டெங்குவைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! விழிப்புணர்வு அவசியம் மக்களே!

People must be aware of Dengue fever!

மழைக்காலம் தொடங்கிவிட்டது. டெங்கு நோய் வழக்கம் போல மெல்ல மெல்ல பரவத் தொடங்கிவிட்டது. பெரிய இழப்புகளை சந்திக்கும் முன்னே விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது நம் கடமை. அவ்வகையில் வாட்சப்பில் வலம் வரும் கண்ட கண்ட செய்திகளை நம்ப வேண்டாம். இங்கே இணைக்கப்பட்டுள்ள பதிவு சிவகங்கையை சேர்ந்த பரூக் அப்துல்லா என்ற மருத்துவரின் பதிவு. இந்தப் பதிவில் உள்ள தகவல்களை தாராளமாக நம்பலாம். 

  1. டெங்கிவின் போது நமது உடலில் நடப்பது என்ன ?? 

100 க்கு 95 பேருக்கு வரும் டெங்கி காய்ச்சல் மற்ற வைரஸ் காய்ச்சல்களைப் போல் நம்மை ஒன்றும் செய்யாமல் கடந்து செல்லும் . டெங்கி வைரஸ் நான்கு வகைகளாக இருப்பதால் முதல் முறை ஏற்கனவே டெங்கி வந்தவருக்கு மீண்டும் 3 முறை டெங்கி காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு முதன்முதலாய் டெங்கி வருவதை Primary infection என்போம்

இரண்டாவதாக டெங்கி விஜயம் செய்தால் அதை Secondary infection என்போம். இவையிரண்டில் Secondary infection தான் கவனிக்காமல் விட்டால் அதிகம் ஆபத்தில் முடிகிறது. டெங்கிவின் பிரச்சனைக்குரிய வடிவம் டெங்கி ரத்தக்கசிவு காய்ச்சல் (DENGUE HEMORRHAGIC FEVER ) இதில் நடக்கும் நான்கு விசயங்கள் பின்வருமாறு 

VASCULOPATHY – ரத்த நாளங்களின் சுவர்களின் ஸ்திரத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துவது

THROMBOCYTOPENIA – ரத்த தட்டணுக்களை அழித்து பாதிப்பை ஏற்படுத்துவது 

PLATELET DYSFUNCTION – ரத்த தட்டணுக்களை அதன் வேலையை செய்யவிடாமல் தடுப்பது 

COAGULOPATHY – ரத்தம் உறைவதை தடுத்து ரத்தப்போக்கை உண்டுசெய்வது

இவையனைத்தும் ஏன் நடக்கிறது ?? 

உள்ளே வந்த டெங்கி வைரஸிற்கும் அதன் விளைவாக உடலில் தோன்றும் எதிர்ப்பு சக்திக்கும் இடையில் நடக்கும் யுத்தத்தின் விளைவாய் நடக்கும் விசயங்கள் தான் இவையனைத்தும். முதல் மூன்று நாள் கடும் வெப்பம் இருப்பதால் , நமது உடலில் உள்ள நீர்சத்து வற்றிக்கொண்டே வரும் 

இது DEHYDRATION ஆகும். இதை சரிசெய்ய அதிகமாக நீராகாரங்களை பருக வேண்டும். 

  1. ORS திரவம் ( ஒரு லிட்டர் நீரில் ஒரு பெரிய பாக்கெட்டை கலந்து பருக வேண்டும் .வாந்தி இல்லாதவர்களுக்கு இந்த திரவத்தை பருக்ககொடுக்கலாம்) 
  2. வாந்தி வயிற்றுப்போக்கு இருப்பவர்களுக்கு ரத்த நாளம் வழி IV திரவங்களை மருத்துவர் அறிவுரையின் பேரில் போட்டுக்கொள்ளலாம். இதற்கு மருத்துவரின் அறிவுரை அவசியம். 

பக்கத்தில் மெடிக்கல் சாப் வைத்திருப்பவர் / ரிடையர்டு நர்ஸ் போன்றவர்களிடம் கட்டாயம்  ஐவி திரவங்கள் ஏற்றிக்கொள்ள வேண்டாம் அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சே. தேவைக்கு மேல் திரவம் ஏற்றுவதும் ஆபத்தில் முடியும். 

அடுத்த மூன்று நாட்களான போர் காலத்தில் ரத்த நாளங்களில் இருக்கும் கொஞ்சநஞ்ச நீர்சத்தும் ( PLASMA LEAKAGE) நாளங்களின் சுவர் பழுதடைந்து இருப்பதால் வெளியேறி வயிற்றுப்பகுதியில் (ASCITES) / நுரையீரலின் வெளிப்பகுதியில் அந்த நீர் கோர்க்கும் . (PLEURAL EFFUSION) ரத்த நாளங்களில் போதுமான அளவு நீர் சத்து குறைந்தால் , நமது முக்கிய உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது குறையும் இதனால் அந்த உறுப்புகள் செயலிழக்கும் வாய்ப்பு அதிகம் ( MULTI ORGAN DYSFUNCTION SYNDROME) எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் தட்டணுக்களும் அழிக்கப்படுவதால் ரத்தம் உறைவது பாதிக்கப்படுகிறது . 

