தொழில் தொடங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷியங்கள்! – பகுதி 3

Things we need to know before starting a business! - part 3

12. காரணங்களை அறிந்து கொள். ஒரு சிறு தொழில் தோல்விக்கு வழக்கமாக நிதிநிலைமைகள் காரணங்களாகின்றன. துரதிருஷ்டவசமாக, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற பல காரணிகளும் இந்த வியாபார வீழ்ச்சிக்குக் காரணமாக அமைகின்றன. அதிர்ஷ்டவசமாக, பெருமளவில் உங்கள் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கின்ற திடமான நேர் படிமுறைகள் (positive step) இருக்கிறது.

1. உங்கள் பலவீனங்களுக்கு முகம் கொடுத்தல் (Face Your Weaknesses): உங்கள் பலவீனங்களை இனம் கண்டு அவற்றை எதிர் நோக்குதல் மற்றும் உங்களிடத்தில் இயல்பாகக் காணப்படுகின்ற பலங்களைப் பயன்படுத்திக் கொள்ள போதிய முயற்சி இன்மை போன்றவை உங்கள் வணிகத்தின் வளர்ச்சியின்மைக்கு அடிப்படையான காரணியாகும். இரண்டு காகிதத் துண்டுகளை எடுத்து ஒன்றில் உங்கள் நிறுவனத்தின் பலம் மற்றையதில் அதனுடைய பலவீனங்கள் அல்லது குறைகளைப் பட்டியல் இடுங்கள். நீங்கள் உங்கள் நிறுவனத்தின் வலிமைகளை, உங்கள் ஒவ்வொரு பணியாளர்கள், வாடிக்கையாளர்கள்,வாடிக்கையாளராகக் கூடிய வாய்ப்புக்கள், மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்குத் தெளிவுபடுத்தும் வழிகளில் இருக்க வேண்டியதைக் கவனிக்கவும். பலவீனங்களைக் குறிப்பிட்ட துண்டில், ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வாகக் கூடிய சரியான படிமுறைகளைக் கண்டறியுங்கள். பின்னர் உங்கள் பணியாளர்களுடன் நீங்கள் எடுத்த குறிப்புகளைக் கலந்தாலோசித்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையை உருவாக்குதல் வேண்டும்.

2. நடவடிக்கை எடுத்தல் (Take Action): உங்களால் விருத்தி செய்யப்பட்டுத் தொடரப்படும் ஒரு பெரிய சந்தைப்படுத்தல் நிகழச்சித்திட்டமானது இரு வேறுபட்ட நடவடிக்கைகளைக் கொண்டது. இந்நிகழ்ச்சி திட்டத்தை அமுல்படுத்துதல் என்பது சந்தைப்படுத்தலின் வெற்றிக்கு மிக முக்கியமான திறவுகோலாகும். நீங்கள் விரும்பும் அனைத்தையும் திட்டமிடுக, ஆனால் இதனைச் செயற்படுத்த, உங்களால் இனம் காணப்பட்ட படிமுறைக்கமைவாகவே உங்களைத் தயார் செய்யுங்கள். அவ்வாறு செய்கையில், ஆரம்பத்தில் நீங்கள் கருத்தில் எடுக்க முடியாத என்ற சில படிமுறைகளைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டாம்.

3.பதில் கூறும் கடப்பாடும் பொறுப்பும் (Accountability and Responsibility): பதில் கூறும் கடப்பாடு மற்றும் பொறுப்பு இவை இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ளுதல் வேண்டும். உங்கள் பணியாளர்களும் விநியோகித்தார்களும் உணர்ந்து பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் அவர்கள் உங்களுக்கும் நிறுவனத்திற்கும் பதில் கூறும் நிலைமைக்கு ஆளாகின்றார்கள். அது இப்போது அவர்களுடைய வேலை எனவே, அது அவர்கள் முடிக்க வேண்டிய பணியாகிவிடுகின்றது.

4.வியாபாரத்தில் விளையாடல் ஆகாது (Don’t Play At Business) வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் இதனை ஒரு விளையாட்டாக எண்ண வேண்டாம். ஏனெனில் இது ஒரு பொழுதுபோக்கு அல்லது நேரத்தைக் கடத்துவதற்குரிய விடயமல்ல. நீங்கள், உங்கள் பணியாளர்கள், விநியோகித்தவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு செய்தியைக் கொடுப்பதாகச் சிந்தியுங்கள். வாடிக்கையாளருக்கும் வணிக நிறுவனத்தின் வெற்றிக்கும் ஒரு உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்படின் அது கடினமான அல்லது கஷ்டமான வேளைகளிலும் தொடரக் கூடியதாக இருக்கும். இது வருங்காலத்தில் நிறுவனத்தின் வெற்றிக்கு இட்டுச் செல்லக்கூடியதாக இருக்கும்.

