புழுதி படிந்துக் கிடைக்கும் பேன்சி ஸ்டோர்கள்! – பரிசுகளை பரிமாறிக் கொள்வதில் ஆர்வம் குறைந்து விட்டதா நமக்கு?

மௌனம் பேசியதே படம் பார்த்திருக்கிறீர்களா? அந்த படத்தில் தன் மனதுக்குப் பிடித்தமானவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் காதலை தெரிவிக்கும் அட்டைகள் போன்ற க்ரீட்டிங் கார்ட்ஸ்  வாங்குவதற்காக நாயகன் சூர்யாவுடன் பரிசுப் பொருட்கள் விற்பனையகத்திற்கு அவருடைய நண்பரும் வந்திருப்பார். அப்போது சூர்யா ஏன்டா எவனோ எழுதிவைத்த வார்த்தைகளை அட்டைகள்ல பதிச்சு, அதைப் போய் உங்கள் காதலிக்கு கொடுக்கிறிங்க… பரிசு கொடுப்பதாக இருந்தால் நீங்கள் சுயமா யோசிச்சு சொந்தமா எழுதிக் கொடுங்கடா என்று சொல்வார்… அவர் அப்படி சொன்னதும் கடையில் அந்த மாதிரியான வாழ்த்து அட்டைகள் வாங்குவதற்காக வந்திருந்த பல இளைஞர்கள் வாங்காமல் சென்றுவிடுவார்கள். உடனே கடைக்காரர் சூர்யாவை முறைத்து பார்ப்பார். அப்படி சொன்ன சூர்யாவுக்குமே கூட அந்த பரிசுப் பொருள் விற்பனையகத்தில் உள்ள ஒரு பரிசு மனதிற்கு பிடித்தமானதாக இருக்கும். அதை தான் விரும்பும் பெண்ணுக்கு வாங்கி கொடுக்கலாம் என்று ஆசையோடு எடுத்து பார்த்துவிட்டு பிறகு கௌரவம் குறைந்து விடும் என்பதால் வைத்துவிடுவார். 

இந்தக் காட்சியில் இருந்தே தொடங்குவோம். செல்போன்கள் வராத காலம் வரை இந்த மாதிரியான 

 நிறைய பேர்களின் வீடுகளில் குவிந்துகிடக்கும். காதல் வாழ்த்து அட்டையாக மட்டுமில்லாமல் தீபாவளி வாழ்த்து, பொங்கல் வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து, திருமண வாழ்த்து போன்ற பலவிதமான வாழ்த்து அட்டைகளாக இருக்கும். செல்போன் வந்ததும் வந்தது அந்த அட்டைகள் எல்லாம் இப்போது கண் முன் அகப்படுவதில்லை.  பெஸ்ட் விஸஸ், ஹேப்பி பர்த்டே போன்ற  பிச்சர் மெசேஜ்கள் அந்தக் குட்டி செல்போன்களில் வரத் தொடங்கியதும் இந்த அட்டைகள் எல்லாம் மவுசு குறைந்து போனது. இதைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு போன்கள் வந்துவிடவே நிறைய போட்டோ எடிட் ஆப்கள்  பயன்பாட்டில் வர தொடங்கிவிட்டது.  

அந்த மாதிரி ஆப்களை பயன்படுத்தி ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த மாதிரியான வாழ்த்து முறையை தேர்ந்தெடுத்து அப்படிப்பட்ட ஒரு போஸ்டரை வைத்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். அதேபோல கூகுளில் தேடி விசஸ் இமேஜ்களை தேடிப்பிடித்து அவற்றை வைத்து  வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு இருக்கிறோம்.  அப்படிப்பட்ட போஸ்டர்களை பயன்படுத்தி பிறந்த நாள், திருமண நாள், தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாட்களுக்கு பேஸ்புக், வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றோம். இப்படி வாழ்வின் சிறப்பான நாட்களை எல்லாம் வெறும் போஸ்டர்களையும் ஸ்டிக்கர்களையும் மட்டுமே வைத்து வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருவதால் நமக்கெல்லாம் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து அன்பை பகிரும் அந்த நற்பண்பு குறைந்து விட்டதோ என்ற ஒரு எண்ணமும் வருகிறது. 

