விமானி அபிநந்தனிடம் கேட்ட கேள்விகளும் அவருடைய பதில்களும்!

The questions asked by the pilot Abhinanthan and his answers!

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களால் பாகிஸ்தானின் சில இடங்களில் தாக்குதல் நடந்தது எனவும் அவற்றில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர் எனவும் ஊடகங்கள் தெரிவித்த நிலையில் இன்னொரு தரப்பு, 300 தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தவில்லை வெறும் செடிகொடிகள் மீது தான் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது என்று கூறுகிறது. இந்நிலையில் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் அகப்பட்டுக் கொண்டார் என்ற செய்தி வெளியாக பரபரப்பு கூடியது. தற்போது அவர் பற்றிய செய்தி ஒன்று வாட்சப் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. அவை இங்கே 

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்திய விமானியிடம் பாகிஸ்தான் இராணுவ மேஜர் கேட்ட கேள்விக்கு நமது வீரர் அளித்த பதில்.

கேள்வி : உங்களுடைய பெயர் என்ன ?

பதில் : wing Commander அபினந்தன்.

கேள்வி : நாங்கள் உங்களை நன்றாக நடத்தி இருக்கிறோம் என்று நம்புகிறோம் என்று பாகிஸ்தான் இராணுவ அதிகாரி சொன்னார்.

பதில் : கண்டிப்பாக நன்றாக கவனித்தீர்கள். ஒரு வேளை நான் இந்தியா திரும்பினாலும் நான் என்னுடைய இந்த பதிலை மாற்ற மாட்டேன். பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் என்னை அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர். அவர்களுக்கும் என்னை பாதுகாப்பாக அழைத்து வந்து உரிய மரியாதை கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார். இதே போன்று தான் எங்களுடைய இந்திய இராணுவமும் உங்களை மரியாதையோடு நடத்தி இருக்கும் என்றார்.

கேள்வி : நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள்.

பதில் : என்னால் இதற்கு பதில் அளிக்க முடியும். ஆனால் எந்த இடம் என்று குறிப்பிட்டு நான் சொல்ல மாட்டேன். தென்னிந்தியாவில் இருந்து வருகிறேன் என்று கூறினார் நமது வீரர்.

கேள்வி : உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா ?

பதில் : ஆம் sir ஆகி விட்டது.

கேள்வி : நீங்கள் அருந்தும் டீ நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

பதில் : டீ மிகவும் அருமையாக உள்ளது என்றார்.

கேள்வி : நீங்கள் வந்த விமானத்தின் பெயர் என்ன என்றார் ?

பதில் : sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது.

கேள்வி : உங்களுடைய இலக்கு என்ன ?

பதில் : sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது.

உயிரே போனாலும் தாய் நாட்டின் ரகசியத்தை சொல்ல மாட்டேன் என்று வீரத்தோடு அங்கு இருக்கும் நீ அல்லவோ இந்தியன் என்று அவரைப் பாராட்டி வருகின்றனர் மக்கள்

Related Articles

நீங்கள் எத்தனை வயது வரை உயிரோடு இருப்பீர... சாகற நாள் தெரிஞ்சிடுச்சுனா வாழ்ற நாள் நரகமாயிடும். சிவாஜி படத்தில் ரஜினி பேசிய வசனம் இது. வசனமாக இதை ரசித்தாலும், நம்முடைய ஆயுட்காலம் பற்றி தெரிந்துகொ...
தனியார் பள்ளிகளின் விளம்பர பதாகைகளில் மா... இந்த ஆண்டு முதல் மாணவ மாணவிகளின் புகைப்படங்களை  விளம்பரங்களுக்கு உபயோகிக்க கூடாது என்று தடை விதித்து உள்ளது தமிழகப் பள்ளிக் கல்வித்துறை. இது சமூக ஆர்வ...
ஒற்றை இலக்கத்தில் பயிர் காப்பீட்டு நிவார... திண்டுக்கல் மாவட்டத்தில் 2016-17- ல் பருவ மழை இல்லாத காரணத்தால் விவசாயம் பொய்த்து போனது. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு நிவாரணம் வ...
தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்த... கடந்த ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப் பட்டது. பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம் என்பதை 2018ம் ஆண்டுக்கான முழக்கமா ஐநாசபை...

Be the first to comment on "விமானி அபிநந்தனிடம் கேட்ட கேள்விகளும் அவருடைய பதில்களும்!"

Leave a comment

Your email address will not be published.


*