எழுத்தாளர் கரன்கார்க்கியின் கருப்பர் நகரம் நாவல் கதைச்சுருக்கம்!

summary of karuppar nagaram novel

சிறையிலிருந்து திரும்பி எங்கே செல்வது என தெரியாமல் வளர்ந்து நிற்கும் கட்டிடங்களை வேடிக்கைப் பார்த்த படி நிற்கும் செங்கேணி…

அறிமுகமாகிறான் சிறை நண்பனான கட்டைக்கால் பீடிகொலுத்தி…

காலை எழுந்ததும் தனக்குப் பிடித்தமான குளத்தில் இறங்கி தாமரை பறிக்க வேண்டும் என ஆவலாக கட்டிடங்களின் வெளியே படுத்து உறங்க… 

காலை எழுந்ததும் பீடிக் கொலுத்தி சொல்கிறான்… குளத்தின் மேல் தான் கட்டிடம் முளைத்திருக்கிறது… கட்டிடத்தின் கரையில் தான் படுத்து உறங்கினோம் என்று….

பீடிகொலுத்தியிடமிருந்து விலகி தான் வசித்த பகுதி இன்று குப்பைக் கூளமாக மாறி இருக்கும் இடத்திற்குச் செல்லும் செங்கேணி… 

குப்பையின் உச்சி மீது ஏறி நின்று தான் வசித்த பகுதியை சுற்றிமுற்றி பார்த்தால்… மனிதர்கள் வாழ்ந்த பகுதி என்ற அடையாளமே இல்லாமல் இருக்கிறது… நினைவுகள் திரும்புகிறது…

ஆராயியை குழாயடியில் பார்த்ததும் பூக்கும் காதல்… 

அவளுக்குப் பிடித்த தாமரை, சிவப்பு ரிப்பன், பட்டாம்பூச்சி கிளிப் வாங்கித் தரும் செங்கேணி… 

இது தெரிய வர செங்கேணியை இழுத்துப் போட்டு அடிக்கும் ஆராயியின் அக்கா புருசன் கணேசன்… 

செங்கேணி ஆராயி இருவரையும் வாழ்த்தி அனுப்பும் அக்கா… அவர்கள் விடியற்காலையில் ஓடிப் போக உதவும் குழந்தையில்லா கைராசிக்கார மருத்துவச்சி முனியம்மா… 

ஊரை விட்டு ஓடி வந்ததும் உதவி செய்யும் முனியம்மாவின் உறவினர் செல்லக் கண்ணு… 

நண்பராகும் புல்லட் வண்டி மீசைக்காரர்… எந்நேரமும் பெண் சுகத்தை விரும்பும் மீசைக்காரர்… மாட்டிறைச்சி கடைக்காரர்… அவனுக்கு அயல்நாட்டு பானத்தையும் ஆங்கிலோ இந்தியன் சிவத்த மனிதர்களையும் அறிமுகப் படுத்தி வைக்கிறார்… புல்லட் ஆசை இருந்தாலும் இவரின் சகவாசம் பிடிக்காத செங்கேணி இவரிடமிருந்து விலகி கருத்தாகப் பேசும்  எதிர்த்த வீட்டு பாளையம் அண்ணனுடன் நட்பு கொண்டாட…

பாளையம் அரசுப் பணியாளர் என்றாலும் மழை பெய்தால் ஒழுகும் கூரை வீடு… அடிவடித் தனம் இல்லாத பெண் குழந்தை… எந்நேரமும் அவரை ( அன்பாக ) திட்டிக்கொண்டே இருக்கும் மனைவி… எப்போதும் அவருடன் நான்கு இளைஞர்கள்… இரவு நேரப் பள்ளி… பாளையத்தின் உறவுக்கார ஊரில் அயோத்தி தாசப் பண்டிதர் சங்கம் குறித்த விவகாரம்… வெள்ள தப்பு சின்ன தப்பு இருவரும் சந்தித்த அவமானம்… 

செங்கேணி வீட்டுக்குப் பின்புறம் எந்நேரமும் ங்ஙொய்ங் சத்தம் தரும் நிலக்கரி ஆலை… பக்கத்திலயே சாராய நெடி வீசும் பேய்க்காளியின் சாராயக்கடை… அவருக்கு எதிரியாக கோவிந்தம்மா… பேய்க்காளியைப் பிடிக்காத எம்ஜிஆர் ரசிகன் வண்டி ஓட்டும் மாவுளி… 

