சீமான் ஒரு சைக்கோ! – சீமானை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

Seeman is a Psycho! - Netizens criticise Seeman

அரசியல்வாதிகள் அனைவரும் காலத்திற்கு தகுந்தாற்போல் மாறி மாறி பேசும் பண்புடையவர்கள். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் அவ்வாறே செயல்பட்டு வருகிறார். அவருடைய பல மேடைப் பேச்சுக்கள் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இப்போது வேண்டுமென்றே ராஜீவ் காந்தியை நாங்க தான் கொன்றோம் என்று பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார் சீமான். இதனால் சமூக வலைதளம் முழுக்க சீமானை சைக்கோ எனக் கூறி கலாய்த்து வருகின்றனர். 

1.இந்தாளு என்னா நினைப்புல இதெல்லாம் பேசுறாப்லன்னு தெரியல….. சுத்த ஒண்ணா நம்பர் கிறுக்கன். ‘ராஜீவ் காந்தியை நாங்கதான் கொன்னோம், நாங்க கொலை பண்ணல’ன்னு பிரபாகரனே எந்த இடத்துலயும் நேரடியா ஒத்துக்கிட்டதோ மறுத்ததோ இல்ல….. ‘அமைதிப்படை’ங்கிற பேருல இலங்கையில ராஜீவ் காந்தி பண்ண அட்டூழியங்கள் எல்லாம் மன்னிக்கவே முடியாதவை…. ஆனா, தீவிர விடுதலைப்புலி ஆதரவாளர்களே ராஜீவ் காந்தி கொலையை தப்புன்னு தான் சொல்வாங்க. வன்முறை எதுக்குமே தீர்வு இல்ல, அந்த கொலை விடுதலை புலிகள் கையை மீறி நடந்த விஷயம், அவசரத்துல எடுத்த தப்பான முடிவு….. அதை நியாயப்படுத்தவே முடியாது, இந்தாளு என்னென்னா அந்த கொலையை பெருமையா பேசிட்டு இருக்கான் …….. ‘பிரபாகரனின் பிள்ளை’ன்னு தன்னைத்தானே சொல்லிக்குற இந்தாளு என்னைக்குமே அவருக்கு பெருமை சேர்த்தது இல்ல…அவர் மானத்தை தான் வாங்குறார்.

2.ராசீவ் படுகொலை பற்றி சீமான் பேசியது அபத்தத்தின் உச்சம்…

ராசீவ் என்ற ஒற்றை அற்ப உயிருக்கு நிகராக இங்கே பலபத்தாண்டுகளாக ராசீவ் படுகொலைக்கு முன்பு நடத்தப்பட்ட ஐபிகேஎப் படுகொலைகளும், கடைசியாக நடந்த இனப்படுகொலைகளும், இப்போது வரையில் பறிபோகும் நிலங்கள் வரையில் தராசை ராசீவ் பக்கம் எடை ஏற்றும் அரசியல் மொள்ளமாரிகளை நாம் எதிர்த்து வருகிறோம்…

ஆனால் ஒருபோதும் புலிகளின் தலைமை அப்படுகொலையை செய்ததாக பதியவில்லை…ராசீவின் கொலையை பற்றி முன்வைக்கப்படும் கருத்துகள் பல…

1) பிரபாகரன் உத்தரவின் பேரிலேயே நடத்தப்பட்டது

2) காங்கிரஸ் கட்சியே நடத்தியது

3) CIA நடத்தியது

4) தனு உள்ளிட்டோர் இயக்கத்தின் தலைமைகளுக்கு தெரியாமல. வெளிவந்து ஐபிகேஎப் படுகொலைகளுக்கு பழிதீர்த்தது

5) இவற்றில் உள்ள 2,3,4 இல் சுப்ரமணியசாமி முதல் பலரை பலபேர் வெவ்வேறு முறைகளில் இணைத்து திட்டம் தீட்டிக்கொன்றதாக விவாதிப்பார்கள்…

ஆனால் இங்கே பலபேர் ராசீவ் நினைவுதாள் வரும்போது ஒருமுறை சுப்பிரமணியசாமி கொன்றார் என்று நீண்ட கட்டுரைகளை எழுதிவிட்டு, அடுத்த பதிவுக்கு தனுவுக்கு இறந்ததற்காக அல்ல குண்டை வெடிக்க வைத்ததற்காக வீரவணக்கம் போடுவார்கள்…முதலில் இதை நானும் பலரை நம்பி பகிர்ந்தேன்…பிறகு தான் இரண்டையும் இணைத்தால் சுப்பிரமணியசாமிக்கு கையால் வேலையாக தனு வெடித்து சிதறினார் என சொல்லவருகிறார்களா…என்று குழப்பம் ஏற்பட்டது…

