கமல் – கலையும் கலைசார்ந்த இடமும்! – 05 – காதலா காதலா ஒரு பார்வை!

A view on Kaathala Kaathala movie

காதலா காதலா

இயக்கம்: சிங்கீதம் சீனிவாசராவ்

நடிகர்கள்: கமல், பிரபுதேவா(ஓவியர்), ரம்பா & சௌந்தர்யா(ஓவியக்கல்லூரி மாணவிகள்)

கதை: ஒரு பொய் பல பொய்களை உருவாக்கும். அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தான் மையக்கதை. ( இதேபோல் ஆண்டவன் கட்டளை, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களில் காட்சிகள் உள்ளது.)

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று குப்பைத்தொட்டியை வணங்குவது என்று அறிமுகக் காட்சியே செம. முருகன் பெயரை பல இடங்களில் உபயோகித்திருக்கிறார்கள் இந்தப் படத்தில். மாடு கழுவும் கோனார் இங்கிலீஷ் பேசுவதைக் கண்டு வியக்கிறார் கமல். “திருட மாட்டேன், சூதாடமாட்டேன், பிச்சை எடுக்க மாட்டேன் ” “மொத்தத்துல சம்பாதிக்க மாட்டிங்கறே… ” வசனம் செம. டெல்லி கணேஷ் ஒயின்ஷாப் வைத்து நடத்துகிறார். அதனால் பணக்காரராக இருக்கிறார். (இதேபோல் ஆடுகளம், காதலும் கடந்து போகும் படங்களில் நாயகன் ஒயின்ஷாப் வைத்து பணக்காரராக முயல்கிறார்கள்.). கிரேஸி மோகனின் ஆனந்த விகடானந்தா உரை செம. ஊனமுற்ற குழந்தையின் தாய் கமல் தந்த வைத்திய செலவுக்கான பணத்தை மீண்டும் கோவிலுக்கே செல்கிறாள். போலி சாமிகளின் பித்தலாட்டம் இந்தப் படத்தில் தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது. (இதேபோல் போலி சாமிகள் பற்றி விவேக் காமெடிகள், மற்றும் பல காமெடிகள் வந்து உள்ளது). “ஏணி மேல ஏறுனவர்க்கு இரங்கல் செய்தி வந்துடுச்சே” வசனம் செம. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் ஒருவனுக்கு வாய் திக்கும் அல்லது எதாவது குறை ஒருவனுக்கு மட்டும் இருக்கும். ( ஆர்யா, பரத் நடித்த பட்டியலில் பரத்க்கு குறை. ஆர்யா, விஷால் நடித்த அவன்இவன் படத்தில் விஷாலுக்கு கண் குறை ). “தேடிப்பாக்குறேன் காந்தியத்தான் காணோம்… ” பாடல் வரி செம. ஓவியத்துக்கு காதலா காதலா மற்றும் அன்பே சிவம் படத்தில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் கமல். ” உங்களுக்கு ராமாயணத்துல ஆர்வம் அதிகம்… ஆனா கொஞ்சம் லெஃப்டஸ்டா பேசுறிங்க… ” ” இவிங்கள பிடிக்கும்னு சொன்னா அவிங்க கோபிச்சுக்குவாங்க… அவிங்கள பிடிக்கும்னு சொன்னா இவிங்க கோபிச்சுக்குவாங்க… எதுக்கு பிரச்சினை நடுவுநிலைமையா இருந்துட்டு போயிடுவேமே… ” என்ற வசனங்கள் கமலைப் பற்றிய உண்மைகளை விளக்குகிறது. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா டெக்னிக் அவ்வை சண்முகி படத்திலும், காதலா காதலா படத்திலும் வந்து உள்ளது. கமலுக்கு ஜானகி, நல்லசிவம் என்ற பெயர்கள் மீது அதிக பற்று போல. ஜானகி என்ற பெயர் அவ்வை சண்முகி, காதலா காதலா, சட்டம் உள்பட பல படங்களில் அடிபடுகிறது. காதல் செய்யும் இளம் ஜோடிகளுக்கு ஐடியா கொடுக்க அவர்களை கிண்டல் செய்ய சிறுவர்கள் வருவார்கள். ( காதலா காதலா படத்தைப் போல் குட்டி, மெரினா இன்னும் பல படங்களில் காட்சிகள் வந்து உள்ளது.) ரம்பாவின் டிக்கியை தடவுவது பிரபுதேவா போல் ஒரு பாடலில் காட்சி உள்ளது. ( இதே போல் ஹீரோயின்களின் டிக்கியை தடவுவது போல் பிரபுதேவாவின் இயக்கத்தில் வந்த போக்கிரி படத்தில் வந்து உள்ளது. இதேபோல் எம்ஜிஆர் சிவாஜி படங்களில்கூட காட்சிகள் உள்ளது. ரம்பாவின் அப்பா தன் மகளுக்கு குழந்தை பிறந்துவிட்டது என்ற செய்தி கேட்டதும் கௌரவத்தை விட்டுவிட்டு மகளுடைய காதலை ஏற்றுக்கொள்கிறார். ( இதேபோல் காட்சிகள் குத்து