அசுரன், பரியேறும் பெருமாள் படங்களுக்கு எல்லாம் முன்னோடி “படைவீரன்”!

Padaiveeran Movie has portrayed social message well before Asuran and Pariyerum Perumal

இயக்குனர் மணிரத்னம் அவர்களின் உதவியாளராக இருந்தவர் இயக்குனர் தனா. அவருடைய முதல் படைப்பான படைவீரன் படம் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. ஆனால் சாதிவெறியர்களை பற்றிய உண்மையை உரக்க சொன்ன படம் படைவீரன் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அந்தப் படத்தில் பாடகர் விஜய் யேசுதாஸ், பாரதிராஜா, கவிதாபாரதி ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது அந்தப் படத்தை நினைவுகூர்ந்து படைவீரன் படம் அசுரன், பரியேறும் பெருமாள் போன்ற படங்களுக்கு எல்லாம் முன்னோடி என்று ரமேஷ் ராம் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்ப்போம். 

இந்த படைவீரன் ,பரியேறும் பெருமாள்,அசுரன் படத்திற்கு எல்லாம் முன்னோடி .

பெரிதாக இந்த படம் கவனிக்க படவில்லை ஆனால் அசுரன் போன்று இந்த படமும் தலித் அரசியலை மிக நுட்பமாக கையாண்டு இருக்கும்.

பொருளாதார ரீதியாக இருவரும் சமமாக சண்டை செய்யும் போது சமாளிக்க முடியாமல் ஆதிக்க சாதியினர் எப்படி அவர்கள் பொருளாதார வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள் என்பதை தெளிவாக சொன்ன படம்.

முன்பு அடங்கி இருந்த மக்கள் இப்படி பொருளாதார வளர்ச்சி அடைந்து உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள் என்ற வயிற்று எரிச்சல் கொண்டு அவர்கள் வீடு மற்றும் உடமைகளை அழிக்க ஜாதி கலவரத்தை உருவாக்கி அதில் ஆதாயம் தேடும் கதாபாத்திரம் ஏற்று கவிதா பாரதி அவர்கள் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தில்  போலீஸ் அதிகாரி ஒருவர் ஜாதி கலவரத்தை அடக்க வருவார் அவர் நிறத்தை கொண்டு என்ன ஜாதி என்று கண்டு பிடிக்கும் வெறி பிடித்த மனிதர்களை மிக இயல்பாக இயக்குனர் படத்தில் உலவ விட்டுள்ளார்.

போலீஸ் அதிகாரி ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருவனாக அவனுக்கு கீழ் பணியில் இருக்கும் உயர் ஜாதியில் இருக்கும் ஒருவன் ஜாதி வெறி பிடித்த தன் சொந்த மக்களை அடக்க வருவது climax .

இந்த கலவரத்தில் தன் உறவினர்கள் மற்றும் ஊர் நண்பர்களை அடிக்க வேண்டிய சூழல் ,அங்கு அவன் ஜாதியை தூக்கி ஓரமாக வைத்து விட்டு தன் கடமையை செய்யும் போது தன் உறவினர்கள் செய்யும் துரோகம் கொடுமையின் உச்சம்.

இயக்குனர் பாரதிராஜா நடிப்பு மிக சிறப்பாக இருக்கும் அவர் பேசும் வசனங்கள் மிக அற்புதம்.

சில பேர் சொல்கிறார்கள் எதற்கு அசுரன் போன்ற படங்கள் எடுக்க வேண்டும் மறுபடியும் எதற்கு ஜாதி பற்றிய படம் என்று, நான் கேட்கிறேன் பின் எதற்காக வீரபாண்டிய கட்டபொம்மன், சைரா ரெட்டி,கப்பல் ஓட்டிய தமிழன் படங்கள் எல்லாம் இதற்கு முன் எப்படி பிரிட்டிஷ் அரசு இருந்தது எப்படி வந்தது அதை எதிர்த்து போர் புரிந்த வரலாறு இப்போது இருக்கும் தலைமுறைக்கு தெரிய வேண்டும் என்று தானே .

அதுபோல தான் இதுவும் அவர்கள் பட்ட கஷ்டங்களை திரையில் பார்க்க உங்களால் பொறுக்க முடியவில்லை என்றால் நிஜத்தில் எப்படி இருந்து இருக்கும் எதற்கு எடுத்தாலும் ஜாதி வெறி முன்பு போல் இல்லை என்று கூறி கொண்டே நம் வீட்டில் இருக்கும் பிள்ளைகளை அந்த ஜாதி பெயரை சொல்லி திட்டுவது இல்லை என்று மறுக்க முடியுமா முதல் அதை மாற்ற முயற்சி செய்து விட்டு ஜாதி வெறி இல்லை என்று சொல்லுங்கள்.

நேற்று கூட ஜார்ஜ் ரெட்டி என்ற புரட்சிகரமாக இருந்த படத்தின் trailer பார்த்தேன் புரட்சி செய்யும் கதாநாயகன் கூட தன் ஜாதியை தூக்கி கொண்டு தான் வருகிறார்.

காதல் செய்ய கூட தேவதாஸ் கதைகளுக்கு கூட அர்ஜுன் ரெட்டி என்ற ஜாதி தேவை படுகிறது .

இது எதுவும் யாரையும் காயபடுத்தாத வரை ஒன்றும் இல்லை ஆனால் காயபட்டவனை இந்த படத்தை எடு அந்த படத்தை எடு என்று சொல்வது மிக பெரிய தீண்டாமை .

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய வேதம் புதிது படத்திற்குப் பிறகு சாதி தீண்டாமையை சொன்ன படங்களில் படைவீரன் படத்திற்கு முக்கியமான இடம் உண்டு. ஒருமுறையாவது பார்த்துவிடுங்கள்… நல்ல படம்! 

Related Articles

சாலையில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது கா... ஹைதராபாத் குஷைகுடா பகுதியில் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மீது கார் ஏறியதால் அவர் உயிர் இழந்துள்ளார். மது அருந்திவிட்ட...
விரைவில் வருகிறது மளிகைக்கடை அண்ணாச்சிகள... தொட்டதெற்கெல்லாம் ரோபோக்கள் வந்துவிட்டன. பாட்டுப்பாட ரோபோ, பரிமாற ரோபோ, தூங்கவைக்க ரோபோ என்று ரோபோக்கள் பலவிதம். பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காட...
உங்களுக்கு குறும்படங்கள் பார்ப்பதில் ஆர்... கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் சில குறும்படங்கள் பற்றிய மீம்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்தக் குறும்படங்கள் எங்கே உள்ளது என்று தேடிய போது அவை ...
தடைகளை தாண்டி சாதனை படைத்த இளம் இயக்குனர... இயக்குநர் ராம்குமார் (முண்டாசுப் பட்டி, ராட்சசன்) சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை. அப்பா தேவராஜ், டிரைவர். சமீபத்தில் தவறிவிட்டார். அம்மா, மல்லிக...

Be the first to comment on "அசுரன், பரியேறும் பெருமாள் படங்களுக்கு எல்லாம் முன்னோடி “படைவீரன்”!"

Leave a comment

Your email address will not be published.


*