தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்திய படங்கள்!

Self Discipline Teaching Movies

எங்க எந்த தப்பு நடந்தாலும் நான் தட்டிக் கேட்பேன்… கண்ணு முன்னாடி நடக்குற அநியாயத்த யார் தடுத்தாலும் தட்டிக் கேட்பேன்… மத்தவங்கள மாதிரி சுயநலமா என்னால உச் கொட்டிட்டு ஒதுங்கிப் போக முடியாது… யார் என்ன சொன்னாலும்… உனக்கு எதுக்கு ஊர்வம்புன்னு மனச மாத்த முயன்றாலும் அநியாயத்த கண்டு கண்டிப்பா நான் பொங்கி எழுவேன்…

இப்படிபட்ட மனநிலை உடைய தனிமனித போராளிகளை சமூக ஆர்வலர்களை சமூக சீர்கேடுகளால் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்ட மனிதர்களை மையமாக எடுக்கப்பட்ட படங்களை பற்றி பார்ப்போம்.

1. சலீம் :

தவறான பாதையில் சென்ற அம்மாவை உயிரோடு கொளுத்திவிட்டு டாக்டருக்குப் படித்த நான் சலீம் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அறம், கருணை, நேர்மை என்று ஒழுக்கமாக வாழ்ந்து வரும் சலீமை மற்ற மருத்துவர்கள் ஒன்றுகூடி அசிங்கப்படுத்தி வெளியே அனுப்புகிறார்கள். இவ்வளவு நாள் அமைதியாக இருந்த சலீம் இப்போது வெகுண்டு எழுகிறான். தன்னிடம் மருத்துவம் பார்க்க வந்து இறந்துபோன ஏழை வீட்டு இளம்பெண்ணுக்கு நீதி கிடைப்பதற்காக அமைச்சர் மகன்களை கடத்தி வைத்துக்கொண்டு தனி ஆளாக தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்குகிறான். சலீமின் கோபம் நியாயமானது! என்ற எண்ணம் படத்தை பார்க்கும் நமக்குள் தோன்றி மறைகிறது.

2. எவனோ ஒருவன் & தம்பி :

மாதவன் மற்றும் சீமான் கூட்டணியில் உருவான படங்கள். சமூகத்துல நடக்குற அக்காகிரமங்கள அது ஏன் எவனோ ஒருத்தன் வந்து தட்டிக் கேட்கணும்னு காத்திருக்கோம்… அந்த எவனோ ஒருத்தன் நானாவே இருந்துட்டு போறேனே… என்று நாயகன் தன் கண் முன்னே என்ன தப்பு நடந்தாலும் அத்தனையையும் அதட்டி கேட்கிறான். உடனே அவனை குற்றவாளியை பார்ப்பது போலவும் குற்றம் செய்தவர்களை பாவப்பட்டவர்களை போலவும் பார்க்கிறது இந்த சமூகம். இப்படிபட்ட முட்டாள் சமூகத்தின் கிறுக்குப் பிடியிலிருந்து அவன் எப்படி மீண்டு வந்தான் என்பதே கதை. கண்டிப்பாக ஒருமுறையாவது பார்க்க வேண்டிய படம் எவனோ ஒருவன்.

தம்பி படத்தை பெரும்பாலானவர்கள் பார்த்திருக்க வாய்ப்புண்டு. இங்க சைலன்ஸ்ங்கறதயே சத்தமா இல்ல சொல்ல வேண்டிருக்கு… இதய அறுவை சிகிச்சைக்குப் பெயர் வன்முறையா… போன்ற வசனங்கள் இந்தப் படத்தின் பலம்.

3. அந்நியன் & இந்தியன் :

இரண்டு படங்களிலும் சோகமான பிளாஸ்பேக் இருக்கிறது. இரண்டு படத்திலும் ரத்த உறவுகளை இந்த சமூக அக்கிரமங்களால் இழக்க நேர்ந்ததால் நாயகர்கள் தன் கவனத்துக்கு வரும் அத்தனை சமூக அவலங்களையும் அதற்கு காரணமானவர்களையும் கொடூரமான முறையில் தண்டிக்கிறார்கள். அரசு இவர்களுக்கு தண்டனையும் வழங்குகிறது. ஆனால் தண்டனையில் இருந்து தப்பித்து மீண்டும் களை எடுக்கும் வேளையில் இறங்குகிறார்கள். இரண்டு படங்களுமே ஒரு மாதிரியான முடிவுகளை கொண்டுள்ளது. தற்போது இந்தியன் 2 உருவாகி வருகிறது. அந்நியன் 2 எப்போது ஷங்கர் சார் என்று இனி வரும் காலங்களில் ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விடுவார்கள்.  அந்நியனைப் போல இந்தியன் சேனாதிபதி போல நிஜ மனிதர்கள் இருந்தால் எப்படி இருக்கும். நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது அல்லவா…

