சிம்புவின் மாநாடு திரைப்படம் டிராப் ஆகிறது!

Simbu's Maanaadu movie Film Drop!

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருந்த படம் மாநாடு. இந்தப் படத்தை மிக மிக அவசரம் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருந்தார். இந்நிலையில் இன்று அந்தப் படம் ட்ராப் ஆகிறது என்று அதிகார பூர்வமாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். 

 அந்தப் வணக்கம்… நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். 

தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி… துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. 

அதனால் சிம்பு “நடிக்க இருந்த” மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!!

-சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர்

இவ்வாறு மாநாடு படம் ட்ராப் ஆனதுக்கான காரணத்தை விளக்கி உள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. வேட்டை மன்னன், கான் படங்களை தொடர்ந்து இப்போது மாநாடு படமும் ட்ராப் ஆகியுள்ளது. 

Related Articles

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சுவாரஸ... சூப்பர் ஸ்டார், ஸ்டைல் மன்னன், வசூல் சக்ரவர்த்தி என்றெல்லாம் புகழ் பெற்றுள்ள ரஜினிகாந்த் 12 - 12 - 1950 அன்று பெங்களூரில் பிறந்தார். இவரது தந்தை ப...
பெண்களைப் போல ஆண்களுக்கும் ரத்தப்போக்கு ... யார் இந்த PADMAN? நம்நாட்டில் வெறும் 12% பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகின்றனர். 88 சதவீத பெண்கள் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல் தான் இருக்...
தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத... 11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின...
பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இரண்ட... பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது வருவதுண்டு. கடந்த சில வருடங்களில் அருவி, தரமணி, காதலும் கடந்து போகும் போன்ற நல்ல...

Be the first to comment on "சிம்புவின் மாநாடு திரைப்படம் டிராப் ஆகிறது!"

Leave a comment

Your email address will not be published.


*