கமல் – கலையும் கலைசார்ந்த இடமும் – 04 – சட்டம் ஒரு பார்வை! சட்டம்

A view on Sattam movie

சட்டம்

நடிப்பு : கமல்(போலீஸ்), சரத்பாபு(வக்கீல்), மாதவி(interior decration), ஒய்.ஜி. மகேந்திரன், மனோரமா மற்றும் பலர்.

இயக்கம்: கே.விஜயன்

இசை: கங்கை அமரன்

கதை: நெருங்கிய நண்பர்கள் இருவரில் ஒருவர் போலீஸ் மற்றொருவர் வக்கீல். போலீஸ் பிடிக்க வக்கீல் விடுவிப்பார். இருந்தாலும் தொழில் வேறு நட்பு வேறு என்று இருக்கும் நண்பர்கள் ஒரு பெண்ணால் பிரிகிறார்கள். எதிரிகள் ஆகின்றனர். அவர்கள் மீண்டும் எப்படி சேர்கிறார்கள் என்பது மூலக்கதை.

படத்தைப் பற்றி…

நண்பனே எனது உயிர் நண்பனே ( நல்ல பாடல்) என்ற பாடலுடன் கமல், சரத்பாபு அறிமுகமாகிறார்கள். இருவருமே நன்கு பாட ஆட தெரிந்தவர்கள் ( மனோரமாவிடம் டான்ஸ் கற்றவர்கள் ). பாடல் முடிந்ததும் பூங்கொத்து கொண்டு வரும் இரண்டு சிறுமிகளுக்கு முறையே முத்தம் கொடுக்கிறார்கள் ( அவர்கள் இருவரும் எப்படிபட்டவர்கள் என்பதை உணர்த்தும் காட்சி ). பேங்க் கொள்ளை சீன் முக்கியமான காட்சி( எதிரிகளை – ஜெய்சங்கர் கூட்டத்தை அறிமுகம் செய்யும் காட்சி ). இந்த சீனில் கேத்ரின் கதாபாத்திரத்தின் டுவிஸ்ட் செம. அந்தக் கேத்ரின் தான் பின்வரும் காட்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்தவளாக மாறுகிறாள். பேங்க் கொள்ளை சீன் முடிந்ததும் திருடர்களின் கார் நம்பர் போர்டு உடனே மாறும் காட்சி செம. கமல் எப்போதும் சூயிங்கம் சாப்பிடுகிறார். ( இதே போல போலீஸ் கூலாக இருப்பது போன்று பில்லா பிரபு கதாபாத்திரம் இருக்கிறது ). கொள்ளை கூட்டத்தில் ஒரு பெண் இருப்பாள். அவள் நல்லவளாக இருப்பாள். உடன் பிறந்தவனின் இறப்பால் கூட்டத்தில் சேர்ந்து டுவிஸ்ட் தருவாள். ( இதே போன்று பில்லா நயன்தாரா கதாபாத்திரம் உள்ளது. இன்னும் பல படங்களில் இதே போல் உள்ளது.)Y.G மகேந்திரன் மற்றும் மாதவி அறிமுகமாகும் காட்சி கலகலப்பு. Y.G.மகேந்திரனின் கடகடலொடலொட காமெடி ஸ்டைல் நாகேஷை நினைவு ஊட்டுகிறது. எம்எல்ஏ என்று மகேந்திரன் கலாய்க்கும் காட்சி விவேக்கின் SI ஆ இருக்கேன் காமெடிக்கு முன்னோடியாக இருக்கிறது. ” உங்க ஏரியால கிரைம்லாம் எப்படி இருக்கு… நல்லா இருக்கு சார்… ” ” சூரியன ஸ்விம்மிங் ட்ரெஸ்ல போட்டோ எடுக்குறேன்… “, ” நீங்க மூஞ்சிக்கு என்ன சோப் போடுறிங்க… ? ” ” 501 பார் சோப்… ” “அப்ப துணி மாதிரியே மூஞ்சிய அடிச்சு துவைப்பிங்களா… ” ” துவைச்சு முடிச்சு இஸ்திரி கூட போடுவேன்… ” போன்ற வசனங்கள் சிரிப்பு வரவழைக்கின்றன. ” this is 20th century… இந்த ட்ரெஸ்க்கு என்ன குறைச்சல்… ” ” குறைச்சலா இருக்குங்கறது தான் பிராப்ளமே… ” என்ற வசனங்களும் ” its none of ur business… ” ” அப்ப இந்த ட்ரெஸ்ஸ பாத்து பொறுக்கி பசங்க கிண்டலடிச்சா நீங்களும் கிண்டலடிச்சா  thats of none of ur business … ” ” பழைய பஞ்சாங்கம்… ” ” நீங்க எந்த ஊர்ல இருந்து வரிங்க ” போன்ற வசனங்கள் அர்த்தம் கொண்டவை.

