சுர்ஜித் இறப்பில் உள்ள கேள்விகள்? பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதில் சொல்லுமா அரசு?

Questions on Surjit's death? Will government respond to public doubts?

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியை சார்ந்த சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டதில் பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளதாக பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுடைய சந்தேகங்களும் கேள்விகளும் என்னென்ன என்று பார்ப்போம்.

 1. கடைசி நாள் குறிப்பிட்ட அரசு அதிகாரிகளை தவிர குழந்தை விழுந்த கிணற்றை சுற்றி போடப்பட்டிருந்த கூடாரத்திற்கு அருகே வேறு யாரையும் அனுமதிக்காதது ஏன்?
 2. குழந்தை இறந்துவிட்டது என தெரிந்த அடுத்த 3 மணி நேரத்தில் உடல் எப்படி அழுகியது? இல்லை குழந்தை எத்தனை நாட்களுக்கு முன் இறந்தது?
 3. குழந்தை இறந்தது என தெரிந்ததும், குழந்தை விழுந்த கிணற்றின் துளை வழியாகவே எப்படி (எந்த கருவியைக் கொண்டு) அழுகிய உடலை 2 மணி நேரத்தில் எடுக்க முடிந்தது.
 4. வெளியே எடுத்தது குழந்தையா? இல்லை நீங்கள் ஜோடித்த வேறு ஏதாவதா?
 5. குழந்தையின் அழுகிய சடலம் என நீங்கள் வெளியே கொண்டு வந்ததை ஏன் யாராலும் பார்க்க முடியவில்லை?
 6. ஒரு பக்கம் பிரேத பரிசோதனை நடக்கும் பொழுதே மறுப்பக்கம் விறுவிறுப்பாக குழந்தை விழந்த கிணற்றை மூடுவதற்கான காரணம் என்ன?
 7. பிரேத பரிசோதனைக்கு பிறகு, பெற்ற தாய்க்கூட பார்க்க முடியாத படி உடலை மூடி கொண்டு வந்ததற்கான காரணம் என்ன?
 8. வீட்டிற்கு கொண்டு வந்த குழந்தையின் மூடப்பட்ட சடலத்தை 2 மணி நேரம் கூட அஞ்சலிக்கு வைக்காமல், அதிகாரிகள் அருகிலே இருந்து புதைத்ததிற்கான காரணங்கள் என்ன?இவை அனைத்தும் எத்தனை நாளாக தீட்டப்பட்ட திட்டம்?
 9. குழந்தை வில்சனின் உடல் மீட்கப்பட்டதா?குழந்தை சுஜித் விலசன் உடலின் ஒரு பகுதி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. 24 மணி நேர தொலைக்காட்சி ஒளிபரப்பில் உடல் மீட்பு படலம் மட்டும் மிஸ்ஸிங். பாலிமர், சத்யம் தொலைக்காட்சிகள் மட்டுமே   உடல் மீட்பு பற்றி செய்தி வெளியிட்டுள்ளன. ஆழ்துளை இயந்திரங்கள் உருவாக்கிய குழிகள் மூலம் மீட்கப்படவில்லை. நேற்று இரவு 10 மணிக்கு இன்னும் 12 மணி நேரம் ஆகும் என்று சொன்னவர்கள் தீடீரென எப்படி உடலை மீட்டார்கள்? யார் மீட்டார்கள்? இந்த கேள்விகளை கேட்பது தேசத்துரோகமா?
 10. இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட குழந்தை சுர்ஜித் விஷயத்தில் தனிப்பட்ட முறையில் எனக்கு பல சந்தேகங்கள் உண்டு. இரவு 11.30 வரை தொலைக்காட்சி பார்த்தேன். அப்போது 55 அடிவரை தோண்டியிருப்பதாகவும், இன்னும் 35 அடி தோண்ட #12_மணி_நேரம் வரை ஆகலாம் என்பதும் செய்தியாக இருந்தது.  [அந்த 55 அடியை தோண்ட 4 நாள் ஆனது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.]அதைவிட, 100 அடி தோண்டுவதை காட்டிலும் #சவாலான_காரியம் எந்த உபகரணமும் இல்லாமல் தீயணைப்பு வீரர்கள் பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை நெருங்குவது என்பதே முக்கிய செய்தியாக இருந்தது.திடீரென்று இரவு 11.30 மணிக்கு எல்லா சேனல்களிலும் #லைவ்_செய்வது #நிறுத்தப்படுகிறது. 2.30 மணிக்கு துர்நாற்றம் வருவதாக வந்த செய்தி, விடியற்காலை 4.30க்கு குழந்தை உயிரற்ற உடலாக மீட்கப்பட்டது என ஒரு ப்ளாஸ்ட்டிக் பை காண்பிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.இப்ப எனக்கு எழும் சந்தேகங்கள்
  1. திடீரென லைவ் செய்யப்பட்டது நிறுத்தப்பட்டது ஏன்??
  2. நான்கு நட்களாக 60 அடியே தோண்ட முடிந்த நிலையில் , அடுத்த 3 மணி நேரத்தில் முழுவதும் தோண்டியது எப்படி??
  3. பக்கவாட்டில் துளையிடுவது சவாலான காரியம் அவ்ளோ லேசுல முடியாது என்று அறிவித்த நிலையில், அதுவும்  உடனே சாத்தியமானது எப்படி??
  4. 100 அடிக்கு கீழ் தீயணைப்பு  வீரர்களை இறக்கி அவர்களுக்கு எதாவது ஆபத்துன்னா அரசாங்கத்துக்கு இன்னும் கெட்ட பெயர் உண்டாயிடும் என்பதாலும்.., குழந்தையை வெளியில் எடுக்க முடியவில்லை என்றால் மாநில அரசுக்கு மேலும் அவப்பெயர் வந்திடும் என்பதாலும்.., அரசாங்கத்தின் கையாலாகாததனத்தை மறைக்க வெறும் ப்ளாஸ்ட்டிக் பையை வைத்து ட்ராமா நடத்தப்பட்டதா..??
  5. அப்படியே நீங்க சொல்வது அடுத்த 4 மணி நேரத்தில் எல்லாம் செய்து விட்டோம் என்பது உண்மை என்றால்…, அதற்கு முந்திய நான்கு நாட்கள் இந்த நான்கு மணி நேர சாதனையை ஏன் செய்யவில்லை..?? யாருக்காக என்ன நோக்கத்துக்காக அது தாமதப்படுத்தப்பட்டது..???
 11. வெளியே எடுத்த சிறுவனின் உடலத்தை யாராவது பார்த்தார்களா?  இல்லை…அவசர அவசரமாக கொங்கிரீட் கொண்டு அந்தக் கிணறு ஏன் மூடப்பட்டது?அவசர அவசரமாக விடிய முன்பாகவே சிறுவன் விழுந்த கிணறு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் ஏன் கொண்டுவரப்பட்டது?பெரிய இயந்திரம் கொண்டு பக்கவாட்டில் துளை விடப்படும் வேலையை இடையில் ஏன் நிறுத்தினார்கள் அவ்வாறு நிறுத்திய பின் எந்த வழி மூலமாக சிறுவனின் உடலை எடுத்தார்கள்