இப்படி பரிசுப் பொருட்களை வாங்கித் தருவதற்கு சங்கடப்படும் மனிதர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். அதேபோல எந்த ஒரு சிறப்பான நாட்களாக இருந்தாலும் சரி, அந்த நாளைக் கொண்டாடும் விதமாக  ஊரில் உள்ள ஒவ்வொரு ஃபேன்ஸி ஸ்டோர்கள் முழுக்க அலைந்து திரிந்து மனதுக்குப் பிடித்தவருக்கு ஒரு அழகான பொருளை வாங்கித் தரும் மனதுடனும் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் பரிசு பொருட்கள் எல்லாம் வாங்குவது இந்த காலத்தில் செய்யக் கூடிய ஒன்றா? என்று ஃபேன்ஸி ஸ்டோர்களை அருவருப்பாய் பார்த்து ஒதுக்கி வைக்க, இன்னொரு பக்கம்  காலம் எவ்வளவோ வளர்ந்து இருந்தால் என்ன பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து அன்பைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவிப்பது தான் நற்பண்பு என்று பேன்சி ஸ்டோர்களை வாழ வைக்கும் மனிதர்களும் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். முதலில் இந்த பேன்சி ஸ்டோர்களை பற்றிப் பார்ப்போம். நாடு முழுக்க உள்ள பேன்சி ஸ்டோர்களின் எண்ணிக்கையை ஆராய்ந்து பார்த்தால் கிட்டத்தட்ட அவற்றின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில் வரும். இந்த மாதிரியான ஃபேன்சி ஸ்டார்களை வைத்து நடத்துபவர்கள் பெரும்பாலும் கல்லூரி படித்துக் கொண்டே பார்ட் டைம் வேலை செய்து அந்த வேலை மூலமாக சம்பாதித்த பணத்தை வைத்து கல்லூரி முடித்ததும் சொந்தமாக பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தும் மாணவ மாணவிகள். அப்படி இல்லையென்றால் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் எல்லாம் அந்த பேன்சி ஸ்டோர்களில் வேலைக்கு சென்று அனுபவமும் வியாபார நுணுக்கமும் பெற்ற பிறகு படிப்பு முடித்து கொஞ்ச நாட்கள் வேலையில் இருந்து விட்டு திருமணம் ஆன பிறகு ஒரு கடையை வாடகைக்கு எடுத்து ஃபேன்ஸி ஸ்டோர்கள் நடத்திவரும் பெண்மணிகளாக இருப்பார்கள். தேர்க்கடை பேன்சி ஸ்டோர், ஆப்பிள் பூக்கள் ஃபேன்சி ஸ்டோர், மின்மினி ஃபேன்சி ஸ்டோர், ஆசை பேன்சி ஸ்டோர், தும்பி பேன்சி ஸ்டோர்,  தென்றல் பேன்சி ஸ்டோர் மலர் பேன்சி ஸ்டோர் என்று அழகழகான பெயர்களுடன் நிறைய பேன்சி ஸ்டோர்களை அந்த பெண்கள் நடத்தி வருகிறார்கள். 

ஆக மொத்தத்தில் இந்த பேன்சி ஸ்டோர்கள் இந்திய தேசத்தில் உள்ள பெரும்பாலான பெண்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். இப்போது கூட உங்கள் ஊரில் இருக்கும், உங்கள் மாவட்டத்தில் இருக்கும் பேன்சி ஸ்டோர்களை எல்லாம் சும்மா ஒரு ஜாலிக்காக ரவுண்டு அடித்து பாருங்களேன்.  அல்லது யாருக்காவது ஒரு வித்தியாசமான பரிசு பொருளை வாங்கி தரணும் என்கிற முனைப்புடன் எல்லா ஃபேன்ஸி ஸ்டோர்களையும் சுற்றி பாருங்களேன். 

மேலே குறிப்பிட்டது போல கிட்டத்தட்ட எல்லா பேன்சி ஸ்டோர்களிலும் இளம் பெண்கள் தான் இருப்பார்கள். ஒரு சில பேன்சி ஸ்டோர்களில் மட்டும் வயதான பாட்டிகள் தாத்தாக்கள் அமர்ந்திருப்பார்கள். அதில் ஓரளவு இடவசதியுடன் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் இருக்கும் ஃபேன்ஸி ஸ்டோர்கள் மட்டும் நல்ல வியாபாரம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஃபேமஸான பாப்புலரான ஃபேன்ஸி ஸ்டோர்கள் என்று எடுத்து பார்த்தால் தமிழ்நாடு முழுக்க மொத்தம் ஒரு 500க்கும் குறைவான  ஃபேன்ஸி ஸ்டோர்கள் வரும். ஆனால் தமிழ்நாடு முழுக்க உள்ள ஒட்டுமொத்த பேன்சி ஸ்டோர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துப் பார்த்தால் அவை கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேல் வரும். 

