அரசுப் பள்ளியை தத்தெடுத்த பத்தாம் வகுப்பு மாணவன்

Tushar Mehrotra

பள்ளி, கல்லூரி நாட்களில் நமக்குத் தரப்படும் சிறிய அளவிலான திட்டப்பணிகளை எப்படிச் செய்து முடித்தோம் என்று நினைவிருக்கிறதா? பல நேரங்களில் நம் அம்மாவோ அப்பாவோ தான் அதை நமக்காக முடித்துத் தருவார்கள். அல்லது அதற்காகவே இயங்கும் கடைகளில் காசு கொடுத்து வாங்கிக்கொள்ளவோம் இல்லையா? ஆனால் ஹரியானா மாநிலம் குருகிராமில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவனொருவன், தனக்குத் தரப்பட்ட பள்ளிக்கூடம் சம்பந்தப்பட்ட சிறிய அளவிலான திட்டப்பணியை மிகவும் சிரத்தை எடுத்துச் செய்து முடித்திருக்கிறான். அது அவனை அந்தப் பள்ளிக்கூடத்தையே தத்தெடுத்துக்கொள்ளும் அளவிற்குக் கொண்டு போயிருக்கிறது.

என்ன திட்டப்பணி?

துஷார் மெஹ்ரோத்ரா என்ற பதினைந்து வயது மாணவனுக்கு அவனது பள்ளியில் சமூக பொறுப்பு என்ற தலைப்பில் திட்டப்பணி வழங்கப்பட்டது. அதற்காக அவன் தேர்ந்தெடுத்தது ஒரு அரசுப்பள்ளியை, அந்தப் பள்ளிக்கு கொஞ்சம் புத்தகங்கள் கொடுத்து அதன் மூலம் சிறிய அளவிலான ஒரு நூலகத்தை உருவாக்குவதே அவனது திட்டமாக இருந்தது. ஆனால் அந்தப் பள்ளியை நேரில் சென்று பார்த்தபோது தான் அங்கே மாற்றப்பட வேண்டியது நிறையவே இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தான்.

அரசுப் பள்ளி தத்தெடுப்பு

அப்பள்ளியில் தொடர்ந்து செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்த துஷார் தன்னிடமிருந்த இரண்டாயிரம் ரூபாயைப் பள்ளியை  மேம்படுத்துவதற்காகச் செலவிட்டான். அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்து தன் குடும்பத்தைத் தொடர்புகொண்டு அவர்களது உதவியையும், பொது மக்களின் உதவியையும் நாடினான்.

என்ன மாற்றங்கள்?

தான் சேர்த்த பணத்தைக்கொண்டு பள்ளியில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தான். புதிய மின்விசிறிகள் , நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் புதிய புத்தகங்கள் வாங்கப்பட்டன. அந்தப் பள்ளியின் ஏழ்மையான சூழலை பார்த்து மனம் இறங்கிய தன் மகன் அதை மாற்ற வேண்டும் என்று விரும்பியதாக துஷாரின் அம்மா தெரிவித்தார்.

பணத்திற்கும் அப்பால்

நிதி உதவி செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், மூன்று மாத காலமாக பள்ளியின் மேம்பாட்டிற்காகத் தரமான நேரத்தையும் துஷார் செலவு செய்கிறான்.வார இறுதி நாட்களில் பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிப்பது, நீதி வகுப்புகள் எடுப்பது, தற்கால நிகழ்வுகள் நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று மாணவர்களுக்கு உபயோகப்படும் பல்வேறு விஷயங்களுக்குச் செயல் வடிவம் கொடுத்து வருகிறான்.

பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும் துஷாரின் இந்தச் செயலுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அவன் வரத்தொடங்கிய பிறகு மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறன் குடியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இங்கே எதுவுமே சரியில்லை என்று புலம்புவார்களை காட்டிலும், தன்னால் இயன்றதை இந்தச் சமுதாயத்துக்கு திருப்பிச் செய்வதுதான் அறம். துஷார் போன்று எந்த சிறு வெளிச்சமும் இல்லாமல் உழைத்துக் கொண்டிருப்பவர்களை அங்கீகரிப்பது நம் பொறுப்பு.

Related Articles

எழுத்தாளர் தமிழ்மகனின் “மீன்மலர்&#... தமிழ்மகன் என்கிற பா. வெங்கடேசன் எழுதிய புத்தகம் மீன்மலர். இருபது வயதுகளிலயே எழுத தொடங்கி இளம் வயதிலயே தமிழக அரசின் இலக்கிய விருதுகளை வென்றுள்ளவர். மீன...
புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா கூறியத... பிரபலங்களின் கருத்துக்கள்:புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. இந்தி படிக்கக் கூடாது எனக் க...
உலகிலயே மிகப்பெரிய செல்போன் ஃபேக்ட்ரியை ... உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் உலகிலயே மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்க இருக்கிறது சாம்சங் கம்பெனி.சாம்சங் நிறுவனத்தி...
மக்களுக்கு விசம் கொடுத்து சம்பாதிக்கிறது... (TASMAC - Tamilnadu Anaiththu Samooga Makkalum Arundhum Cool Drinks) சமூக வலை தளங்களில் உலவிக் கொண்டிருக்கும் வரிகள் இது. உண்மை தான். தெருவுக்கு தெரு ...

Be the first to comment on "அரசுப் பள்ளியை தத்தெடுத்த பத்தாம் வகுப்பு மாணவன்"

Leave a comment

Your email address will not be published.


*