உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்த பதவி குறித்து எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

What do the writers says about Udayanidhi Stalin's new post in DMK

எழுத்தாளர் அராத்து:

இவரின் நியமனத்தால் திமுகவிலேயே அதிருப்தி நிலவுகிறது. வெளியிலும் எக்கச்செக்க விமர்சனங்கள். உதயநிதியை விட்டால் திமுகவில் தகுதியானவர்கள் யாருமில்லையா ? கட்சிக்கு உழைத்தவர்கள் யாருமில்லையா ? என்ற கேள்விகள் தான் பிரதானமானவைகள். 

சரி , இந்தப் பதவிக்கு இப்போது திமுக வில் தகுதியானவர்கள் யார் யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள் பார்ப்போம். யாருமில்லை .இருந்தாலும் நமக்குத் தெரியாது. அப்படி ஆக்கி விட்டார்கள். 

ஸ்டாலின் முன்னேறி வந்து கொண்டிருந்த காலத்தில் அவருக்கு போட்டியாளராக அப்போது வைகோ இருந்தார். 

அதைப்போன்ற ஆளுமைகள் இப்போது திமுக இளைஞர்கள் மத்தியில் இல்லை. 

திமுகவில் , புது எழுச்சியாய் , தொண்டர்கள் செல்வாக்குப் பெற்ற புது இளைஞர்கள் உருவாகவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக திமுகவில் புது தலைவர்கள் , புது ஆளுமைகள் உருவாகவில்லை. 

திமுகவில் சேரும் இளைஞர்களும் ,திமுக இளைய அனுதாபிகளும் , பழம் பெருமைகளைத்தான் பேசிக்கொண்டு இருக்கிறார்களே தவிர யாரும் தலைவனாக உருவெடுக்க வில்லை. 

கலைஞர் , ஸ்டாலின் பெருமை பேசிக்கொண்டும் , மாவட்ட அளவில் மாவட்ட செயலாளர்கள் துதி பாடிக்கொண்டும் , அவர்களது வாரிசுகளுக்கு சொம்பு தூக்கிக்கொண்டும் கிடக்கிறார்கள் திமுக வின் தற்போதைய இளைஞர்கள். 

இவர்களாகவே இப்படி ஜால்ரா கோஷ்டிகளாக , அடிமைகளாக இருக்கிறார்களா ? அல்லது திமுக இவர்களை அப்படி வைத்திருக்கிறதா என்பது விவாதத்திற்குரிய விஷயம். 

திமுக என்னும் கட்சி அப்படி வைத்திருந்தாலும் , அதையெல்லாம் மீறி உடைத்துக்கொண்டு வருபவன் தலைவன்.தொண்டர்கள் செல்வாக்கு பெற்று , மக்கள் ஆதரவும் பெற்று ஒருவன் திமுக இளைஞரணியில் உருவாகியிருந்தால் ,இப்போது உதயநிதி நியமனத்தை எதிர்த்து அவனின் ஆதரவாளர்கள் போராடியிருக்கக் கூடும். 

இப்போது , உதயநிதியை நியமித்ததை விமர்சிக்கிறார்களே ஒழிய , மாற்று யார் என்ற கேள்விக்கு யாரிடமும் விடையில்லை.

எழுத்தாளர் இரா. முருகவேள்:

உதயநிதி இளைஞர் அணிச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றால் அந்தக் கட்சிக்குள் என்னென்ன விதமான உள் அரசியல் நீரோட்டங்கள் செயல்படுகின்றன என்று பார்ப்பதுதானே இடதுசாரி அணுகுமுறை? 

உதயநிதிக்குப் பதவி வழங்கப்பட்டிருப்பது ஸ்டாலின் விருப்பம் என்பது ஒரு விஷ்யம். உதயநிதி இல்லையென்றால் ஸ்டாலின் யாரைத் தேர்ந்தெடுப்பார்? அவருக்கு என்ன சாய்ஸ் இருக்கிறது?

ஒரு சாதிக்கரரை இன்னொரு சாதிக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு இரண்டாம் மட்டத் தலைவரின் மகனை இன்னொரு குடும்பம் ஏற்றுக் கொள்ளாது . . .

எனவே யாரும் மறுக்காதவிதத்தில் தலைவரின் குடும்பத்திலிருந்து  ஒருவரை இறக்குமதி செய்வது எளிது. மூப்பனாரின் இறுதிக் காலத்தில் வாசனை அரசியலுக்குக் கொண்டு வரச் சொல்லி கட்சிக்காரர்களே வற்புறுத்தினார்களாம். அல்லது ஆகாயத்திலிருந்து குதித்தது போல எந்தக் குழுவையும் சேராத ஜெயலலிதா போன்ற ஒருவரை இறக்குமதி செய்ய வேண்டும். 

உதயநிதியைத் தேர்ந்தெடுத்தது சரியா தவறா என்ற கவலை நமக்கு எதற்கு? ஒரு முதலாளித்துவக் கட்சிக்குள் என்னென்னவிதமான குழுக்கள் அதிகாரத்துக்காக முட்டி மோதுகின்றன? அவற்றின் பலம், இடையே உள்ள முரண்பாடுகள் பற்றி அறிந்து கொள்ள இந்தச் சூழலைப் பயன்படுத்தலாம் அல்லவா? 

திமுக, அதிமுக, காங்கிரஸ், பிஜேபி எல்லாம் ஜனநாயக முறைப்படி தேர்தல் வைத்து தலைவர் செயலாலர் தேர்ந்தெடுத்தால் மட்டும் அந்தக் கட்சிகளில் அரசியலை ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன?

