TNPSC Group 2 மற்றும் 2A ல் இருந்து தமிழ் மொழித்தாள் நீக்கம்! தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறதா தமிழக அரசு?

Tamil language paper removed from TNPSC Group 2 and 2A Exams! Is Tamilnadu government betraying Tamil People

TNPSC Group 2 மற்றும் 2A ல் இருந்து தமிழ் மொழித்தாள் நீக்கம்! தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறதா தமிழக அரசு? என்று பலரும் விவாதிக்க ஆரம்பித்து உள்ளனர். இது சரியா தவறா என்பதை பார்ப்போம். 

தவறானது என்று சொல்பவர்களின் கருத்துக்கள் : 

1.TNPSC ல் இருந்து தமிழ் மொழித்தாள் நீக்கம்.TN க்கு என்னடா அர்த்தம் அப்ரசின்டுகளா…

2.உங்களுக்கு மன்னிப்பே கிடையாது எடப்பாடி பழனிசாமி!

தமிழக அரசுப்பணி தேர்வாணய (டி.என்.பி.எஸ்.சி) தேர்வில் இருந்து தமிழ் மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளது. வட இந்தியர்களை தமிழக அரசுப்பணி தேர்வின் மூலம் இறக்குமதி செய்ய ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசு பாஜகவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

தன் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெரும் துரோகத்தை இழைக்கிறார். ஓபிஎஸ்-இபிஎஸ் போன்ற சட்ட விரோத கிரிமினல் கும்பல் இனியும் ஆட்சியில் நீடித்தால் தமிழகம் உத்தரபிரதேசம் போல மாறிவிடும்.  ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் துவங்கி நமது கல்வி உரிமையை ஒட்டு மொத்தமாக இழந்து விட்டோம்.இன்னும் இவர்கள் ஆட்சி நீடித்தால் அது பேரபத்தில்தான் போய் முடியும். என்ன செய்தேனும் இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்!

3.முதனிலை தேர்வில் தமிழ் சிலபஸ் இருந்தாலும் தமிழில் இத்தனை கேள்விகள் கேட்க வேண்டும் என்று கட்டாயம் இல்லாமல் உள்ளது. அதனால் 175 கேள்விகளில் தமிழ் சிலபஸ் இருந்து வெறும் 5 , 6 கேள்விகள் கேட்கலாம் அல்லது கேட்காமல் கூட போகலாம்.இதனால் முதனிலை தேர்வில் தமிழ் சிலபஸ் படிக்காமலேயே தேர்வில் வெற்றி பெற்று விட முடியும். முதன்மை தேர்வுக்கு முழுவதும் ஆங்கில அறிவு தேவை. முதன்மை தேர்வுக்கு சிலபஸ் தமிழ் தான் .. ஆனால் மொழிபெயர்ப்பு பகுதிகள் முழுக்கவும் கிராமப்புற மாணவர்களுக்கு , தமிழ் வழி படித்த மாணவர்களுக்கு பெரிய பாதிப்பாகும்.அதுவும் மொழிபெயர்ப்பு பகுதியில் தேர்ச்சி பெற்றார் மட்டுமே அடுத்த பகுதி திருத்தப்படும் என்பது கொடுமை.. இதற்கு சம்மதித்தால் குரூப்4 தேர்வுக்கும் இதே நிலைதான்…நாளை அரசு அலுவலகங்கள் அனைத்தும் அயலவனின் கையில்.

4.TNPSC : Group 2 &2A , முக்கியமாக மெயின் தேர்வில் : –

 பகுதி அ & பகுதி ஆ என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது அதில் ,

பகுதி  அ : – ENG   to தமிழ்; தமிழ்  to ENG ;

இதில் இரண்டு  வினாக்கள் கேட்கப்படும்(25+25) 

மொத்த மதிப்பெண்: 50. இதில் கண்டிப்பாக 25 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றால்தான் அடுத்த பிரிவான. பிரிவு : ஆ இதை திருத்துவார்கலாம். கண்டிப்பாக இந்த விதியானது தமிழ் வழியில் பயின்ற 90% மாணவர்களுக்கு மிகக்கடுமையாக இருக்கும். 