இந்த பத்தாயிரம் கடைகளில் வெறும் 500 கடைகள் மட்டும் புழுதி அடிக்காமல், நல்ல இடவசதியுடன் மக்கள் நடமாட்டத்துடன் நல்ல வியாபாரம் பார்க்கிறது என்றால் மீதி உள்ள கடைகள் எல்லாம் என்ன நிலைமையில் இருக்கிறது, அந்த கடையை நம்பியிருக்கும் பெண்மணிகள் எப்படி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள், என்ற கேள்வியை அவர்களிடம் எழுப்பினால் எங்கெங்க வியாபாரம் ஆகுது… இங்க பாருங்க இத எல்லாம் வாங்கி போட்டு வருஷக்கணக்கா ஆகுது… எல்லாம் புழுதி அடிச்சு போய் கிடக்கிறது. அப்பப்ப கொலுசு, தோடு, வளையல் இதுல ஏதாவது ஒன்னு ஓடும், மற்றபடி எல்லாம் சுமாரத் தான் ஓடுது, முதல்ல எல்லாம் குழந்தைகளுக்கு பொம்மை வாங்குறது விளையாட்டு பொருள் வாங்குறது அப்படி இப்படினு நிறைய பேர் எங்க கடைக்கு வருவாங்க… ஆனா இப்ப எல்லாத்தையும் ஆன்லைன்லயே பண்ணிக்கலாம்னு அவங்க வாங்கித் தர பொருட்கள் எல்லாத்தையும் ஆன்லைன்ல செலக்ட் பண்ணி வாங்கி தர்றாங்க… பேன்ஸி ஸ்டோரோட மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் வருகிறது… வீட்ல சீரியல் பார்த்துகிட்டு வெட்டியா உட்கார்ந்து இருக்கிறதும் இந்த மாதிரி விற்பனையாகாத, ஆளே வராத பேன்ஸி ஸ்டோர்ல உட்கார்ந்திருக்கிறதும் ஒன்னு தான்… இதுல அப்பப்ப வாடகை பிரச்சனை வேற வந்திருது. 

ஒரு பக்கம் ஃபேன்ஸி ஸ்டோர்கள் ஊர் முழுக்க முளைத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பரிசுப் பொருட்கள் வாங்கும் ஆர்வம் நம்மிடையே படிப்படியாக குறைந்து கொண்டுதான் வருகிறது. பரிசுப் பொருட்கள் வாங்கித்தரும் ஆர்வம் குறைகிறது என்றால் என்ன அர்த்தம்? மனிதத்தின் மீது இருக்கிற பற்று குறைந்து கொண்டே வருகிறது என்று அர்த்தம். எந்த மனிதரையும் நாம் உண்மையாக நேசிக்காமல் வாழனுமே என்ற ஒரே எண்ணத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான், இந்த மாதிரி பொருட்கள் வாங்கி கொடுத்து அன்பைப் பகிரனும் என்ற எண்ணம் குறைகிறது. 

காதல், குழந்தை என்ற இந்த இரண்டு விஷயங்கள் மட்டும் இல்லை என்றால் அந்த ஃபேன்ஸி ஸ்டோர்கள் எல்லாம்  எப்போதோ காணாமல் போயிருக்கும். சில்லுக்கருப்பட்டி என்கிற ஒரு அழகான காதல் படம். அந்த படத்தில் உடை வடிவமைப்பாளராக இருக்கும் நாயகி தன்னுடன் காரில் பயணிக்கும் நண்பன் முகிலனிடம், பள்ளி, கல்லூரி காலத்தில் தனக்கு வந்த காதல் பரிசு பொருட்களை எல்லாம் எடுத்து காட்டுவார். எனக்கு கூடிய விரைவில் திருமணம் ஆக போகிறது அதனால் இவற்றையெல்லாம் நான் கொண்டு போய் தூர வீச போகிறேன் என்று நாயகி சொல்ல, அதற்கு முகிலன் “இதெல்லாம் உங்களுடைய நற்குணத்துக்கும் அழகுக்கும் கிடைத்த அங்கீகாரங்கள்… இந்த மாதிரியான பொக்கிஷங்களை எல்லாம்  பாதுகாப்பாக வைத்திருங்கள்” என்று சொல்வார். 

