் ஒரு நபர் தர்ஷன். உண்மைய சொன்னா பிக் பாஸ் ஷோ தர்ஷனை இழந்து விட்டது. அவருக்கான உயரங்கள் வேறு  இருக்கலாம். வாழ்த்துகள் தர்ஷன். தன்னையும் தாழ்த்திக்கொள்ளாமல், யாரையும் குறைத்து விடாமல் இந்த வயதில் இருப்பதெல்லாம் அத்தனை எளிதில்லை. மக்கள் மனதில் என்றும் இருப்பீங்க. நல்லா முன்னேற முடியும். இந்த தோல்விதான் உங்களுக்கு அன்பு வெற்றி.

12.தர்ஷன் என்கின்ற யாழ்ப்பாணத்து இளைஞர் பிக்பொஸ்  டைட்டிலினை வெற்றிகொள்ளும் வாய்ப்பை இழந்த போதிலும் மக்களின் மனங்களை வென்று திரும்பியுள்ளார்.

13.விஜய் ரீவியை மட்டும் பழி சொல்லும் எங்களுக்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதன் தயாரிப்பாளர்களான ‘Endemol Shine Group’ பற்றிய நினைப்பே இல்லை. மும்பையை தளமாகக் கொண்டு இந்தியாவில் இயங்கிவரும் இந்த ‘Endemol Shine Group‘ன் செயற்பாடுகளை தெரிந்து கொண்டால் தலையே சுற்றும். இதுவொரு சர்வதேச தொலைகாட்சி தயாரிப்பு நிறுவனம். ‘Joop Van Den Ende’ என்பவரும் ‘John De Mol’ என்பவரும் இணைந்து தமது கடைசிப் பெயர்களைக் கொண்டு உருவாக்கியதே ‘Endemol’. 1994இல் இது உருவாக்கம் பெற்றுள்ளது.

Big Brother, Deal or No Deal, The Money Drop, Fear Factor, Wipe Out போன்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடாத்தி உலக அளவில் வெற்றியின் உச்சத்தில் இருந்த ‘Endemol’ இனை தலா 50% விலை கொடுத்து வாங்கிய உலகின் மிகப்பெரும் தொலைகாட்சி நிறுவனங்களான Appolo மற்றும் 21st Century Fox இருவரும் இணைந்து ‘Endemol‘ இனை ‘Endemol Shine Group’ என அறிமுகம் செய்திருந்தனர். உலக அளவில் இன்று ஏறத்தாழ 10,000 ஊழியர்களுடன் கொடிகட்டிப் பறந்துவரும் ‘Endemol Shine Group‘க்கு என்ன காரணத்துக்காக பல மனோதத்துவ நிபுணர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று ஆராய முற்படும்போது பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரியவந்தன. 

உலக சமாச்சாரம் நமக்கு இப்போது தேவையில்லை. பிக்பொஸ் உடன் நின்றுக்கொள்வோம். இவர்கள் பிக்பொஸ் வீட்டுக்குள் இருந்த 16 பேரை மட்டும் அல்ல…. பார்க்கின்ற அத்தனை கோடி மக்களையும் மனோதத்துவ ரீதியில் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்ற ஒரு உளவியல் அமைப்பு போலவே எண்ண வைக்கிறது. ஆரம்பத்தில் இந்த வீட்டுக்குள் உள்வாங்கப்பட்ட நபர்கள் அனைவரையும் அவர்களின் மனோநிலைகளை நன்கு கற்றுத் தெளிந்த பின்னரே நிகழ்ச்சிக்குள் இணைத்துள்ளனர் என்றே தோன்றுகின்றது. நாம் நினைத்தது போல போட்டியாளர்கள் எழுந்தமானமாகவோ அல்லது நூறு வீதம் சிபாரிசின் அடிப்படையிலோ தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. யாருக்கு யார் தேவை என்று பார்த்துப் பார்த்து எடுக்கப்பட்டவர்கள் இவர்கள். இது முழுக்க முழுக்க உணர்வுகளுடன் விளையாடிப் பார்க்கும் விளையாட்டு. மனிதர்களுடன் அல்ல. 