5. முன் திட்டமிடப்படாத சந்தைப்படுத்தலைத்தவிர்த்தல் (Avoid Ad Hoc Marketing) முழுமையான சந்தைப்படுத்தல் பற்றிய திட்டமின்றி தொடங்கப்படும் எந்தவொரு வர்த்தகமும் வெற்றி பெறாது. எனவே ஓர் ஆண்டுக்குரிய சந்தைப்படுத்தல் திட்டத்தைத் தயார் செய்து அல்லது குறைந்தபட்சம் ஒரு முழுமையான பருவத்திற்குரிய திட்டத்தையேனும் தயாரித்து நடைமுறைப்படுத்துதல் தொடர்ச்சியான வெற்றிப் பாதையில் வணிகத்தை இட்டுச் செல்ல உதவும். இதற்காக முந்தைய முயற்சிகளின் படிப்பினையையும் எடுத்துக் கொள்ளல் சிறந்தது.

6. மாற்றங்களுக்கு ஒத்துழைக்க பணியாளரை நாடுதல்: உங்கள் பணியாளர்கள் உங்கள் சந்தைப்படுத்தல் திட்டத்திற்கு ஆதரிக்காத போது, உங்கள் நிறுவனத்தின் பயணம் தோல்வியில் நிறைவடையும். எனவே ஆரம்ப திட்டமிடல் செயல்பாட்டில் பணியாளர்களின் கருத்துகளை உள்வாங்கி திட்டத்தில் இணைப்பதன் மூலம் அவர்களின் பூரண ஒத்துழைப்பைப் பெற முடியும். இந்த நடவடிக்கைக்கு உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் பொறுப்பானவர்கள் என்பதனால் திட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் எல்லோரும் தெளிவாக அறிந்திருக்க வேண்டியதை உறுதி செய்தல் வேண்டும்.

7. வாடிக்கையாளரை மதித்தல் (Appreciate Every Customer): வாடிக்கையாளர் மீதான ஒரு முழுமையான அலட்சியம் ஒரு வணிகம் வீழ்ச்சியுறுவதற்கான ஒரு நிச்சயமான அறிகுறியாகும். எனவே வாடிக்கையாளரைக் கவனிக்காது தனிப்பட்ட தொலைபேசி உரையாடலை அல்லது பத்திரிக்கை போன்றவற்றை வாசித்தலைத் தவிர்த்து உடனடியாக அவர்களை வரவேற்று, தேவைகளைக் கவனித்தல் வியாபாரத்துக்கு நன்று.

8. சந்தை நிலவரங்களை உற்றுநோக்குதல் (Spot Trends): சந்தையில் ஏற்படுகின்ற மாற்றங்கள், தவறுகள், அதன் போக்கு போன்றவற்றை உன்னிப்பாக அவதானித்து உங்கள் நிறுவனத்தின் பொருட்கள் அல்லது சேவைகளில் ஏற்படுத்துகின்றனர் மாற்றங்கள் ஒரு புதிய போக்கை (trend) உங்கள் வியாபாரத்தில் உருவாக்கும். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல சந்தை வாய்ப்பை ஏற்படுத்த ஏதுவாகும். அத்துடன் புதிய புதிய யோசனைகள் உங்கள் ஊழியர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுக்கும்.

9. அகங்காரம் இருத்தல் கூடாது (No Egos) புதிய புதிய எண்ணங்கள், கருத்துக்கள் எப்பொழுதும் எல்லோரிடத்திலும் ஏற்படுவதில்லை. எனவே உங்கள் நிறுவனத்தை ஒரு வரையறைக்குள் வைத்திருக்காது விரிவுபடுத்துதற்குச் சிறந்த ஆலோசனைகளை எந்த மட்டத்திலிருந்தும் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக உங்களிடத்திலிருக்கும் அகந்தையைத் தவிர்த்தல் வேண்டும்.