எதேர்ச்சையாக கறி வாங்கி வந்த நாளில் அக்காவும் கணேசனும் வர… குழந்தையைப் பார்த்ததும் இவர்களுக்கும் குழந்தை மீதான ஆசை… 

கரி திருடம் சிறுவர்கள்… பேய்க்காளியின் சாராயக் கடையில் செங்கேணியை கிண்டல் செய்யும் சிறுவர்கள்… வட நாட்டு இளைஞர்களால் அணைக்கப் பட்டு ஆதரிக்கப் படும் மஞ்சலாடைப் பெண்… எந்நேரமும் கத்திக் கொண்டே இருக்கும் நாய்க் கிடங்கு… பன்றிகள் திரிந்தோடும் மைதானம்… 

இருப்பினும் நிரம்பி கிடக்கும் மனிதம்… குடோனில் விபத்து ஏற்பட தலையில் பலத்த காயம் அடையும் செங்கேணி… கண்கள் சிவக்க… செயல்பாடுகள் சற்று மாறுதலாக இருக்க அவனை எப்போதும் கவனிக்கும் ஆராயி… 

பேய்க்காளியினால் சிரமத்திற்குள்ளாகும் ஆராயி… 

வேலைக்குப் போக முடியாத சூழலில் பேய்க்காளியால் சாராயக்கடை கல்லாப் பெட்டியில் உட்காரும் சூழல்… 

சரியாகப் போலீஸ் வர… எல்லோரும் எஸ்கேப்…

பேய்க்காளி தலைமறைவு…

செங்கேணியின் அடிபட்ட தலையில் போலீஸ் அடி… 

ஒரு கட்டத்தில் பேய்க்காளியை கொன்றால் தான் நிம்மதியான வாழ்வு என்ற செங்கேணி எண்ண… 

இதை அடுத்து வந்த வரிகள் ஒவ்வொன்றும் திக் திக்… ஆராயியின் முடிவு இப்படி இருக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை… 

அட ச்சே… இவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறி வந்த இவங்களுக்கு இந்தக் கதியா… செங்கேணி ஏன் சிறைக்குச் சென்றான் என்றான்… இரட்டை ஆயுள் தண்டனை ஏன் அவனுக்கு… என்ற வினாவை முதல் அத்தியாயத்தில் எழுப்பி… அதை இடையே எங்கும் யூகிக்க முடியா வண்ணம் எழுதி இறுதியில் அதற்கு விடை சொல்லும் இடம் மனம் கனத்துப் போய்விடுகிறது! பேய்க்காளியை கண்டந்துண்டமா வெட்டி பின்னாடி இருக்குற நாய்க்கிடங்குக்குள்ள தூக்கி எரிஞ்சிருக்கணும் போல இருந்தது…

மரணமே விடுதலை… என்று பாளையம் அண்ணன் செங்கேணியை தனித்து விடும் இடத்தில் தானாக வடியும் கண்ணீர்! 

கறுப்பர் நகரம் – மனிதம்!

Related Articles

மக்கள் நல இயக்கம் தொடங்கிய புரட்சித் தளப... (ஆகஸ்டு 29, 2018) இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டமும், விஷாலின் பிறந்தநாளும் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது. இது ஒருபுறமிருக்க யாரும் எதிர்பார...
ரஷ்யாவிடம் இருந்து S-400 ரக ஏவுகணைகள் வ... ரஷ்யாவிடம் இருந்து மேம்பட்ட இராணுவ தளவாடங்களை வாங்கும் இந்தியாவின் திட்டத்தால், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்ற...
ராட்சசி திரைப்பட வசனங்கள் ஒரு பார்வை!... * பள்ளிக் கூடமா அது... சந்தக்கட... எங்க பாத்தாலும் குப்ப... இரைச்ஙாலு... ஆட்டுமந்தைய திறந்துவிட்ட மாதிரி... படிக்கற புள்ளைக இந்த வயசுலயே ஜாதிப் பேர சொ...
கோழி மேல பரிதாபப்பட்டா 65 சாப்பிட முடியா... இந்த உலகத்துல பணம் சம்பாதிக்கற மாதிரி ஈஸியான வேலை வேற எதுவுமே இல்ல... அதுக்கு நீங்க ஒன்னே ஒன்னு தான் பண்ணனும்... உங்கள மாதிரியே நிறைய பணம் சம்பாத...

Be the first to comment on "எழுத்தாளர் கரன்கார்க்கியின் கருப்பர் நகரம் நாவல் கதைச்சுருக்கம்!"

Leave a comment

Your email address will not be published.


*