கிளைமேக்ஸ் மற்றும் சில படங்களில் வந்து உள்ளது. ) நூர் மஹால் வீட்டு நேபாள்  வாட்ச்மேன் (சூழலுக்குத் தகுந்த திருக்குறள் பேசுபவர், – விஐபி 2ல் தனுஷ் இதைத்தான் பின்பற்றினார்). நன்கு தமிழ் பேசுகிறார் ( இதேபோல் அஆஇஈ படத்தில் வேற்று நாட்டினர் நன்கு தமிழ் பேசும் திறன் பெற்றவர். ). கொஞ்சம் குறைக்ககூடாதா என்றதும் நாய் குலைக்கும் காட்சியும் நாயின் ஓனர் குலைக்கும் காட்சியும் செம நக்கல். பட்டாசை பஸ்ஸில் சுமந்து வருவது போல் காட்சிகள் உள்ளது. இன்றைய நடைமுறைப்படி இது குற்றம். ” கைய கால நினைச்சுக்குங்க… தப்பா நினைக்காதிங்ங… ” ” இதுல என்னங்க தப்பு இருக்கு… நான் கூட தூங்கும் போது கைல கொசு கடிச்சதுனா கால சொறிஞ்சுக்குவேன்” வசனம் செம நக்கல். “முருகன் கைல வேல் இருக்கு… அதுக்குனு வேலக்காரனா சொல்றோம்… ” வசனம் செம. வேலைக்காரி என்றதும் அலட்சியமாக நடத்துவதை அப்பட்டமாகக் காட்டி உள்ளார்கள். குக்குக்கூ ஜோலிக்கே பீச்சாக்காஹே பாடலில் கமலுக்கு அதீத பற்று போல. இந்தப் பாடல் அவ்வை சண்முகி படத்திலும் உள்ளது. பம்மல் கே சம்பந்தம் படத்தில் சிவன் வேடமிட்ட கமல் இந்தப் படத்தில் முருகன் வேடம் இட்டுள்ளார். குறவள்ளியை இடப்புறத்தில் அமர வைப்பது, ச்சி வள்ளி என்று சொல்லாதே, ஸ்ரீவள்ளி என்று சொல், வள்ளியை செட்டப் என்று சொல்வது, தெய்வானையின் டிக்கியில் வேலை தட்டுவது, முருகன் ஏக் தோ தீன் என்ற இந்திப் பாடலை நான் தமிழ்கடவுள் என்று முருகன் புறக்கணித்து இங்கிலீஷ் பேசுவது எல்லாம் நுணுக்கம். ” ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மறந்துவிட்டாயா… ” ” அது ராமனுக்குத் தானே… நான் முருகன் ஆயிற்றே… ” வசனம் செம நக்கல். இந்த சீன்கள் நவீன சரஸ்வதி சபதம் படத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. வள்ளி( இடது), தெய்வானை(வலது) நடுவில் முருகன்(நடுவுநிலைமை). “குப்பைத்தொட்டியில் குழந்தை போடுற சாதி இல்ல… ” வசனம் கேட்டதும் கமல் நெகிழும் காட்சி செம. ரம்பா பார்வதி வேஷம் போட்டுக்கொண்டு வேறொருவரை அடையாளம் தெரியவில்லை என்கிறார். சாமியே பிச்சை எடுப்பது போல் காட்சிகள் பல படங்களில் வந்து உள்ளது(எங்கேயும் எப்போதும் போன்ற பல படங்களில்). “அட அட… என்ன வறுமை என்ன வறுமை… நகையும் நட்டும்… ” வசனம் செம நக்கல். “வறுமை தாங்க முடியாததால நானும் என் குழந்தையும் தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு எடுத்திருக்கோம்… ” ” நீயும் உன் குழந்தையும் தற்கொலை பண்ணிக்க போறிங்களா… தப்புத்தப்பா பேசாத… நீ பண்ணிக்கப் போறது தற்கொலை… குழந்தையப் பண்ணப்போறது கொலை… ” வசனம் செம. ரம்பா அப்பா பெயர் பரமசிவம், அம்மா பெயர் பார்வதி போன்ற பெயர் நுணுக்கங்கள் கமல் படத்தில் அதிகம் காணலாம். “இந்த வக்கீலுங்களே இப்படித்தான்… ரெண்டு பேருக்கும் சிண்டு போறதுதான் அவிங்க வேலையே ” வசனம் செம. ” திக் பிரண்ட்ஸ், பிச்சைக்காரியின் குழந்தைக்கு பிச்சை என பெயர் வைத்தல் ” என படத்தில் பல நுணுக்கமான காட்சிகள். வாடகைத்தாய், குழந்தையை தத்து எடுத்தல் போன்று இல்லாமல் வாடகைக் குழந்தை கான்செப்ட் பிரபு, பாண்டியராஜ் போன்றவர்களின் படங்களில் வந்து உள்ளது. கணவன் மனைவி ஆள்மாறாட்டம் சத்யராஜ் படங்களில் மற்றும் பல படங்களில் வந்து உள்ளது. இது போன்று தகடு தத்தம், தில்லாலங்கடி, புரளி, ஆள்மாறாட்டம், பொய்ச்சங்கிலி போன்றவை சுந்தர் சி, பாண்டியராஜ், கே.எஸ்.ரவிக்குமார் வித் கமல், பாக்யராஜ், பார்த்திபன் படங்களில் அதிகம் காணலாம்.

