பஞ்சமி நிலம் என்றால் என்ன? அசுரர்கள் யார்? அசுரன் படம் நல்லிணக்கத்தை கெடுக்கிறதா?

What is Panjami Land

பஞ்சமி நிலம் என்றால் என்ன? அசுரர்கள் யார்? அசுரன் படம் நல்லிணக்கத்தை கெடுக்கிறதா? என்ற கேள்விகளுக்கான பதில்கள் ராஜகோபாலன் என்பவரின் அசுரன் விமர்சன முகநூல் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது. 

1.பஞ்சமி நிலம் என்றால் என்ன?

1890களில் ஆங்கில கலெக்டர்களில் அரிதான ஒரு நல்லவர் செய்த முயற்சியால்… இந்த மக்களுக்கு சொந்த இடம் இல்லையெனில் இவர்களின் வாழ்க்கை தரம் உயராது உயர விட மாட்டார்கள் என அவரின் பரிந்துரையின் பேரில்…. ஆதி திராவிடர் தலித் மக்களுக்கு இலவச இடங்கள் ஒதுக்கப்பட்டது.. அவர் எழுதிய பரிந்துரையின் ஒரு வரி….” அவர்கள் கழுவும் பாத்திரங்களிலிருந்து வரும் நீரினால் வளர்ந்த மிளகாய் செடியில் ஒரு மிளகாயை கூட அவர்களுக்கு பறிக்க உரிமை இல்லை” … இந்த ஒற்றை வரி just sums up எத்தகைய அநீதி ஆண்டாண்டு காலமாக ஒருபெரும் கூட்டத்துக்கு இழைக்கப்பட்டதென…

இந்த பரிந்துரையின் பேரில், கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் 25 லட்சம் ஏக்கர் இடங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது… மெட்ராஸ் மாகாணத்தில் மட்டுமே 12 லட்சம் ஏக்கர்… 

நால்வகை வர்ணாஸ்ரமே மனித சமூக நீதிக்கு அவலம்…அந்த நால்வகை வர்ணத்தில் கூட இவர்களை சேர்க்காமல் ஒதுக்கி வைக்கப்பட்ட இவர்களை பஞ்சம மக்கள் , பஞ்சமர்கள் என அழைப்பர்.. அதனால் இந்த நிலத்துக்கு பெயர் பஞ்சமர் நிலம், பஞ்சமி நிலம் என அழைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் DC land.. அதாவது Depressed Class Lands.

இந்த நிலங்களை கீழ்மட்ட மக்கள் மட்டுமே உபயோகிக்க முடியும், குத்தகைக்கு விட முடியும்….அதை மீறி மேல் சாதிகளுக்கு விற்றாலும் எழுதி தந்தாலும் செல்லாது என்றும் அந்த சட்டம் சொன்னது…

வெள்ளையர்கள் கொண்டு வந்த சட்டங்களில் the best என இதை சொல்லலாம் ‌

நஞ்சை, புஞ்சை, மானாவாரி, புறம்போக்கு, பஞ்சமர் நிலம் என நிலவகைகள் அரசாங்கத்தில் பிரிக்கப்பட்டு தான் இருந்தன…… மேல் சாதியினர் சதியால், அடிமை படுத்தப்பட்ட மக்களின் பசியும் வலியும் பலவீனமும் அவர்களுக்கு உதவ கிட்டத்தட்ட 80% க்கு மேல் அந்த நிலங்கள் பறிக்கப்பட்டது.. நாளடைவில் அரசு இயந்திரமும் சதியில் சேர்ந்து DC land என்கிற கேட்டகிரியே நில வகைகளிலிருந்து தூக்க பட்டது…

5% கூட இப்போது அந்த நிலங்கள் , DC class என சொல்லப்படும் அடித்தட்டு மக்களிடம் இல்லை என ஒரு புள்ளி விவரம் சொல்கிறது ….

2.அசுரர்கள் யார்?

படத்துக்கு அசுரன் என்கிற பெயர் வைத்ததில் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் வெற்றிமாறன்.

