டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாமின் பொன்மொழிகள்!

Sayings of Dr. A.P.J. Abdul Kalam
  1. காலத்தின் மணற்பரப்பில் உன் காலடிச் சுவடுகளை பதிக்க விரும்பினால் உனது கால்களை இழுத்து இழுத்து நடக்காதே.
  2. நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம் நேர்மையாய் துணிவாய் உண்மையாய் உழைக்கிறவர்கள் கரங்களே அழகிய கரங்கள்.
  3. கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள். எண்ணங்களை செயல்களாக மாற்றுங்கள்.
  4. நட்பு என்பது நண்பர்களின் நிலையறிந்து அவர்களுக்கு உதவுவது தான்.
  5. பொறுப்புடன் கூடிய சுதந்திரம் மட்டுமே தனிப்பட்ட மகிழ்ச்சியின் அடித்தளம்.
  6. வெற்றி பெற வேண்டுமென்றால் பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றிக்கு வழி.
  7. உங்கள் குறிக்கோளில் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால் உங்கள் இலக்கில் இம்மியும் விலகாமல் குறி வைத்து அதே சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.
  8. ஒரு தலைவர் எந்த அளவு சிறந்தவர் என்பதற்கு அளவுகோல் எது? அவர் எந்த அளவுக்கு தனது சகாக்களையும் அவர் தம் ஈடுபாட்டையும் பங்கேற்றுக் கொள்கிறாரோ அந்த அளவிற்கே அவர் சிறந்தவர்.
  9. சிந்தனை ஆற்றல் கொண்ட ஒரு ஜீவனின் வாழ்க்கையாக எனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப்பவன் நான்.
  10. நம் தவறுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடமே உயர்வான வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும்.
  11. வாழ்வில் உயர்ந்தவர்கள் அனைவரும் நேர்மறை எண்ணம் கொண்டவர்களே.
  12. அபாரமான சாதனைகளை நிகழ்த்துவதில் ஆழமான ஈடுபாடு கொள்ளுங்கள். உடனே கிடைக்கும் செயற்கையான சந்தோசத்தை துரத்தி அலையாதீர்கள்.
  13. எதை வைத்து ஒருவரை சாதிக்கும் தலைவர் என்று சொல்வது. எனது பார்வையில் சாதிக்கும் தலைவர் என்பவர் ஊழியர்களை அணிதிரட்டிக் கொள்வதில் கைதேர்ந்தவராக இருந்தாக வேண்டும்.
  14. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டி இடுவது இல்லை.
  15. தனது இலக்கை குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப் புள்ளியும் பெரும்புள்ளி தான். எனவே சளைக்காமல் முயற்சித்துக் கொண்டிருங்கள்.
  16. ஈடுபாடு, பங்கேற்பு, பொறுப்புணர்வு ஆகிய இந்த மூன்று அம்சங்கள் தான் செயல் திட்டத்தின் தாரக மந்திரங்கள்.
  17. கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுமதிக்க வேண்டும். தவறே செய்யக் கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியம்.
  18. உலகளாவிய உணர்வு என்னும் அடித்தளத்தின் மீதுதான் இந்திய நாகரிகத்தின் பாரம்பரியம் எழுப்ப பட்டுள்ளது. உலகிற்கு தனது நேசக் கரங்களை நீட்டுகிறது.
  19. வாழ்க்கையை நாம் எதிர்கொண்டு சமாளிப்பதை விட்டுவிட்டு அதை ஆராய்ந்துகொண்டு இருப்பது தான் பிரச்சினையாகிவிடுகிறது.
  20. நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதனை விரிவாகத் தெரிந்துகொள்வது ஒன்றும் இந்த உலகத்தில் முக்கியமல்ல. எந்த திசையில் நாம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
  21. எவ்வளவு தூரம் நான் கடந்து வந்திருக்கிறேன் என்பதைவிட இன்னும் எவ்வளவு தூரத்தைக் கடக்க வேண்டியிருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவதுதான் எப்போதுமே என்னுடைய ஊக்க சக்தியின் அச்சாணியாகும்.
  22. எதைச் செய்தாலும் மனப்பூர்வமாக ஈடுபட்டு அதில் உங்களின்அதிகபட்ச ஆர்வத்தையும் சக்தியையும் வெளிப்படுத்துங்கள். அது உங்களை சுற்றி அன்பையும் மகிழ்ச்சியையும் பரவச் செய்யும்.
  23. உண்மையைத் தேடு. தடைகளில் இருந்து அது உன்னை விடுவிக்கும்.
  24. வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம், ஆக்கப்பூர்வமான சிந்தனை, கற்பனைக் கண்ணோட்டம், நம்பிக்கை என நான்காகும்.
  25. கடந்த காலத்தின் மீது மரியாதை இல்லாமலும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இல்லாமலும் நமக்குள் சண்டையிட்டுக் கொள்வோமேயானால் தோல்வி அதிருப்தி தவிர வேறென்ன நமக்குக் கிடைக்கும்.
  26. வேலை நாட்களில் அன்றாட அலைச்சல் குழப்பம் சந்தடியெல்லாம் அடங்கியதும் ஆற அமர சிந்தித்து அடுத்து வரப்போகும் புத்தம்புது நாளை எதிர்கொள்வதற்கு உன்னைச் செம்மையாக தயார் செய்துகொண்டால் எதிர்காலத்தில் நீ வெற்றிகரமான தலைவர் தான்.
  27. மூன்று நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இல்லையென்றால் உதவித்தொகை நிறுத்தப்படும். அதுதான் எனது வாழ்வு. உழைத்தேன். படித்தேன் பாராட்டினர்.
  28. அலட்டிக் கொள்ளாமல் இருக்கும்போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும். விஷயங்கள் எப்நடி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்தூக் கொள்ள வேண்டும்.
  29. கோவிலில் நடக்கும் பிரார்த்தனையும் மசூதியில் நடக்கும் தொழுகையும் ஒரே இடத்தில் தான் போய்ச் சேர்கின்றன.
  30. இறைவனை நோக்கி இப்படிப் பிரார்த்தனை செய்யுங்கள்! இறைவனே என்னைச் சோதனை செய்யுங்கள். என் சக்தியை நிரூபிக்கச் செய்யுங்கள்.
  31. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான எல்லா ஆதாரங்களும் மனதில் மறைந்துக் கிடக்கின்றன. உணர்வு நிலையில் உறைந்து கிடக்கும் சிந்தனைகள் வெளிக்கிளர்ந்து செழித்தோங்கி நிஜமாவதற்கான வாய்ப்பு கிடைத்தால் வெற்றி மீது வெற்றி வந்து சேரும்.
  32. சிக்கல்களை எதிர்கொள்ளூம்போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
  33. நமது எண்ணங்கள் சுயநலத்துக்குள் சுருங்கிவிடாமல் பொதுநலமாக விரிய வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் வளர்ச்சியைத் திட்டமிட்டபடி நிறைவேற்றி நமது நாட்டை சர்வதேச அளவில் ஒவ்வொரு அம்சத்திலும் முதல் நாடாக மாற்றமுடியும்.
  34. தனிமனிதன் கட்சி அமைப்பு என்றில்லாமல் நாட்டு நலனை மட்டுமே முக்கியமாக கருதுவோம். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற்று ஒற்றுமையான சிந்தனையை நாம் பெற வேண்டும்.
  35. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாகப் பாடுபட்டால் தான் பிரச்சினைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும்.