“வேலைக்காரிய சைட் அடிக்குறதே ஒரு சந்தோசம்” “நல்லா குனிஞ்சு வேல செய்… சம்பளம் வாங்குற இல்ல… ” போன்ற வசனங்கள் முதலாளித்துவத்தை எடுத்துரைக்கும் நுணுக்கமான வசனங்கள். “வேலக்காரியோட அப்பா எப்படி அமெரிக்கால இருக்கலாம்… ” ” ஆனா அமெரிக்கால இருக்குறவரோட பொண்ணு இங்க வேலக்காரியா இருக்கலாம்ல… சிரிச்சு சிரிச்சு பல் வலிக்குது” “அல்லா என் வயித்த கலக்குது” ” யாரப்பாத்து பால்காரின்னு சொன்ன… நான் பரம்பரை பிச்சக்காரி” (பெருமையாகிறார் கோவை சரளா) வசனங்கள் செம காமெடி. டேய்டோய் குடும்பம் என்ற வார்த்தை செம லூட்டி. மௌலியிடம் எம்எஸ்வியிடம் தன்னுடைய பெரிய வரலாறை திரும்பத் திரும்பக் கூறும் விகடானந்தாவின் வாயை அடைக்கிறார் எம்எஸ்வி. ( இதேபோல் ஒரே புராணத்தை படம் முழுக்க கூறுவது போல் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஒரு கிடாயின் கருணை மனு, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், குலேபகாவலி, தெனாலி போன்ற படங்களில் காட்சிகள் வந்து உள்ளது. ) முதியவர்களை வைத்துக்கொண்டு கார் சேஸிங் சீன் அவற்றில் கொஞ்சம் காமெடி கலக்கல் என்று அவ்வை சண்முகியிலும் இதே போல காட்சிகள் உள்ளது. கிளைமேக்ஸ்ஸில் ஒரு இடத்தில் எல்லோரும் குவிய ஹீரோ, செகண்ட் ஹீரோ, ஹீரோயின் என்று அனைவரும் சண்டை போடுகிறார்கள்(இதேபோல் காட்சிகள் பல படங்களில் வந்து உள்ளது.) லிங்கம் என்ற ஒரு பெயர் இருவருக்கு இருப்பதை வைத்து பல குளறுபடிகள் கொண்டது போல் ஒரே பெயர் கொண்ட இருவர் கதாபாத்திரங்கள் செய்யும் லூட்டிகள் படம் பல உள்ளது. அதே போல் ஒரே உருவம் கொண்ட இருவர் ஆள்மாறாட்டம் செய்வது போல காட்சிகள் பல படங்களில் உள்ளது(கத்தி, வாலி, கொடி). மலையில் தொங்கிகொண்டிருப்பவரிடம் ஹேண்ட்ஸ்அப் என சொல்வதும், பாலோ மீ என சொன்னதும் முந்திக்கொண்டு ஓடுவது, திக்குவாய்க்கு திக்குவாய் பிரெண்ட், லிங்கங்களுங்கு லிங்கம் பெயர் கொண்டவர் பிரெண்ட் போன்ற நுணுக்கங்கள் நல்ல காமெடி.

Related Articles

80 வயது முதியவரின் உடலைச் சுமந்து மலை இற... கர்நாடக மாநிலம் தக்சினா கன்னடா பகுதியில் இருக்கும் கொய்லா மலை கிராமத்தில் தைவா நேமா(Daiva Nema) என்ற இறை வழிபாட்டுச் சடங்கு  கடந்த சனிக்கிழமை அன்று அன...
செய்தி இணையதளம் நடத்துவது எவ்வளவு சிரமமா... கடந்த பதினைந்து ஆண்டுகளில் தான் இந்த "இணையதளம்" என்ற வார்த்தை மிக பிரபலமாகி உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி, காலமாற்ற தேவை அது. அதை அவ்வளவு எளிதாக நிராகர...
உத்தரகாண்டில் மூன்று புதிய அணைகளைக் கட்ட... இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இண்டஸ் நீர் ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளுக்கும் மூன்று ஆறுகள் வீதம் பிரித்துக்...
பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : ம... மத்திய பிரதேசத்தில் சிவாஜிராங் சிங் சௌஹானின் அமைச்சரவை 12 வயது மற்றும் அதற்கு குறைவான குழந்தைகளை இலக்கு வைக்கும் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வ...

Be the first to comment on "கமல் – கலையும் கலைசார்ந்த இடமும்! – 05 – காதலா காதலா ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*