இயக்குனர் பாலா ரீமேக் செய்யப்போகும் ஜோசப் படம் பற்றி எழுத்தாளர் அராத்துவின் கருத்து என்ன?

Writer Araathu comment on Joseph movie

இயக்குனர் பாலா ரீமேக் செய்யப் போகும் படம் ஜோசப். இது மலையாளத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தைப் பற்றி நம்ம ஆட்கள் யாரும் அவ்வளவாக பேசவில்லை. ஆனால் எழுத்தாளர் அராத்து மட்டும் அந்தப் படத்தைப் பற்றி தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார். அந்தப் பதிவு இங்கே பகிரப்பட்டுள்ளது. 

ஜோஸஃப் – மலையாளம்

படம் நன்றாக இருப்பது விஷயம் அல்ல. அதில் ஜோஸஃபாக நடித்திருப்பவர் மிரட்டி இருக்கிறார். அவர் வரும் பெரும்பாலான சீன்களை அலட்சியமாக  “மாஸ்” சீன்களாக ஆக்கி இருக்கிறார்.

எப்படி இவருக்கு இவ்வளவு ஸ்கிரீன் ப்ரஸன்ஸ் ? ரகளையான பாடி லாங்குவேஜ் என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

தொள தொள சட்டை , அலட்சியமாக கட்டப்பட்ட வேட்டி , தொப்பை , பராமரிக்கப் படாத தாடி , ஆனாலும் ஃபிரேமில் வந்து நின்றால் அள்ளுகிறது மாஸ். 

நூறு பேரை 400 சின்னச் சின்ன ஷாட்களில் அடிப்பது அல்லடா மாஸ். நடிப்பதில் இருக்கு மாஸ் என பாடம் எடுத்திருக்கிறார். அதிலும் க்ளைமாக்ஸில் ஒரு ஹீரோ கேரக்டரை எப்படி உயரத்திற்கு கொண்டு செல்வது என காட்டியிருக்கிறார்கள்.ஒரு சீனில் தெருவோரத்தில் அமர்ந்து சிறுநீர் கழிக்கிறார்.

மோகன்லாலின் சாயல் அவருக்கு நடிப்பில் இருப்பதாக நமக்குத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இந்த கேரக்டரில் மோகன்லால் நடித்து இருந்தால் எப்படி இருக்குமோ அதை விட இவர் சிறப்பாக செய்திருப்பதாக தோன்றுகிறது. 

300க்கும் மேற்பட்ட  படங்கள் நடித்திருக்கும் மோகன்லாலைத் தாண்டுவது (தவிர்க்கவே முடியாத அவர் சாயல் நடிப்பில் இருந்தாலும் )எவ்வளவு சிரமம் ? 

யோசித்துப் பாருங்கள் ….இங்கே கமல் மாதிரி , ரஜினி மாதிரி நடிப்புச் சாயலில் ஒரு நடிகர் நடித்து பெயர் பெற முடியுமா ? காமடி பீஸ் என ஒதுக்கி விடுவோம். இத்தனைக்கும் இவர் ஹீரோவாக நடித்திருக்கும் முதல் படம் இது என நினைக்கிறேன். இவரைப் போல ஒருவர் இங்கே நடித்து , படம் வெற்றி பெற ஸ்பேஸ் இருக்கிறதா ? அப்படி நடிக்கக் கூடியவர் யாரேனும் இருக்கிறார்களா ?

படத்தில் சிறு குறைகள் உள்ளன. அவருடைய முதல் காதல் எபிசோடை கருணையே காட்டாமல் மொத்தமாக கத்தரித்து தூக்கிப் போடலாம். 

1) பிளான் எல்லாம் சரிதான். எல்லோருமா உடல் பாகங்களை தானம் தர ஒத்துக்கொள்வார்கள் ? 

2) இரண்டாவது ஆக்ஸிடண்டையும் ஒரே இடத்தில் செய்யும் அளவுக்கு முட்டாள்களா?

3)சிம் மாற்றத் தெரிந்த ஆசாமிக்கு போனையே மாற்றத் தெரியாதா ? ஏன் ஒரே போனை வைத்து மாரடித்துக்கொண்டு இருக்கிறார்கள் ?

வேறு எந்தப் படத்தையும் தழுவி எடுக்காமல் இருந்தால் , ஹாலிவுட்டில் ரீமேக் செய்யத்தக்க ஏற்ற படம்.

Related Articles

2.0 படத்திற்கு எதிர்பார்ப்பு அவ்வளவாக இல... தமிழ் சினிமாவை உலக அரங்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் சினிமா எடுக்கும் இயக்குனர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இயக்குனர் ...
தமிழ்வழிக்கல்வியில் படித்தவர்கள் படும்பா... தாய்மொழிப்பற்றின் காரணமாகவும் போதிய வசதி இல்லாததாலும் நமக்கு வாய்ச்சது இதுதான் என்று தமிழ்மீடியத்தில் படித்த இளைஞர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆவதற்குள்...
கே. என். சிவராமனின் உயிர்ப்பாதை புத்தகம்... ஆளப்போறான் தமிழன் என்று இன்றைய காலகட்டத்தில் நாம் பெருமை பேசித் திரிகிறோம். வாட்சப்பிலும் பேஸ்புக்கிலும் தமிழ் தமிழ் என்று கொந்தளிக்கிறோம். இவர்களில் ...
மணிப்பூர் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா ... பிறப்பு மணிப்பூர் தலைநகரான இம்பாலில் உள்ள கோங்பாலில் 1972- மார்ச் 14ல் பிறந்தவர் இரோம் ஷர்மிளா. அப்படி என்ன செய்தார்? கிளர்ச்சி மற்றும் நக்சல் போர...

Be the first to comment on "இயக்குனர் பாலா ரீமேக் செய்யப்போகும் ஜோசப் படம் பற்றி எழுத்தாளர் அராத்துவின் கருத்து என்ன?"

Leave a comment

Your email address will not be published.


*