10. நீங்கள் வணிகம் தொடர்பாக அனைத்து விடயங்களும் அறிந்தவரல்ல (You Don’t Know It All): உங்களால் முன்வைக்கப்படும் அனைத்து முன் யோசனைகளும் சரியானவை என்ற உத்தேசத்தின் அடிப்படையில் வைக்கப்படுகின்றன. இவை சில சமயங்களில் ஆபத்தானவை ஆகவும் இருக்கலாம், ஏனெனில் இவை இந்த நிறுவனத்திலிருந்து உருவாக்கப்பட்ட முன்மொழிவுகளாகும். உங்களை விடஇந்த வணிகத்தில் சிறந்து விளங்குபவர்கள் இருக்கலாம். எனவே சில சமயங்களில் அவர்களுடைய உதவியை நாட வேண்டியது சிறந்ததாக இருக்கும்.

11. விற்பனை ஊழியர்கள் மீதான கட்டுப்பாடு (Control Sales Staff): விற்பனை ஊழியர்களின் மீதான குறைந்தளவுக் கட்டுப்பாடு புதிய வாய்ப்புக்கள் தவறிப்போவதையும், நேரவிரயத்தையும் ஏற்படுத்தும். உதாரணமாக,உங்கள் விற்பனை பிரதிநிதிகள் ஒரு சிறிய வட்டத்திற்குள்ளே அவர்களுக்கு ஆதரவு இருந்தால், அங்கே தங்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கிடையே விற்பனை செய்யக் கூடியவர்களாகவும், நீண்ட நேரத்தை அவர்களுடன் செலவிடுவதனால் புதிய வாய்ப்புக்களைத் தவற விடுகின்றார்கள். எனவே அவர்களுக்குரிய வேலைத் திட்டத்தை உருவாக்கிக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அதனை மீளாய்வு செய்தல் வேண்டும்.

12. விற்பனை சந்தைப்படுத்தல் செயற்கருவியை உருவாக்குதல் (Create Tools) நீங்கள் உங்கள் பணியாளர்களுக்கு முறையான விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கானசெயற்கருவியை உருவாக்க முடியவில்லை என்றால்,நீங்கள் அவர்களின் வேலைகள் மிகவும் கடினமாக்குகின்றீர்கள். எனவே அவர்களுக்குரிய செயல் பொறிமுறைக் கருவியை உருவாக்கி அவற்றைத் திறம்படச் செய்வதற்கான பயிற்சியை அளித்தல் வேண்டும்.

 13 .மனதில் பதியும் வகையில் செயற்பொறிமுறைக் கருவி ஒரு சிறு தொழில் தோல்விக்கு வழக்கமாக நிதிநிலைமைகள் காரணங்களாகின்றன. துரதிருஷ்டவசமாக, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற பல காரணிகளும் இந்த வியாபார விழ்ச்சிக்கு காரணமாக அமைகின்றன. அதிர்ஷ்டவசமாக, பெருமளவில் உங்கள் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கின்ற திடமான நேர் படிமுறைகள் (positive step) இருக்கிறது. 

11. உங்கள் பலவீனங்களுக்கு முகம் கொடுத்தல் (Face Your Weaknesses): உங்கள் பலவீனங்களை இனம் கண்டு அவற்றை எதிர் நோக்குதல் மற்றும் உங்களிடத்தில் இயல்பாகக் காணப்படுகின்ற பலங்களைப் பயன்படுத்திக் கொள்ள போதிய முயற்சி இன்மை போன்றவை உங்கள் வணிகத்தின் வளர்ச்சியின்மைக்கு அடிப்படையான காரணியாகும். இரண்டு காகிதத் துண்டுகளை எடுத்து ஒன்றில் உங்கள் நிறுவனத்தின் பலம் மற்றையதில் அதனுடைய பலவீனங்கள் அல்லது குறைகளைப் பட்டியல் இடுங்கள். நீங்கள் உங்கள் நிறுவனத்தின் வலிமைகளை, உங்கள் ஒவ்வொரு பணியாளர்கள், வாடிக்கையாளர்கள்,வாடிக்கையாளராகக் கூடிய வாய்ப்புக்கள், மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்குத் தெளிவுபடுத்தும் வழிகளில் இருக்க வேண்டியதைக் கவனிக்கவும். பலவீனங்களைக் குறிப்பிட்ட துண்டில், ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வாகக் கூடிய சரியான படிமுறைகளைக் கண்டறியுங்கள். பின்னர் உங்கள் பணியாளர்களுடன் நீங்கள் எடுத்த குறிப்புகளைக் கலந்தாலோசித்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையை உருவாக்குதல் வேண்டும்.