அவ்வப்போது விஜய் ரீவி சில சிபாரிசுகளை பரிந்துரைத்தாலும் இறுதி முடிவுகளை எடுக்கும் உரிமை ‘Endemol Shine Group’பிடம் தான் இருக்கின்றது. வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொருவரும் தன்னிச்சையாக செயற்படுவதுபோல தோன்றினாலும் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் உடலில் சுரக்கக்கூடிய ஹோமோனின் அளவுகள் மாற்றப்படும் அளவுக்கு அவர்களுக்குரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. டாஸ்க் போர்த்திய ரிமோட் சிகிச்சைகள் மூலம் அவர்களிடையே நட்பு, காதல், கோபம், பழி உணர்ச்சிகள் தூண்டப்பட்டே வந்துள்ளன. தேவையான பொழுதுகளில் நட்புகள் பிரிக்கப்பட்டு சின்னாபின்னப் படுத்தப்பட்டன. சில நட்புகள் காதலாக மலரச் செய்யப்பட்டன. சில மனக்கசப்புகள் கடும் பகைமைகளாக மாற்றப்பட்டன. சில பகைமைகள் தேவையில்லை என்று நினைக்கும்போது டாஸ்க் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதும், சில பகைமைகளைத் தூண்டிவிட டாஸ்கின் நேரம் அதிகரிக்கப்படுவதும், அடிபிடிக்கு இழுத்துவிட நினைக்கும் நபர்களை எதிரெதிர் அணிகளில் நிறுத்தி வைப்பதும் கனகச்சிதமாக திட்டமிடப்பட்ட செயற்பாடுகளே. ஆக மொத்தத்தில் இது இன்னுமொரு ‘The Hunger Games’ திரைப்படத்தின் நிஜ உருவாக்கம். 

ஒரு பார்வையாளராக நான் யாரை விரும்ப வேண்டும், யாரை வெறுக்க வேண்டும் என்பதுகூட அவர்களின் திட்டமிடப்பட்ட செயற்பாடு. இந்த நோக்கங்கள் விஜய் ரீவிக்கு சம்பந்தம் இல்லாதவை. இவ்வளவையும் செய்ய முடிந்த ‘Endemol Shine Group’ க்கு மக்களின் வாக்கு எண்ணிக்கையில் கண்கட்டி வித்தை பண்ண எவ்வளவு நேரம் ஆகிவிடப் போகிறது? 

அவர்களைப் பொறுத்தவரை TRP ரேட் உயர வேண்டும். இதற்கு பன்னாட்டு (பல்லின) மக்களும் பார்வையிட வைக்க வேண்டும். எனவே இறுதிவரை இந்திய, இலங்கை, மலேஷிய போட்டியாளர்கள் தேவை. அதன் பகடைக் காய்கள்தான் தர்ஷன் (இலங்கை), லொஸ்லியா (இலங்கை), முகேன் (மலேஷியா), ஷெரின் (கர்நாடகா), சாண்டி (சென்னை).

சிலசமயங்களில் அவர்களையும் மீறி சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன. அதில் ஒன்றுதான் கவினின் வெளியேற்றம். 5 லட்சம் பணத்துடன் எவருமே வெளியேறப் போவதில்லை என்று நம்பிய அவர்களின் திட்டத்தில் கவினின் வெளிநடப்பு பாரிய பின்னடைவு.

அவர்களது திட்டப்படி தர்ஷன் வெற்றி பெறக் கூடாது. ஆனால் இறுதிவரை இருக்க வேண்டும். Golden Ticket to Finale மூலம் தர்ஷனை கொண்டுவர எடுத்த முயற்சி இவர்களுக்கு இன்னுமொரு எதிர்பாராத தோல்வி. தர்ஷனுடன் சாண்டியை இறுதி இருவராக வைத்திருக்கும் எண்ணம் இருந்திருக்கலாம். ஆனால் Final க்கு முகேனுடன் சாண்டி வரப் போவது திடீர் முடிவு. 

எது எப்படியோ என் கணிப்பு சரி எனில், சாண்டி தான் Title Winnerராக இருக்கப் போகிறார். முகேன் துரத்தி அடிக்கப்பட போகிறார். 

Related Articles

இருபத்து ஐந்து நிமிடங்களில் மும்பையிலிரு... 2024 வாக்கில் மும்பையிலிருந்து புனேவுக்கு செல்லும் பயண நேரம் குறைந்தபட்சம் 14 நிமிடங்களில் இருந்து அதிகபட்சம் 25  நிமிடங்களுக்குள் இருக்கும் என்று தெர...
பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை ஒரு பார்... பாக்கிய லட்சுமி தனது தோழர் தோழிகளுடன் கடற்கரையில் கூத்தடித்துவிட்டு கார் ஓட்டிச் செல்கிறார். எதிர்பாராதவிதமாக கார் ஆக்சிடன்ட் ஆகிறது. விபத்தின் காரணமா...
பாலகுமாரன் எழுதிய பாட்ஷா வசனங்கள்!... " மாட்ட விலை பேசி விக்குற மாதிரி மாப்பிளைய விலை பேசி விக்குறதுக்கு பேருதான் வரதட்சணை! " " கடன் வாங்கறதும் தப்பு... கடன் கொடுக்கறதும் தப்பு......
டெஸ்லா நிறுவனத்தை முந்தத் திட்டமிட்டிருக... தெற்கு ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப் பெரிய லித்தியம் அயன் பேட்டரியை (lithium ion battery) உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த...

Be the first to comment on "பிக்பாஸ் தர்ஷனுக்காக வருத்தப்பட்ட நெட்டிசன்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*