இதனால் ரத்தக்கசிவு ஏற்படுகிறது 

இது இருவகைபடும் . 

1.வெளியே தெரியும் ரத்தக்கசிவு ( Visible external bleeding) 

பற்களின் ஈறுகளில் இருந்தும் , தோல்களில் அடிப்பகுதியில் ரத்தக்கசிவு ( petechiae)

2.வெளியே தெரியாத ரத்தகசிவு ( Occult internal bleeding)

வயிற்றில் உள்ளே நடக்கும் ரத்தகசிவு இதை மலம் கருப்பாக செல்வதை கொண்டு அறியலாம். இந்த ரத்தக்கசிவின் விளைவாக நமது நாளங்களில் உள்ள ரத்தம் இன்னும் அளவு குறைகிறது ஆகவே நமது முக்கிய உறுப்புகளான கல்லீரல், மூளை , கிட்னிகள் போன்றவற்றிற்கு ரத்த ஓட்டம் குறைகிறது. 

இதை CIRCULATORY SHOCK என்கிறோம் . ரத்த ஓட்டத்தில் ஏற்படும் இந்த பாதிப்பு உயிரை பறித்து விடுகிறது. ஆக, இதன் மூலம் நாம் அறிவது 

  1. டெங்கிவின் முதல் குறி நமது நீர் சத்து தான் . 

போதுமான அளவு நீர், கஞ்சி , பால், இளநீர் , மோர் என்று நீர் சத்தை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் . ஓ. ஆர். எஸ் பொடியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இதன் மூலம் நமது ரத்த நாளங்களில் போதுமான அளவு நீர்சத்தை நம்மால் பேண முடியும். 

  1. நமது ரத்த நாளங்களில் போதுமான அளவு நீர்சத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . வாய்வழி விவரங்கள் எடுக்க இயலா சூழ்நிலையில்,  நாளங்கள் வழி திரவங்கள் ஏற்றப்படும். மொத்தத்தில் நமது ரத்த நாளங்களில் போதுமான அளவு நீர்சத்து பேண வேண்டும் என்பதே நமது குறிக்கோள். 
  2. ரத்த கசிவு இருப்பது உறுதி செய்யப்பட்டால் தேவையான அளவு ரத்தம் ஏற்றப்படும் . 
  3. தட்டணுக்கள் அபாய அளவை விட குறைந்தால் தட்டணுக்கள் ஏற்றப்படும். ரத்தக்கசிவு இல்லாத சூழ்நிலையில் தட்டணுக்கள் குறைவதால் எந்த பயமும் இல்லை. 
  4. தட்டணுக்களின் அளவுகளுக்கும் நமது ரத்த நாளங்களின் உள்ளே இருக்கும் நீர்சத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

(7000 வரை தட்டணுக்கள் குறைந்த நோயாளிக்கு எந்த ரத்தகசிவும் ஏற்படாமல் சரியாகி வந்திருப்பதையும்

40,000 தட்டணுக்கள் இருந்த ஒரு நோயாளி , ஷாக் சென்று இறந்ததையும் இங்கு பதிவு செய்கிறேன் )

  1. நமது முதல் குறி , நீர்சத்தின் மீது மட்டுமே இருக்க வேண்டும்.

Related Articles

உலகிலயே மிகப்பெரிய செல்போன் ஃபேக்ட்ரியை ... உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் உலகிலயே மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்க இருக்கிறது சாம்சங் கம்பெனி.சாம்சங் நிறுவனத்தி...
காகிதம் சேர்ப்பவரின் மகன் மருத்துவ படிப்... மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ளது விஜய்கஞ்ச் மண்டி. இப்பகுதியில் உள்ள குப்பைகளைச் சேகரித்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர் ரஞ்சித் மற்ற...
நியூட்ரினோ : புதிரா? அறிவியலா?... பேய் படங்கள் நிறையப் பார்த்தவர்களுக்கு இது எளிதில் புரியும். மர கதவோ அல்லது வீட்டுச் சுவர்களோ எதுவாக இருந்தாலும் அந்தப் பேய் தடையே இன்றி, மிக எளிதில் ...
கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை: இறக்கு... சென்னை கோயம்பேடு சந்தையிலும், தமிழகத்திலுள்ள அனைத்து சில்லறை விலைக் கடைகளிலும்  பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயத்தின் விலைகள் வரலாறு காணாத அளவுக...

Be the first to comment on "டெங்குவைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! விழிப்புணர்வு அவசியம் மக்களே!"

Leave a comment

Your email address will not be published.


*