12. நடவடிக்கை எடுத்தல் (Take Action): 

உங்களால் விருத்தி செய்யப்பட்டுத் தொடரப்படும் ஒரு பெரிய சந்தைப்படுத்தல் நிகழச்சித்திட்டமானது இரு வேறுபட்ட நடவடிக்கைகளைக் கொண்டது. இந்நிகழ்ச்சி திட்டத்தை அமுல்படுத்துதல் என்பது சந்தைப்படுத்தலின் வெற்றிக்கு மிக முக்கியமான திறவுகோலாகும். நீங்கள் விரும்பும் அனைத்தையும் திட்டமிடுக, ஆனால் இதனைச் செயற்படுத்த, உங்களால் இனம் காணப்பட்ட படிமுறைக்கமைவாகவே உங்களைத் தயார் செய்யுங்கள். அவ்வாறு செய்கையில், ஆரம்பத்தில் நீங்கள் கருத்தில் எடுக்க முடியாத என்ற சில படிமுறைகளைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டாம். 

13. பதில் கூறும் கடப்பாடும் பொறுப்பும் (Accountability and Responsibility): பதில் கூறும் கடப்பாடு மற்றும் பொறுப்பு இவை இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ளுதல் வேண்டும். உங்கள் பணியாளர்களும் விநியோகிஸ்தர்களும் உணர்ந்து பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள், இதனால் அவர்கள் உங்களுக்கும் நிறுவனத்திற்கும் பதில் கூறும் நிலைமைக்கு ஆளாகின்றார்கள். அது இப்போது அவர்களுடைய வேலை எனவே, அது அவர்கள் முடிக்க வேண்டிய பணியாகிவிடுகின்றது.

14. வியாபாரத்தில் விளையாடல் ஆகாது (Don’t Play At Business) : வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் இதனை ஒரு விளையாட்டாக எண்ண வேண்டாம். ஏனெனில் இது ஒரு பொழுதுபோக்கு அல்லது நேரத்தைக் கடத்துவதற்குரிய விடயமல்ல. நீங்கள், உங்கள் பணியாளர்கள், விநியோகித்தவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு செய்தியைக் கொடுப்பதாகச் சிந்தியுங்கள். வாடிக்கையாளருக்கும் வணிக நிறுவனத்தின் வெற்றிக்கும் ஒரு உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்படின் அது கடினமான அல்லது கஷ்டமான வேளைகளிலும் தொடரக் கூடியதாக இருக்கும். இது வருங்காலத்தில் நிறுவனத்தின் வெற்றிக்கு இட்டுச் செல்லக்கூடியதாக இருக்கும்.

15. முன் திட்டமிடப்படாத சந்தைப்படுத்தலைத்தவிர்த்தல் (Avoid Ad Hoc Marketing): முழுமையான சந்தைப்படுத்தல் பற்றிய திட்டமின்றி தொடங்கப்படும் எந்தவொரு வர்த்தகமும் வெற்றி பெறாது. எனவே ஓர் ஆண்டுக்குரிய சந்தைப்படுத்தல் திட்டத்தைத் தயார் செய்து அல்லது குறைந்தபட்சம் ஒரு முழுமையான பருவத்திற்குரிய திட்டத்தையேனும் தயாரித்து நடைமுறைப்படுத்துதல் தொடர்ச்சியான வெற்றிப் பாதையில் வணிகத்தை இட்டுச் செல்ல உதவும்.

16. தெய்வங்கள் இங்குண்டு ஒரு புதிய தொழிலைத் தொடங்குவது எப்போதுமே பெரும் பொறுப்பு, கடினமான சில சமயங்களில் தோல்வியின் அபாயத்தால் நிறைந்திருக்கும். இது ஒரு வளர்ந்து வரும் தொழில்முனைவோரிடமிருந்து வெற்றி பெற நிறைய முயற்சி எடுக்கும். ஆனால் உங்கள் சொந்த வணிகம், உழைப்பு இறுதி முடிவுகள் மிகவும் சிறப்பானவை. நாம் இங்கே மட்டுமல்ல, பணத்தைப் பற்றியும் அதிகம் பேச முடியாது. வெற்றியை அடையும் ஒரு நபர் அனுபவிக்கும் பெருமையைப் பற்றியும் திருப்தி இங்கே ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது உண்மையிலேயே ஒப்பிடமுடியாத உணர்வு. இது வெற்றியின் உணர்வு, வெற்றியின் உணர்வு மற்றும் சுய மதிப்பு.

