2021ல் பெரிய ஏமாற்றத்தை கொடுத்த படம்! 

காவியத்தலைவன் தான் வசந்தபாலனின் கடைசி படமாக இருந்தது. அந்தப் படம் பெரிய தோல்வி என்ற போதிலும் டெக்னிக்கலாக ரொம்ப ஸ்ட்ராங்கான படம். நிறைய விருது விழாக்களில் நாமினேஷனில் இருந்தது அந்தப் படம். அந்தப் படத்திற்குப் பிறகு வசந்தபாலனின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம், பெரிய எதிர்பார்ப்புடன் நிறைய இளைஞர்கள் வந்திருந்தார்கள். பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

 

“வசந்தபாலன் ஏமாற்றிவிட்டார் என்பதுதான் உண்மை… படத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் வசந்தபாலன் குரலில் சொல்லப்படும் பிரச்சினையும் கதைக்களமும் வேறுவேறாக இருக்கிறது. அவர் சொல்லவந்த பிரச்சினையை படம் பேசவில்லை. 

 

கலையாக நடித்த பசங்க பாண்டி, சிறுவயதில் தன்மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கின் காரணமாக சிறுவர் கூர்நோக்கு மையத்தில் பல வருடங்கள் கழித்துவிட்டு, துரதிர்ஷ்டவசமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு வெளியே வருகிறார். வெளியே வந்த அவர் தன்னுடைய கட்டுப்பாட்டை மீறி உணர்ச்சி மிகுதியில் ஒருவரை கொன்றுவிடுகிறார். மீண்டும் ஜெயிலுக்கு செல்கிறார். வாழ்க்கை முழுவதும் ஒருவன் ஜெயிலிலயே வாழ்க்கையை கழிக்கிறார் என்பதுபோல் கதை அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அதுவும் மிஸ்ஸிங். 

 

காத்தோடு காத்தானேன் பாடல் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருக்கிறது. ஆனால் படமாக்கப்பட்ட விதத்தை பார்க்கும்போது வசந்தபாலன் மீது கோபம் வருகிறது. அருவி போன்ற அருமையான திரைப்படத்திற்கு எடிட்டராக பணிபுரிந்தவர் தான் இந்தப் படத்தின் எடிட்டர். ஆனால் இந்தப் படத்தில்… என்று அவருடைய பணியை பற்றி புகழ்ந்து பேச முடியாமல்… க் வைத்து இழுக்க தோன்றுகிறது. 

 

வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான காவியத்தலைவன் படம் டெக்னிக்கலாக ரொம்ப ஸ்ட்ராங்காக இருந்தது. அருமையான பிலிம் மேக்கிங் என்று கூட சொல்லலாம். நிறைய விருது விழாக்களில் இசை, ஒளிப்பதிவு, மேக்கப் என்று அனைத்து பிரிவுகளிலும் நாமினேசனில் அந்தப் படம் இடம்பெற்றது. ஆனால் ஜெயில் படம் கதை மட்டுமின்றி டெக்னிக்கலாகவும் ரொம்ப வீக்காக இருக்கிறது. 

 

கதை, உரையாடல் ஆகிய இரண்டு பணிகளை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனும் வசந்த பாலனனும் சேர்ந்து செய்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் படத்தை பார்த்தவர்கள் பெரும் சலிப்போடு தியேட்டரை விட்டு எழுந்து செல்கிறார்கள்… வருத்தம்!” 

 

– படம் பார்த்து முடித்த அடுத்த சில நிமிடங்களுக்குள் இப்படி தான் விமர்சனம் டைப் பண்ணி வைத்திருந்தேன். ஆனால் இந்தப் படத்தின் சில காட்சிகளை திரும்ப திரும்ப நினைத்து பார்க்கும்போது சில உண்மைகள் புரிந்தது. 

 

இந்தப் படத்தின் கதையை கதையாக நினைத்து பார்க்கும்போது… இது அட்டகாசமான கதை தான். ஆனால் மேக்கிங்கில் சிறிதே சொதப்பி விட்டார்கள். கலை ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்து தான் +2 முடித்ததை சொல்லி வேலை கேட்கிறார். ஆனால் அவருடைய வசிப்பிடமான காவேரி நகர் பெயரை கேட்டு “நீங்களாம் திருட்டு பசங்க… உங்களலாம் வேலைக்கு வைக்க முடியாது…” என்று அசிங்கப்படுத்தி அனுப்புகிறார்கள். கலை என்கிற அந்த இளைஞன் அவர்களின் பதிலை கேட்டு ஜெயிலில் வாழ்ந்ததை விட அதிகமான மன உளைச்சலை அடைகிறார்.

 

ஜி. வி. பிரகாஷ் குமாருக்கு அறிமுகம் கொடுக்கும்போது “கர்ணா என்னமோ சின்ன திருடன் தான்…” என்ற வசனம் கவனிக்க வைக்கிறது. அவனை விட பெரிய திருடன்கள் அரசாங்க சம்பளம் வாங்கிக்கொண்டு பொய்க்கேசு போட்டுக்கொண்டு வேலைக்கும் மனசாட்சிக்கும் நேர்மையாக இல்லாமல் திமிருடன் வாழ்கிறார்கள் என்பதை தான் படத்தின் மையமாக கருத வேண்டியுள்ளது. இன்னும் கொஞ்சம் சிறப்பாக எடுத்திருக்கலாம். வசந்த பாலனின் அடுத்த படமான அநீதி திரைப்படம் நம்மை ஏமாற்றாது என்று நம்புவோம். 

Related Articles

படைப்பாளிகள் கலைஞர்கள் இவர்களெல்லாம் தங்... தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமா அளவில் ஏன் உலக சினிமா அளவில் கூட மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவில் பிரபலமான அல்லது மக்களுக்கு மிகவும...
ஸ்கெட்ச் – சினிமா விமர்சனம்... தயாரிப்பு: வி கிரியேசன்ஸ், மூவிங் பிரேம்ஸ் எழுத்து இயக்கம்: விஜய் சந்தர் இசை: தமன் ஒளிப்பதிவு: எம். சுகுமார் நடிகர்கள்: விக்ரம், தமன்னா,... தமிழக...
பக்கத்துல இருக்கறவங்க மேலயும் அக்கறை காட... நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்று தற்போது திரைக்கு வந்துள்ள படம் டூலெட். இயக்குன...
பெற்றோர்களே முதலில் நீங்கள் நிதானமாக இரு... முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த வரைக்கும் நீட் தேர்வு என்ற ஆபத்தில் இருந்து மாணவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. அவருடைய இறப்பிற்கு பிறகு ஆளாளு...

Be the first to comment on "2021ல் பெரிய ஏமாற்றத்தை கொடுத்த படம்! "

Leave a comment

Your email address will not be published.


*