” சார்… தொண்டைல சுடாதீங்க எனக்கு வாந்தி வந்திடும்… ” ” போ.. இன்னியோட உனக்கு வேல காலி ” ” துரத்தி பிடிச்சா பரவால… நாங்க தான் பொசுக்குனு மாட்டிக்குறோம்… ” “அப்பா எல்லாத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தார் அப்புறம் சுடுகாடு பக்கத்துல தான இருக்குனு அங்க போய்ட்டாரு “என்ற ஒய்.ஜி. மகியின் வசனங்கள் தெறிக்கின்றன. கடத்தல் தொழிலில் இருப்பவருடன் மூங்கில் பாலத்துக்கு அடியில் சண்டை போடும் காட்சி உள்ளது. இது போல பல படங்களில் (துப்பறிவாளன்) காட்சி உள்ளது. தண்ணீருக்குள் இருப்பவனை தண்ணீர் சத்தத்தை வைத்து கண்டுபிடிக்க கமல் முயல ரயில் சத்தம் அதை குறுக்கிடுகிறது.

எதிர் எதிர் தொழில் புரிபவர்கள் நீண்ட நண்பர்களாக இருப்பதற்கு அவர்கள் கட்டாயமாக தங்களின் தொழிலில் தலையிடக் கூடாது( விக்ரம் வேதாவில் கணவன் போலீஸ், மனைவி வக்கீல் மற்றும் கொடி படத்தில் தனுஷ் ஒரு கட்சி, மனைவி ஒரு கட்சி ) என்ற கருத்தை இந்தப் படங்கள் பதிவு செய்து உள்ளது. “சிறுசுங்க பேசுங்க… பெருசு ஒரு சுத்து சுத்திட்டு வரேன்… ” என்ற மனோராமாவின் நக்கல் இந்தப் படத்திலும் உள்ளது. கமல், மாதவி இருவருடைய காதலும் ஆரம்பத்தில் கேலி, கிண்டல், மோதலுடன் ஆரம்பமாகிறது. ( காதலி தான் மறுப்பாள். பிறகு சம்மதிப்பாள். இது போல தமிழ்சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்கள் வந்து உள்ளது. )( காதலன் காதலியை விரட்டி விரட்டி காதலித்து ஓகே சொல்ல வைப்பது – குட்டி, ரெமோ போன்ற படங்கள்) ( காதலி காதலனை விரட்டி விரட்டி காதலிப்பது பூ, மரியான் போன்ற படங்கள்). மற்ற அனைத்தும் முட்டல் மோதல் பாணி தான். போ போ என்று பொய்யாக நாயகனை விரட்டுகிறாள் காதலி. ( இதே போல் மெட்ராஸ், ராஜாராணி, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் காட்சிகள் உள்ளது ).

தனக்கு தெரிந்த பலவித ஆட்டங்களை, பக்கத்து மாநிலங்களின் நாட்டியங்களை நான் தான் ராஜா பாடலில் தெரியும்படி கமலின் பங்கு உள்ளது. இன்பார்மர் டோனி கதாபாத்திரம், அவருடைய பிளாஸ்பேக், கேத்ரினுடன் கூட்டணி முக்கியத்துவம் வாய்ந்தவை. ( ஆதி, பில்லா, குருதிப்புனல் இன்னும் பல படங்களில் வந்து உள்ளது ). மகளை இழந்தவர் பழி வாங்குகிறார் என்ற டோனி கதாபாத்திரம் பல படங்களில் உள்ளது. ( யுரேகாவின் சிகப்பு எனக்கு பிடிக்கும் கதை கொஞ்சம் வித்தியாசம் ).

“கிருஷ்ணர் வாசிச்சது ப்ளூட்டப்பா… ” ” நாதஸ்வரம் இல்ல… ” ” பரதநாட்டியத்த கண்டுபிடிச்சதுல இருந்து வேகமா வா வேகமா வான்னு கிருஷ்ணர கூப்டுறாங்க… அவரு மெதுவா கூட வந்தது இல்லை… ” ” உங்கப்பா ஆர்மில தான இருக்காரு… ” “ஆமா… எங்க அம்மாகூட சண்ட போட முடியாம எதிரிகூட சண்ட போட போயிட்டாரு… ” போன்ற வசனங்கள் கலகல.