அந்த படத்தில் சொல்லப்பட்டது போல நாம் வாங்கி கொடுக்கும் பரிசு பொருட்கள் அல்லது நமக்கு மற்றவர்கள் வாங்கி கொடுக்கும் பரிசு பொருட்கள் இவை எல்லாம் ஒருவருடைய நற்குணத்துக்கு  கிடைக்கும் அங்கீகாரங்கள். அதனால் பிறந்த நாள், திருமண நாள், தீபாவளி, பொங்கல் என்று எத்தகைய சிறப்பு நாளாக இருந்தாலும் அந்த நாட்களில் உங்களுடைய மனதுக்கு நெருக்கமான மனிதர்களுக்கு  உங்களால் முடிந்த அளவுக்கு பணம் போட்டு கிப்ட் வாங்கி கொடுங்கள். காலம் மாறிவிட்டது இந்த காலத்திலும் கிப்ட் எதற்கு? என்று மேதாவித்தனமாக இருக்க வேண்டாம். நீங்கள் உங்கள் கையில் எவ்வளவு ரூபாய் வைத்து இருக்கிறீர்களோ அவ்வளவு ரூபாய்க்கும் இந்த உலகில் பரிசு பொருட்கள் இருக்கின்றன. ஆனால் நாம் அந்த பரிசுப் பொருட்கள் இருக்கும் பேன்சி ஸ்டோர்களை தேடுவதில் தான் சோம்பேறித்தனம் காட்டுகிறோம். 

மேலே குறிப்பிடப்பட்ட சில்லுக்கருப்பட்டி படத்தில் “கிப்ட்” பொருட்களை பற்றி வேறொரு கதையிலும் விளக்கி இருப்பார்கள். குப்பை அள்ளும் சிறுவர்கள் அந்த குப்பைக்குள் இருக்கும் அழகான புதுமையான பொருட்களெல்லாம் தங்களுக்கு கிடைத்த கிப்ட் என்று நினைத்துக்கொண்டு அதை எடுத்துப் போய் வீட்டில் பத்திரமாக வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட அந்த பொருட்கள் கிடைக்கும் நாட்கள் எல்லாம் இவை தான் “கிப்ட்டான நாட்கள்” என்று நினைத்து உள்ளம் மகிழ்வார்கள். இப்படி உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்குள்ளும் கிப்ட் என்ற வார்த்தையின் மீது ஒரு மிகப்பெரிய ஏக்கம் இருக்கிறது. நம்முடைய பிறந்தநாளுக்கு திருமண நாளுக்கு எவ்வளவு கிப்ட் வரும் என்று கனவு காணும் மனிதர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். என் வாழ்க்கையில இதுவரைக்கும் யாருமே எனக்கு கிப்ட் வாங்கித் தந்ததில்லை என்று சொல்லும் மனிதர்களும் இருக்கிறார்கள். 

Related Articles

விபத்துக்குள்ளான லாரி! டிரைவரை காப்பாற்ற... ஒரு லாரி விபத்துக்கு உள்ளானா போதுமே! உடனே அதுல இருக்குற பொருள திருட கூட்டம் கூட்டமா வந்துடுவிங்களே! - இந்த வரிகளை ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் வாசித்துப் ...
அண்ணாவின் ” வேலைக்காரி ” நாட... கதாபாத்திரங்கள் : வேதாசல முதலியார் - வட்டியூர் ஜமீன்தார் சரசா - வேதாசல முதலியாரின் மகள் மூர்த்தி - வேதாசல முதலியாரின் மகன் அமிர்தம்...
வார இறுதியில் மிக அதிக கனமழை மும்பையில் ... மும்பையில் சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமையன்று மிக அதிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு இந்தியாவின் வானி...
சர்தார் வல்லபாய் படேல் சிலையும் விவசாயிக... அக்டோபர் 31 சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு (தேசிய ஒற்றுமை தினம்) இன்று அவருடைய சிலை திறப்பு விழா குஜராத்தில் கோலாகலமாக நடந்து முடிந்...

Be the first to comment on "புழுதி படிந்துக் கிடைக்கும் பேன்சி ஸ்டோர்கள்! – பரிசுகளை பரிமாறிக் கொள்வதில் ஆர்வம் குறைந்து விட்டதா நமக்கு?"

Leave a comment

Your email address will not be published.


*