Related Articles

புதிதாக வாட்சப் குரூப் தொடங்க வேண்டுமென்... வாட்சப் போன்ற சமூக வலை தளங்கள் மூலமாக தொடர்ந்து குற்றங்கள் நடந்து வருகின்றனர். குறிப்பாக பல ஊர்களில் பொய்யாக பரப்பப்பட்ட வாட்சப் வதந்திகளால் பலருடைய உ...
விமான நிலையத்தில் உயர்தர வசதிகளை அறிமுகப... கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்தின் சேவையை அடிக்கடி பயன்படுத்தும் பயணிகள், மிதமிஞ்சிய போக்குவரத்து நெரிசல் காரணமாக அங்கு வந்து செல்லும் பயண அனுபவத்தை ...
நகரத்துப் பேத்திக்கும் கிராமத்து பாட்டிக... நகரத்துப் பேத்திக்கும் கிராமத்து பாட்டிக்கும் இடையேயான மோதலும் காதலும்! - செத்தும் ஆயிரம் பொன் படம் ஒரு பார்வை! தமிழ் சினிமா விமர்சகர்கள் எல்லோரும...
சினிமாவில் உதவி இயக்குனர் ஆவது எப்படி? &... சினிமாவைப் பற்றி கொஞ்சம்... இது ஒரு இலக்கணம் இல்லாத தொழில். காரணம் ஒரு படத்தை இப்படித் தான் எடுக்க வேண்டும் என்று யாராலும் கற்றுத்தர முடியாது. இது ஒர...

Be the first to comment on "டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாமின் பொன்மொழிகள்!"

Leave a comment

Your email address will not be published.


*