“என்னடா ஒரு பணக்கார வீட்டுப்பொண்ணு ஒரு சாதாரண ஆளுக்கு போன் பண்ணுதேன்னு நினைச்சேன்…  ஒருத்தன் பேரு பிரபலமாகி பேப்பரல வந்துட்டா போதுமே… இந்த வயசு பொண்ணுங்க எல்லாம் நான் முந்தி நீ முந்தின்னு போட்டிபோட்டுட்டு போன் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க… ஏன்னா நாளைக்கு தோழிகளோட கூடி பேசும்போது ‘எனக்கு அவர நல்லா தெரியும்டி… நேத்து ராத்திரி கூட போன் பண்ணி என் கூட பேசிட்டு இருந்தான்டி…’ அப்படின்னு கெக்கபெக்கேனு பேசிக்கலாமல்ல அதுக்குத் தான… ” என்ற வசனம் முக்கியத்துவம் வாய்ந்தவை. சரத்பாபு அடிக்கடி தன்னை ஏழை என்று சொல்லிக் கொள்வது, ஏழை வேசம் போடும் பணக்காரனை சுட்டிக் காட்டுகிறது. இரண்டு நண்பர்களும் ஒரே நபரைக் காதலிக்கிறார்கள் (இதே போல் ஷாஜகான், மலையாளத்தில் விக்மரமாதித்யன், காதல் தேசம், முத்து என்று பல படங்களில் காட்சிகள் உள்ளது. இதே போல் இரண்டு நாயகிகளும் ஒரே ஹீரோவை காதலிக்கும் சப்ஜெக்டுகள் வந்து உள்ளது(படையப்பா,  அருணாச்சலம், மன்னன், நினைத்தேன் வந்தாய், …). ஹீரோவின் வாய்க்குள் இருக்கும் சூயிங்கம் லிப் கிஸ் மூலமாக ஹீரோயின் வாயுக்குள் செல்கிறது. ( இதே போல் காட்சிகள் மருதமலை, ஐ (கொஞ்சம் மாறுதலாக) படங்களில் வந்து உள்ளது. “கல்யாணம் தான… அதுக்கு இப்ப என்ன அவசரம்… குழந்த குட்டிலாம் பெத்துக்குட்டு நிதானமா பெத்துக்கலாம்… ” என்று லிவிஇன் ரிலேசன்ஷிப்பை பற்றி அப்போதே வசனம் வைத்துள்ளார். பெட்ரூமில் நண்பனின் புகைப்படம் வைக்கும் நண்பன் ( திருட்டுப்பயலே படத்தில் நண்பனை பெட்ரூம் வரை விட்டது தப்பு என்ற வசனம் உள்ளது ). நண்பனின் பங்களா வீட்டைப் பார்த்து ” எக்ஸாட்ரினரி, மார்வெலஸ் என்று அனைத்து ஆச்சரிய ஆங்கில வார்த்தைகளையும் உச்சரிக்கிறார் கமல். இதேபோல் காட்சிகள் ஆரண்ய காண்டம் படத்தில் உள்ளது. வாடிக்கையாளர் இருவர் வருகிறார்கள் நிர்வாகத்தினர் அவர்கள் தங்களை பாராட்டுவதாக எண்ணி ஏமார்ந்து அடிவாங்குகிறார்கள் ( இதேபோல் காட்சிகள் உன்னை நினைத்து, சத்ரியன், ஆல்இன்ஆல் அழகுராஜா போன்ற படங்களில் வந்து உள்ளது. ). பிரச்சினை வந்ததும் தனது உதவியாளரை போட்டுக்கொடுக்கிறார் மனோரமா. இதேபோல் காட்சிகள் தனிஒருவன், காதலும் கடந்து போகும் போன்ற காட்சிகள்  பல படங்களில் வந்து உள்ளது. “கடத்தல் எவ்வளவு புனிதமான தொழில்… அத கிண்டல் பண்ணி எங்கயாவது டான்ஸ் ஆடின உன் கைய மட்டும் இல்லடா காலையும் வெட்டுவேன்… ” ” நான் எம்எல்ஏ, ஆனா கட்சி மாறுனது நீங்க… ” ” நடத்தை சரி இல்லைனு இங்க சேர்த்துவிட்டான்… ஆனா நடையே இல்லாம போயிடுச்சு… ” என்ற வசனம் செம நக்கல். ” அன்பளிப்பு இல்ல… லஞ்சம் … ” வசனம் செம. ஊர் முழுக்க கடையடைப்பு, போராட்டம் நடந்துகொண்டிருக்க காரில் நண்பனை ஏற்றிக்கொண்டு போராடுகிறார் கமல். இதே சீனை கொஞ்சம் மாற்றியது போல் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் காட்சி உள்ளது. போலீஸ்காரர் அடித்ததால் சிறைவாசி இறந்ததாக காட்சி உள்ளது. ( இதுபோல் காட்சி பல படங்களில் (சிவாஜி, காடு) வந்து உள்ளது.) குரல்வளை உடைந்தபிறகு தண்ணீர் அருந்த முடியாது என்ற நுணுக்கம் செம. சிறைக்குள் ஆள் அனுப்பி கைதியை கொலை செய்வது போல் காட்சிகள் பல படங்களில் வந்து உள்ளது( கொம்பன்,…).”சட்டத்துக்கு எப்பவுமே உண்மை தெரியாது. தெய்வத்துக்குத் தான் தெரியும்” வசனம் செம. நாயகி கமலை காப்பாற்ற நண்பருடன் படுக்க சம்மதிக்கிறாள். ( கணவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் பெண் உடலை சம்பளமாகக் ( ஒரு நாள் மனைவி ) கேட்கும் காட்சிகள் பல படங்களில் வந்து உள்ளது. காக்கா முட்டை, நேபாளி போன்ற படங்களில் காட்சிகள் உள்ளது. )” என்ன தருவ…” “என்ன வேணாலும் தருவ…” போன்ற வசனங்கள் பல படங்களில் வந்து உள்ளது. கோர்ட்டில் நாயகனின் வக்கீல் ரொம்ப நேரம் அமைதியாக இருந்துவிட்டு கடைசியாக எழுந்து முக்கியமான பாயிண்டை பிடிக்கும் காட்சி பல படங்களில் வந்து உள்ளது. படுக்க சம்மதித்த ஹீரோயின் உயிரை மாய்த்துக்கொள்ள விஷத்தை தயாராக வைத்து உள்ளார். ஹீரோ,ஹீரோயின், நண்பர் மூவரையும் கட்டுப்போட்டு வைத்து சவுக்கால் அடிக்கிறார்கள். இது போல காட்சிகள் பல படங்களில் வந்து உள்ளது. ஜெய்சங்கர் கோர்ட் பாக்கெட்டில் துப்பாக்கி வைத்து உள்ளார். ( இதே போல் விரலில் துப்பாக்கி போன்ற பலவிதமான துப்பாக்கிகள்(எந்திரன் விரல் துப்பாக்கி) பல படங்களில் வந்து உள்ளது. முன்னால் நிற்பவன் துப்பாக்கி காட்டி மிரட்ட காலில் ஒளித்து வைத்து இருக்கும் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுகிறான். இதுபோல காட்சிகள் பல படங்களில் வந்து உள்ளது. எதிரியிடம் மாட்டிக்கொண்டு ” மச்சான் போட்றா இவன… ” என்று சொல்ல எதிரி திரும்பி பார்க்க மாட்டிக்கொண்டவன் தப்பிக்கிறான். இது போல் காட்சிகள் தமிழ்சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வந்து உள்ளது. சட்டம் படத்தின் கிளைமேக்ஸ் ஏர்போர்ட்டில் விமானத்தை துரத்துவது போல் உள்ளது. ( இதே போல காட்சிகள் சிங்கம் 3ல் உள்ளது. )

