நேர்மையான விமர்சகரா டாப் 10 சுரேஷ்குமார்? – இளம் திரைவிமர்சகர் இவரை பற்றி என்ன சொல்கிறார்?

Young Movie Reviewer talks about Top 10 movies Fame Suresh Kumar

சன் டிவியில் டாப் 10 சினிமா நிகழ்ச்சி நடத்தி வருபவர் டாக்டர் சுரேஷ் குமார். கடந்த இருபது வருடங்களாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தார். தற்போது இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. டிவிக்கு பதிலாக யூடுப்பில் விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கிறார் இவர். இவரை மீம் கிரியேட்டர்கள் நேர்மையான விமர்சகர் என்று பாராட்டி வருகிறார்கள். இவரைப் பற்றி இளம் திரை விமர்சகர் கலிலூர் ரஹ்மான் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம். 

எப்போவாச்சும் டிவி பார்க்குற ஆட்களுக்கு கூட, இவரை தெரிஞ்சிருக்கும்… சன் டிவி ‘டாப் 10 மூவீஸ்’ சுரேஷ். இப்போ யூட்யூப்ல விமர்சனம் பண்ண ஆரம்பிச்சிருக்கார்… இந்த மனுஷன் ஃபோட்டோவை போட்டு 2, 3 நாளா ‘தலைவன் இஸ் பேக்… குறைகளே இல்லாம விமர்சனம் பண்றவரு… 90ஸ் கிட்ஸ் ஹேப்பி’ன்னு எல்லாம் சிலாகிச்சு நிறைய மக்கள் போஸ்ட் போடுறாங்க. 

நானும் லேட் 80ஸ்ல பொறந்து, 90ஸ்ல வளர்ந்த கிட் தான். ஆனா, இந்த ‘டாப் 10 மூவீஸ்’ நிகழ்ச்சியில விமர்சனங்களை எல்லாம் பார்க்குறப்போ இந்த ஷோ அளவுக்கு biasedஆ விமர்சனம் பண்ணவே முடியாதுன்னுதான் எப்போவுமே தோணும். அநேக நேரங்கள்ல நல்ல படங்களை எல்லாம் 3வது, 4வது இடத்துல வெச்சிட்டு மொக்கை குப்பை படங்களை முதல் 2 இடங்கள்ல வெச்சிருப்பாங்க. 

ஆனா, அதுக்கு இவரை மட்டும் குறை சொல்ல முடியாது. ஏன்னா, இவர் வேலை பார்த்தது உலகத்துல அதிகம் பேர் பார்க்குற சாட்டிலைட் டிவி சேனல். அவங்களுக்கு நெருக்கமானவங்களோட படங்களை முதல் இடங்கள்ல வைக்குறது அவங்களோட இஷ்டம். ஆனா, அதுக்கு விமர்சன நிகழ்ச்சியோ ‘டாப் 10’ நிகழ்ச்சியோ தேவையே இல்லையே.

சொல்லப்போனா, இந்த ‘டாப் 10 மூவீஸ்’ ஆரம்பிச்சப்போ அது பயங்கர trend-setting ஷோ.  அதையே காப்பியடிச்சு, எல்லா போட்டி சேனல்கள்லயும் நிகழ்ச்சி ஆரம்பிச்சாங்க. முதல் சில வருஷங்கள் நேர்மையாதான் போச்சு, திடீர்னு அந்த நிகழ்ச்சியை நடத்திட்டு இருந்த வர்ணனையாளர் ஜேம்ஸ் வசந்தன் அந்த ஷோவிலிருந்து விலகிட்டார். 

இந்த நிகழ்ச்சி எந்தளவுக்கு biasedஆ, டுபாக்கூர் ஆன நிகழ்ச்சியா இருந்துச்சுன்னு உதாரணம் சொல்லணும்னா… சன் டிவி நிர்வாகம் அல்லது திமுக’வுக்கு நெருக்கமான சரத்குமார், விஜய், சிம்பு மாதிரி நடிகர்கள் படங்களுக்கு எப்போவுமே நம்பர் 1 இடம்தான். ‘சமஸ்தானம்’, ‘கம்பீரம்’, ‘ஆதி’, ‘சுக்ரன்’, ‘குத்து’, ‘வல்லவன்’னு எவ்ளோ மொக்கை படமா இருந்தாலும் சரி. அதுலயும் ‘திண்டுக்கல் சாரதி’, ‘தீ’, ‘மாசிலாமணி’, ‘சுறா’, ‘தெனாவெட்டு’, ‘மாப்பிள்ளை’ மாதிரி சன் பிக்சர்ஸ் எடுத்த மொக்கை படங்கள்ன்னா புகழ்ந்து தள்ளுவாங்க பார்க்கணுமே. 