தொடக்கத்தில் நிறையத் தவறுகளைச் செய்யாமல் இருப்பதற்கும், ஒரு புதிய தொழில்முனைவோர் விரும்பும் அனைத்தையும் இறுதியில் அடைவதற்கும், மிக முக்கியமான ஆலோசனைகளைத் தந்துள்ளேன். கனவு. பெரிய கனவு காணப் பயப்பட வேண்டாம். நீங்களும் உங்கள் வணிக யோசனையும் தான் உலகை வெல்லும் என்று கனவு காணுங்கள். பெரியவரின் சிறிய கனவுகளில் அவர் வெற்றியை அடைகிறார்; கனவுகளைச் செயலுடன் ஆதரிக்கவும்.அவர் மட்டுமே வெற்றியை அடைகிறார், யார் கனவுகள் மட்டுமல்ல, செயல்படுகிறார். உங்கள் செயல்களின் முடிவுகளை எப்போதும் முடிவுக்குக் கொண்டு வாருங்கள். எப்போதும் “கனவு காணுங்கள்”. இப்போது தொடங்கவும். இப்போது; உங்களையும் உங்கள் வணிகத்தையும் நம்புங்கள்.நீங்கள் அதிருப்தி அடைவீர்கள். அனைத்துமே இல்லையென்றால் பல. பழக்கமானவர்கள், உறவினர்கள், நண்பர்கள். நீங்களே கேளுங்கள். உங்கள் தேர்வு மற்றும் முடிவில் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் விருப்பத்தை அமைதியாகவும் கண்ணியமாகவும் விவாதித்து பாதுகாக்கவும். உங்கள் தயாரிப்பு அல்லது சேவையில் நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றியை முதலில் நம்பும் நபராக நீங்கள் இருக்க வேண்டும், உங்கள் வணிகம் பொருத்தமாக இருக்க வேண்டும். உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும், பங்கு தாரர்களுக்கும் மட்டுமல்ல, உங்கள் வணிகம் முக்கியமானது மற்றும் அவசியமானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வணிகம் முடிந்தவரைப் பலருக்குத் தேவைப்பட வேண்டும். 

தவறுகளுக்குப் பயப்பட வேண்டாம்.பிழைகள் இல்லாத வாழ்க்கையும் வியாபாரமும் இல்லை. தவறு செய்யப் பயப்பட வேண்டாம், ஆனால் அவற்றை மீண்டும் செய்ய வேண்டாம். தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நிறையப் படித்து மற்றவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். இது மலிவானது; வாய்ப்புகளைக் கண்டறியவும். உங்களில், மக்களில், ஒரு சூழ்நிலையில், முதலியன. எப்போதும் வாய்ப்புகள் உள்ளன. பலர் வெறுமனே அவர்களைப் பார்க்கவில்லை அல்லது அவர்களைப் பார்க்க விரும்பவில்லை. வாய்ப்புகள் இல்லாததால் ஏற்படும் சிரமங்களுக்குப் பயப்பட வேண்டாம். சிந்தியுங்கள், தேடுங்கள் மற்றும் வாய்ப்புகளைத் தேடுங்கள். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், அவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். உண்மையில் அவற்றில் நிறைய உள்ளன; அனைவருக்கும் ஒரு வழி இல்லை. பத்து லட்சம் சம்பாதிக்கப் பல வழிகள் உள்ளன. ஆனால் அனைவருக்கும் ஒற்றை மற்றும் பொருத்தமான செய்முறை எதுவும் இல்லை. எல்லாமே மிகவும் தனிப்பட்டவை மற்றும் தனிப்பட்ட குணங்கள், பண்புக்கூறுகள் மற்றும் பத்து லட்சத்தை சம்பாதிப்பவர்கள் அல்லது அதைக் கனவு காண்பவர்களின் வளர்ப்பைப் பொறுத்தது. உங்கள் சொந்தக் குணாதிசயங்களுக்கு நிலைமையைத் தனிப்பயனாக்கவும், நேர்மாறாகவும் அல்ல. 

