நம்ப முடியாத செய்தியாகத் தோன்றலாம். ஆனால் உண்மை. இந்தியா ஏழை நாடு, வளர்ந்து வரும் நாடு என்ற செய்திகள் மட்டுமே கேட்ட நமக்கு இது கொஞ்சம் புதுசு தான்.
ஆப்ரோ ஆசியா வங்கி உலகின் பணக்கார நாடுகளைப் பட்டியலிட்டு அறிவித்து உள்ளது. அதில் இந்தியா ஆறாம் இடம் பிடித்து உள்ளது. அமெரிக்கா முதல் இடம் பிடித்து உள்ளது. அந்த நாட்டின் சொத்து மதிப்பு 62 லட்சத்து 58 ஆயிரத்து 400 கோடிகள் என்று அறிவித்து உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 24 லட்சத்து 80 ஆயிரத்து 300 கோடி டாலர்கள் என்ற சொத்து மதிப்புடன் சீனா இரண்டாம் இடமும், 19 லட்சத்து 52 ஆயிரத்து 200 டாலர்கள் மதிப்புடன் ஜப்பான் மூன்றாம் இடமும் பிடித்து உள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும் அரசின் நிதி நிலையை தவிர்த்துவிட்டு அந்த நாடுகளில் உள்ள தனிநபர் சொத்துக்களின் மதிப்பை வைத்து இந்த பணக்கார நாடுகளின் பட்டியல் தயாரிக்கப் படுகிறது. தனி நபர்களின் சொத்துக்கள், பங்குகள் முதலீடுகள், வியாபார முதலீடுகள் ஆகியவற்றை வைத்து மதிப்பிடப் படுகிறது. உலக அளவில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் இது சாத்தியமாகிறது. ஏராளமான தொழில் முனைவோர். மருத்துவத் துறை வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றால் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி 200% ஆக உயரும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Be the first to comment on "உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா!"