4. கந்தசாமி :

முகமூடி படத்திற்கு முன்னதாகவே வந்த வெற்றி பெற்ற படம். மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை ( அந்நியன் படத்தில் வெப்சைட் என்றால் இந்தப் படத்தில் கோயில் கடிதம் ) கந்தசாமியிடம் தெரிவிக்க, சிபிஐ ஆக இருக்கும் கந்தசாமி மாறு வேடத்தில் சென்று மக்களின் துன்பத்தை போக்குபவராக வாழ்கிறார். இறுதியில் காவல் துறையிடம் மாட்டுகிறார். நீதிமன்றத்தில் அவருக்காக ஊரே வாதாட கந்தசாமி விடுவிக்கப் படுகிறார். அந்நியன் கிளைமேக்ஸைப் போலவே இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் அமைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. கந்தசாமி பார்ட் 2 எப்போது வரும் சுசி சார்?

5. ரமணா & சர்கார் :

” இளைஞர் படை திரட்டுதல் ” என்பது தான் இரண்டு படங்களின் மையக் கதை. அந்தப் படையை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையே ஓர் உலுக்கு உலுக்குவது தான் படத்தின் அடிநாதம். ரமணாவுக்கு இருப்பது போல சோகமான பிளாஸ்பேக் சுந்தர ராமசாமிக்கு இல்லாவிட்டாலும் கள்ள ஓட்டு தந்த அவமானம் என்ற காரணமே போதுமானதாக இருக்கிறது இளைஞர்களை திரட்ட. இரண்டு படங்களிலுமே நாயகர்களுக்காக தமிழகம் முழுக்க பெரிய படையே இருக்கிறது. இரண்டு படங்களின் கிளைமேக்சிலும் நாயகர்கள் இளைஞர் படை முன்பு பக்கம் பக்கமாக உணர்ச்சிகரமான வசனங்கள் பேசுகிறார்கள். உடனே அந்தப் படை இவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை இந்த இரண்டு படங்களுமே நினைவூட்டுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

6. சாமுராய் :

இயக்குனர் பாலாஜி சக்திவேலின் முதல் படம். ஷங்கர் சிஷ்யன் என்பதை நிரூபிப்பது போல சமூக அவலங்களை அரசியல்வாதிகளை சாடும் படமென்றாலும் பெரிய அளவில் இந்தப் படம் வெற்றியைப் பெறவில்லை. மூங்கில் காடுகளே ( இன்றைய 96 படத்தின் life of ram க்கெல்லாம் முன்னோடி ), ஆகாய சூரியனை… என்ற இரண்டு பாடல்களும் பெரிய அளவில் ஹிட். படம் ரிலீசாகி பல வருடங்கள் கழித்து இன்று அந்தப் படம் பேசப்படுகிறது. சாமுராய் என்ற படத்தில் விக்ரம் நடித்திராவிட்டால் அந்நியன் படம் அவருக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். அமைச்சர்களை கடத்துதல், அதிகாரிகளை அலற விடுதல் என்று இன்றைய சலீம், துப்பாக்கி முனைகளுக்கு இந்தப் படம் ஒரு முன்னோடி. உங்களால் முழுப்படம் பார்க்க முடியவில்லை என்றாலும் தயவுசெய்து ஒரு முறை இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் வசனங்களை பார்த்து கேட்டு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

7. நிமிர்ந்து நில் :

இந்த சமுதாயத்த ஆள்றது அரசியல்வாதிங்க இல்ல… அரசு அதிகாரிங்க தான்… அதிகாரிகளை வைத்து அதிகாரிகளை பிடிப்போம்… என்று நாயகன் களம் இறங்குகிறார். அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் மெய் சிலிர்க்க வைக்கிறது என்றாலும் இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை. நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க… ஆனா என்ன கொஞ்சம் தூரத்துல இருக்காங்க… நல்லது ஜெயிக்கும்… ஆனா என்ன கொஞ்சம் லேட் ஆகும்… என்று அனல் பறக்கும் வசனங்களை நினைத்தாலே அந்தப் படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் போல இருக்கிறது.