சன் குழுமம் கிட்ட சாட்டிலைட் ரைட்ஸ் விக்காத படமாவோ இல்ல அவங்களுக்கு ஆகாத புரொடியூசர் படமாவோ இருந்தா, அந்த படங்கள் அந்த ‘டாப் 10’ லிஸ்ட்லயே வராது. ‘மின்னலே’, ‘தமிழ்’, ‘சச்சின்’, ‘தொட்டி ஜெயா’, ‘வசீகரா’ன்னு பல படங்களை சொல்லலாம். அதே போல, ஒரு காலகட்டத்துல அஜித் நடிச்ச படங்களுக்கு மரியாதையே இருக்காது. அந்த காலகட்டத்துல, தமிழ் தொலைக்காட்சி இண்டஸ்ட்ரியில ஒரு monopolyஆ இருந்த ‘சன் டிவி’ பண்ண அழிச்சாட்டியாங்கள்ல ஒண்ணு அது. விகடன் விமர்சனம், டாப் 10 மூவீஸ்’ன்னு ஒரு சில விஷயங்களை மட்டும் பார்த்து எந்த படத்துக்கு போகலாம்ன்னு நிறைய மக்கள் முடிவெடுத்த ஒரு காலகட்டத்துல பல நல்ல படங்கள், சின்ன படங்களை 5வது இடத்துக்கு மேல வெச்சு visibility கிடைக்காம போனதுக்கு காரணமா இருந்துச்சு இந்த ஷோ. 

அது போக, விமர்சனம்ன்னா நல்ல விஷயங்களை பாராட்டுறது மட்டும் இல்ல.  குறைகளை சுட்டிக்காட்டினாதான், அந்த நடிகரோ இயக்குனரோ அடுத்தடுத்து இன்னும் நல்ல படங்களா குடுக்க முயற்சிப்பாங்க. எல்லா நல்ல படத்துலயும் குறைகள் இருக்கும், எந்த மொக்கை படத்துலயும் ஏதாச்சும் நல்லதும் இருக்கும். தயாரிப்பாளர்களோ இல்ல யாராச்சும் ஒரு நடிகரோ அவங்களை திருப்திபடுத்துறதுக்கு பண்றது விமர்சனம் இல்லையே, அதுக்கு பேரு மசாஜ். குறையே இல்லாம விமர்சனம் பண்றது, பிளஸ் பாய்ண்ட் மட்டுமே சொல்றதுன்னா அதுக்கு தலைவன் itis பிரசாந்த்தே போதுமே. 

இவ்வாறு அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Articles

ரஜினியை சாக்கடைக்குள் தள்ளிவிட்ட ரஞ்சித்... ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான, பலருடைய மூன்றரை வருட உழைப்பை சுமந்த 2.O படம் தற்போது ரிலீசாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.ரஜி...
ட்ரெண்ட் ஆகும் தெர்மாகோல் வீடுகள்! ̵... சமீபகாலமாக தெர்மாகோல் வைத்து வீடு கட்டுவது தமிழகத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த தொழில்நுட்பம் உலகத்துக்குப் புதியதல்ல. 1960 களிலிருந்து வெளிநாடுகளி...
தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத... 11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின...
சில்லுக்கருப்பட்டி படத்துக்கு 48 மதிப்பெ... பூவரசம் பீப்பி எனும் மிக எளிமையான அழகான படத்தை தந்தவர் இயக்குனர் ஹலீதா சமிம். 2019ம் ஆண்டின் இறுதியில் அவருடைய சில்லுக்கருப்பட்டி படம் ரிலீஸ் ஆகியுள்ள...

Be the first to comment on "நேர்மையான விமர்சகரா டாப் 10 சுரேஷ்குமார்? – இளம் திரைவிமர்சகர் இவரை பற்றி என்ன சொல்கிறார்?"

Leave a comment

Your email address will not be published.


*