ஆனால் ராசீவ் படுகொலையில் சரியான பார்வையில் கேள்வியெழுப்பியது பழனிபாபா மட்டுமே…குண்டு கட்டப்பட்டிருந்த்தாக சொல்லப்பட்ட தனுவின் உடல் சிதரவில்லை ஆனால் ராசீவ் உடல் சுக்குசுக்காக போனது எப்படி என்ற கேள்வி…

எனில் இங்கே ஒன்று ஆரம்பத்திலேயே புலிகள் தலைமையில் நடந்த படுகொலையாக சித்தரித்த இந்தியமும் அதன் கூட்டுகளும் அல்லது தனு குழுவினர் தனியாக நடத்தியதற்கு ஆதரவாக வீரவணக்கம் செலுத்துகிறோம், புலிகளுக்கு எந்நிலையிலும் நாங்கள் தான் துணை என்று நின்ற கோஷ்டிகளும் எப்படியோ ஒருவகையில் இரண்டு வெவ்வேறு நிலைப்பாடுகளில் நின்றாலும், ஒற்றை இலக்காக புலிகளை சுற்றியே கொலையை கட்டமைத்ததில், பிறரை தப்பவைப்பதில் முக்கியமாக தமிழர்கள் இதைச்சுற்றியே சிந்திக்கவைத்ததில் வெற்றிபெற்றனர், தமிழர் நில அரசியலை ஈழத்தமிழர்களிடம் இருந்து அத்துவிட்டனர் என்றே கருத இடமளிக்கிறது…காரணம் மக்கள் மந்தைகள் என்றுமே தலைவர்களை விட ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பெரிதாக நினைக்காது…ராஜீவின் போபால் விசவாயு, இந்திராகாந்தி இறப்பு முன்னிட்ட சீக்கியபடுகொலையும், மோடியின் குசராத்தும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு…

எனில் இன்றைய நிலையில் ராசீவ் படுகொலையை பற்றி பேசவேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருக்க காந்தியை கொன்றதில் ஆர்எஸ்எஸ் மகிழ்வது சரியென்றால், ராசீவை கொன்றது புலிகள் தான் என்று கூப்பாடு போடுவோம் என பேசுவது எவ்வளவு முட்டாள்தனம்…

அதிகாரத்தில் இருப்பவன் பேசுவதும், இனிவரும் காலங்களில் புலிகளின் அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு தடையாக உள்ள இந்திய அரசின் தடைக்கும், ஏழுவர் விடுதலைக்கும் 

பல போராட்டங்களை பலரும் முன்னெடுத்து இருக்கும் நிலையில் இருக்கும் தமிழர்களின் நிலையும் ஒன்றா…முட்டுக்கட்டையாக இந்தியம் பலவாய்ப்புகள் வைத்திருக்க மேலும் மேலும் காரணிகளை அள்ளிவீசும் விதத்தில் பேசியிருக்கிறார்…

புலிகளின் நியாயம் பேசனும்னா, பழனிபாபா கேட்டக் கேள்வியின் வழியில் பயணிக்க வேண்டும்…இப்படி காந்தி ஆர்எஸ்எஸ்னு சொன்னா நாங்க இப்படி சொல்லுவோம்னு உதார்விடுவது எவ்வகையிலும் ஈழத்தமிழர்களுக்கு நலம் தரப்போவதில்லை…இது தனிமனித கெத்துக்கோ, கட்சியை பற்றியோ உள்ள விடயமில்லை…

3.சீமான்.

சீமான் நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கியது முதலே இவர் ஒரு ப்ராடு என்பதை நான் அறிவேன்.  சீமானின் அரசியல் துவக்கமே, சீமானும் பிரபாகரனும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை சென்னை நகர் முழுக்க சுவரொட்டிகளாக ஒட்டுவதிலிருந்து தொடங்கியது.  (பிரபாகரன் இறந்த பிறகு) அமைதி காலத்தில், புலிகள் அமைப்பினர் தமிழகத்திலிருந்து பலரை அழைத்து சந்தித்தனர். அப்போதெல்லாம் சீமான் ஒரு சாதாரண இயக்குநர். பிரபல இயக்குநர் கூட கிடையாது.    பிரபாகரனை சந்தித்து வந்தவர்கள், சீமான் – பிரபாகரன் சந்திப்பு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறினர்.  