உங்கள் ஆரம்பத் திட்டம் செயல்படவில்லை என்றாலும், இரண்டாவது, மூன்றாவது பத்தாவது வேலை செய்யாது என்று அர்த்தமல்ல; திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தவும். தெளிவான மற்றும் யதார்த்தமான திட்டங்களை உருவாக்குவது மிகவும் முக்கியம், குறிப்பாக ஒரு வணிகத்தின் தொடக்கத்தில். இன்று, நாளை, நாளை மறுநாள், ஒரு மாதத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதற்கான தெளிவான படத்தை வைத்திருங்கள். நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள், அதை எவ்வாறு அடைவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆனால் வாழ்க்கையில் “காகிதத்தில்” எழுதப்பட்டதை அவர்கள் எப்போதும் உணர முடியாது என்பதை அறிந்து புரிந்து கொள்ளுங்கள்: இங்கே முக்கிய விஷயம் என்னவென்றால், திட்டத்தைச் செயல்படுத்துவதில் செய்யப்பட்ட மாற்றங்கள் அதைத் தீவிரமாக மாற்றவோ அல்லது உடைக்கவோ இல்லை; உங்கள் வணிகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.உங்களுக்குப் புரியாத ஒரு தொழிலைத் தொடங்குவது நிறையச் செலவாகும் என்பது ஒரு தவறு என்பது தெளிவாகிறது. ஆனால் நீங்கள் நல்ல ஒரு தொழிலைத் தொடங்கினாலும், நிறுத்த வேண்டாம். 

தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள், உங்கள் வணிகம் மற்றும் தொடர்புடைய பகுதிகளைப் பற்றி மேலும் அறிக. உங்கள் வணிகத்தில் வழங்கல் மற்றும் தேவைக்கு என்ன காரணம் என்பதை அறிந்து இந்தச் செயல்முறைகளைக் கட்டுப்படுத்தவும். கட்டுப்பாட்டுச் செலவுகள் மற்றும் மேலாண்மை. உங்கள் வணிகத்தை எப்படியாவது பாதிக்கக்கூடிய முக்கியமான அனைத்தையும் கட்டுப்படுத்தவும். நிதி சிக்கல்களைப் புரிந்து கொள்ளுங்கள். புரிந்துகொண்டு கட்டுப்படுத்தவும். உங்கள் நிறுவனத்தின் வருமானம் மற்றும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும். நீங்கள் தனிப்பட்ட முறையில் எப்படி, எப்போது, எவ்வளவு சம்பாதிப்பீர்கள், உங்கள் நிறுவனம் எவ்வளவு சம்பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் வணிகத்தின் நிதி செயல்திறனைத் தனிப்பட்ட முறையில் புரிந்து கொள்ள முடிந்த அனைத்தையும் செய்யுங்கள், ஆனால் நிறுவனத்தில் ஒரு கணக்காளர் அல்லது பல கணக்காளர்கள் உள்ளனர்.

 உண்மையான குறிகாட்டிகளையும் எண்களையும் அறிந்தால், உங்கள் வணிகம் இப்போது எங்கே இருக்கிறது, எதிர்காலத்தில் அது எங்கிருந்து வரும் என்பதை நீங்கள் அறிவீர்கள், அதாவது தேவைப்பட்டால் அதன் பாதையை விரைவாகப் பாதிக்க முடியும்; உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து மதிக்கவும். உங்கள் வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை என்றால், நீங்கள் தோல்வியடைவீர்கள். உங்கள் வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகிறார்கள், அவர்களுக்கு என்ன பிரச்சினைகள் உள்ளன என்பதை எப்போதும் கண்டுபிடித்து, இந்தச் சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்று சிந்தியுங்கள். உங்கள் போட்டியாளர்களின் சேவைகள் அல்லது தயாரிப்புகளில் நுகர்வோர் ஏன் திருப்தி அடையவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்? ஒவ்வொரு வாடிக்கையாளருடனும் தனிப்பட்ட முறையில், விரைவில் பேசுங்கள். அவர்கள் அனைவரையும் கவனித்து மதிக்கவும். உங்களுக்கு மிகவும் இனிமையான அல்லது எரிச்சலூட்டாதவர்கள் கூட. நினைவில் கொள்ளுங்கள்: வணிகத்தில் நண்பர்கள் மற்றும் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் இல்லை. தொழில்முனைவு ஒரு சவால். உங்கள் இருக்கும் ஆறுதலுக்கும், இணக்கமான மற்றும் அளவிடப்பட்ட வாழ்க்கையின் தாளத்திற்கும் ஒரு சவால். தொழில்முனைவு என்பது எப்போதுமே இருக்கும் வசதியையும் ஆபத்தையும் இழப்பதாகும், ஏனென்றால் ஆபத்துடன் வசதியான மற்றும் அமைதியான வாழ்க்கை இல்லை. இதைப் புரிந்துகொள்வது முக்கியம். வியாபாரத்தில் வெற்றியை அடைவது ஒரு துணிச்சலான தொழில்முனைவோர் மற்றும் புத்திசாலித்தனமாக மட்டுமே! 17. சாதித்தவர்கள் சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் மூளை இருக்கிறது குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியைச் செலுத்தாத பொறுப்பு இருக்கிறது நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது இப்போது சொல்லுங்கள், உங்களிடம் என்ன இருக்கிறது?

