தைவானைத் தாக்கியது கடும் நில நடுக்கம்

தைவானைத் தாக்கியது கடும் நில நடுக்கம்Photo Credit: IBTimes

ரிக்டர் அளவுகோலில் 6 .4 என்று பதிவாகி இருக்கும் நில நடுக்கம் தைவானில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு தைவானின் சுற்றுலா நகரமான ஹுவாலியனை இந்த நில நடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நில நடுக்கத்தின் தாக்கம் கிட்டத்தட்ட 21 கிலோ மீட்டர் அளவுக்கு உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 பேர் உயிரிழந்ததாகவும், இருநூறுக்கும்  அதிகமானோர் காயம் அடைந்திருப்பதாகவும் தெரியவருகிறது.  அறுபதுக்கும் மேற்பட்டோரை மீட்கும் முயற்சியில் அந்நாட்டு மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை அன்று அந்நாட்டு நேரத்தின் படி இரவு 11 : 50 க்கு இந்த நில நடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது. இன்னும் நிறையப் பேர் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஆசிய நாடுகளில் நிகழ்ந்த நில நடுக்கங்களிலேயே இந்த தைவான் நில நடுக்கம் தான் பயங்கரமானது என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஹுவாலியன் நகரத்தில் ஒரு லட்சம் மக்கள் வசித்து வந்தனர். கிட்டத்தட்ட 40000 வீடுகள் நில நடுக்கத்திற்குப் பிறகு தண்ணீர் இல்லாமலும், 1900 வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

“ஜல்லிக்கட்டு போராட்டம்” மாத... சமூக வலைதளங்களினால் மிகப்பெரிய வரலாற்று போராட்டமாக மாறிய ஜல்லிக்கட்டு போராட்டம், மெரினா கடற்கரையில் மிகப்பெரிய மாற்றத்தை பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறத...
பேசாத பேச்செல்லாம்!  – நீங்கள் யார... மொத்தம் 32 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு தான் எழுத்தாளர் பிரியா தம்பி எழுதிய இந்த "பேசாத பேச்செல்லாம்" புத்தகம். இந்தப் புத்தகம் கற்றுக் கொடுத்த சில விஷ...
“மக்களே”, “ஒரு வேல இரு... யூடியூப் என்ற விஷயம் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக நம்ம ஆட்களுக்குத் தெரிய வருகிறது. இந்தியா கிளிட்ஸ், பிகைன்ட்வுட்ஸ் போன்ற சினிமா செய்தி கம்பெனிகள் கொஞ்சம் ...
பூனை குறுக்க போனா என்ன? போய் பொழப்ப பாரு... வீட்டை விட்டுக் கிளம்பியதிலிருந்து, அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு நீங்கள் வீடு வந்து சேரும் வரை, உங்களைச் சுற்றி எத்தனை நம்பிக்கைகள...

Be the first to comment on "தைவானைத் தாக்கியது கடும் நில நடுக்கம்"

Leave a comment

Your email address will not be published.


*