கமல்ஹாசன் படங்களால் நிஜத்தில் நடந்த மாற்றங்கள்!

The changes that happened after the release of Kamal Haasan movies
  1. 1978 ல் கமல்ஹாசன் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடித்தார். சைக்கோ கொலைகாரன் வேடம். ஓராண்டு கழித்து சைக்கோ ராமன் என்பவர் பிடிபட்டார். தமிழகத்தில் பெண்களை குறி வைத்து நடத்தப்படும் சைக்கோ கொலைகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் சைக்கோ ராமன். 
  2. 1988 ல் வேலையில்லாத இளைஞனாக கமல் சத்யா படத்தில் நடித்தார். வேலை இல்லாத இளைஞர்களை அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்துவதை தோலுரித்து காட்டிய படம் அது. 89 – 90 களில் இந்திய இளைஞர்கள் பலரும் அதே பிரச்சினையை சந்தித்தனர். நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் கூந்தல் விரித்து ஆடியது. 
  3. 1992 ல் வெளியான தேவர் மகன் சாதி மோதல் குறித்த சூடான படம். 93 ல் தென்மாவட்டங்களில் படத்தில் சித்தரிக்கப்பட்ட பல காட்சிகள் நிஜமானது. 
  4. 1994 ல் வெளியான மகாநதி பைனான்ஸ் நிறுவனங்கள் அப்பாவிகளை ஏமாற்றுவது குறித்த கதை. 1996 ல் பைனான்ஸ் நிறுவனங்களின் பித்தலாட்டங்கள் வெளிச்சமானது. 
  5. இந்து முஸ்லிம் பிரிவினை மற்றும் வன்முறைகளை அப்பட்டமாக காட்சிகளாக்கிய ஹேராம் 2000 ம் ஆண்டில் வெளியானது. படத்தில் இடம்பெற்ற காட்சிகள் இரு ஆண்டுகள் கழித்து குஜராத்தில் லைவ் ஆனது. 
  6. 2003 ஏப்ரலில் அன்பே சிவம் வெளியானது. சுனாமி வரும் என்று கமல் வசனம் பேசினார். வசனம் எழுதியவர் மதன். அச்சொல்லே தமிழர்களுக்குப் புதியது. 2004 டிசம்பரில் நிஜத்தில் வந்து தொலைத்தது சுனாமி. 
  7. 2006 ல் வேட்டையாடு விளையாடு படம் ரிலீசானது. இரட்டை சைக்கோ கொலையாளிகள் குறித்த திரில்லர். படம் வெளிவந்து மூன்று மாதங்கள் கழித்து நொய்டா இரட்டை கொலையர்கள் மொகிந்தர் மற்றும் சதீஸ் பிடிபட்டார்கள். 

Related Articles

போக்குவரத்து நெரிசலால் ஆட்டோவிலேயே குழந்... போக்குவரத்து நெரிசல், பயணம் செய்பவர்கள் எவரும் விரும்பாதா ஒன்று. போக்குவரத்து நெரிசலில் சிக்குவது என்பது அன்றைய ஒட்டுமொத்த நாளையே பதற்றம் நிறைந்த ஒன்...
உங்கள் வீடுகளில் படிக்கும் அறை அல்லது வீ... எல்லோர் வீட்டிலும் சமையலறை, படுக்கை அறை, பூஜை அறை, கழிவறை என்று பல அறைகள் இருக்கும். ஆனால் எத்தனை பேர் வீடுகளில் படிக்கும் அறை இருக்கிறது? படிக்கும் அ...
டிஜி யாத்ரா – ஆதார் எண் இணைப்பு மூ... வரும் 2018ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து ஆதார் என் இணைத்த விமானப் பயணங்கள் என்னும் திட்டம் கொண்டு வர பட உள்ளது. விமான டிக்கெட்டுகளில் ஆதார் எண் இணைப...
நேர்கொண்ட பார்வை படம் பற்றி இயக்குனர் வச... பிங்க் திரைப்படம் வெளியான நாளிலிருந்து நான் செல்லும் திசையெங்கும் அதனைப்பற்றி பேசியிருக்கிறேன்.புகழ்ந்திருக்கிறேன்.ஒரு திரைப்படம் என்ன செய்யும்? சமுதா...

Be the first to comment on "கமல்ஹாசன் படங்களால் நிஜத்தில் நடந்த மாற்றங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*