  எவ்வாறு அழகிய உடலாக இருந்தாலும் சிறுவனின் உடலை வெளியே எடுக்கும் எந்தவொரு படங்களையோ காணொளிகளை காண முடியவில்லை மர்மமாக உள்ளது

  விடியும் முன்பாகவே அனைத்து நாடகங்களையும் முடித்துவிட்டு ஒரு மரண சடங்கை நிறைவேற்றி உள்ளார்கள்

  வடிவா யோசிங்க சில விடயங்கள் மர்மமாக உள்ளது எந்த வழியாக சிறுவனை வெளியே எடுத்தார்கள்.

  பெரிய இயந்திரம் கொண்டு துளையிடப்பட்ட வேலை இடைநிறுத்தப்பட்டது அவ்வாறு இருக்கையில் எந்த வழியாக உடலை எடுத்தார்கள் .

  இந்தியர்களின் அனைத்து வீரதீரச் செயல்களையும் படம் பிடித்து காட்டும் இந்திய ஊடகங்கள் தங்கள் அரசாங்கத்தின் மீட்புப் பணியை அதாவது உடலை மீட்கும் சாகசத்தை ஏன் படம் போட்டு காட்டவில்லை.

  ஏன் அவசர அவசரமாக கிணற்றை கொங்கிரீட் கொண்டு மூடினார்கள்.

  தங்களால் ஒரு விடையம் முடியாமல் போனதே ஒப்புக்கொள்ள முடியாது சர்வதேச பரப்பில் இந்தியாவின் கையாலாகாத்தனம் வெளிப்பட்டு விடக்கூடாது அவமானம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அனைத்தையும் மூடி மறைத்தார்கள்.

  இறுதியில் எந்த தடயமும் இருக்கக் கூடாது என்பதற்காக கிணற்றை கான்கிரீட் கொண்டு மூடி விட்டார்கள் எனது ஊகத்தின் படி சிறுவன் உடல் கிணற்றிலே இருக்கவேண்டும். அனைத்தும் மர்மமாகவே இருக்கிறது.

இப்படி சுர்ஜித் மரணத்தில் விடை தெரியாத பல கேள்விகள் உள்ளன. இந்தக் கேள்விகளுக்கு அரசு தரப்பில் இருந்து பதில் கிடைக்குமா அல்லது ஜெயலலிதா விஷியத்தில் செய்த ஏமாற்று வேலையை போல ஏமாற்றப் போகிறார்களா? என்ன செய்யப் போகிறது அரசு???

Related Articles

இவருடைய கமெண்டுகளை கேட்க ஒரு கூட்டமே இரு... இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் நலன் குமாராசாமி, இயக்குனர் பாலாஜி மோகன், இயக்குனர் நித்திலன், இயக்குனர் ஸ்ரீகணேஷ் என்று தமிழ் சினிமாவுக்கு ...
வாடகைத் தாய் பிசினஸ் பற்றி தெரிந்துகொள்வ... உலகமயமாதல் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் சொற்களில் ஒன்றுதான், ‘அவுட்சோர்ஸிங்.தமது நாட்டில் ஒரு வேலையைச் செய்வதற்கு அதிகமாக சம்பளம் தரவேண்டி இருப்பத...
இயக்குனர் ராமின் காதல் கதை! – பெண்... கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இயக்கியது வெறும் நான்கு படங்களே என்றாலும் நான்கு படங்களும் தமிழ் சி...
அனிதா நினைவு நூலகம்: அடிக்கல் நாட்டினார்... ஏழை எளிய மாணவர்களை படிக்க வைப்பது, அவர்களின் இருதய சிகிச்சைக்கு தேவையான நிதி திரட்டி தருவது போன்ற அறச்செயல்கள் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர் ராகவா ல...

Be the first to comment on "சுர்ஜித் இறப்பில் உள்ள கேள்விகள்? பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதில் சொல்லுமா அரசு?"

Leave a comment

Your email address will not be published.


*