2008 ஜூலையில் நான் சிறையில் இருந்தேன். அப்போது எனக்கு அடுத்த ப்ளாக்கில், “தம்பி அண்ணா” என்று புலிகளின் உளவுப் பிரிவில் இருந்த ஒருவரை ராமேஸ்வரத்தில் இருந்து கைது செய்து வைத்திருந்தனர்.  தம்பி அண்ணாவோடு பேசிக் கொண்டிருக்கையில், அவர், தம்பி சீமானை என்னை வந்து சந்திக்க சொல்லுங்கள் என்றார். அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்ற வாயிலில், ஜனவரி 2009ல் வழக்கறிஞர்கள், ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஒரு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கையில் அதில் கலந்து கொள்ள சீமான் வந்தார்.  அப்போதுதான் அவர் பொது வாழ்வில் இறங்குகிறார். வழக்கறிஞர் புகழேந்தியிடம் தம்பி அண்ணா பேசியது குறித்து கூறியதும், “நீயே போயி பேசுய்யா” என்றார். சீமானிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு விபரத்தை கூறினேன். தம்பி அண்ணா விடுதலையாகி, அகதிகள் முகாமுக்கு சென்ற பிறகும், கடைசி வரை சீமான் அவரை சந்திக்கவேயில்லை.  சீமானுக்கு புலிகள் இயக்கம் பற்றிய எந்த புரிதலும், இல்லை என்பதை அவரோடு உரையாடியபோது புரிந்து கொண்டேன். 

10 ஜூலை  2010ல், சீமானை கருணாநிதி அரசு கைது செய்தது.  பின்னர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது.  அப்போது சீமான் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலை 10, 2010 முதல், டிசம்பர் 10, 2010 வரை சீமான் வேலூர் சிறையில் இருந்தார்.  அந்த ஆறு மாதங்களும், சீமான், ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட முருகன், ரவி, ராபர்ட் பயஸ், போன்றோரோடு கழித்தார். முருகன் புலிகள் இயக்கத்தில் மூத்த பொறுப்பில் இருந்தவர்.   அவர்களோடு உரையாடித்தான் சீமான் புலிகள் இயக்கம், அதன் செயல்பாடுகள் பற்றியெல்லாம் அறிந்து கொண்டார்.  

அதற்கு பின்னர்தான், ஆமைக் கறி கதை, ஏகே 76, அரிசிக் கப்பல் கதையெல்லாம்.   சீமான் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன் என்ற எனது எண்ணம், மீண்டும் மீண்டும் உறுதியானது.  

ஆறு மாதங்களை அவர்களோடு கழித்த சீமானுக்கு 28 ஆண்டுகளாக சிறையில் இருப்பதன் வலியும் வேதனையும் புரிந்திருக்க வேண்டும்.  

வெறும் கைதட்டல்களுக்காக அவர்களின் விடுதலையே நாசமானால் கூட பரவாயில்லை என்று பேசும் சீமான் மனிதனாக மதிக்கப்படக் கூட தகுதியானவர் இல்லை. 

இன்றும் சீமானை நம்பி அவர் பேசுவதை ரசித்து அவர் பின் செல்லுபவர்கள், அறிவு வளர்ச்சிக் குறைந்தவர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

சீமானை இப்படி கலாய்த்து பக்கம் பக்கமாக எழுதி வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் தான் பேசியதை வாபஸ் வாங்க மாட்டேன் என கூறி உள்ளார் சீமான். 

Related Articles

மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற காவலர் ஜெகத... வள்ளியூர் அருகே விஜய நாராயணம் சிற்றாற்று பகுதியில் மணல் திருடப் படுவதாக தகவல் கிடைத்து சோதனைக்கு சென்ற காவலர் ஜெகதீசனை ஒரு கும்பல் இரும்புக் கம்பியால்...
மீன்குழம்பும் பொங்கப்பானையும்! – ர... 1. ரஜினிக்கு இப்போதைய சூழலில் கட்சி ஆரம்பிச்சா வேலைக்காகாதுன்னு தெரிஞ்சுடுச்சு. இத்தனை வயசுக்கப்பறம் வந்து 5, 10% ஓட்டுக்கள் வாங்கவும் இமேஜ் பாதிக்குத...
கடந்த 5 ஆண்டுக ளில் 187 ஆணவ படுகொலைகள்! ... கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாட்சப்பில் சாதி ஆணவ படுகொலை வீடியோ தீயாக பரவியதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அந்த வீடியோவில் இள...
ஜூலை18 – 5 years of வேலையில்லா பட்... * முதல் நாள் காலேஜ் வாசல்ல நின்னு அய்யா நாம இன்ஜினியர் ஆகப்போறங்கறது நினைச்சது என்னால மறக்கவே முடியாது... தம் அடிச்சேன் தண்ணி அடிச்சேன் கட் அடிச்சேன் ...

Be the first to comment on "சீமான் ஒரு சைக்கோ! – சீமானை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*