கமல் தனக்கு நெருக்கமான, பிடித்தமான நபர்களுக்கு படங்களை சமர்பிப்பார். சத்யா படம் எம்ஜிஆருக்கு, ஹேராம் படம் அனந்துவுக்கு, அவ்வை சண்முகி படம் அவ்வை பி.கே. சண்முகம் அவர்களுக்கு. அதே போல ஜானகி, நல்லசிவம் போன்ற பெயர்களை பல படங்களில் உபயோகித்திருக்கிறார்.

Related Articles

ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய புதி... இ-வாலட்(E-Wallet) மூலம் ரயிலில் முன்பதிவு செய்யும்  புதிய வசதியைப் பயணிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது ஐஆர்சிடிசி. ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ திறன்பேசி...
தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந... கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 18-ல் பேருந்து கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது. அதையடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பேருந்து கட்டண உயர்வுக்கான அற...
பெற்றோர்களே முதலில் நீங்கள் நிதானமாக இரு... முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த வரைக்கும் நீட் தேர்வு என்ற ஆபத்தில் இருந்து மாணவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. அவருடைய இறப்பிற்கு பிறகு ஆளாளு...
தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்திய படங்கள்!... எங்க எந்த தப்பு நடந்தாலும் நான் தட்டிக் கேட்பேன்... கண்ணு முன்னாடி நடக்குற அநியாயத்த யார் தடுத்தாலும் தட்டிக் கேட்பேன்... மத்தவங்கள மாதிரி சுயநலமா என்...

Be the first to comment on "கமல் – கலையும் கலைசார்ந்த இடமும் – 04 – சட்டம் ஒரு பார்வை! சட்டம்"

Leave a comment

Your email address will not be published.


*