8. ரௌத்திரம் :

நடிகர் ஜீவாவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் ரௌத்திரம். ஆனால் இந்தப் படம் ரிலீசான நேரத்தில் பெரிதாக கண்டுகொள்ள படவில்லை. இப்போது இந்தப் படத்தைப் பற்றி பலர் சிலாகித்து மீம் போட்டு வருகிறார்கள். அடுத்தவன் சட்டையில் பற்றிய தீ உன் சட்டையில் பற்ற ரொம்ப நேரம் ஆகாது… அநீதிகளை பார்த்து கோபம் பொத்துக்கொண்டு வருவதற்குப் பெயர் தான் ரௌத்திரம் என்று ஜீவா சொல்லும் வசனம் அனைவருடைய மனதிற்குள்ளும் ஒரு தாக்கத்தை கட்டாயம் உண்டாக்கும்.

9.  தனி ஒருவன் :

அவன் நியூச உருவாக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்து நான் நியூசால உருவாக ஆரம்பிச்சேன்… என்று நியூஸ்களுக்கும் அது எப்படி உருவாகிறது என்பதற்கும் உள்ள விவரத்தை கண்டறிந்து ஒட்டுமொத்த சமூக அவலங்களும் எவனோ ஒருவனால் தான் தீர்மானிக்கப் பட்டு நடைபெறுகிறது என்று சொன்ன படம். பெரிய வெற்றியைப் பெற்றது. தனிஒரு மனுங்க அத்தனை பேரும் மாறுனா இந்த ஒட்டுமொத்த சமூகமே மாறும். மாற்றத்த நம்மகிட்ட இருந்து தேடாம உருவாக்கமா சமூகத்த குத்தம் சொல்றது சுத்த பைத்தியக்கார தனம் என்று உரக்கப் பேசிய படம். உனக்கென்ன நோயா… என்று நண்பன் கேட்கும் கேள்விக்கு, ஆமா சமூக அவலங்களை தேடி பிடிச்சு சரிசெய்ய முயற்சி செய்ற நோய் என்று ஜெயம் ரவி சொல்லும் பதில் நறுக்.

10. சத்யா

“உன் பேரென்ன… ” என்று ரௌடி ஒருவன் கேட்க… ” சத்யாடா… ” என்று அவன் காதில் நன்றாக விழும்படி உரக்க கத்துவான் சத்யா. மேற்கண்ட அத்தனை படங்களுக்கும் முன்னோடி. இன்று கையில் காப்பு அணிந்து திரியும் இளசுகள் எல்லாம் அதை ட்ரெண்டாக்கிய சத்யா படத்தை பார்த்திருப்பார்களா? என்பது கேள்விக் குறியே. எப்போது கேட்டாலும் சலிப்பு தட்டாத வளையோசை பாடல், வீரமிகு நான்கு இளைஞர்களின் நட்பு என்று படம் நம்மை வெகுவாக கவர்கிறது. அரசிமல்வாதிகளுக்கு பலியான மெட்ராஸ் அன்பு, ஊர்த்தலைவனுக்கு பலியான கிடாரி, கல்லூரி முதல்வருக்கு கையாளாக இருந்த நந்தா, போலீசால் மனம் காயப்பட்ட கிருமி என்று இன்றைய பல படங்களுக்கு சத்யா முன்னோடி. ஒருவேளை சத்யா என்ற படம் வந்திருக்கா விட்டால் கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற இயக்குனர்கள் கிடைத்திருப்பார்களா என்பது சந்தேகமே! சத்யாடா!

Related Articles

வெண்ணிலா கபடி குழு, ஜீவா படங்களை மிஞ்சிய... கபடி உருவான கதையில் ஜல்லிக்கட்டுக்காக உருவான கபடி, 32 நாடுகளில் விளையாடாப்படும் கபடி பற்றி தகவல்கள் சொல்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் தகவல்கள் சுருக்க...
வானில் மூன்று அதிசயங்களைக் காண தயாராகுங்... ஜனவரி 31, 2018 அன்று வானில் மூன்று அதிசயங்களை நிகழ இருக்கின்றன. வானியல் ஆய்வாளர்கள் இந்த நிகழ்வை 'சூப்பர் ப்ளூ மற்றும் ப்ளட் மூன்' என்று வர்ணனை செய்கி...
கட் அவுட்களும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களு... ஊர் முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை கவனித்துப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலும் பதினைந்து வயதில் இருந்து இருபத்தி ஐந்து வயதுக்கு...
இலவசம் சரியானது என்பவர்களுக்கு சீமானின் ... தி. மு. க மற்றும் அ. தி. மு. க அரசு இரண்டும் மாற்றி மாற்றி இதுவரை இலவசமாக கொடுத்த பொருட்கள் என்னென்ன என பார்ப்போம். மதிய உணவுத் திட்டம்: ஏழைகள் சாப...

Be the first to comment on "தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்திய படங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*