எழுத்தாளர் மாரிதாஸ்: 

திமுக என்ற கட்சியின் பட்டத்து இளவரசர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எங்கே எந்த நேரத்தில் விவாதம் மக்கள் முன் அழைத்தாலும் காத்திருக்கிறேன். 2006-2011 வரை மட்டும் திருவாளர் கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த அயோக்கியத்தனத்தினை மாத விவரங்களுடன் 100% அசைக்க முடியாத ஆதாரங்களுடன் பேச நான் தயார். 

எனவே உதய நிதி அடிப்பொடிகள் , சுயமரியாதை என்றால் என்ன என்று கூட தெரியாத ஒரு குடும்பத்தின் அடிமை உடன் பிறப்புகள் எவருக்கும் நான் தனித் தனியே பதில் கொடுக்க விரும்பவில்லை. நான் இப்போதும் கூறுகிறேன் லாட்டரி மார்டீன் -விவகாரத்தை எடுத்துப் பேசினால் மொத்த சென்னையும் காறித் துப்பும் அளவிற்கு நான் ஆதாரங்களை மக்கள் முன் வைத்து விவாதம் செய்யத் தயார். 

வேண்டும் என்றால் உங்கள் அடிமை ஊடகங்களையும் அழைத்து வாருங்கள் ஒரு பொது மேடையில் சந்திக்கலாம். 

எனவே இந்த அவனே இவனே என்ற பேச்செல்லாம் வேண்டாம். உங்கள் கம்பெனி ஓனர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் சொல்லுங்கள் எங்கே எப்போது வேண்டுமானாலும் பொது மக்கள் மத்தியில் விவாதம் நடத்த மாரிதாஸ் தயார். 

20 , 30 மீம்ஸ் தயாரிக்கும் ஆட்களை வைத்துக் கொண்டு – 10 , 20 பக்கங்களை மறைமுகமாக நடத்திக் கொண்டு – அவர்களை வைத்து அவதூறாகப் பதிவுகள் போடுவதெல்லாம் சரி உங்கள் சந்தோசத்திற்குச் செய்து கொள்ளுங்கள் அதற்கு முன் வாருங்கள் உதய நிதி ஸ்டாலின் அவர்களே. இல்லை திமுக அதிகாரப் பூர்வமாக எந்த நபரை விவாதம் செய்ய முன் வைத்தாலும் சரி நான் தயார். உதய நிதிக்குப் பதிலாக அவர் என்னோடு விவாதம் செய்ய வரவேண்டும். 

நான் தமிழ் அது இது என்று எல்லாம் பேச விரும்பவில்லை நிர்வாகம் என்ன செய்தார்கள் என்ன கொள்ளை அடித்தார்கள் என்று பேச விரும்புகிறேன். சரியா? எனவே வரும்போது உங்கள் பினாமி விசயங்களையும் எடுத்து வைத்து கொண்டு விவாதம் வரவும்.

விவாதத்தின் தலைப்பு இப்படி வைத்து கொள்ளலாம் 

1.காமராஜர் படிக்க வைத்தார் – கருணாநிதி குடிக்க வைத்தார்.

தலைப்பு பிடிக்கவில்லை என்றால் 

2.ஏரி திருடன் எங்கே?

இந்த தலைப்பு இலக்கியம் போல இருக்கா. வேண்டுமானால் உங்கள் உலக வியாக்கிதம் பேசும் கம்யுனிஸ்ட் கட்சியினரை வைத்து கொள்வோம் நடுவராக. வெக்கம் கெட்ட கம்யுனிஸ்ட் கட்டாயம் முட்டுகொடுக்க வருவர். குழப்பமாக இருந்தால் “நீதாண்டா லூசு” புகழ் அருணன் அவர்களை அழைத்து கொண்டு வரவும்.

இல்லை என்றால் கடைசி வரை மீம்ஸ் போட்டுகிட்டே இருங்க.

Related Articles

சூப்பரான படம்! மொக்கையான படம்! சுமாரான ப... ஒரு படத்தை பார்த்தால் நமக்கு மூன்றுவிதமான உணர்வுகள் ஏற்படும். ஒன்று - படம் சூப்பர்ப்பா... இந்தப் படத்த எத்தன தடவ வேணாலும் பார்க்கலாம் என்று சொல்ல வைக்...
உலகிலயே அதிகமான ஊட்டச்சத்து கொண்ட உணவுப்... அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் உலகிலேயே அதிகமான ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பட்டியலில் " பழைய சோறு " முதலிடம்! பழைய சாதம், பழைய சோறு, ப...
திருநங்கைகளின் வேலைவாய்ப்பு கனவுகளை திரு... நல்ல உடல் நலனுடனும், மன நலனுடனும் இருப்பவர்கள் கூட சமுதாயத்தில் படித்து ஒரு அரசு வேலையைப் பெறுவது என்பது இன்றைய கால கட்டத்தில் மிகப் பெரிய சவால். ஆனா...
“பர்த்டே செலிபிரேசன் வீடியோ லின்க்... கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளம் முழுக்க அதிகம் பேசப்பட்ட வார்த்தை "link bro" என்பது தான். இலங்கையை சேர்ந்த இளம் காதல் ஜோடியின் உல்லாச வீடிய...

Be the first to comment on "உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்த பதவி குறித்து எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள்?"

Leave a comment

Your email address will not be published.


*