80 வயது முதியவரின் உடலைச் சுமந்து மலை இறங்கிய கர்நாடகா காவல்துறை

Karnataka cops carry a dead body down a hill as locals deny refusing help

கர்நாடக மாநிலம் தக்சினா கன்னடா பகுதியில் இருக்கும் கொய்லா மலை கிராமத்தில் தைவா நேமா(Daiva Nema) என்ற இறை வழிபாட்டுச் சடங்கு  கடந்த சனிக்கிழமை அன்று அனுசரிக்கப்பட்டது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த அசலப்பா என்ற 80 வயது முதியவர் இறந்து போனதை சக கிராமத்தினர் கண்டுள்ளனர். ஆனால் அந்தக் கிராமத்தின் நம்பிக்கையின் படி தைவா நேமா வழிபாட்டின் போது இறந்தவர்களின் உடலைப் பார்த்தால் கடவுளின் கோபத்துக்கு ஆளாக நேரிடுவதாகும். மேலும் இறந்தவர்களின் உடலைத் தொடுவதும் கூட அமங்கலமாகும். இதனால் அசலப்பா இறந்து ஆறு மணி நேரத்திற்கும் மேலாக அவரது உடல் கண்டுகொள்ளப்படாமலேயே இருந்துள்ளது.

கடமை தவறாத  காவல்துறை

இந்த நிலையில் கன்னடா டெய்லி பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் பாலகிருஷ்ணா இந்நிகழ்வைப் பற்றி உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். துணை ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் உதவி துணை ஆய்வாளர் ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தனர். ஆரம்பத்தில் அசலாப்பாவின் உடலை அப்புறப்படுத்த சக கிராம மக்களிடம் உதவிக் கேட்டது காவல் துறை. ஆனால் தைவா நேமா வழிபாட்டின் போது துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்வது என்பது தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் கேடு விளைவிக்கும் என்று கிராம மக்கள் காவல் துறையினரின் கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.

களத்தில் இறங்கிய காவல்துறை

கிராம மக்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் காவல் துறை அசலப்பாவின் உடலை தாங்களே அப்புறப்படுத்துவது என்று முடிவு எடுத்தனர். இதனைத் தொடர்ந்து மலை அடிவாரத்தில் இருக்கும் அசலப்பாவின் மகன் ரவியின் வீட்டுக்குச் சடலத்தை கொண்டு செல்ல முடிவெடுத்தனர். இதைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய துணை ஆய்வாளர் பிரகாஷ் ,அவரது வீட்டுக் காவலர் சந்தேஷ் மற்றும் உதவி துணை ஆய்வாளர் ஆகியோர் அசலப்பாவின் மகன் ரவியின் உதவியோடு சடலத்தை மலையில் இருந்து கீழே கொண்டு வந்து சேர்த்தனர்.

‘செங்குத்தான இந்த மலையில் வண்டி வாகனங்களோ அல்லது ஆம்புலன்ஸோ வரச் சாத்தியமில்லை. ஏனென்றால் இந்த நிலப்பரப்பு சீரற்றது. ஆகவே உடலை நாங்களே தோளில் சுமந்து கீழே கொண்டு வர முடிவு செய்தோம். உடலை ஒரு மர பெஞ்சில் வைத்து, அதன் மீது ஒரு துணியால் மூடினோம், அதை வலுவான கயிறு கொண்டு பிணைத்து கீழே கொண்டு வந்தோம்’ என்கிறார் உதவி துணை ஆய்வாளர் ரவி.

இருப்பினும் அசலப்பாவின் மரணம் இயற்கையானதுதானா என்ற கோணத்திலும் காவல் துறை விசாரித்து வருகிறது. அசலாப்பாவின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்றே காவல் துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. அசலப்பாவின் மகன் ரவி சாதி மீறி திருமணம் செய்து கொண்டதால் அவர்களது குடும்பம் கிராமத்தினரால் ஒதுக்கி வைக்க வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

காவல் துறையின் மனித நேயம் மிக்க இந்த நடவடிக்கைக்கு தக்சினா கன்னடா காவல்துறை கண்காணிப்பாளர் பி.ஆர்.ரவிகாந்தே கவுடா பரிசும் பாராட்டும் வழங்கியிருக்கிறார்.

Related Articles

சு. தமிழ்ச்செல்வியின் கீதாரி புத்தக விமர... இயக்குனர் சமுத்திரக்கனியின் கிட்ணா படம் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை கதை என்று அங்கும் இங்குமாக அரசல்...
இருபத்து ஐந்து நிமிடங்களில் மும்பையிலிரு... 2024 வாக்கில் மும்பையிலிருந்து புனேவுக்கு செல்லும் பயண நேரம் குறைந்தபட்சம் 14 நிமிடங்களில் இருந்து அதிகபட்சம் 25  நிமிடங்களுக்குள் இருக்கும் என்று தெர...
நீரஜ் சோப்ரா என்ன சாதி என்று தெரிந்துகொண... நீரஜ் சோப்ரா - இனி இந்தப் பெயரை நாம் அவ்வளவு சீக்கிரம் மறக்கப் போவதில்லை. 2021ம் ஆண்டிற்கான... இந்தியாவே எதிர்பார்த்து காத்திருந்த டோக்கியோ ஒலிம்பிக் ...
புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா கூறியத... பிரபலங்களின் கருத்துக்கள்:புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. இந்தி படிக்கக் கூடாது எனக் க...

Be the first to comment on "80 வயது முதியவரின் உடலைச் சுமந்து மலை இறங்கிய கர்நாடகா காவல்துறை"

Leave a comment

Your email address will not be published.


*