18.இறுதியாக சில வார்த்தைகள்… மறைந்த முன்னாள் ஜனாதிபதி அவர்கள் சொன்ன “கனவு காணுங்கள்” என்ற வாசகத்தை இன்று வரையிலும் பலரும் விமர்சனம் செய்வதுண்டு. அதென்ன? கனவு கண்டால் எல்லாம் நம் கைக்கு வந்து விடுமா?  இதன் உண்மையான அர்த்தம் என்ன? கல்லூரி முடிக்கும் வரையிலும் உங்கள் மனதில் வாழ்க்கை குறித்த பயமிருக்காது. வேலையில் உடனே சேர்ந்தாலும், போராட்டத்தில் அலைந்து கொண்டிருந்தாலும் உங்கள் மனதில் கனவு காண வாய்ப்பு இல்லை. தக்க வைப்பது எப்படி? தன்னை தகுதி உள்ளவனாக மாற்றிக் கொள்வது எப்படி? இந்த இரண்டு கேள்விகள் தான் உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். பிறகெப்படி கனவு காண்பது? நிஜ வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நாம் நினைப்பதற்கு எதிர்மாறாகவே இருக்க எது சரி? எது தவறு? என்பதனை உணர நமக்கு நாளாகும்.  நன்றாகக் கல்வி கற்றவர்கள் தனக்குரிய இடத்தை அடையத் துன்பப்பட்டுக் கொண்டே இருக்க, நம்மைவிடப் பலவிதங்களில் திறமைகளில் பின்தங்கியுள்ளவர் என்று நம்பக்கூடியவர்கள் பல துறைகளில் வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்வில் பார்க்கின்றோம். ஏன்? உங்கள் மனம் தான் உங்களை ஆட்சி செய்கின்றது. வழி நடத்துகின்றது. வழி காட்டுகின்றது என்பதனை உணருங்கள். 

ஆன்மீக நம்பிக்கைகள் இருக்கலாம்? பகுத்தறிவு தான் சிறந்தது? என்பதனை நம்பலாம்.  அவைகள் தனியாக இருக்கட்டும். ஆனால் உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். கவனியுங்கள்.  உணர்த்தும். வழிகாட்டும். உணர்வது முக்கியம். யாரும் சொல்லித் தர முடியாது. உங்களின் அந்தரங்கமான செயல்பாடுகளை, எண்ணங்களை நீங்கள் மட்டுமே உணர முடியும். உங்களுக்குத்தான் உங்களைத் தெரியும்.  கலை, வணிகம், அரசியல், குடும்ப வாழ்க்கை எதுவாக இருந்தாலும் நீங்கள் தான் உங்களுக்கு ஆசான். அதன் பிறகே சூழல் உங்களை வழி நடத்தும். உணர்ந்து செயல்படக்கூடியவர்களுக்கு வழி காட்டும். உங்கள் மன எண்ணங்களும் அறிவு சார்ந்த எண்ணங்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே உங்கள் பாதை சரியாக இருக்கும். எண்ணம் வேறு. செயல்பாடுகள் வேறு என்று வாழ்பவர்களால் எந்தக் காலத்திலும் இலக்கை அடைய முடியாது.  “கனவு காணுங்கள்” என்பதனை வேறு விதமாக யோசித்துப் பாருங்கள். நான் ஒன்றை விரும்புகிறேன். அதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். 

