மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 – இந்த காரில் அப்படி என்ன ஸ்பெஷல்?

Mahindra XUV 500 W 9

வந்து விட்டது  மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 (Mahindra XUV500 W9) கார்!!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 (Mahindra XUV500 W9) மாடல் காரை மஹிந்திரா நிறுவனம், இந்தியாவில் ஜீப் காம்பஸ், டாடா ஹெக்ஸா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா கார்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது.

ரூ. 15.45 லட்சம் விலையில் (டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை) விற்பனைக்கு வந்துள்ள இந்த காரின் சிறப்பு அம்சங்கள்

  • 2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் – இதன் மூலம் 138 பிஎச்பி பவர் மற்றும் 330 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.
  • முன்பக்க சக்கரங்களை இயங்கும் திறன் பெற்ற 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என இருவேறு கியர்பாக்ஸ் தேவைகள்.

ஆல் வீல் டிரைவ் (All-wheel drive) தேர்வு முறையும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இவை மட்டுமின்றி

  • ஆண்டார்யாடு ஆட்டோ
  • புஷ் பட்டன் ஸ்டார்ட்,
  • கீலெஸ் எண்ட்ரி மற்றும்
  • ஈகோ சென்ஸ்

போன்ற தொழில்நுட்பங்களும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 மாடலின் சிறப்புகளாகும்.

இந்த காரின் மற்றுமொரு சிறப்பம்சம் 7.0 இஞ்ச் இன்ஃபோடெய்ன்மண்ட் சிஸ்டம் ஆகும். ஆனால் பல்வேறு மொபைல் செயலிகளை இன்ஃபோடெய்ன்மண்ட் சிஸ்டத்தோடு இணைக்க முடியாமல் இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஆண்டி பிஞ்ச் உடன் கூடிய மின்சாரத்தால் இயங்கும் சன்ரூஃப், டைனமிக் அசிஸ்ட் கொண்ட ரிவர்ஸ் கேமரா, வளையும் ஹெட்லேம்புகள். ஆகியவையும் புதிய தோற்றத்தில் அசத்துகின்றன. இவை கார் பிரியர்களின் கவனத்தைக் கவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 மாடலை வடிவமைத்தவர்கள் அதன் பாதுகாப்பு கட்டமைப்புகளிலும் மிகுந்த கவனம் செலுத்தி இருக்கிறார்கள். டூயல் ஃபிரெண்டு ஏர்பேகுகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரோல் ஓவர் மிட்டிகேஷன் மற்றும் டயர்கள் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு போன்ற பாதுகாப்பு வசதிகள் வரவேற்கத்தக்கது.

மஹிந்திரா நிறுவனத்தின் மூத்த விற்பனை அதிகாரி வீஜய் ராம் நக்ரா அவர்கள், மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 மாடலை அறிமுக செய்யும் விழாவில் பேசிய போது,

“2011ல் எக்ஸ்.யூ.வி 500 கார் அறிமுகமான போது, அது தனித்துவம் பெற்ற வாகனமாக அடையாளம் பதித்தது. அதே வரவேற்பு இந்த காருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.”

என்று கூறினார்.

மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 கார் ரசிகர்களின் கவனத்தைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

Related Articles

இசைக்குத் தாய்ப்பாலு நாதஸ்வரம்! – ... 2018ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றது எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல். இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில் அந்தப் புத்தகம் அதிக...
உலகிலயே அதிக தனியார் பள்ளிகளை கொண்ட நாடு... உலகிலயே அதிக அளவில் தனியார் பள்ளிகளைக் கொண்ட நாடு, உலகில் அதிக அளவில் தற்கொலை நடக்கும் நாடு போன்ற கேள்விகளுக்கு எல்லாம் தயங்காமல் இந்தியா என்று பதில் ...
“சில்லுக்கருப்பட்டி” படம் தம... நடிகர் சூர்யா தரப்பில் ஹலீதா சமீம் இயக்கி இருக்கும் படம் சில்லுக்கருப்பட்டி. இந்தப் படம் எப்படி இருக்கு என்பதை பார்ப்போம். மொத்தம் நான்கு கதைகள் என்பத...
ஒரு மாணவர் நீட் தேர்வை மூன்று முறை எழுதல... தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு என்பது மாணவ மாணவிகளை காவு வாங்கும் தேர்வாக மாறி வருகிறது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சே...

Be the first to comment on "மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 – இந்த காரில் அப்படி என்ன ஸ்பெஷல்?"

Leave a comment

Your email address will not be published.


*