இந்த விதியை மட்டும் கண்டிப்பாக நீக்க வேண்டும். அல்லது மாற்றி அமைக்க வேண்டும்.

இது தமிழ் வழியில் பயின்ற அனைத்து மாணவர்களின்  அரசு வேலை என்ற கனவில் மண்ணை அள்ளிப் போடும் செயல். இதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எதிர்க்க வேண்டும்,மாற்றி அமைக்கும் வரை குரல்கள் ஒலிக்க வேண்டும்.

 ENG  to தமிழ்  ; தமிழ் to  ENG ; என்று மொழிமாற்றம் செய்துகொண்டே இருக்க நாங்கள் ஒன்றும் மொழிமாற்றம் செய்யும் புலவர் பணியை செய்யப்போவதில்லை. முதலில் TNPSC –  EXAM வினாத்தாளில் நிறைய கேள்விகள் மொழிமாற்றம் செய்யும் போது தவறு செய்கிறீர்கள். அண்மையில் நடைபெற்ற Group.4 – ல் கூட தவறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. முதலில் இதை சரி செய்யப் பாருங்கள். 

TNPSC எடுத்த நடவடிக்கை சரியானதே என்பவரின் கருத்துக்கள்: 

  1. TNPSC யின் புதிய குரூப் 2, 2A குறித்த அறிவிப்புகளில் தமிழ் நீக்கம் என நிலைத் தகவல்களைப் பார்க்க முடிகின்றது. தமிழ் அரசுக்கான பணியாளர் சேர்ப்பிற்கான தேர்வு எப்படி நடந்தது, இனி எப்படி நடக்கப் போகின்றது என்று தெரிந்து கொண்டால், புதிய நடைமுறையே சிறந்தது என அறிந்து கொள்ளலாம். 

பொதுவாக  குரூப் 2 தேர்வுகளுக்கு தகுதி பட்டப்படிப்பு ஆகும்.

பழைய நடைமுறைப்படி முதல் நிலை ( Preliminary )  மற்றும் முதன்மை தேர்வு ( Main) என இரண்டு தேர்வு இருக்கும். 

முதல் நிலை தேர்வில் 200 வினாக்கள்.  இது அடுத்தகட்ட தேர்வுக்கு தகுதியாவதற்கு மட்டுமே… இது கொள்குறி  ( Objective) அமைப்பில் இருக்கும். 

100 வினாக்கள் – மொழி அறிவு ( தமிழ் அல்லது ஆங்கிலம்)

100 வினாக்கள் – பொது அறிவு மற்றும் கணிதம்.

இத்தேர்வில் தமிழே தெரியாமல் ஆங்கிலத்தை மொழித்தாளாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் நிறைய உண்டு.

முதன்மைத் தேர்விற்கு 300 மதிப்பெண்கள். இதில் பொது அறிவு வினாக்கள் இருக்கும். சில தமிழ் இலக்கியம் தொடர்பான வினாக்களும் இருக்கும்.  இது விளக்கி எழுதும் அடிப்படையில் (Descriptive) இருக்கும்.

இத் தேர்விலும் தமிழே தெரியாமல் ஆங்கிலத்தில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் நிறைய உண்டு.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2, 2A தேர்வு முறைப்படி முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் கிடையாது. மொத்தமுள்ள 200 வினாக்களில் 175 வினாக்கள் பொது அறிவு 25 வினாக்கள் கணிதம் என பிரிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழி இல்லாததால் பொதுவான யார் வேண்டுமானாலும் இத்தேர்வை சுலபமாக எழுதி தேர்ச்சி அடைய இயலும்.  இத்தேர்வில் தமிழ் அல்லது ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆர்வலர்கள் தமிழ் நீக்கப்பட்டுள்ளது என்று கவலைப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக கருதுகின்றனர். ஆனால் முதன்மைத் தேர்வை கருத்தில் கொள்ளும்போது நாம் கவலைப்பட ஏதுமில்லை என்பதை உணரலாம். 

 குரூப் 2, 2A  முதன்மைத் தேர்வு

புதிய முறையில் மாற்றி அமைக்க பட்டுள்ளது.  மொத்த மதிப்பெண்கள் 300.