அதனை கற்றுக் கொள்ள ஆசைப்படுகின்றேன். அதன் தற்போதைய நிலையைப் புரிந்து கொள்ள முயல்கிறேன். அது குறித்த நேர்மறை எதிர்மறையை உள்வாங்குகிறேன். அதன் சாத்தியக்கூறுகளை அலசும் திறமையைப் பெற்றுள்ளேன் என்பது தான் உங்கள் வெற்றிக்கான முதல்படி. அந்த எண்ணங்கள் தான் உங்கள் கனவு, லட்சியம், நோக்கம், விருப்பம்.  அது உங்களை ஆட்சி செய்ய வேண்டும். அதனை நீங்கள் உள்ளார்ந்து அனுபவிக்க வேண்டும். அந்த எண்ணங்கள் உங்களை வழி நடத்தும். வழி காட்டும். வழியை உருவாக்கும். எண்ணங்கள் முழுமையும் பொறாமையை மட்டும் வைத்துக் கொண்டே வாழ்பவர்களால் தன் சூழலை உணர வாய்ப்பிருக்காது. கவனம் சிதறும். கைகூடும் காரியங்கள் வெற்றியைத் தராது.  உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், அனுசரிக்கும் திறனும் ஒன்று சேரும் போது மட்டுமே கனவுகள் கைகூடும். இப்படித்தான் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் இங்கே சாதித்துள்ளார்கள். வணிகம் என்பது உங்கள் வாழ்நாளில் வெற்றியைத் தரக்கூடியது அல்ல.

 உங்களுக்கு உங்கள் வாழ்நாளில் சாத்தியங்களை உருவாக்காமல் போகலாம். “காற்றடிக்கும் போது மாவு விற்கப் போனேன்.  மழை வரும் போது உப்பு விற்கப் போனேன்” என்று சந்தர்ப்பச் சூழல் சதிராட்டம் நடத்தும். கவலைப்பட வேண்டாம். ஆனால் உங்கள் முயற்சிகள் உங்கள் தலைமுறைக்கு வழிகாட்டக்கூடும். மனித இனம் மட்டுமே வாழ்நாளின் இறுதி வரைக்கும் கற்றுக் கொள்ளக்கூடிய உயிரினமாக உள்ளது என்பதனையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றி என்பது மனதோடு மட்டும் தொடர்புடையது அல்ல.  அதுவொரு ஆத்ம திருப்தி. ஆயிரம் ரூபாயாக இருக்கலாம். ஆயிரம் கோடியாகவும் இருக்கலாம். ஆனால் நான் திருப்தியாக வாழ்ந்துள்ளேன் என்பது முக்கியம். அதற்கு உங்கள் எண்ணங்கள் உரமாக இருக்க வேண்டும். எண்ணங்களைத்தான் கனவு என்கிறார்கள். இதைத்தான் “தூங்கவிடாமல் செய்வது தான் கனவு” என்றார் அப்துல்கலாம்.

நன்றி: ஜோதிஜி

Related Articles

செல்போன் டவர் தெரியும், சீனத்தின் காற்று... இன்று செல்போன் டவர் இல்லாத கிராமங்கள் குறைவு. செல்போன் டவர் வைத்துத் தான் முகவரி அடையாளம் சொல்லும் அளவுக்கு அவை பெருகி விட்டன. கதிர்களைப் பரப்பிக்கொண்...
தமிழ் நாட்டின் முதல் பெண் டைரக்டர் டி. ப... ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் 1911 ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். சொந்த ஊர்: தஞ்சை மாவட்டம் திருவையாறு. தந்தை பஞ்சாபகேச அய்யர், கிராம கணக்க...
சன்ரைர்ஸ் ஹைதராபாத் (SRH) ஐபிஎல் 2018 அண...  வரிசை எண் போட்டி எண் தேதி சன்ரைர்ஸ் ஹைதராபாத் போட்டிகள் நேரம் இடம்1 4 9-ஏப்ரல் ஹைதராபாத் vs ராஜஸ்தான் 8:00 PM ஹைதர...
நாடக கலைஞர்களை இளைஞர்கள் ஆதரிக்க வேண்டும... சமீபத்தில் வெளியான படம் சீதக்காதி. அந்தப் படத்தில் நாடக கலைஞர்களின் வாழ்க்கை முறைகளை மிக அற்புதமாக காட்டி இருந்தது படக்குழு. அந்தப் படத்தில் காட்டப்பட...

Be the first to comment on "தொழில் தொடங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷியங்கள்! – பகுதி 3"

Leave a comment

Your email address will not be published.


*