அசுரர்கள் என்பவர்கள் யார்……? பொதுவாக அசுரனுக்கு பொருள் தீயவர்கள் கெட்டவர்கள்… ஒரு கூட்டத்தின் இடத்தை தேடி சென்று அவர்களிடம் சன்டை போட்டு அவர்களை அந்த இடத்தை விட்டு விரட்டி அடிக்க முற்படும் கூட்டம் அசுரர்களா…பலவீனத்தால் தோல்வியடைந்து வெளியேறும் இறந்து போகும் கூட்டம் அசுரர்களா… நமக்கு சொல்லி தந்த கதைகளில் அசுரர்கள் இதுவரை யார் யார்…‌?  நம் கதைகளில் பிறன்மனை நோக்கியவர்கள் , மண்ணாசை பொண்ணாசை பெண்ணாசை கொண்டவர்கள், கெடுதல் செய்தவர்கள், இரு தரப்பிலும் இருக்கிறார்கள்… இருந்தும் ஏன் ஒரு கூட்டத்தை மட்டுமே அசுரர்கள் என்கிறோம்?? இப்படி விவாதத்திற்கு உரிய பல கேள்விகள் நம்முள் இருக்க…அதையே படத்தின் தலைப்பாக வைத்து, அசுரன் என்கிற பெயர் இங்கே செயலினால் வைக்கப்பட்டதல்ல… பிறப்பினால் வைக்கப்பட்டது என பொட்டில் அறைந்த படி ஆரம்பிக்கிறார் வெற்றிமாறன்.

3.நல்லிணக்கத்தை கெடுக்கிறதா அசுரன் ?

கல்கி வார இதழில்  திரைவிமர்சனம் எழுதி வருபவர் திரு. லதானந்த்.  அசுரன் படம் நல்லிணக்கத்தை கெடுக்கிறது என்று அவர் கல்கி இதழில் எழுதி உள்ளார். அவர் சொல்வது போல் இந்தப் படம் உண்மையில் நல்லிணக்கத்தை கெடுக்கிறதா என்ற கேள்விக்கு ராஜகோபாலனின் பதில் பொருந்தும். 

சாதி கொடுமை என்றால் என்ன என்று தெரியாத அதிர்ஷ்டம் செய்த கூட்டம் இருக்கிறது… அவர்கள் தான் இந்த படத்தை முதலில் பார்க்க வேண்டும்…. அன்றாடம் உபயோகப்படுத்தப்படுகிற செருப்பு ஒன்றே சாதி அடையாளமாக பார்க்க பட்டது என்கிற விசயமே அவர்களுக்கு புதிதாக இருக்கும்…  மார் வரி சட்டம், செருப்பு அணிய தடை, கோவில் அனுமதி மறுப்பு, தீண்டாமை, என பட்டியல் நீண்ட வரலாறு உண்டு…not long ago..

“இப்பல்லாம் யாரு சாதி பாக்குறா?”…என்று பேசுகிற கூட்டத்தின்  இன்னொரு டயலாக் தான் “இதெல்லாம் இப்ப இல்லையே, இதை ஏன் படமாக எடுத்து நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும் ?”

மேற்சொன்ன மார் வரி, செருப்பு தடை இப்போது இல்லாமல் இருக்கலாம்… ஆனால் அதன் நீட்சியாக வேறு வடிவமாக இருப்பது தான்…ஆணவ கொலைகளும்… சாதி யின் பெயரால் நடக்கும் கொலைகளும், கற்பழிப்பு களும்…

கடந்த மாதத்திலேயே , சாதியின் பெயரால் இளம் பெண்கள் கற்பழிப்பும் , பிள்ளைகள் கொலையும் நம் நாட்டில் தான் நடந்தது ‌.. இப்படி பிரச்சினை இல்லை இல்லை என சொல்லி சொல்லி பிரச்சினையை மறைக்கும் கூட்டத்திற்கு சரியான பதிலாக வந்துள்ளான் அசுரன்.

Related Articles

2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை உற... டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற இந்த ஓராண்டில் அவர் அதிரடியான பல அறிவிப்புகளின் மூலம் தினம் தினம் பேசப்பட்டு வருகிறார். உலக அரங்கில் சர்ச்சைகளின் நாயகனாகவு...
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இ... வேலைக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இனி சம்பளம் வழங்கக் கூடாது என்று தொடக்க கல்வித்துறை ஆய்வாளர் அறிக்கை விடுத்து உள்ளார். ...
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கர்நாடகாவில் ... அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதை நிறுத...
குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போட்டுப் ப... தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். அதற்கு உதாரணமாக தற்போது ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது. ஃபுல்லி என்ற யூடிப் சேனலில் திரைப்பட விமர்சகராக இருப்பவர் கி...

Be the first to comment on "பஞ்சமி நிலம் என்றால் என்ன? அசுரர்கள் யார்? அசுரன் படம் நல்லிணக்கத்தை கெடுக்கிறதா?"

Leave a comment

Your email address will not be published.


*