 இதில் அன்றாட அலுவலக பணிகளுக்கு ஏற்றவாறு விளக்கி எழுதும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  

பகுதி – 1

  1. தமிழ் மொழியில் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதுவது –  50 மதிப்பெண்கள்.
  2. ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள பத்தியை தமிழில் மொழிபெயர்த்து எழுதுவது –  50 மதிப்பெண்கள்

பகுதி – 2

சுருக்கி எழுதுதல்,  கட்டுரை வரைதல், குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைதல், அலுவலக கடிதங்கள் எழுதுதல் என 160 மதிப்பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம். மேலும் திருக்குறள் தொடர்பான கட்டுரைகளுக்கு 40 மதிப்பெண்கள கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதியில் 100 மதிப்பெண்களுக்கு,  தேர்ச்சிக்கான குறைந்தபட்ச 25 மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே இரண்டாம் பகுதி விடைத்தாள் திருத்தத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

முதல் பகுதியில் உள்ள ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும்,  தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்ப்பது என்பது தமிழ் நன்றாக தெரிந்தவர்களுக்கு மட்டுமே நடைமுறை சாத்தியம். மேலும் திருக்குறள் தொடர்பான கட்டுரைகளை எழுதவும் தமிழ் அறிவு முக்கியம். இந்த முறையில் தமிழ் அறிந்தவர்கள் மட்டுமே குரூப் 2 தேர்வுகளில் தேர்ச்சி அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

 இப்போது தேர்வு முறை தவறு என்று நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது, இதை கண்டித்து எழுத வேண்டியது, தமிழ் தெரியாதவர்கள் மட்டுமே… நாம் அல்ல…

 யார் ஆங்கிலத்தில் படித்து, ஆங்கிலத்தில் தேர்வு எழுதி, தமிழ் தெரியாமல், TNPSC தேர்வெழுதி வேலை வாங்குபவர்களாக இருந்தார்களே அவர்களே கவலைப்பட வேண்டும்.  அரசியல் காரணங்களுக்காக இதை எதிர்ப்பது சரியானதாக இருக்காது.

மேலும் நேற்றைய ஒரு தீர்ப்பில், சென்னை நீதிமன்றம் தமிழ் வழியில் ஒன்று முதல் 12 வரையும், பட்டப்படிப்பு தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டுமே தமிழ் வழியில் பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டில் பணி நியமனம் பெற இயலும் என்று கூறியுள்ளது.

 

Related Articles

நான்கு மாதங்கள் கோமாவில் இருந்த பெண், பா... இசை ஒரு சிகிச்சை சக்தி என்பதை வாழ்வின் பல தருணங்களில் நாம் உணர்ந்தே வந்திருப்போம். நம்மை அழவைப்பது முதல் தூங்கவைப்பது வரை இசை நம்மை தன்வயப்படுத்தி இரு...
எழுத்தாளர் ஜெயமோகனின் வெள்ளை யானை நாவல் ... அயர்லாந்தில் வசதியில்லாத அப்பாவின் பிள்ளையாக வளர்ந்த அப்பாவி ஏய்டன் பிரிட்டிஷ் அரசில் முக்கிய பொறுப்பாளராக உயர்கிறான். இதற்கிடையில் அவன் பயிற்சி முடிந...
வைரலாகும் அஜீத்தின் “அடேங் கப்பா&#... அஜீத் படத்தின் டீசர் ட்ரெய்லர் வைரல் ஆவதும், டீசர் ட்ரெய்லரின் வடிவேலு வெர்சன்கள் வருவதும் மிகச் சாதாரண விசியம். இணைய உலகையே அதிர வைக்க கூடியதாக இருக்...
ஆட்டோ சேவையை மீண்டும் இந்தியாவில் அறிமுக... வாடகை கார சேவை மூலம் ஏற்கனவே உலகின் பல நாடுகளில் பிரபலமடைந்த உபர் நிறுவனம், தற்போது இந்தியாவில் மீண்டும் வாடகை ஆட்டோ சேவையை துவங்கியிருக்கிறது. ஏற்கனவ...

Be the first to comment on "TNPSC Group 2 மற்றும் 2A ல் இருந்து தமிழ் மொழித்தாள் நீக்கம்! தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறதா தமிழக அரசு?"

Leave a comment

Your email address will not be published.


*